தமிழ் அரங்கம்

Saturday, July 26, 2008

 பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.
2. தமிழ் மக்களின் கடந்தகால அவலங்களுக்கு காரணமானவர்களை தெளிவுபடுத்திய ஒரு கூட்ட அழைப்பைக் கோரினோம்.

3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்....
இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது.

No comments: