தமிழ் அரங்கம்

Saturday, April 11, 2009

இந்து மதம் கேட்ட நரபலி

திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.

கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ சாதிவெறியர்களின் கொலைவெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதிவெறியர்கள் ஒடுக்கி வருகின்றனர். செந்தட்டி ஊரிலிருக்கும் முப்பிடாதி அம்மன் கோவிலில் மூன்று சாதி மக்களும் சேர்ந்துதான் கோவில் விழாவை நடத்துவது வழக்கம். கடந்த 2003இல் குடமுழுக்கு நடைபெற்ற பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டு உள்ளே வருவதை யாதவ சாதியினர் தடுத்துள்ளனர்.

கடந்த வருடம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான சுடலை மாடசாமி கோயில் திருவிழாவின் போது பாடப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: