தமிழ் அரங்கம்

Thursday, September 3, 2009

தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்.

கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் ஒரு டன் எடையுள்ள இரும்புத் தகடு சரிந்து விழுந்து, ரகுபதி என்ற உதிரித் தொழிலாளி கோரமாகக் கொல்லப்பட்டார். எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி உதிரித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்களைக் கட்டாயமாக வேலை செய்யுமாறு நிர்வாகம் நிர்பந்திப்பதால் ஏற்பட்ட கோரமான விபத்துகளில் ஒன்றுதான் இது. வழக்கம் போலவே, இப்படுகொலையை மூடி மறைக்க ஆலை நிர்வாகிகள் முயற்சித்தபோது, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடியதால், இழப்பீடு நிவாரணமும் மாண்டுபோன தொழிலாளி ரகுபதியின் மனைவிக்கு இந்நிறுவனத்தில் வேலைதரவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இக்கொடிய விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, கடந்த ஜூலை முதல் நாளன்று இதே நிறுவனத்தில் மீண்டும் இரும்புத் தகடு சரிந்து விழுந்து, லாசர் என்ற உதிரித் தொழிலாளி கொல்லப்பட்டார். விபத்து நடந்த போது, அருகில் தொழிலாளிகள் யாருமில்லாததால், படுகாயமடைந்த தொழிலாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும்,...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: