தமிழ் அரங்கம்

Tuesday, April 28, 2009

பேரினவாத பாசிசத் தலைமையின் திமிரும், இந்தியா, சீனா, மேற்கு முரண்பாடுகளும்

நாலு தரப்பு முரண்பாடு, புலியை அழிப்பதன் பெயரால் தமிழரை எப்படி கொல்லுவது என்பதில்; ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆட்சியை பாசிச சர்வாதிகாரமாக நிறுவ, பாசிட்டுகள் உலக 'நாகரிக" ஒழுங்கின் மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு மூசுகின்றனர். பல தரப்பு முரண்பாட்டுக்கு ஊடாக தமிழரைக் கொன்று, அதை இலங்கைக்கான ஜனநாயகமாக காட்ட முனைகின்றது.

இதுவே யுத்த நெருக்கடியாக மாறி நிற்கின்றது. இது ஏற்படுத்தும் மனித அவலத்தை வைத்து, ஏகாதிபத்தியங்கள் முதல் இந்தியா வரை தத்தம் அரசியல் பொருளாதார நலனை இலங்கையில் நிறுவ, தன் முனைப்பு கொண்டு தமக்குள் ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். இந்த எல்லையில் இந்த யுத்தத்துக்கு யார் அதிகம் தமிழனை கொல்ல உதவுதன் மூலம், இலங்கை அரசை தம் பக்கம் தக்கவைக்க முடியும் என்பதில் சீனா - இந்தியா முரண்பாடு கூர்மையாகியுள்ளது.

மறுபக்கத்தில் இந்த யுத்தத்தை ஆதரித்து நிற்கும் இந்தியா – சீனா நிலையை தனிமைப்படுத்தி, தன்னை நிலை நிறுத்த மேற்கு முனைப்பாக உள்ளது. அதற்கு இந்த யுத்தம் ஏற்படுத்தும் மனித அவலத்தைக் காட்டி, காய் நகர்த்துகின்றது. இந்தியா தன் பிடியை தக்கவைக்க யுத்தத்துக்கு உதவும் அதேநேரம், மேற்கு மனித அவலம் மூலம் ஏற்படுத்தும் தலையீட்டை தடுக்க, அதையும் தான் கவனித்துக் கொள்வதாக பாசாங்கு செய்கின்றது. இப்படித் தமிழர் புலியின் ...........
.முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: