தமிழ் அரங்கம்

Sunday, February 7, 2010

மகிந்த இட்டுக்கட்டும் இராணுவ புரட்சியும், மகிந்த சிந்தனை திணிக்கும் இராணுவ ஆட்சியும்

தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச ஆட்டம் போடுகின்றது.

ஒரு சர்வாதிகார குடும்பத்தின் கீழ் ஒரு குற்றக் கும்பல் தங்கள் குற்றங்களை மூடிமறைக்கவும், கொள்ளையிட்டதை அனுபவிக்கவும் முனைகின்றது. இதனால் எதிர்கட்சி மீதும், ஊடகவியல் மீதும் வன்முறை, கைது, கடத்தல் என்று ஒரு போரையே தொடுத்துள்ளது. அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய பின், அதற்கு ஏற்ப ஆதாரங்களை தேடுகின்றது. வேடிக்கையிலும் வேடிக்கை.

சரத்பொன்சேகா வென்றால் இராணுவ ஆட்சியைத்தான் தருவார் என்ற கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள், இறுதியில் இராணுவ புரட்சி நடத்த இருந்ததாக கூறி அவரின் ஆதாரவாளர்களை எல்லாம் கைது செய்கின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. கைது செய்து, ஆதாரத்தைத் தேடுகின்றனர். கைதானவர்களை சித்திரவதை செய்தும், பணத்தைக் கொடுத்தும், தம் பாசிசத்தை நிலைநிறுத்தும் ஆதாரத்தைப் புனைய முனைகின்றனர்.

இதன் மூலம் மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த, இராணுவத்தை எடுபிடி அமைப்பாக்க முனைகின்றனர். அந்த வகையில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: