தமிழ் அரங்கம்

Saturday, April 7, 2007

கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்?

கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்?

பி.இரயாகரன்
07.04.2007


அரவிந்தன் நீலகண்டன் போன்ற பார்ப்பனிய அறிவிலிகள், பூணூலிட்டு மனித வரலாற்றை பார்ப்பனியமாக்கிவிட முடியாது. அதுபோல் மனித வரலாறு ஏகாதிபத்தியமயமாகி விடாது.


நிகழ்கால சமுதாய கொடுமைகளுக்கு பதிலளிக்க முடியாது, அதைப் பாதுகாக்கும் பார்ப்பனியம் கடந்த காலத்தை திரிக்க முனைகின்றது. அரவிந்தன் நீலகண்டன் என்ற அறிவிலி வரலாற்றை கிட்லர், ஸ்ராலின் ஊடாக திரிக்கின்றது. உங்களுக்கு வரலாற்றைச் சொல்லித்தரும் ஏகாதிபத்தியம் என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் அவர்கள் சோவியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்ய மறுத்தார்கள்? ஏன் கிட்லருடன் செய்தனர்? இப்படி மறுபக்கத்தை மறுக்கும் பார்ப்பனியம் எப்படிப்பட்டது என்பதற்கு இந்த சாதிய சமூக அமைப்பே ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்றை ஸ்ராலின், கிட்லர் என்று மட்டும் சுருக்கி காட்டும் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும், எதைத்தான உழைக்கும் மக்களுக்கு சொல்ல முனைகின்றது?


பார்ப்பனிய சதியை மந்திரமாக கேட்டு பரவசமடையும் சில பக்தகோடிகள் மட்டுமே, இந்த திரிபுக்கு சாமி சரணம் போடுபவர்கள். இந்த திரிபை அம்பலப்படுத்தும் கட்டுரை இது.


2ம் உலகப் போர் முடிவடைந்த 50 ஆண்டை ஒட்டி சமரில் வெளியான இக் கட்டுரை, பார்ப்பனிய சதியை அம்பலமாக்க மறு பிரசுரமாகின்றது.


2ம் உலக மகா யுத்தத்தின் 50 வருட கொண்டாட்டங்களின் ஊடாக மறைக்கப்பட்டு வரும் உண்மைகள்.


2ம் உலக மகாயுத்தம் தொடர்பான சிறு கட்டுரை ஒன்றை வரையும் நாம் அதன் முழுமையான பாரம்பரியத்தை இக்கட்டுரையினூடாகச் செய்யமுடியாதும் உள்ளோம். இருந்தபோதும் ஒரு பொது அறிவைப் பெறும் வகையிலும், உண்மைகளை அறிந்து கொள்ளவும் இக்கட்டுரையைத் தர முயற்சிக்கின்றோம்.


2ம் உலக மகாயுத்தம் முடிந்து 50 வருடங்களைக் கடந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில், ஏகாதிபத்தியங்கள் யுத்தம் முடிந்த கையோடு தொடங்கிய பொய்யானதும், மிகைப்படுத்தியதுமான தமது வெற்றிகள் பற்றிக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ் யுத்தம் நடந்த காலத்தில் பல்வேறு தரப்பினரும் இவ் ஏகாதிபத்தியங்களும், யுத்தத்தின் உண்மையான நிலைமைகளை ஓரளவு தெரிந்து வந்தனர். ஏனெனில் இவைகள் எல்லாமே ஓரளவுக்கு எல்லா மக்களுக்கும் தெரிந்தவைகளே. இன்று யுத்தத்தின் வெற்றிகள் மீதான திரிபுகளைச் செய்து வரும் சகல ஏகாதிபத்திய ஆதரவு எழுத்தாளர்களினதும் பொய்ப்பிரச்சாரத்தை மக்கள் மீது திணித்துவிட கடும்முயற்சி செய்கின்றனர்.


இந்நிலையில் யுத்தகாலத்தில் ஏகாதிபத்தியங்களும், அவர்களின் தலைவர்களும் விட்ட அறிக்கைகள், மற்றும் ஜெர்மனிய பாஸிச தலைவர்களின் பல அறிக்கைகளும் இக்கட்டுரையின் உண்மையின் பக்கத்தை இனம் கண்டுகொள்ளும் வகையில் எடுத்துக் கையாளுகின்றோம்.


ஜெர்மனியத் தோல்விகளின் பின் ஜப்பான் மீதான தாக்குதல் கூட, ஜப்பானின் சரணடைவு அணுக்குண்டு போட்டமையால் ஏற்படவில்லை. ஜப்பான் தொடர்ந்தும் போராடியது. அணுக்குண்டு தாக்குதலின் பின்னர் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை அமெரிக்கா தேவையின்றிக் கொன்றதுடன், ஜப்பானின் சரணடவை சோவியத் தாக்குதலே ஏற்படுத்தியது. ஜப்பானின் பெரும் படையை சோவியத்படை அழித்ததைத் தொடர்ந்தே ஜப்பான் சரணடைந்தது.


மற்றும் எல்லா நாடுகளிலும் போராடிய கெரில்லாக் குழுக்களே உண்மையில் அரசியல் அதிகாரத்தை பெற்றிருக்க வேண்டும். ஆனால் தப்பியோடியவரையும், காட்டிக்கொடுத்தவர்களையும், யுத்தத்தின் பின்னர் ஆட்சியில் அமர்த்துவதில் இவ் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டன. இதற்கெதிராக போராடிய குழுக்களைக் கைதுசெய்தும், படுகொலை செய்தும் தமது பொம்மை ஆட்சிகளை நிறுவினர்.


2ம் உலகயுத்தத்தின் தயாரிப்பில் இறங்கிய காலம் முதல் யுத்தம் தொடங்கிய ஆரம்பகாலத்தில் கூட ஜெர்மனியை உற்சாகப்படுத்தும் வழிவகையில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உட்பட பலர் தம்மால் இயன்றவரை உற்சாகப்படுத்தினர். யுத்தத்தைத் சோவியத் நோக்கி நகர்த்த எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டனர். அதற்காக தமது காலனியாகவும், நட்பு நாடுகளாகவும் இருந்த சில நாடுகளை ஜெர்மனிக்குக் கொடுத்தும், ஆக்கிரமிப்புக்கு பச்சைக்கொடி காட்டியது மட்டுமன்றி, விமானம், மற்றும் இராணுவ உற்பத்திக்கான மூலப்பொருட்களை என்றுமில்லாதவாறு வாரி வாரி வழங்கினர்.


ஹிட்லர் யுத்தத்தைத் தொடங்கிய காலத்தில் பிரிட்டனிலும், பிரான்சிலும் இருந்த படைகளின் வலிமை ஜெர்மனியைவிட அதிகமானதாக இருந்தது. இருந்தும் யுத்தத்தை சோவியத் யூனியனை நோக்கி திருப்ப எல்லா வகையிலும் முயன்றதால், தமது சக்தியில் பலவற்றை இழந்த பிரான்ஸ் ஆதிக்கவாதிகள் நாட்டைவிட்டோடினர்.


யுத்தம் ஆரம்பித்தபின் 1944 களில் ஐரோப்பாவில் ஹிட்லர் ஆக்கிரமித்த பிரதேசங்களில் 20 லட்சம் கெரில்லாக்கள் இயங்கினர். இது சோவியத்தில் மட்டுமே 13 லட்சமாக இருந்தது. பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுக்களே இக்கெரில்லாக் குழுக்களுக்கு தலைமை தாங்கியதுடன், தற்காலிக அரசாங்கங்களையும் அமைத்திருந்தனர். யுத்தத்தின் இறுதியில் இவர்கள் பல பிரதேசங்களை தாமாகவே நேசநாட்டுப் படையெடுப்புடன் விடுவித்தனர்.


2ம் உலகயுத்தம் 2194 நாட்கள்(6 வருடங்கள்) நீடித்தன. 170 கோடி மக்களைக்கொண்ட (இது உலக சனத்தொகையில் 80 வீதமாகும்.) 61 நாடுகள் இவ்யுத்தத்தில் ஈடுபட்டன. 11 கோடி பேர் இராணுவ வேலைகளில் அமர்த்தப்பட்டனர்.


1939 செப்ரெம்பர் 01. முதல்- 1945 செப்ரெம்பர் 02. படையின் நிலைமை.


விமானங்கள்..டாங்கி.பீரங்கி.மார்.பீர
ஹிட்லர் எதிர்ப்பு நாடுகள்.588000.236000147600.616000
ஜெர்மனி..109000.46000435000.

1938 ம் ஆண்டு விலைவாசிப்படி மொத்தமாக உலகில் 26,000 கோடி டொலர் பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது. போரிட்ட நாடுகளின் இராணுவச்செலவு தேசிய வருமானத்தில் 70-80 சதவீதமாக இருந்தது.


இவ் யுத்தத்தில் 5 கோடிக்கு மேற்பட்டோர் இறந்தனர். ஆகக் கூடிய இழப்பை சோவியத் கொண்டிருந்தது. 2 கோடி மனிதரைப் பறிகொடுத்த சோவியத் 1,700 நகரவாசிகளையும், 70,000 கிராமவாசிகளையும் சோவியத் இடிபாடுகளாலே மீளப்பெற்றது. 32,000 தொழில் நிலையங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. போலந்து 60 லட்சம் பேரை பறிpகொடுத்தது. யூகோஸ்லாவியா 17 லட்சம் பேரையும், பிரான்ஸ் 16 லட்சம் பேரையும், அமெரிக்கா 4 லட்சம் போரையும், பிரிட்டன் 3லட்சத்து 70ஆயிரம் பேரையும் பறி கொடுத்தது. ஜெர்மன் தரப்பில் ஒரு கோடியே 36 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், சிறைப் பிடிக்கப்பட்டனர், காயப்பட்டனர். இதனுடைய கூட்டாளி நாடுகளில் 50 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.


இவ்விழப்புக்களே யுத்தத்தில் யார் தீவிரமாக இயங்கியது என்பதையும், 2ம் உலகயுத்தம் தோற்கடிக்கப்பட்டு பாஸிசத்தைக் குழிதோண்டிப் புதைக்க சோவியத் முயன்றதையும் மேற்படி தரவுகளே நிரூபிக்கின்றன.


2ம் உலகயுத்தத்தில் பிரதான யுத்தமுனை சோவியத்திலும், பல படைகளை கட்டிப்போட்டு வைப்பதில் சோவியத் போர்முனை தீர்க்கமான பங்காற்றியது. ஜெர்மனிலும், அதன் கூட்டாளி நாடுகளிலும், அதன் படைத்தொகுதியில் 70-76 சதவீதம் 1941-1942 வரை சோவியத் முனையில் இருந்தது. 2-4 சதவீதமே பிரிட்டன், அமெரிக்கப் போர்முனைகளில் செயற்பட்டன. 1944 இல் இரண்டாவது போர்முனை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 50 சத வீதத்திற்கு அதிகமானவை சோவியத் போர்முனையிலும், பிரிட்டன், அமெரிக்காவுக்கு எதிராக 30 சதவீதம் மட்டுமே போரில் ஈடுபட்டன.


போர்முனையின் நீளம் இத்தாலிலும், மேற்கு ஆபிரிக்காவிலும் 300-500 கி.மீற்றர்களும், மேற்கு ஐரோப்பாவில் 800 கி.மீ ஆகவும், சோவியத்-ஜெர்மனி போர்முனை 3000 முதல் 6200 கி.மீற்றர்களாகவும் இருந்தன.


போர்முனையில் நிலவியநேரம்: இத்தாலிய போர்முனை இருந்த நேரம் 74 சதவீதமும், வட ஆபிரிக்காவில் 29 சதவீதமும், ஐரோப்பா வில் 86.7 சதவீதமும், சோவியத்திலோ 93 சதவீதமாவும் இருந்தது. சோவியத்-ஜெர்மனி போர்முனையில், சோவியத்- ஜெர்மனி மற்றும் துணைநாடுகளில் 607 டிவிஷன்களை அழிந்தனர். வட ஆபிரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் நேச நாட்டினர் 176 டிவிஷன்களையே அழித்தனர்.


சோவியத் துருப்புக்களுக்கு எதிராக நடைபெற்ற சண்டையில் பாசிஸ்டுக்களின் பெரும்பகுதிப் பீரங்கிகளையும், டாங்கிகளையும், மூன்றில் ஒருபகுதி விமானங்களையும், 1,600க்கு மேற்பட்ட போர் கப்பல்களையும் இழந்தனர். அத்துடன் ஒரு கோடிக்கும் குறையாத போர்வீரர்களை சோவியத்-ஜெர்மனி போர்முனையில் இழந்தனர். இது ஜெர்மன் தரப்பில் இழந்த ஒரு கோடியே 36 லட்சம் பேரில் 73 சதவீதமாக இருந்தது.


30ம் ஆண்டுகளில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் யுத்தவெறி கொண்ட பாசிஸ்டுக்கள் ஆட்சிக்கு வந்தனர். கம்யூனிஸ பூச்சாண்டி காட்டியபடி, முதலாளித்துவ ஜனநாயகம் என்ற சுரண்டும் வர்க்க அமைப்பு முறையினூடாவே இப் பாசிஸ்டுக்கள் ஆட்சிப்பீடம் ஏறினர்.


1ம் உலகயுத்தத்தின் முடிவில் ஜெர்மன் மீது ஏகாதிபத்தியங்கள் திணித்த 'வெர் சேய்' எனப்படும் நியாயமற்ற ஒப்பந்தத்தை ஒழிப்பது என்ற பாசாங்கில், புதிய உலக ஒழுங்கை கோரியபடியே பாசிஸ்டுக்கள் 'தேசிய தொழிலாளர் கட்சி' என்ற பொய்யான பதாகையை உயர்த்தியபடி 1933ல் ஆட்சிக்கு வந்தனர்.


கம்யூனிஸத்தையும், சோசலிஸத்தையும் ''உலகம் முழுவதன் எதிரி'' என அறிவித்தபடி, ''மூன்றாவது பேரரசு'' (ஜெர்மன்), ''மேற்கத்திய நாகரீகத்தின் கோட்டை'' என்றும், ''சிலுவைப் போருக்கு ஆயுதம் தரிக்கும் உரிமை வேண்டும்'' என்ற கோரிக்கையுடன் ஆயுதபாணியாகினர். 1935ம் ஆண்டு மார்ச் 16ம் திகதி கட்டாய இராணுவசேவை குறித்து ஜெர்மன் சட்டம் இயற்றியது. மே 21ம் திகதி ''பேரரசின் தற்காப்பு'' பற்றிய சட்டமும் இயற்றப்பட்டது. இது யுத்தம் தொடங்கும் வரை இரகசியமாவே வைக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற 'நியூ ரென்பர்க்' விசாரணையில், இந்த தற்காப்புச் சட்டம் தான் அனைத்திற்கும் காரணமெனத் தெரியவந்தது.


1936ம் ஆண்டு முதலாவது ஆக்கிரமிப்பை 'ரைன்' பிரதேசத்திற்குள் ஜெர்மன் நிகழ்த்தியது. இந்நிலையிலும், தொடர்ந்து ஏற்பட்ட பல ஆக்கிரமிப்புக்களிலும் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ''தலையிடாமை'', ''நடு நிலைமை'' பற்றிக் கூறியபடி யுத்தத்தை சோவியத்தின்பால் திருப்பவும், ஜெர்மன் தனது ஆயுத பலத்தை பெருக்கத் தேவையான அளவு பொருட்களை என்றுமில்லாதவாறு அனுப்பி வைத்தனர். இதனால் 30 களில் ஜெர்மனியின் இராணுவத் தொழிற்துறை மற்றைய ஏகாதிபத்தியத்தின் தரத்தை விடவும் அதிக உயர்ந்த நிலையை அடைந்தது.


1936ம் ஆண்டு ஒட்டோபரில் பிரபல ஜெர்மன் தொழிலதிபரான ஷாஹ்ட் மூன்றாவது பேரரசின் பொருளாதார அமைச்சராக இருந்தபோது ஆண்டுதோறும் 1/2 பில்லியன் மார்க்குக்கு கூடுதலான பெறுமதியான இரும்புத்தாதுவை பெறுவதற்கு ஒப்பந்தம் பிரான்சுடன் செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனிக்கு பாக்சைட்டின் வரவு 6 மடங்காக அதிகரித்தது. இது விமானக் கட்டுமானத்திற்காக அலுமீனியத்தை உற்பத்தி செய்வதில் உலகின் முதலாவது இடத்தை ஜெர்மன் பெற்றுக்கொண்டது.


ஜெர்மனிய புள்ளி விபரப்படி 1933 முதல் 1939 வரை ஆயுத உற்பத்தியானது 10 மடங்காகவும், விமானக் கட்டுமானம் 23 மடங்காகவும், இயந்திரக்கட்டுமான தொழிற்சாலை உற்பத்தி 4 மடங்காகவும் அதிகரித்தது. அமெரிக்க ஏகபோக கம்பனிகளின் உதவியுடன் 1938ல் ஜெர்மனி சேர்க்கை எரிபொருளின் உற்பத்தியை 1,600 ஆயிரம் டன் வரை உயர்த்தியது. 2ம் உலகயுத்தம் தொடங்கியபோது உலகில் அதிகளவு கடைசல் இயந்திரத்ததை (18 லட்சம்.) ஜெர்மனி வைத்திருந்தது. 1935-1940 வரைக்கும் அதன் இராணுவ உற்பத்தி 23 மடங்காகவும், துருப்புக்களின் எண்னிக்கையோ 35 மடங்காகவும் அதிகரித்தது.


சோவியத் மீதான கம்யூனிஸ விரோதப் பிரச்சாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஈடுபட்ட அதேநேரம், ஜெர்மனியை சோவியத் மீது தாக்குதல் தொடுக்க எல்லாவகைகளிலும் உந்தித் தள்ளினர் இதைப் பயன்படுத்திய ஹிட்லர் பின்வருமாறு கூறினார்.


''போல்ஷிவிக் பூதத்தின் உதவி கொண்டு, சிவப்பு பிரளயத்திற்கு எதிரான கடைசி அரண் ஜெர்மனி மட்டுமே என்று நம்பச் செய்துதான் என்னால் வெர்சேய் வல்லரசுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியும்..... நெருக்கடியான காலகட்டத்தைக் கடக்க நமக்குள்ள ஒரே வழி வெர்சோயிடமிருந்து பிரிந்து மீண்டும் ஆயுதந் தரிப்பதாகும்.''

  1. - K. Ludecke, I knew Hitler, New Youk, 1936,p. 468.-


பாசிசத்தை எதிர் கொள்ள சோவியத் 1939 ஏப்பிரல் 27ல் கூட்டு உடன்பாட்டுக்கு பிரிட்டீஸ், பிரான்ஸ்சுக்கு அழைப்புவிட்டனர். அதற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தனர். இந்த நோக்கோடு 1939 ஆவணி மாதம் பிரிட்டீஸ் பிரான்ஸ், சோவியத் என்பன சோவியத் யூனியனில் பேச்சுக்களை நடத்தினர். இதை எதிர்கொள்ள சோவியத் தரப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பரவலான அதிகாரம் இருந்ததுடன், யுத்தத்தைத் தடுக்க 136 காலாட்படை, மற்றும் குதிரை டிவிசன்களையும் 5.000 கனரக பீரங்கிகளையும், 10 ஆயிரம் டாங்கிகளையும், 5.500போர் விமானங்களையும் வழங்கத் தயாராகவிருந்தது. இவ்வளவும் இருந்தும் பிரிட்டீஸ் தூதுக்குழுவிற்கு கையொப்பமிடும் அதிகாரம் இருக்கவில்லை.

இது அடிப்படையில் சோவியத் பால் கொண்ட வெறுப்பில் பாசிசத்தை ஆதரிப்பதில் போய் நின்றது. இது குறித்து பிரிட்டீஸ் அரசியல்வாதியான டே. லாயிட் ஜார்ஜ் கேலியாகக் கூறியதைப் பார்ப்போம். கிட்லருடன் கொஞ்சிக் குலாவ சேர்ம்பர்லோன் மூன்று முறை தொடர்ந்தாற் போல் சென்றார். முசோலினியைக் கட்டித்தழுவவும் அபிஸ்ஸீனியாவைக் கைப்பற்றியதற்காக எமது அதிகாரபூர்வமான அங்கீகார வடிவில் பரிசளிக்கவும் அவர் ஸ்பெயினில் தலையிடுவதற்கும் நாங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கமாட்டோம் என்று சொல்லவும் சோம்பர்லோன் விசேஷமாக ரோமிற்கு சென்றார்.


எந்தளவுக்கு ஜெர்மனியை வளர்ப்பதில் இவ் ஏகாதிபத்தியங்கள் போட்டியிட்டன என்பதை விளங்கிக்கொள்ள ஹிட்லரின் இக்கூற்றே போதுமானது. ஜெர்மனி மட்டுமல்லாது இவ் ஏகாதிபத்தியங்களும் குற்றவாளிகளே.


1936ல் இத்தாலியும், ஜெர்மனியும் கம்யூனிஸ எதிர்ப்பு, சோவியத் எதிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன. பின் ஜப்பானும் இதில் சேர்ந்துகொண்டது. 1938 மார்ச்சில் ஆஸ்திரியாவை ஒன்றிணைத்தல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பை ஜெர்மன் நிகழ்த்தியது. இதன் பின் செக்கோஸ்லொவாக்கியாவில் மிகமுக்கிய எல்லைகளை ஜெர்மனிக்கு வழங்கும் ஒரு ஒப்பந்தத்தை சோவியத்தின்மீது தாக்குதலை தொடுக்க ஊக்குவிக்கும் வகையில் 1938 செப்ரெம்பர் 29ல் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி பிரதிநிதிகள் மூனிக்கில் கைச்சாத்திட்டனர். இவ்வொப்பந்தம் செக்கோஸ்லொவாக்கியாவின் பிரதிநிதி இன்றி ஹிட்லரும், முஸ்ஸோலீனியும், பிரஞ்சுப் பிரதமர் ஏ. டலடியேவும், பிரிட்டன் பிரதமர் நே. சேம்பர்லேனும் கையொப்பமிட்டனர்.


இந்த ஒப்பந்தத்திற்கு அப்பால் செப்ரெம்பர் 30ல் மூனிக் உடன்படிக்கைக்கு கூடுதலாக பிரிட்டன்-ஜெர்மன் ஒப்பந்தம் வெளியானது. இது பரஸ்பரம் தாக்குவதில்லை என அறிவித்தது. பின் டிசம்பர் 6ல் பிரான்சும் சேர்ந்துகொண்டது. இவ் ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை சோவியத் கண்டித்தது. இதற்குப் பதிலளித்த சேம்பர் ''உலக அமைதியைக் காப்பாற்ற'' என்று பதிலளித்து, ஆக்கிரமிற்பிற்கான வகையில் புதிய உலக ஒழுங்கு வழியைத் திறந்துவிட்டனர்.


மூனிக் ஒப்பந்தத்தை ஒட்டி அமெரிக்க வரலாற்றாசிரியர் பிரெடெரிக்ஷ_மன் எழுதியதைப் பார்ப்போம்.


''இரண்டாம் உலக யுத்தத்தின் முன்னணைப் பொழுதில் ஜனநாயக மக்களின் பொறுப்பு மிக்க பிரதிநிதிகள் வெளிப்படுத்திய முடடாள்தனம் மற்றும் கபடத்தோடு ஒப்பிடக்கூடிய எதையுமே மனித பலவீனம், முட்டாள்தனம் மற்றும் மனிதர்களால் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள வரலாற்றில் காணமுடியாது.''


இவ் ஒப்பந்தத்தை ஒட்டி ஜெர்மனிய அயல் விவகாரத்துறை அமைச்சர் ரிபென்ட்ரோப் பிரிட்டீஸ் பிரதமர் சோம்பர்லேனின் பங்கைக் குறித்து இப்படிக் கூறுகின்றார்.


''இந்தக் கிழவர் இன்று பிரிட்டீஷ் பேரரசின் மரணதண்டனையில் கையொப்பமிட்டு இந்தத் தண்டனையை நிறைவேற்றும் தேதியை முடிவு செய்யும் பொறுப்பை எங்களுக்கு விட்டுள்ளார்.''


2ம் உலகயுத்தத்தை நடத்த எல்லாவகையிலும் உதவியோர் இவ் ஏகாதிபத்தியங்களே இதை ஜெர்மனிய பாசிஸ்டுகளின் கூற்றுக்களே நிறுவிவிடுகின்றன. 1939ம் ஆண்டு பிரிட்டன்-ஜப்பான் ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் பிரிட்டீஷ் காலனியான சீனாவை தாரைவார்ப்பதில் இட்டுச்சென்றது. 1938ல் ஜெர்மனிய இராணுவம் சுதேத் பிரதேசத்திற்குள் ஊடுருவியது 1939 மார்ச்சில் செக்கோஸ்லொவாக்கியா முழுவதையும் ஜெர்மனி ஆக்கிரமித்தது. 1939 வசந்தகாலத்தில் லித்துவேனியாவின் கிளைபெத் பிரதேசத்தைக் கைப்பற்றினர். ருமேனியா மீது தளைபூட்டும் ''பொருளாதார'' ஒப்பந்தத்தை திணித்தனர்.


1939ம் ஆண்டு ஏப்ரலில் அல்பானியாவை இத்தாலி கைப்பற்றியது. 1938 இன் இறுதியில் ஜெர்மனி டான்ட்ஸிங் நெருக்கடியை ஏற்படுத்தி சுயேச்சையான டான்ட்ஸிங் பிரதேசம் மீது நியாயமற்ற தன்மையை ஒழிப்பது என்ற போர்வையில் போலந்தின் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகினர். பிரிட்டனும், பிரான்சும் ''பாதுகாப்பு உத்தரவாதங்கள்'' என்ற பெயரில் தமது பொருளாதார நலன்கள் மீது போலந்து, ருமேனியா, கிரீஸ், துருக்கி போன்ற நாடுகள் மீது உத்தரவாதத்தை அளித்தபோதும், ஆனால் நடைமுறையில் இவர்கள் ஆக்கிரமிப்புக்கு பச்சைக்கொடியையே காட்டினர்.


1939 ஏப்ரல்-மே யில், 1935ம் ஆண்டு செய்துகொண்ட பிரிட்டீஷ்-ஜெர்மனி கடல் உடன்படிக்கையை ஜெர்மன் ரத்துச் செய்தது. அத்துடன் 1934ல் போலந்துடன் படையெடுப்பது இல்லையென்ற ஒப்பந்தத்தையும் முறித்துக்கொண்டது. இத்தாலியுடன் ''இரும்பு உடன்படிக்கை'' ஒன்றைச் செய்து கொண்டது. இது ஜெர்மனுடன் மேற்குநாடுகளுடன் போர் மூண்டால் இத்தாலி உதவுமென வரையறுத்திருந்தது.


2ம் உலகயுத்த ஆரம்பத்தில் அதாவது 1939 செப்ரெ. 1.ம் நாள் இராணுவபலம்

நாடுகள்இராணுவம்பீரங்கிடாங்கிவிமானம்நீர்மூழ்கி-மொத்தம்நீர்மூழ்கி.
ஜெர்மன்460000026000.3195.4093.53.- 107.
பிரான்ஸ்.2670000.26000.3100.3335.77- 174
பிரிட்டன்162600056005473891தெரியாது-3281222

இப் புள்ளிவிபரப்படி ஜெர்மனிய இராணுவத்தின் பலத்தைவிட பிரிட்டன், பிரான்சின் பலம் அதிகமாகவிருந்தது. யுத்த ஆரம்பத்தில் யுத்தத்தை சோவியத்தின் மீது நிகழ்த்தும் கொள்கையினால், யுத்தத்தை வளர்த்து 6 கோடி மக்களை படுகொலை செய்யப்பட காரணகர்த்தாக்களாக இவ்விரு நாடுகளும் முனைந்து நின்றன. இதேபோது சோவியத் மீது ஜப்பானானது யுத்தத்தில் இறங்க இவ்நாடுகள் பகிரத்தனமான முயற்சியில் ஈடுபட்டன. அதற்காக ஜப்பானை ஆயுதபாணியாக்க 1939ன் ஆரம்பத்தில் பெரும் முயற்சி செய்தனர். 1939 தின் ஆரம்பத்தில் ஜப்பான் இறக்குமதி செய்த இராணுவத் தளவாடங்களில் 86 சதவீதத்தை அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந் ஆகியவைகளிடமிருந்து பெற்றுக்கொண்டது.


1931ல் வடகிழக்கு சீனாவையும், பின் உள் மங்கோலியாவின் பகுதியையும் ஜப்பான் கைப்பற்றிக்கொண்டது. 1934ல் மஞ்சூரியாவிலும், கொரியாவிலும் சுமார் 40 விமானத்தளங்களும், 50 இறங்குமிடங்களையும், கட்டினர். இது தவிர போர்நடவடிக்கைக்கு அவசியமான 1000கி.மீ இரும்புப்பாதையையும் போட்டனர். இவை அனைத்தும் சோவியத் எல்லையிலும், சோவியத் மீதான தாக்குதலுக்கான அடிப்படையில் நிகழ்ந்தன. சோவியத்திற்கு எதிராக மஞ்சூரியாவில் இருந்த இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரித்தவண்ணம் இருந்தனர். 1932ல் 50ஆயிரம் பேர் இருந்தனர். இது ஜப்பானிய இராணுவத்தின் 20 சதவீதமாகும். இது 1937ல் ஐந்துமடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்தது.


ஆக்கிரமிப்புக்கு வசதி செய்யும் வகையில் 1933 மார்ச் 27. ல் சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேறியது. பின் 1934ல் கடற்படை ஆயுதந்தரித்தலைப் பற்றிய வாஷிங்டன் மகாநாடு(1921-1922) உடன்படிக்கையை நிராகரித்தது. 1936 நவம்பர் 25.ல் ''கம்யூனிஸ அகில எதிர்ப்பு உடன்படிக்கையை'' செய்துகொண்டது. 1940 செப்ரம்பர் 27.ம் திகதி ஜெர்மனி-இத்தாலியுடன் ''முத்தரப்பு உடன்படிக்கையை'' செய்துகொண்டது.


ஜப்பானிய யுத்தத் தயாரிப்புக்கள் நிகழ்ந்தபோது இவ் மேற்கு நாடுகள் அதை சோவியத்தின்பால் திருப்பவும், அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து ஊக்குவித்தன. யுத்தக் குற்றவாளிகளில் இவ் மேற்கு நாடுகளின் பங்கு கணிசமானது என்பதை நடைபெற்ற நிகழ்ச்சிகள், புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன.


''மூனில் சதி''யைத் தொடர்ந்து சோவியத் செக்கோஸ்லொவாக்கியாவிற்கு உதவும் வகையில் 76 துப்பாக்கிப்படை, மற்றும் குதிரை டிவிஷன்களும், 3 டாங்கி கோர்பஸ்களும், 22 தனி டாங்கி பிரிகேடுகளும், 12 விமான பிரிகேடுகளும் தயாராக வைத்திருந்தன. இருந்தபோதும் செக்கோஸ்லொவாக்கியா இதை ஏற்றுக்கொள்ள மறுக்குமாறு பிரிட்டன், பிரான்ஸ், ஆகியவை நிர்ப்பந்தித்து ஜெர்மனி ஆக்கிரமிக்க வழி அமைத்தன.


1936-39களில் ஸ்பெயின் மக்கள் நடத்திய தேசிய புரட்சியில் 3000 க்கும் மேற்பட்ட சோவியத்தின் பல்வேறு வீரர்கள் இணைந்து நின்று போராடினர். இதில் பாஸிச சக்திகளுக்கு எதிராகவும், ஜெர்மன், இத்தாலி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடிப் பெரும் புகழ் பெற்றனர். 1939ல் மங்கோலியாவினுள் ஜப்பான் நுழைந்த போது சோவியத் படைகள் உதவிக்கு வந்து ஜப்பானைத் தோற்கடித்து மங்கோலியாவைக் காப்பாற்றினர்.


1937ல் சோவியத்-சீனா பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அத்துடன் சீனா மீதான ஜப்பானிய தாக்குதலின்போது அதாவது 1937 முதல் 1941வரை தேசிய விடுதலைக்கு உதவும் வகையில் 940 பீரங்கிகளையும், 100 டாங்கியையும், 885 விமானங்களையும், மற்றும் சில ஆயிரம் துப்பாக்கிகளையும், 4000ற்கு மேற்பட்ட சோவியத் ஆலோசனைகளையும் வழங்கியது. சோவியத் விமானிகள் சீனாப்பரப்பில் 100 ஜப்பானிய விமானங்களைச் சுட்டுவிழ்த்தினா.


பாஸிசத்தை எதிர்கொள்ள சோவியத் 1939 ஏப்பிரல் 27ல் கூட்டு உடன்பாட்டுக்கு பிரிட்டீஷ், பிரான்ஸ்சுக்கு அழைப்புவிட்டனர். அதற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தனர். இந்த நோக்கத்தோடு 1939 ஓகஸ்ட் மாதம் பிரிட்டீஸ், பிரான்ஸ், சோவியத் என்பன சோவியத் யூனியனில் பேச்சுக்களை நடத்தின. இதை எதிர்கொள்ள சோவியத் தரப்பில் கலந்துகொண்டவர்களுக்கு பரவலான அதிகாரம் இருந்ததுடன், யுத்தத்தைத் தடுக்க 136 காலாட்படை, மற்றும் குதிரை டிவிஷன்களையும் , 5,000 கனரக பீரங்கிகளையும், 10 ஆயிரம் டாங்கிகளையும், 5,500 போர் விமானங்களையும் வழங்கத் தயாராகவிருந்தது. இவ்வளவு இருந்தும் பிரிட்டீஷ் தூதுக்குழுவிற்கு கையொப்பமிட அதிகாரம் இருக்கவில்லை. இது அடிப்படையில் சோவியத்தின் பால் கொண்ட வெறுப்பில் பாஸிசத்தை ஆதரிப்பதில் போய்நின்றது. இது குறித்து பிரிட்டீஷ் அரசியல்வாதியான டே. லாயிட் ஜார்ஜ் கேலியாகக் கூறியதைப் பார்ப்போம்.


''ஹிட்லருடன் கொஞ்சிக்குலாவ சேம்பர்லோன் மூன்று முறை தொடர்ந்தாற் போல் சென்றார். முசோலீனியைக் கட்டித் தழுவவும் அபிஸ்ஸீனியாவைக் கைப்பற்றியதற்காக எமது அதிகாரபூர்வமான அங்கீகார வடிவில் பரிசளிக்கவும் அவர் ஸ்பெயினில் தலையிடுவதற்கும் நாங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கமாட்டோம் என்று சொல்லவும் சோம்பர்லோன் விசேஷமாக ரோமிற்கு சென்றார். தனது உதவியை நமக்கு முன்மொழியும் அதிக வல்லமை வாய்ந்த ஒரு நாட்டிற்கு நம்மை பிரதிநிதித்துவப்படுத்த அந்நிய அமைச்சரகத்திலிருந்து அதிகாரியை அனுப்பினார்கள் என்று ஏன் கூறவேண்டும்? இதற்கு ஒரே ஒரு விடை மட்டுமே இருக்க முடியும்: கனவான் நேவில் சோம்பர்லோன், லார்ட் ஹாலிபாக்ஸ் மற்றும் சர் சைமன் ஆகியோரக்கு ரஷ்யாவுடன் கூட்டுச்சேர விருப்பமில்லை.'' w. Coates, Z. Coates, A History of Anglo-Soviet Relations, London, 1945, p .614. -


இந்த வகையில் சோவியத்தின் பாலான எதிர்ப்பும், பின் சோவியத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் கூட இரண்டாவது போர்முனையைத் தொடங்கும் வரை 3 வருடங்களாக இருந்து அடுத்து 1944ல் சோவியத்தின் முன்னேறிய வெற்றியுடன் போட்டியிடவே படைகளை இறக்க நிர்பந்திக்கப்பட்டனர். சோவியத்யூனியனுடன் அதிகாரம் இல்லாதவர்கள் பேசிக்கொண்டிருந்த அதேநேரம் பிரிட்டீஷ் அரசாங்கம் ஜெர்மனியுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.


இப் பேச்சுவார்த்தையின் ஊடாக உலகை சமாதானமாக பங்கு போட்டுக் கொள்ளவும், போலந்தில் தலையிட மாட்டோம் என ஒப்புக்கொண்டும், சோவியத்தை எப்படி பங்குபோடுவது என்ற சமாச்சாரங்களே பேச்சுவார்த்தையின் சாரமாக இருந்தது. இதேநேரம் பிரிட்டீஷ், பிரான்ஸ், சோவியத் பேச்சுவார்த்தையை குலைத்ததன் மூலம் பாஸிச 2ம் உலக யுத்தத்தை தடுக்கும் கடைசி சந்தர்ப்பம் இழக்கப்பட்டது. இது தொடர்பாக பிரிட்டீஷ் இராணுவ வரலாற்றாசிரியர் லிடல் கார்ட் குறிப்பிடுவதைப் பார்ப்போம்.


''போலந்திற்கு நேரடி உதவி அளிக்க ஒரே ஒரு வல்லரசாகிய ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவதுதான் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வாய்ப்பாக இருந்தது.'' - லிடல் கார்ட்: இரண்டாவது உலக யுத்தம்.-


இக்காலத்தில் சோவியத் ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் மங்கோலியப் படையுடன் இணைந்து போரில் இறங்கியிருந்தது.

பலம்.


நாடுகள்டிவிஷன்விமானம்டாங்கி.பீரங்கி.

பிரா, பிரி, சோவி.

311. 11700. 15400. 9600
ஜெர்மன் இத்தாலி168 7700 8400 4350

சோவியத்திற்கு எதிராக 'சிலுவைப் போரை' நடத்த ஜெர்மனி தயாரான நிலையில் இதை முறியடிக்கும் வழிவகைகளை சோவியத் தேடியது. பாஸிசத்திற்கு எதிரான மேற்கு நாடுகளின் கூட்டு சாத்தியமற்ற நிலைமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் முன்மொழிவாக வந்த பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும்படி சோவியத்தை நிர்பந்தித்தது. 1939 ஓகஸ்ட் 23.ம் திகதி இவ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் சோவியத் மீதான ஜெர்மனியின் தாக்குதலை ஊக்கப்படுத்திய ஏகாதிபத்தியங்களின் திட்டம் தவிடுபொடியாகியது. தொடர்ச்சியாக 1941 ஏப்பிரலில் ஜப்பானுடன் நடுநிலை பற்றி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இதன் தொடர்ச்சியாக 1939 முதல் 1941 வரை யுத்தம் எதிலும் சோவியத் பங்கு கொள்ளவில்லை.


சோவியத்யூனியன் மீது திட்டமிட்டபடி சிலுவைப் போருக்குப் பதில் ஹிட்லர் தனது படைகளை பிரிட்டீஷ், பிரான்ஸ்சுக்கு எதிராக அனுப்பினார். இதையொட்டி பிரபல பிரஞ்சு அரசியற் பிரமுகர் ஏரியோ சரியாகக் குறிப்பிட்டது என்னவெனில் ''பாஸிச ஜெர்மனி, தன் கழுத்துக் கயிற்றை அறுத்து, எஜமானனையே கடித்த நாயைப் போலிருந்தது.'' என்றார்


பாஸிச ஜெர்மனி 1939 மார்ச் 12 இல் போலந்திற்கு ஒரு காலக்கெடுவை கொடுத்து டான் ட்ஸிங்கை (கிதான்ஸ்க்) தடுமாறும், போலந்தில் இடைவழியில் சாலை, இரும்புப்பாதை அமைக்கும் உரிமையை கோரினர். 1939 ஏப்பிரல் 3ம் திகதி போலந்தின் மீது தாக்குதலைத் தொடுக்க தயாரிப்பில் இறங்கியது. இத்தாக்குதல் நடவடிக்கையை ''வெள்ளைத்திட்டம்'' என அழைக்கப்பட்டது. 11ம் திகதி யுத்தத்திற்கு தயாராகும் கட்டளையில் ஹிட்லர் கையெழுத்து இட்டான். 1934இல் போலந்துடன் ஏற்பட்ட உடன்பாட்டை ஏப்பிரல் 28 இல் முறித்துக் கொண்டது ஜெர்மனி.


இத்தாக்குதலுக்கு முன் படைகளின் பலம்.

நாடுகள்டிவிஷன்டாங்பீரங்விமானங்கள்படையின் எண்ணிக்கைகடற்படை
ஜெர்மனி6228006000200016000007 நீர்மூழ்கி 2போர்.கப்.
போலந்.39870

4300

80010000005 நீர்மூழ்கி மறறும்.

1939 செப்ரெம்பர் 1ம் திகதி ஜெர்மனி போலந்தின் மீது தாக்குதலைத் தொடுத்தது. இது தொடங்கிய அன்று பிரிட்டீஷ்- பிரான்ஸ் 1920 களில் செய்து கொண்ட ''வெர் சேய்'' ஒப்பந்தத்தைத் திருத்துவது என்று பேரத்தில் இறங்கினர். இது தோல்வி பெற்றது. அப்போது ஹிட்லர் தனது நெருங்கியவர்கள் மத்தியில் பிரிட்டீஷ் பிரதமர் பற்றிக் கூறியதைப் பார்ப்போம்.


'' 'குடையேந்திய இந்த மனிதன்' மட்டும் என்னிடம் பெர்ஹ்டேஸ் காடனுக்கு வருவதாக இருக்கட்டும்.... காலால் அவனைப் பின்புறம் உதைத்து மாடிப்படியில் உருட்டிவிடுவேன். இவ்வாறு நான் செய்யும்போது இதை ஏராளமான பத்திரிகையாளர்கள் இருந்து பார்க்கும்படி கவனித்துக் கொள்கிறேன்.'' -இரண்டாவது உலக யுத்தத்தின் வரலாறு தொகுதி 3.-


1ம் திகதி போலந்து யுத்தத்தை ஆரம்பிக்க முன்பு ஓகஸ்ட் 31ம் திகதி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. இதற்கு என ஜெர்மனியர் போலந்து உடையில் ஜெர்மன் நகரமாகிய கிலேய்விட்ஸில் உள்ள வானொலி நிலையத்தில் புகுந்து 'மைக்'கு முன்னால் சில குண்டுகள் வீசி போலந்து மொழியில் முன்பே தயாரித்த வாசகத்தை வாசித்து யுத்தத்தை நடத்த ஜெர்மனிய மக்களை தயார்படுத்தினர். இது தொடர்பாக முன்பே எப்படி யுத்தத்தைத் தொடங்குவது என்பதை ஒட்டி ஹிட்லர் கூறியதைப் பார்ப்போம்.

''யுத்தத்தை மூட்டி விடுவதற்கான பிரச்சார சாக்கை நான் தடுக்கிறேன். இது உண்மையானதாயிருக்குமா என்பது முக்கியமல்ல. வென்றவனை பின்னால், அவன் கூறியது உண்மையா இல்லையா என்று கேட்கப்போவது இல்லை.'' -ஹிட்லர்- -IMT ஆவணம் 1014-P pp. 523-524. 1939 ஓகஸ்ட் 22 உயர் ஜென்ரல்களின் முன் ஹிட்லரின் இரண்டாவது உரை.-


செப்ரம்பர் 3ம் திகதி பிரான்ஸ், பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தை அறிவித்தது. ஆனால் தீவிர தாக்குதலில் இறங்கவில்லை. செப்ரம்பர் 9ம் நாள் பிரான்ஸ் இராணுவம் சவாரில் தொடங்கிய குறுகிய நோக்கிலான தாக்குதல் 12ம் திகதி நிறுத்தியது. இதன் ஊடாக பிரான்ஸ், பிரிட்டனும் தனது கூட்டாளியான போலந்திற்கு துரோகமிழைத்தது.


ஜெர்மனிய- பிரான்ஸ் எல்லையில் பிரான்ஸின் படை பலம் வாய்ந்ததாக இருந்தது. ஜெர்மனிய பலத்தை எல்லாவிதத்திலும் விஞ்சி நின்றது.

இதை ஒட்டி ஜெர்மனிய தளபதிகள் கலக்கம் அடைந்திருந்தனர். போலந்துத் தாக்குதலின் போது பிரான்ஸ் தாக்காது இருக்க வேண்டுமென விரும்பினார். இதையொட்டி ஜெர்மனிய ஜெனரல்கள் கூறியதைப் பார்ப்போம்.


''பிரான்சும், பிரிட்டனும் மட்டும் தாக்குதலைத் தொடுத்திருந்தால் எங்களால் முற்றிலும் கற்பனையான தற்பாதுகாப்பைத்தான் வைத்திருக்க முடியும்.'' -பீல்ட்மார்ஷல் ஜென்ரல் வெகைடல்-நியூ ரென்பார் விசாரணை தொகுதி, 1.-

இதையொட்டி மற்றுமெரு ஜென்ரல் கூறினார்:

''1939ம் ஆண்டிலே நாங்கள் தோல்வியடையவில்லை என்றால் அதற்குக் காரணம், போலந்துடன் நாங்கள் யுத்தத்தில் இறங்கியிருந்த போது மேற்கே 23 ஜெர்மன் டிவிஷன்களுக்கு எதிராக நின்ற சுமார் 110 பிரன்சு மற்றும் பிரிட்டீஷ் 4 டிவிஷன்கள் முற்றிலுமாக செயலற்று இருந்தது.'' - ஜெனரல் யோடல்-நியூ ரென்பார் விசாரணை தொகுதி, 1.-


1939ல் ஜெர்மன் தோற்கடிக்கப்பட்டு 6 கோடி மக்கள் உயிரையும், பலகோடி பெறுமதியான சொத்துக்களைப் பாதுகாத்து இருக்க முடியும். ஆனால் பிரான்ஸ், பிரிட்டன் சோவியத் மீதான தாக்குதலை மையமாகக் கொண்டு ஜெர்மனியை எல்லா விதத்திலும் வளர்க்க பாடுபட்டனர்! இதையொட்டி பிரன்சு ஆசிரியர் கூறுவதைப் பார்ப்போம்:

''நமது லோரைன் சேனையின் முழுச் செயலின்மைக்கான காரணத்தை அரசியல் நிலைகளில்தான் தேடவேண்டும்.''- போஃப்ரின்- A. Beanfre, Le drame de 1940, Paris, 1965, p. 206.

போலந்து தலைநகர் மீதான தாக்குதலில் 2 ஆயிரம் போர் வீரர்கள் இறந்தனர். 16,000 பேர் காயமடைந்தனர். ஒக்டோபர் 2வரை நீடித்த இவ் யுத்தத்தில் மொத்தமாக 66,300 போலந்து வீரர்கள் இறந்தனர். 1,33,700 பேர் காயமடைந்தனர். 4,20,000 சிறை பிடிக்கப்பட்டனர். ஜெர்மனிய தரப்பில் 10,600 பேர் இறந்தனர். 30,300 பேர் காயமடைந்தனர். 3,400 பேர் தொலைந்து போனார்கள்.

ஜெர்மனிய முன்னேற்றம் சோவியத் எல்லைகளை நோக்கி சென்ற போது சோவியத் 1939 செப்ரெம்பர் 17ம் திகதி மேற்கு உக்ரோன், மேற்கு பெலோ ரஷ்யாவுக்குள் விடுதலைப் பிரயாணத்தை மேற்கொண்டு கிழக்கு நோக்கிய ஜெர்மனிய படைகளைத் தடுத்தனர். 1940 ஏப்பிரல் 9ம் நாள் யுத்த அறிவிப்பு இன்றி டென்மார்க் நாட்டினுள் நுழைந்தது. இதே நாள் நோர்வேயில் ஜெர்மனிய படைகள் இறங்கின. பல முக்கிய இராணுவ இலக்குகளை கைப்பற்றிக் கொண்டது. ஏப்பிரல் நடுவில் பிரிட்டீஷ்-பிரான்ஸ் படைகள் நோர்வேயில் தரையிறங்கியது. யுத்தத்தில் போராட முடியாது யூனில் மீண்டும் வெளியேறியது. நோர்வே மக்களின் துரோகியாகிய குவீஸ்லிங்கின் ''ஐந்தாவது படை'' உதவியுடன் 2 மாதங்களின் பின்னர் முற்றாக நோர்வேயை ஜெர்மனி கைப்பற்றிக் கொண்டது. இதன் மூலம் டென்மார்க், நோர்வேயின் பொருளாதாரங்களைப் பயன்படுத்தியதுடன், சுவீடனின் இரும்புத் தாதுவை பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.

பிரான்சு நாட்டுக்கு எதிரான ஜெர்மனியத் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இரு நாடுகளின் படைகளின் பலம்.

நாடுகள்டிவிஷன்விமானம்டாங்கிகள்பீரங்கிகள்
ஜெர்மன்136382425807375
பிரா, பிரிட்1473800310014500

இப் படைப்பலத்தின் பின்னனியில் கூட பிரான்ஸ் தோல்வி பெற்றது. இதையொட்டி அந்த இராணுவ நடவடிக்கையில் பங்கு கொண்ட பிரான்சு ஜென்ரல் காம்பியேஸ் கூறுவதைப் பார்ப்போம்:

''1940ம் ஆண்டு பிரான்சின் தோல்வி ஒரு அசாதாரணமான சம்பவமாகும். பொதுவான சக்திகள் சமன் நிலையைப் பார்த்தால் டாங்கிகள், பீரங்கிகளைப் பொறுத்த மட்டில் பிரான்ஸ்-பிரிட்டீஷ் படைக்கு மேம்பாடு இருந்தது என்பது நமக்கு இப்போது தெரியும். விமானப் படையில் இவற்றின் பலவீனம் இவ்வளவு விரைவான தோல்வியை முன்கூட்டியே கூறுமளவிற்கு அவ்வளவு அதிகமாக இல்லை.''- இரண்டாவது உலக யுத்தத்தின் வரலாறு.-

இத் தோல்விக்கு முக்கிய காரணம் முதலாவது உலக யுத்தப் பாணியில் ஜெர்மனி அதே திசையில் தாக்கும் என எதிர்பார்த்திருந்ததே. இந்தவகையில் அவ் எல்லைகளில் படைகளை குவித்தும் இருந்தனர். ஆனால் ஜெர்மனி அதிக நெருக்கமான காடுகள், சகதிகள் கொண்ட வழிகளின் ஊடாக பிரான்சுள் புகுந்தது. ஜெர்மனி வருமென எதிர்பார்த்திருந்த இடங்களில் ஹாலந்து இராணுவத்தின் 11 டிவிஷன்களும், 124 விமானமும், பெல்ஜிய இராணுவத்தின் 23 டிவிஷன்களும், 410 விமானங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது.

மே 10.ம் நாள் ஹிட்லரின் அறைகூவல் வாசிக்கப்பட்டது. இதில் பிரிட்டீஷ், பிரான்ஸ் ஆகியவை துரோகக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியது. ''இன்று துவங்கும் சமர் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜெர்மன் இனத்தின் விதியை நிர்ணயிக்கும்.'' என அறிவிக்கப்பட்டது.

1940 மே 10.ம் திகதி காலை 5.30க்கு 2000 பாஸிச விமானங்கள் 70 பிரான்ஸ், பெல்ஜிய, ஹாலந்து விமானத்தளத்தின் மீது குண்டுகளைப் பொழிந்தது. 1940 மே 12ம் திகதி தொடர்ச்சியான தாக்குதலின் பின்னர் மே 12.ல் ஹாலந்து சரணடைந்தது. இதன் அரசாங்கம் இலண்டனுக்குத் தப்பி ஓடியது.

பெல்ஜியம், பிரான்சின் பல பகுதிகளை ஊடுருவிய ஐர்மனிய இராணுவம் நேசநாடுகளின் படைகளை இரண்டாகப் பிரித்து கரையோரமாகத் தள்ளிச் சென்றது. இத்தாக்குதலை ஒட்டி ஹிட்லரின் பீல்ட்மார்ஷல் ரோம்மல் கூறுவதைப் பார்ப்போம்

''1940ஆம் ஆண்டு பிரான்ஸில் எங்களுடைய 10 கவச டாங்கி டிவிஷன்கள் தாக்குதலை முடித்தன. பிரிட்டீஷ்-பிரஞ்ச் படைத் தலையின் செயலின்மை இந்த வெற்றியை இலகுவாக்கியது.''

மே 20ல் பிரான்ஸ் நிபந்தனை அற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சரணடைந்தது. அத்துடன் தப்பியோடும் படலம் ஆரம்பித்தது. ஆங்கிலேயர் 3,38,000 போர்வீரர்களை பிரிட்டனுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றனர். இதில் ஆங்கிலேயர் 2,15,000பேர், பிரன்சுக்காரர் 1,23,000 பேர் ஆகும். ஜெர்மனி 40,000 பேரை சிறைபிடித்தது.

பிரிட்டீஷ் தரப்பில் 68,000 பேர் கொல்லப்பட்னர். இந்த நடவடிக்கையில் பங்கு கொண்ட 224 பிரிட்டீஷ் கப்பல்கள், 6 நாசகாரிக் கப்பல்கள், மூழ்கடிக்கப்பட்டன. ஜெர்மனி 140 விமானத்தை இழந்தது. பிரன்சுக் கரையில் பெருமளவு போர்த் தளவாடங்களை கைவிட்டே பிரிட்டீஷ், பிரான்ஸ் தப்பி ஓடினர்.

படைகள் சேதமின்றி வெளியேற அரசியல் காரணமே பிரதான பங்கு வகித்தது. தப்பி ஓடுபவர்கள் மீது தாக்குதலை நடத்த வேண்டாம் என்று ''நின்றுவிடும் கட்டளையை'' போட்டது என்பது, பிரான்ஸ் முறியடித்தது என்பது, பிரிட்டனை நிபந்தனை இன்றி ஒப்பந்தத்தைச் செய்ய ஹிட்லர் விரும்பினான். இதையொட்டி ஜெர்மனிய கால்டர் தனது நாட்குறிப்பில் எழுதியதாவது:

''...........பிரதான எதிரி........... எங்களுக்கு-பிரான்ஸ் உலகின் செல்வாக்கு மண்டலங்களை பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் நாங்கள் பிரிட்டனுடன் உடன்படிக்கையைத் தேடுகின்றோம்.''- கால்டர் யுத்த நாட்குறிப்பு, தொகுதி 1.


புரட்டாதி 3ம் திகதி பிரான்ஸ், பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தை அறிவித்தது. ஆனால் தீவிர தாக்குதலில் இறங்கவில்லை. புரட்டாதி 9ம்நாள் பிரான்ஸ் இராணுவம் சவாரில் தொடங்கிய குறுகிய நோக்கிலான தாக்குதல் 12ம் திகதி நிறுத்தியது. இதன் ஊடாக பிரான்ஸ், பிரிட்டனும் தனது கூட்டாளியான போலந்துக்கு துரோகமிழைத்தது. ஜெர்மனிய-பிரான்ஸ் எல்லையில் பிரான்ஸின் படை பலம்வாய்ந்ததாக இருந்தது. ஜெர்மனிய பலத்தை எல்லாவிதத்திலும் விஞ்சிநின்றது.


பிரான்ஸ்சு மீதான தாக்குதலில் பல இடங்களில் மக்களும் இணைந்து போர்வீரர்கள் தீரத்துடன் போராடினர். இருந்தபோதும் உயர்மட்டத் தலைமையின் துரோகமும், படைத்தலைமையின் செயலின்மையும், தோல்வியில் இட்டுச் சென்றது.

யூன் 14ம் திகதி எந்தவித எதிர்ப்பும் இன்றி ஜெர்மன் இராணுவம் பாரிஸைக் கைப்பற்றியது. இந்த நிகழ்வு பிரான்சு மக்களின் துரோகிகளான அரசியற் பிரமுகர்களின் சூழ்ச்சியில் நிகழ்ந்தேறியது. கம்யூனிஸட் கட்சி பாரிஸைக் காப்பாற்ற அழைப்பு விட்டிருந்த நிலையில், பிரன்சுத் துரோகிகள் கம்யூனிஸ்ட் தலைமையில் போராட்டம் நடைபெற்றால், கம்யூனிஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்குமெனக் கருதி, படையில் கம்யூனிஸ்ட் சார்பு தலைமைகளை மாற்றி அமைத்ததுடன், பாரிசைவிட்டு தூருக்கு ஓடினர். பாரிஸில் இருந்த சனத்தொகையில் 3 இல் 4 பங்கு வெளியேறியது.


1940 யூன் 10.ம் திகதி பிரிட்டீஷ் பிரான்சுக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடனம் செய்தது. இது பிரான்ஸ் யுத்தத்தில் பங்கு கொள்ளவும், இதனூடாக தோல்வியடையும் பிரான்சில் பங்குகளைக் கேட்டு பேரம்பேசவும் யுத்தம் அவசியமாக இத்தாலிக்கு இருந்தது. இதையொட்டி முஸ்ஸோலீனி கூறியதைப்பார்ப்போம்.

''யுத்தத்தில் பங்கேற்றவன் என்ற வகையில் சமாதான மாநாட்டு மேசையில் உட்கார எனக்கு ஒருசில ஆயிரம் இறந்தவர்கள் மட்டும் போதும்.''- H. A zeau, La guerre fraco-italiana. Juine 1940, Paris, 1967,p.41.-


1ம் யுத்தத்தில் ஜெர்மன் தோல்வி அடைந்தபோது 1918 நவம்பர் 11.ம் திகதி புகைவண்டிப் பெட்டியில் கப்பியேன் காட்டில் காய்ஸர் ஜெர்மனியின் சரணாகதியை ஏற்றாரோ அதே பெட்டியில் பிரான்சு பெட்டேன் அரசாங்கம் சரணாகதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தத்தின் இரண்டாம் நாள் இத்தாலியுடன் பிரான்சு உடன்படிக்கை செய்தது. இதன்மூலம் 832 ச.கி.மீற்றரை இத்தாலி தனதாக்கியது.


இதே நேரம் லண்டனில் டெகோலின் தலைமையில் 'சுதந்திர பிரான்ஸ்' எனும் தேசபக்த எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. 1941 மே முதல் பிரன்சுக் கம்யூனிஸ்ட் கட்சி கெரில்லாக் குழுக்களை உருவாக்கியது. பிரான்சு மீதான தாக்குதலில் 84 ஆயிரம் பிரான்சு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 15 லட்சத்து 47ஆயிரம் பேர் சிறை பிடிக்கப்பட்டனர். ஜெர்மனிய தரப்பில் 45 ஆயிரத்து 500 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.


1940 மே 10.ம் திகதி சேம்பர்லேனின் அரசாங்கத்தின் வீழச்சியுடன் சர்ச்சிலின் அரசாங்கம் பதவியை ஏற்றது. 1940 யூலை 16.ம் திகதி ஹிட்லர் கிரேட் பிரிட்டன் மீது தாக்குதலைத் தொடுக்கும் கட்டளையில் கையெழுத்திட்டான். இது கடல் சிங்கம் எனப் புனைப் பெயர் பெற்றது. 1940 ஓகஸ்ட் நடுப்பகுதியில் பிரிட்டன் மீது தொடங்கிய பரந்தளவு தாக்குதல் 1941 மே 11.வரை நீடித்தது. பிரிட்டன் மீதான தாக்குதலை தொடங்கத் திட்டமிட்ட ஹிட்லர் பின் சோவியத் மீதான தாக்குதலை முதன்மைப்படுத்தியதால் பிரிட்டன் மீதான படையெடுப்பைக் கைவிட்டான்.


1940 பேர்லின் உடன்படிக்கையின் ஊடாக இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி கூட்டு உடன்பாட்டை உருவாக்கின. பிரிட்டன் மீது 1940 ஓகஸ்ட் 13.முதல் செப்ரம்பர் 6 வரை ஹிட்லர் ஆதிக்கத்தைப் பெற விமானத்தளங்கள் மீது தாக்க முயன்றது. நாளொன்றுக்கு 1000 முதல் 1800 விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

1940 செப்ரம்பர் 7. முதல் நவம்பர் 13. வரை பிரிட்டீஸ் மக்களை அச்சுறுத்தும் வகையில் நகரங்களைத் தரைமட்டமாக்க முனைந்தது. இதில் காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைக்கும் 300 டண் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர்.

புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது?

புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது?

பி.இரயாகரன்
07.04.2007


ல்லை. மாறாக தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுகின்றனர். தமிழ் மக்களின் ஒவ்வொரு உணர்வையும், புலிப் பாசிசத்தை மூலதனமானக் கொண்டு பேரினவாதம் வேட்டையாடுகின்றது. தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.


புலிகளின் பாசிச பயங்கரவாதத்தை உலகுக்கு காட்டியபடி, அழிப்பது தமிழ் மக்களின் அடிப்படையான வாழ்வியலைத்தான. இந்த அடிப்படையான உண்மையை புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி மறுதலிக்கின்றது. இந்த வகையில் புலிகளும், புலி எதிர்ப்பும் பேரினவாதத்துக்கு தத்தம் அரசியல் வழிகளில் உதவுகின்றனர்.


ஒருபுறம் பேரினவாதம் தமிழ் மக்களையல்ல புலிகளையே அழிப்பதாக புலியெதிர்ப்பு கூச்சல் போடுகின்றது. மறுபுறம் தமிழ் மக்களுக்காகவே தாம் மரணித்துக்கொண்டிருப்பதாக புலிகள் ஓப்புக்கு ஒப்பாரி வைக்கின்றனர்.


பேரினவாதம் வழமைபோல் தனது பேரினவாத வழிகளில் புலிகளின் பெயரில் யுத்தத்தை செய்கின்றது. தமிழ்பேசும் மக்களின் எந்த பிரச்சனையும், இவர்களாக தீர்க்கப்படப் போவதில்லை. தமிழ் மக்களை புலிகளின் பெயரில் அழித்தொழிக்க, காலத்தை இழுத்தடிப்பதைத் தாண்டி, எதையும் பேரினவாதம் செய்வதில்லை. இவர்கள் வைக்கப் போவதாக கூறக்கொள்ளும் தீர்வுத் திட்டமும் கூட, தொடர்ச்சியாக திட்டமிட்டு கிடப்பில் போடப்படுகின்றது. மாட்டுக்கு குழையைக் காட்டி செல்வது போல், இந்தா தீர்வு என்று ஏமாற்றி வெல்லுகின்றனர். புலியெதிர்ப்பு செக்கு மாடுகள் புலிகள் தான் இதற்கு தடையாக உள்ளனர் என்று உளறிக் கொண்டு, அந்த இனவாத குழையை நோக்கி ஆவலாக அங்கலாய்த்து பறக்கின்றனர். ஆனால் இனவாத எதார்த்தம் காலத்தை நீடிப்பதும், அழித்தொழிப்பை முதன்மைப்படுத்தியுமே தமிழ்மக்கள் மேல் வெறியாட்டம் போடுகின்றது.


தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தேசிய ரீதியாக, இன ரீதியாக, மொழி ரீதியாக இனம் காண மறுக்கும் இனவாத அரசுகள், புலியெதிர்ப்பும், அந்த மக்களுக்கு ஜனநாயக பூர்வமான அரசியல் தீர்வை வழங்கப் போவதில்லை. இந்த உண்மை மீள மீள மெய்ப்பிக்கப்படுகின்றது. கொடுமையான கொடூரமான யுத்தம் நடத்தப்படுகின்றது. வகை தொகை தெரியாத அளவில் குண்டுகள், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பொழியப்படுகின்றது. அழித்தொழிப்பும், சமூகத்தை விரட்டி அடிப்பும் அன்றாடம் நிகழ்கின்றது.


மக்கள் மந்தைக் கூட்டம் போல் விரட்டிவரப்பட்டு, ஒவ்வொருவர் காலிலும் சுயவிலங்கிட்டு தமது இராணுவ பாசிச கோட்டைக்குள் சிறை வைக்கின்றனர். இந்த மக்கள் சுயமாக சிந்திக்கவும், செயலாற்றவும், ஏன் தமது அபிப்பிராயத்தை தெரிவிக்கவும் முடியாத வகையில், ஒரு பேரினவாத அடக்குமுறைக்குள் நாயிலும் கீழாக வைக்கப்படுகின்றனர்.


அனைத்தும் புலியை அகற்றல், புலிப் பயங்கரவாதியிடமிருந்து மக்களை பாதுகாத்தல் என்ற புலியெதிர்ப்பு விளக்கம் தரப்படுகின்றது. புலிகளை எப்போதோ தமிழ் மக்கள், தமது விடுதலையின் எதிரி என்பதை அறிந்து அதில் இருந்து விலகி வாழ்கின்றனர் என்ற உண்மை, பேரினவாதத்தின் சதியை பொய்யாக்கிவிடுகின்றது. மக்கள் எப்போதோ புலிகளை தோற்கடித்துவிட்டனர். பாசிசமின்றி புலிகள் உலகின் எந்த மூலையிலும் உயிர்வாழ முடியாத நிலை. எந்த நிகழ்ச்சியின் பின்பும் பாசிசம் விகாரமாகி வெளிபட்டு நிற்கின்றது. தமிழ் மக்களை புதிதாக விடுவிப்பதற்கு என பேரினவாத பாசிச திட்டத்தில் எதுவுமிருப்பதில்லை. பேரினவாத பாசிசம் புலிப்பாசிசத்தை துணையாக கொண்டு, தமிழ்மக்களையே அடக்கியொடுக்கி அடிமைப்படுத்த விரும்புகின்றது. இந்த வகையில் இன்று கிழக்கு மிக மோசமாக அழிக்கப்படுகின்றது. அந்த மக்களின் வாழ்வு கற்பழிக்கப்படுகின்றது. வரலாறு காணாத புலம்பெயர்வும், இழப்புகளும். சிதைவுகளும். எங்கும் மனித அவலங்கள். வீதியோரங்களில் அனாதை வாழ்வு. புலிப் பயங்கரவாதத்திடம் இருந்தான மீட்சி, இப்படித்தான் நிதர்சனமாகி நிர்வாணமாகி நிற்கின்றது.


இதற்கு பின்னால் அரசியலற்ற கருணா என்ற பாசிச மாபியா கூலி குண்டர் படையும் மற்றைய குண்டர் குழுக்களும் வீரர்களாக பவனி வருகின்றனர். கருணா என்ற மாபியாக் கும்பல் கொழும்பு முதல் வவுனியா வரை கறக்கும் கப்பப் பணம், புலியின் பாசிச மாபியாத்தனத்தை மிஞ்சுவதாகும். இந்த பணம் கூட அந்த கிழக்கு மக்களுக்கு காட்டவேயில்லை. தாம் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதாக காட்ட, கமராவுடன் அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர். இதன் மூலம் புலம்பெயர் பணமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வீணி வடிய காத்துக் கிடக்கும் மக்கள் விரோதக் கும்பல்கள்.


பேரினவாதத்தின் கிழக்கு எடுபிடியாகி ஊரைச் சுருட்டுகின்றனர். கருணா குண்டர்கள் மேலான சர்வதேச குற்றச்சாட்டுகள் அதிகரிக்கும் போது, அரசு அவர்களின் மூச்சே வெளியில் தெரியாத வண்ணம் பூட்டிவைக்கின்றது.


கிழக்கு மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொண்டு, இந்த கூலிக் குழுக்கள் எல்லாம் பேரினவாதத்தின் கால்களை நக்குகின்றது. அந்த மக்களின் நிரந்தரமான அடிமை வாழ்வும், பேரினவாதத்தின் அழுங்கு பிடியும் மீட்கவே முடியாத ஒரு சகதியினுள் சென்று கொண்டு இருக்கின்றது. இதையே வரலாறு நிச்சயமாக அனைத்து தரப்புக்கும் நிறுவிக்காட்டுகின்றது.


Friday, April 6, 2007

மாற்று சினிமாவுக்கான தேடல்

பிரான்சில் தொடரும் புலிக் கைதுகள், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவையா?

பிரான்சில் தொடரும் புலிக் கைதுகள், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவையா?

பி.இரயாகரன்
06.4.2007


ந்தக் கைதுகளைத் தொடர்ந்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கூறிக்கொண்டு கும்மியடித்த பலர், நாய் உண்ணிபோல் கழன்று ஒடுகின்றனர். பலர் தமது தலையை மண்ணுக்குள் குத்திக் கொண்டு, சம்பந்தமில்லாதவர்களாகி விட்டனர். இனம் தெரியாத ஒரு அச்சம் பீதி கலந்த மௌனம். எதுவும் நடவாத மாதிரி இருக்க முற்படுதல். எதுவும் தெரியாதவர் போன்று பிரமை. பலர் மௌனவிரதம். வசனம் பேசிய வீரர்கள், நடைப்பிணமாக நடமாட முனைகின்றனர்.


பாரிசில் புலிகள் மீதான பொலிசாரின் திடீர் பாய்ச்சலும், கைதுகளும் புலிகளுக்கு எதிராக ஐரோப்பாவின் முதல் சம்பவம். பிரான்சில் புலிகளுக்கு எதிரான முதல் சம்பவம். பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு அப்பால், நீண்டகாலமாக நீடித்த புலிகளின் சட்டதிட்டங்களுக்கு எதிரான முதல் சம்பவம். இதன் மீதான அதிர்வு, தமிழர் அதிகம் நடமாடும் பாரிஸ் வீதிகளில் இனம் தெரியாத புதிராகவே பிரதிபலிக்கின்றது. பிரஞ்சு சமூகம் எம்மை ஆச்சரியத்துடன் பார்க்கின்றது. அதுவும் அவர்களுக்கு புதிர்தான். புலிகளால் பாதிக்கப்பட்டவர் மீதான அனுதாபமா! அல்லது புலிகள் மீதான வெறுப்பா! இரண்டில் ஒன்றையாவது ஒவ்வொரு பிரஞ்சு மக்களும் பிரதிபலிக்கின்றனர். என்றுமில்லாத வகையில் எம்மை நோக்கி அவர்களின் கேள்விகள் வருகின்றது. செய்தி ஊடகங்கள் இந்த சம்பவத்தை சுற்றி வருகின்றன. தகவலை திரட்ட முடியாத ஒரு மாபியா உலகத்தில், அவர்களே அறியாத வண்ணம் வலம் வருகின்றனர்.


இவை எல்லாம் பல விடையத்தை எடுத்துக்காட்டுகின்றது. மக்கள் விரோத முடிவுக்கு வரும் போது, ஒட்டுண்ணிகள் செய்யும் துரோகம் மட்டுமல்ல, போலியான கட்டமைப்பு அதிர்ந்து பொடிப்பொடியாகும் என்பதை பாரிஸ் நிகழ்வுகள் மறுபடியும் ஒரு வரலாறாகவே எடுத்துக்காட்டுகின்றது. மறுபக்கத்தில் இந்தக் கைதுகளை நாம் எப்படி புரிந்து கொள்வது என்பது மிகவும் சிக்கலான, ஆனால் அடிப்படையான கேள்வியாக எம்முன் தொங்கி நிற்கின்றது.


1. ஒருபுறம் பிரஞ்சு ஏகாதிபத்தியம். அது உலகம் தழுவிய வகையில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களையும் ஒடுக்கும் கொடுவாளை கொண்டு இயங்குகின்றது. இந்த வகையில் சொந்த நாட்டிலும் அது செயல்படுகின்றது.


2. பிரஞ்சு ஏகாதிபத்தியம் சொந்த நாட்டு சட்டதிட்டத்துக்கு உட்பட்ட பிரச்னைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றது. அதாவது அந்த நாட்டின் வாழும் மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சட்ட மீறலுக்கு எதிராக செயல்படுகின்றது.


இப்படி இரண்டு அம்சங்கள் உண்டு. இதில் வெளிநாட்டு போராட்ட இயக்கங்கள் மீது நடிவடிக்கையை எடுக்கின்ற போது, இவ்விரண்டு அம்சமும் அக்கபக்கமாகவே இயங்குகின்றது.


புலிகள் மீதான நடவடிக்கையை எந்த வகையில் நாம் புரிந்து கொள்வது? புலிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் சார்பிலும் இதை புரிந்து கொள்ளத் தூண்டுகின்றது.


அடுத்து புலிகள் ஒரு விடுதலை இயக்கமாக இருக்கின்றார்களா என்ற அடிப்படைக் கேள்வியும், புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எவை எவை முன்வைக்கப்படுகின்றது என்பதும் பதிலளிக்கின்றது.


புலிகள் இயக்கம் ஐரோப்பிய யூனியனால் தடைசெய்யப்பட்ட போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எவை? அவை மக்கள் நலன் சார்ந்த விடையங்களை முன்வைத்து தடை செய்யப்படவில்லை. மாறாக அனைத்தும் மக்கள் விரோத நடவடிக்கையை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. தடை ஏகாதிபத்திய தன்மை வாய்ந்ததாக இருந்த போதும் கூட, அந்தக் காரணத்தை மறுக்க முடியாத மனித உரிமை மீறலாகவே இருந்தது. இந்த மனித உரிமை மீறலை, புலிகள் நிவர்த்தி செய்யவே மறுத்தனர். இப்படி ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு ஊக்கியாகவே செயலாற்றினர்.


புலிகள் தம்மைத் தாம் சுயவிமர்சனம் செய்யவும், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தவும் தவறினர். மாறாக இந்த தடையை எதிர்த்து, ஐரோப்பிய கண்காணிப்பாளர்களையே வெளியேற்றினர்.


ஏகாதிபத்திய தன்மை வாய்ந்த தடை, இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை என்பது உண்மை. ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையைக் கொண்ட, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்ததாக அமைந்தது என்பது உண்மை.


அதை அடிப்படையாக கொண்டு, இலங்கை அரசுடன் ஓப்பிட்டு தமிழ் மக்களை புலிகள் ஒடுக்குவதை நியாயப்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் மனித உரிமைகளை அங்கீகரிப்பது, அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க மறுப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் மனித உரிமை மீறலைச் செய்யும் உரிமையைக் கோரி, பிரஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நிறுத்துவதை நாம் எண்ணிப்பார்க்கவே முடியாது.


ஆனால் புலிகள் அப்படித்தான் கோரினர். ஐரோப்பிய தடையை அப்படித் தான் விளக்கினர். பாரிஸ் கைதை இலங்கை அரசின் தூண்டுதலாக விளக்குகின்றனர். இலங்கை அரசின் தூண்டுதல் பங்களிப்பு ஒருபுறம் இருந்தாலும், மறுபக்கம் கைதுக்கான அடிப்படை தமிழ் மக்கள் மீதான புலம்பெயர் அடாவடித்தனங்கள் மீது தான் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசின் தூண்டுதல் என்பதை , இந்த நாட்டு சட்டம் அங்கீகரித்துச் செல்லாது. மாறாக இந்த குற்றச்சாட்டுகள் இங்குள்ள குற்றங்களை அடிப்படையாக கொண்டு செயலாற்றுகின்றது. மக்களுக்காக சட்டத்தை மீறியதால் அல்லது மனிதாபிமான செயல்களை செய்ததால் இக் கைதுகள் நடக்கவில்லை.


புலிகள் சட்டப்படி தடை செய்யப்பட்ட அமைப்பு. மறுபக்கத்தில் சட்டப்படியான வேறு அமைப்புகள் மூலம் தான் இயங்கியவர்கள். சட்டப்படியான அந்த பினாமி அமைப்பைச் சுற்றித் தான் கைதுகள் நிகழ்ந்துள்ளது. சட்டப்படியான அமைப்பு சட்டவிரோதமான அமைப்புடன் கொணடிருக்கின்ற உறவும், சட்டபடியான அமைப்பு தமிழர் மீதான தனது சட்டவிரோத செயல்பாட்டை எப்படி செயற்படுத்தியது என்பதை நிறுவும் வரை, இவை சட்டப்படி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்நிலை இலங்கை அரசின் தலையீட்டினால் இவை நிகழ்ந்தது என்ற கூற்றை மறுத்து அம்பலப்படுத்துகின்றது.


வெளிப்படையான சட்டப்படியான இந்தக் கைது தமிழ் மக்களின் எந்த உரிமையையும் கைவிடக் கோரியோ, தமிழ் மக்களின் மனிதாபிமான நடிவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று கூறியோ நடக்கவில்லை. அதை ஏகாதிபத்தியம் கோருமளவுக்கு, அதை ஒடுக்கும் அளவுக்கு புலிகள் இக்கூறுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இவை வெளிப்டையான குற்றங்களை அடிப்படையாக கொண்ட கைதுகள்.


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என எவ்வழிமுறைகளைத் தான் புலிகள் கொண்டுள்ளனர்? எந்த மனிதாபிமான செயல்களில் ஈடுபடுகின்றனர்? இந்தக் கேள்வி, இதன் எதிர்மறைத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. பிரஞ்சு ஏகாதிபத்தியம் தமிழ் மக்களின் உரிமையை கைவிடக் கோருவதற்கு முன், புலிகள் அதற்காக எந்தவகையிலும் போராடவில்லை என்பதே உண்மை. மக்களின் நலன் சார்ந்த செயற்பாடுகளை கைவிடக் கோருவதற்கு, புலிகள் அவை போன்றவற்றில் ஈடுபவதில்லை என்பது உண்மை. பெயரளவில் அமைப்புகள் மட்டும் உண்டு.


இந்த உண்மை ஒருபுறம், மக்கள் உரிமைப் போரைக் கைவிடக் கோரி அல்லது அதனை ஒடுக்கும் அடிப்படையில் கைது நடந்தது என்பதை மறுதலிக்கின்றது. இல்லை அப்படியே தான் நடந்தது என்றால், கைதுக்கான காரணங்களை யார் உருவாக்கியது. ஐரோப்பிய தடைக்கான காரணத்தை யார் உருவாக்கியது புலிகள் தான். இந்த கைதுகளுக்கான காரணத்தை அன்றாடம் புலிகள் உற்பத்தி செய்தனர். இந்த வகையில் புலிகளின் செயற்பாடுகள் என்ன?


கட்டைப்பஞ்சாயத்து, அடிதடி, உருட்டல் மிரட்டல், பொறுக்கித் தின்னும் தமது அதிகாரத்துக்காக தமக்கு இடையிலான மோதல்கள், போராட்டத்தைச் சொல்லி வர்த்தகம், பணத்தை திரட்டுதல், இதுதான் அவர்களின் அன்றாட நடடிவடிக்கைகள். பண திரட்டுதலுக்காக சில பாடசாலைகள், கலாச்சார மையங்கள், விளையாட்டு சங்கங்கள், அதைச் சுற்றி நிகழ்ச்சிகள், அனைத்தையும் தழுவிய வர்த்தகம். இதைச் சுற்றி அடாவடித்தனமான மிரட்டல் கலந்த சமூக அதிகாரம். எங்கும் எதிலும் இதை நாம் காணமுடியும். எல்லா சமூக பொது வேலையிலும் இது பிரதிபலிக்கின்றது.


சபாலிங்கம் படுகொலை, நாதன் கஜன் படுகொலை, லட்சமி வீட்டில் ஆவணங்களைத் திருடியது, குகநாதனுக்கு எதிரான அவதூறு, சோபாசக்தி மீதான அவதூறு, லாச்சப்பலில் கம்பத்தில் துரோகியாக காட்டி கட்டியது முதலாக எத்தனையோ வெளிப்படையான சம்பவங்கள். இதற்கு வெளியில் இரகசியமான எத்தனையோ நிகழ்ச்சிகள். அரசியல் ரீதியாக இப்படி சமூகத்தை அச்சம் பீதியால் மிதக்கவிடப்பட்ட ஒரு சூழல். இதைவிட ரவுடிக் கும்பல்களைக் கொண்ட அடிதடிகள் வரை எத்தனை சூக்குமான விதவிதமான நடைமுறைகள்.


புலம்பெயர் சமூகம் மத்தியில் ஆதிக்கம் வகிக்கும் ஒரே மொழி மிரட்டல், அச்சுறுத்தல் ஊடாக காரியங்களை சாதிக்கும் வன்முறை. இதுவே பொதுவான அதிகாரத்துக்கான குரலாக உள்ளது. இதற்குள் பணத்தை எப்படி எந்த வழியில் கறப்பது என்பதற்கு, சாம பேத என அனைத்து வழிகளும் கையாளப்படுகின்றது.


நீண்டகாலமாக அமைதியும் மவுனமுமாக நீடித்த புலம்பெயர் புலிக்கெடுபிடிக்கு எதிரான ஒன்றாகவே இக் கைது உள்ளது. இது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய நடவடிக்கைளில் ஒன்றாக, நாம் இதை எந்த வகையிலும் பார்க்க முடியாமல் செய்துவிட்டது. அதை அவர்களே புலிகளே என்றோ இல்லாதாக்கிவிட்டனர்.


தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை கைவிட்டு அன்னியமாகிப்போன புலிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரஞ்சு மக்களின் நியாயமான ஆதரவை நினைத்துக் கூட பார்க்க முடியாது. சட்ட ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு பிரச்சனையாகவே இது இருப்பதை, அரசியல் ரீதியாக நாம் மறுக்கமுடியாது.


மீண்டும் நாம் கோருவது தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை, மக்களின் அடிப்படை உரிமையை அங்கீரித்து போராடுவதன் மூலம் தான், தமிழ் மக்களையும் உலகத்தையும் நாம் வெல்லமுடியும்.


Wednesday, April 4, 2007

லெனின் பற்றி ஒரு அறிமுகம்

லெனின் பற்றி ஒரு அறிமுகம்.

ஒளிப்பட குறும் விவரணம்








பிரதி பெற விரும்புபவர்கள்

கோ.நாகராசன் : 9443175256 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

சென்னை கீழைக்காற்று நூலகத்திலும் பெற முடியும்.

புலிகளின் விமானத் தாக்குதலும், அது வெளிப்படுத்தும் மலட்டு அரசியலும்

புலிகளின் விமானத் தாக்குதலும், அது வெளிப்படுத்தும் மலட்டு அரசியலும்

பி.இரயாகரன்
03.04.2007


ரசியல் ரீதியாக மலடாகிப் போனவர்கள், ஹீரோயிச நடவடிக்கைகள் மூலம் தாக்குப்பிடிக்க முனைகின்றனர். ஆண்மையை இழந்தவர்கள் ஆண்மை மருந்துகளைக் குடிப்பதன் மூலம், தமது ஆண்மையை மெயப்பிக்க படாத பாடுபடுவார்கள். புலிகளின் எஞ்சிய காலம் இந்த நிலைக்கு பரிதாபகரமாக தரம் தாழ்ந்துவிட்டது.


இது போன்ற தாக்குதல்கள் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய நன்மை தான் என்ன? அதை மட்டும் சொல்லத் தெரியாத ஆய்வுகளும் அரிப்புகளும். ஆகாகா தமிழன் விமானம் வைத்திருக்கின்றான் என்று சுய பெருமை பேசும் உப்புச்சப்பற்ற வக்கிரங்கள்.


மக்களின் நிலை என்ன? இலட்சக்கணக்கான மக்களோ அகதி முகாமில் அல்லது தெருவோரங்களில் ஒரு நேரக் கஞ்சிக்கு கையேந்துகின்றனர். எந்த மீட்பாளர்களுமின்றி அனாதைகளாகி விட்டனர் (தமிழ்) மக்கள். கிழக்கின் மனித அவலம் வெளிவராத வகையில், அது இராணுவ பிரதேசமாகிவிட்டது. அந்த மண்ணில் உழைத்து வாழ்ந்த மக்கள், மீளவே முடியாது அடிமைத்தனத்துக்குள் புதைந்துவிட்டனர். வடக்கில் கொடுமை மேல் கொடுமை. அவலங்கள் மேலாய் அவலம். இவை வெளிவராத வண்ணம் இராணுவ இறுக்கிய பிரதேசமாகின்றது.


வன்னியில் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான காடையர் கூட்டத்தின் மனித விகாரங்களுக்குள், மனிதம் அழுந்தி சிதைந்து விட்டது. அங்கு வாழும் தமிழர்கள் மனித கூட்டம் என்பதையே அவர்கள் மறந்து விட்டனர். இலங்கை எங்கும் மக்கள் (தமிழர்கள்) வாழ முடியாத அவலம். இதையெல்லாம் யார் உருவாக்கியது? சொந்த பெருமையை பேசும் எந்த நாய்களுக்கும், இந்த மக்களைப்பற்றிப் பேசுவதற்கு வக்கு கிடையாது.


மவுனமாகி மனிதம் சிதைந்து அழுகின்றது. திக்குத்தெரியாத அராஜகப் பிடியில் சிக்கி மக்கள் அனுதினமும் திணறுகின்றனர். மக்களைப்பற்றி எந்த சமூகக் கருசனையுமற்ற மாபியா குண்டர்கள், தமது பாசிச பெருமைகளைப் பேசுவதால் எதுவும் மக்களுக்கு வந்துவிடப்போவதில்லை. ஹீரோக்கள், ஹீரோயிச நடவடிக்கைகள் வரலாற்றை தீர்மானிப்பதில்லை. மக்கள் தான் வரலாற்றை தீர்மானிக்கின்றார்கள் என்பதே, மாறாத ஒரு உண்மை. மாறாக தற்பெருமைகளை, அதிகாரம் அடாவடித்தனங்கள் மூலம் தம்மைத்தாமே பீற்றுவதால், எதார்த்த உண்மைகள் பொய்யாகிவிடுவதில்லை. பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் சமூக அடித்தளம் இருப்பதில்லை.


ஒருபுறம் வீரமும், பெருமையும் பேசும் நடவடிக்கைகள் , மறுபுறமோ மனித அவலத்தில் மனித குலம் (தமிழ் இனம்) ஓலமிடுகின்றது. கடந்த ஒரு வருடத்தில் யுத்தகளமல்லாத சூழ் நிலையில் குறைந்தபட்சம் 2000 பேரை தமது சொந்த வக்கிரங்களுக்காக யார் நரைவேட்டையாடினர்? எங்கு? எதில்? எப்படி? உப்புச்சப்பற்ற வீரம் பேசப்படுகின்து.


எங்கும் எதிலும் ஆறாத துயரக் கண்ணீர், கண்ணீரே வரண்டு போகும் அளவுக்கு மக்களின் (தமிழனின்) முதுகில் குத்தி அறையப்படுகின்றனர். பொறுக்கியாக சமூக விரோதிகளாக வாழ்ந்தபடி, வீரமும் பெருமையும் பேசும் கும்பல், தான் சொகுசான வாழ்க்கை வாழும் சமூக முரண்நிலை. தேசியம் என்பது சுரண்டும் வர்க்க நலன்களை ஈடு செய்கின்ற ஒரு கருவியாக கொண்டே, பெருமையும் வீரமும் சிலரின் மகுடங்களாக்கப்படுகின்றது.


நாம் இந்த வரலாற்றை திரும்பிப் பார்ப்போம். 1983 இல் தின்னைவேலியில் இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிகழ்வும், அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பேரினவாத இனக் கலவரமும் ஏற்படுத்திய சமூக விளைவுகள் என்ன? அன்று இராணுவம் கொல்லப்பட்டதை தமிழன் பெருமையாக பேசியவர்கள் பீற்றியவர்கள் எல்லாம் எங்கே? (தமிழ்) சமூகம் கண்டது தான் என்ன?


அன்று இந்த இனக்கலவரம் உருவாக்கிய மனித அழிவுகளையிட்டு, தம் பெருமை பேசியவர்கள் எவரும் அலட்டிக்கொண்டது கிடையாது. ஒரு சமூகம் மீது நிகழ்த்திய அநீதிக்கு எதிரான போராட்டம், எதைத்தான் மக்களுக்கு தந்துள்ளது. அதுவும் அநீதியான பாசிசத்தையே விடுதலையின் பெயரில் பரிசளித்துள்ளது. இந்த பாசிச மாபியாத்தனம், தனது காடைத்தனம் மூலம் மக்களை நாளும் பொழுதும் சூறையாடி தின்னுகின்றது.


அன்று இனக்கலவரம் ஆயிரம் ஆயிரம் மக்களின் வாழ்வை இல்லாதொழித்தது. அன்று வாழ்வை பறிகொடுத்த அந்த மக்களுக்கு ஒரு சமூக நம்பிக்கையையோ, எதிர்காலத்தையோ உருவாக்க முடியாத எமது போராட்டம், அவர்களுக்கு எதிராகவே படுபிற்போக்காக மாறியது. எந்த பாசிட்டும், எந்த மாபியாவும், எந்த காடையர் கூட்டமும் மக்களின் விடுதலையை ஒருநாளும் பெற்றுத் தரமுடியாது. மாறாக மேலும் மேலும் மக்களின் விடுதலைக்கு வேட்டு வைப்பார்கள். எஞ்சிய அந்த மக்களின் சமூக இருப்புக்கான அனைத்து சமூக அடித்தளத்தையும் அழிப்பார்கள். இதையே எமது சமூக விரோத வீர பாசிச வரலாறு நிறுவி வந்துள்ளது.


இதைத் தவிர எதைத்தான் தமிழ் மக்கள் கண்டார்கள்? உங்களிடம் ஒரு துளியாவது சமூக நேர்மை இருந்தால், வாயைத் திறவுங்கள், சொல்லுங்கள் எம் மக்கள் சாதித்தது என்ன? சாதிக்கப்போவது என்ன? (தமிழ்) விமானம் குண்டு விசினால் மக்களுக்கு (தமிழனுக்கு) கிடைப்பது தான் என்ன? எதுவுமில்லை. சூனியம், வாய் பொத்தி நிற்கும் சமூக அடிமைத்தனம். சிலர் தாம் பிழைப்பதற்கு ஏற்ற போர் கோட்பாடுகளும், கூச்சல்களும். யுத்தத்தை வெறுக்கும் மக்களின் உணர்வுடன் அன்னியமான பாசிச லும்பன்கள், ஒரு சமூகத்தையே (தமிழனையே) கடித்துக் குதறுகின்றனர். இதன் மூலம் சிலர் செல்வங்களைக் குவித்து வைத்துக் கொண்டு, சமூகத்தின் ஏக பிரதிநிதிகளாக காட்டிக்கொள்கின்றனர். இதை பாதுகாக்கவே இராணுவ மயமாக்கல். தேசம், தேசியம் என்பது காய் அடிக்கப்பட்டு, குலைப்பதற்காகவும் அதைச் சொல்லி நக்கிவாழ்வதற்காகவும் விடப்பட்டுள்ளது.


நெற்றியில் அறைவார்கள். அது சந்தனமாக இருந்தாலும் சரி, ஒரு துப்பாக்கி குண்டாக இருந்தாலும் சரி இரண்டும் ஒன்று தான். இதைத் தான் அவர்கள் கடந்தகாலம் முழுக்க மக்களுக்கு பரிசளித்தவர்கள்.


மக்கள் எந்த சமூக குறிக்கோளுமற்ற வகையில் வாழ்வை இழத்தல் அரங்கேறுகின்றது. இருக்கின்ற வாழ்வு பறிபோகின்றது. இதைத் தவிர எதைத்தான் மக்கள் விடிவாக பெற்றார்கள். அல்லது பெறுவார்கள். சுனாமி ஏற்படுத்திய இயற்கை அழிவை எல்லாம் பணமாக்கி தின்று தீர்த்தவர்கள் யார்? இவர்களா மக்களின் விடுதலை பெற்றுத் தருவார்கள்! இவர்கள் எப்படிப்பட்ட விடுதலையைத் தருவார்கள்? தெரிந்தால் சொல்லுங்கள்.


Monday, April 2, 2007

புலியல்லாத ஒரு கொலைக்களமும், புலியெதிர்ப்பின் நிலைப்பாடும்

புலியல்லாத ஒரு கொலைக்களமும், புலியெதிர்ப்பின் நிலைப்பாடும்

பி.இரயாகரன்
01.04.2007


புலியல்லாத கொலைகளுக்கு உடந்தையாக இருத்தலே புலியெதிர்ப்பின் ஜனநாயகமாகும். இதை ஒரு தலையங்கமாக இட்டு, அதைக் குறித்து எழுத வேண்டிய அளவுக்கு அரசியல் விபச்சாரம் எங்கும் அரங்கேறுகின்றது. புலிகள் செய்யாத கொலைகள், புலியெதிர்ப்புப் பாசிசக் கும்பலால் ஆதரிக்கப்படுகின்றது. ஒன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கானவர்கள் மீது, இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டுவிட்டது. இந்த மனித அவலத்தை மூடிமறைக்க, இனம் தெரியாத கொலைகள் என்ற சூக்குமத்துக்குள் வெறியாட்டம் செய்கின்றனர். மாறாக புலிகளை மட்டும் கொத்திக் கிளறுகின்றனர். இப்படி இந்த புலியெதிர்ப்பு நரிகள் மனித அவலத்தையே ருசிக்கின்ற இழிபிறவிகளாகி இருப்பதையே, முற்போக்கு என்கின்றனர்.


புலிகள் மட்டுமா வகைதொகையின்றி துரோகியாக, சமூக விரோதியாக கொல்லமுடியும்! எம்மாலும் அதை மிஞ்சி செய்ய முடியும் என்பதை பேரினவாதமும், கைக்கூலி கும்பல்களும் செய்து காட்டுகின்றனர். இங்கு ஜனநாயக மீட்பு, பாசிச ஒழிப்பு என்ற பெயரில் இவை செய்யப்படுகின்றது.


புலிகள் செய்தால் அது ஜனநாயக மீறலாக பாசிசம் என்பவர்கள், புலி அல்லாதோர் செய்தால் அது பாசிச ஒழிப்பு என்கின்றனர். அரசியல் ரீதியாக இது ஒரு வேடிக்கை தான். ஆனால் இதுவே, மக்களின் வற்றாத கண்ணீர் காடாகின்றது. தமது குழந்தைகளும், கணவர்களும் கேட்பாரின்றி கொன்று குதறப்படுவதைக் கண்டு, கதறுகின்றனர். தாய்மையின் வலி உருவாக்கும் அவலமான துயரத்தை சிலுவையாக சுமந்தபடி, இராணுவ முகாங்களின் முன் தமது குழந்தைக்காக ஏங்கி நிற்க, அவர்களின் கருப்பைகள் அறுத்தெறியப்படுகின்றது. நாளொரு தோறும், பொழுதொரு தோறும் பிணங்களே தேசமெங்கும் மிதக்கின்றது. அனாதைகளாக மரணித்துப் போகும் அவலத்தை ஜனநாயகத்துக்கான மீட்பு என்கின்றனர். கிழக்கு இராணுவ சூனிய பிரதேசமாகிவிட்டது. வன்னியில் இருந்து மனித அவலங்கள் தகவல்களாக கசிகின்ற நிலமைகள் இருக்கும் போது கூட, கிழக்கில் மனிதம் நலமடிக்கப்படுகின்ற ஒரு நிலையில், அவை தகவலாக கூட வரமுடியாத அவலம்.


இதை செய்கின்ற அரசையும், அந்த இராணுவத்தையும் போற்றுகின்ற அரசியல் தான், புலிக்கு மாற்று அரசியல் என்கின்றனர். இதற்கு வெளியில் இவர்களின் அரசியலை பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும், எதையும் கண்டறிய முடியாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கண்டறிவதை தீவிரமாக எதிர்க்கின்றவர்கள் இவர்கள்.


இனம்தெரியாத கடத்தல், காணாமல் போதல், இனம் தெரியாத கொலையை செய்தல் என்பதை, புலிகளிடம் இருந்து பேரினவாதம் கையேற்றுள்ளது. இந்த வகையில் புலிகள் ஒருதலைப்பட்சமாக இராணுவம் மீது தாக்குதலை தொடங்கிய பின்பாக, அதாவது 1995 டிசம்பர் முதலாக குறைந்தபட்சம் 2000 க்கு மேற்பட்டவர்கள் இப்படி கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் யுத்த முனையில் அல்ல, வீதிகளிலும் வீடுகளில் வைத்தும் இல்லாததாக்கப்படுகின்றனர். புலிகளின் கடந்தகால நடப்பு பாசிச கொலைகார வரலாறு இதற்கு முன்னால் மண்டியிட்டு பிச்சை வாங்க வேண்டும். மிக குறுகிய காலத்தில், எந்த எதிர்ப்புமின்றி, இவை மூடிமறைக்கப்பட்ட ஒரு நிலையில் தான் இவை நடந்தேறியுள்ளது, நடந்தேறுகின்றது.


புலியெதிர்ப்பு அரசியல் இதை ஆதரிப்பதும், இதைச் செய்ய துணை போவதன் மூலமும் நாடு இரத்த ஆறாகின்றது. புலிகள் செய்தால் அதை வைத்து நக்கிப் பிழைப்பதும், புலியல்லாத கொலைகளை இட்டு கள்ளமௌனம் சாதிப்பதும் இவர்களின் அரசியல் பிழைப்புத்தனமாகும். புலிகள் நடத்தும் பாசிசக் கொலைகளை வெட்டிப் புடுங்கி பிணப்பரிசோதனை செய்வதை ஜனநாயகம் என்பவர்கள், புலியல்லாத இன்றைய கொலைகளை இட்டு கள்ள மௌனம் சாதித்து ஆதரிப்பதே இவர்களின் கடைந்தெடுத்த பாசிச ஜனநாயகமாகும. இந்த மனித அவலத்தை கண்டு காணாமல் மூடிமறைப்பது வெக்கக்கேடு.


இவர்களின் ஜனநாயக அரசியல் எப்படி புலிப் பாசிசத்தை ஒழிக்கும்? இது போன்ற கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் ஆதரிப்பதன் மூலமே தான் என்பது தான் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியலாகும். இதற்கு வெளியில் புலிப் பாசிச ஒழிப்புக்குரிய, வேறு எந்த வேலைத்திட்டமும் அரசியல் வழியும் இந்தக் கும்பலிடம் கிடையாது. நடந்துவரும் ஒரு பாரிய படுகொலையை புலியெதிர்ப்பு கும்பல் ஆதரித்து மூடிமறைக்கின்றனர்.


மறுபக்கம் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போன புலிகள், இதை அம்பலப்படுத்த முடியாது மலடாகிக் கிடக்கின்றனர். இதில் தான் புலியெதிர்ப்புக் கும்பல் மிதக்கின்றது. புலிகள் ஹீரோத்தனமான தாக்குதல் மூலமே அரசியல் செய்கின்ற இழி நிலைக்கு நாயிலும் கீழாக தாழ்ந்து, இந்த மனித படுகொலைக்கு அரசியல் ரீதியாக துணையாக நிற்கினறனர்.


புலிகள் என்ற பெயரிலும், புலிப் பாசிச ஒழிப்பு என்ற பெயரிலும், மக்களை புலியிடம் இருந்து விடுவித்தல் என்ற பெயரிலும் நடக்கின்ற இந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் என்ற வக்கிரம் அரங்கேறுகின்றது. மனித உரிமைவாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்வோரும், ஜனநாயகத்தின் வாலில் தொங்குபவர்களும் இதற்கு கம்பளம் விரிக்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், அவர்களை விடுவிக்க பிறந்தாக கூறிக்கொண்டு குத்தகைக்கு எடுத்த அவதார புருசர்கள், தமது கையேலாத்தனத்தை தமது மலட்டுதனமான ஹிரோ நடத்தைகள் மூலம் பீற்றிக் கொள்கின்றனர்.


தேசிய விடுதலை என்ற பெயரில், பாசிச மீட்பு என்ற பெயரில், திருடப்படும் தமது குழந்தைகளை மக்கள் பலிக்கொடுக்கின்றனர். இதன் மூலம் மக்கள் பெற்றவை எவை? பெறப் போவது எவை? உயிர் துடிப்பையே இழந்த, அடிமைகளை கொண்ட வெற்றிடமும் சூனியமுமே.


Sunday, April 1, 2007

மனித அவலங்களை அரசியலாக்குகின்றனர்

மனித அவலங்களை அரசியலாக்குகின்றனர்

பி.இரயாகரன்
01.04.2007


ங்கும் எதிலும் ஒரு பிழைப்புத்தனம். அரசியல் என்பதே நக்குத்தனமாகிவிட்டது. (தமிழ்) மக்களின் பிரச்சனைகளை இனம் காணுதல் அருவருப்புக்குரிய ஒன்றாகிவிட்டது. மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளின் அடிப்படையில் இயங்குதல், அதற்காக குரல் கொடுத்தல், என அனைத்தையும் மறுத்து இயங்குவதே அரசியலாகிவிட்டது. இப்படி குரூரமாகி நிற்பவர்கள், மனித அவலங்கள் மீது நீந்தி நீச்சலடிக்கின்றனர்.


புலியெதிர்ப்போ, பேரினவாத வெற்றிகளை தமது சொந்த வெற்றியாக கொண்டாடுகின்றது. இதை அரசியலாக கொண்டே அவர்கள் குலைக்கின்றனர். இந்த வகையில் புலியெதிர்ப்புக் கருத்துலகம் கருத்தை கட்டமைக்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் தமது சொந்த தோல்விகளை, தந்திரோபாயமான பின்வாங்கல் என்று காட்ட முனைகின்றனர். இதை மூடிமறைக்க ஹீரோத்தனமான ஒரு சில தாக்குதலை நம்பி அவர்களின் அரசியல் நடுக் கடலில் தத்தளிக்கின்றது.


மக்கள் நிலையோ துன்பகரமானது. உடுத்த உடுப்புடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக அங்குமிங்குமாக ஒடுகின்றனர். வாழ்வதற்கான அனைத்து பிழைப்பு வழிகளையும் இழந்த மக்கள் கூட்டம், நாயிலும் கீழாக இழிந்து போகின்றனர். ஒரு நேரக் கஞ்சிகே, தெரு நாய்கள் போல் உணவுப் பொருட்களைத் தேடி அலையும் மற்றொரு மக்கள் கூட்டம். வாழ்வை பறிகொடுத்த மக்கள் கூட்டத்தின் கதி இதுவென்றால், வாழ்விழந்து பரிதபிக்கும் மற்றொரு மக்கள் கூட்டம் வாய் பொத்தி அழுகின்றது.


பொத்திப் பொத்தி வளர்த்த தமது சொந்தக் குழந்தைகளை, கட்டாய பயிற்சியின் பெயரில் புலிகளிடம் பறிகொடுக்கின்றனர். இதை எதிர்த்து வாய் திறக்க முடியாத பாசிச வெறியாட்டம். தமிழ்செல்வன் போன்ற விளம்பர பொறுக்கிகள் மட்டும் தான், எதையும் எந்த அபிப்பிராயத்தையும் சொல்லமுடியும் என்ற நிலை. மக்களின் அன்றாட உணர்வு, அவர்களின் பரிதாபகரமான நிலை எதையும் யாரும் பிரதிபலிக்க முடியாது. இதை மீறி மக்களின் சூடான மூச்சுகள் எழும் போதும், அடியையும் உதையையும் சித்திரவதையையும் புலிகள் பரிசளிக்கின்றனர். இதனால் அங்கு மரணங்கள் கூட அன்றாடம் நிகழ்கின்றது.


வன்னியில் வாழும் மக்களின் நிலை இதுவென்றால், மறுபக்கம் பேரினவாத கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களின் குழந்தைகளை கொன்று குவிக்கின்றது. ஜனநாயகத்துக்கு திரும்பி கூலிக் கும்பலாகவே இயங்கும் குண்டர்களுடன் சோந்தே, இளம் தளிர்களை வகை தொகையின்றி கொன்று குவிக்கின்றனர். கடத்தல், காணாமல் போதல், கொன்று போடுதல் வரலாறு காணா உச்சத்தை எட்டி நிற்கின்றது. ஒவ்வொரு தமிழ் தாயினதும் கருப்பையிலேயே உயிர்களை பலிகொள்ளுமளவுக்கு இந்த அராஜகம் நடதேறுகின்றது.


இப்படி தமிழ் பேசும் மக்களின் அவலம், இராணுவ அலுக்கோசுகளின் வக்கிரங்களுக்குள் அழுந்தி போகின்றது.


Saturday, March 31, 2007

பறிபோகும் விளைநிலங்கள்

பஞ்சாப்:

பறிபோகும் விளைநிலங்கள்
பரிதவிக்கும் விவசாயிகள்



""நேற்று வரை நாங்கள் விவசாயிகள்; இன்று எங்கள் நிலம் பறிக்கப்பட்டுச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு விட்டோம். நிலம்தான் எங்கள் தாய்! எங்கள் தாயைப் பறித்து, எங்களை அனாதைகளாக்கிப் பட்டினியில் தள்ளி விட்டுள்ளார்கள்'' என்று குமுறுகிறார், பல்தேவ் சிங் என்ற விவசாயி. இவர் பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயி.



பர்னாலா மாவட்டம் படேகர் சன்னா கிராமத்தில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, பஞ்சாப் மாநில அரசு 300 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவியுள்ளது. இங்கு டிரிடெண்ட் என்ற நிறுவனம் தகவல்தொழில்நுட்பப் பூங்காவை நிறுவி வருகிறது. தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்க வந்துள்ள இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகக் கடந்த இரு மாதங்களாக இவ்வட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசாங்கம் தரும் நிவாரணத் தொகையை ஏற்க மறுத்து, ""எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; நிலம்தான் வேண்டும்'' என்று போராடி வரும் விவசாயிகள் கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று டிரிடெண்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தி, அதன் சுற்றுச் சுவரை உடைத்தெறிந்தனர்.



இதைக் கண்டு ஆத்திரமடைந்த பஞ்சாப் ஆட்சியாளர்கள், விவசாயிகளின் போராட்டத்தை மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் வன்முறைச் செயல் என்று குற்றம் சாட்டியதோடு, டிரிடெண்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைப் பாதுகாக்க அச்சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் போலீசைக் குவித்து அச்சுறுத்தினர். அதைத் துச்சமாக மதித்து கடந்த பிப்ரவரி 2ஆம் நாளன்று மீண்டும் விவசாயிகள் போராடத் தொடங்கியதும், தடியடித் தாக்குதல் நடத்திய போலீசு, துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைப் படுகாயப்படுத்தியது. ""அங்கு சிதறிக் கிடக்கும் காலணிகளும், இரத்தம் தோய்ந்த டர்பன் (தலைப்பாகை)களும் ஜாலியன்வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே குறிப்பிடுமளவுக்கு போலீசு வெறியாட்டம் போட்டுள்ளது.



பர்னாலா மாவட்டம் மட்டுமல்ல; பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் அருகே முப்போகம் விளையும் பூமியும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகப் பறிக்கப்படவுள்ளது. தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனமான சஹாரா குழுமம் தொழில் தொடங்க, ஏறத்தாழ 1200 ஏக்கர் நிலத்தைப் பறிக்கப் போவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நிலத்தைக் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் வந்தபோது, ஜீத்தாகலன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர். பரம்பரை பரம்பரையாக இங்கு விவசாயம் செய்துவந்த விவசாயிகள் தங்கள் கண்ணெதிரே விளைநிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டு விக்கித்து நிற்கின்றனர்.



பஞ்சாப், ஐந்து நதிகள் பாயும் வளமான பூமி; பசுமையான வயல்வெளிகள்; அறுவடைக் காலத்தில் தங்க நிறத்தில் தகதகக்கும் கோதுமைக் களஞ்சியம். இருப்பினும், தாராளமயமாக்கலைத் தொடர்ந்து வளம் கொழிக்கும் இம்மாநிலம் படிப்படியாக நசியத் தொடங்கியது. உணவு தானியக் கொள்முதலை அரசு கைகழுவியதாலும், உரம்பூச்சி மருந்து முதலான இடுபொருட்களின் விலை உயர்வாலும், தாராளமயத்தால் அன்னிய கோதுமை இறக்குமதி காரணமாக விலை வீழ்ச்சியாலும் பஞ்சாப் விவசாயிகள் போண்டியாகி நிற்கிறார்கள். வேறுவழியின்றி பன்னாட்டு ஏகபோக விவசாய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒப்பந்த முறையில் விவசாயம் செய்தவர்களும் அந்நிறுவனங்களால் வஞ்சிக்கப்பட்டு திவாலாகிக் கிடக்கிறார்கள்.



ஆந்திரா, கர்நாடகாவைத் தொடர்ந்து இப்போது வளம் கொழிக்கும் பஞ்சாபிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்து வருகிறது. மான்சாண்டோவின் ""பி.டி.'' எனப்படும் மலட்டு பருத்தி விதைகளால் நட்டப்பட்டும், உற்பத்திச் செலவுக்கேற்ற விலை கிடைக்காமல் கடன்பட்டும் சங்ரூர், மான்சா, படிண்டா மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் நொடித்துப் போயுள்ளனர். ""ஆர்த்தியா'' எனப்படும் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கிக் கொண்டு கடன் சுமையிலிருந்து மீள வழி தெரியாமல் பல பருத்தி விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகின்றனர். சங்ரூர் மாவட்டத்திலுள்ள கல்பஞ்சரா கிராமத்தில் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் எட்டு விவசாயிகள் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசே ஒப்புக் கொள்கிறது. இருப்பினும், இதர மாநிலங்களைப் போலவே, மாண்டுபோன விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு இன்று வரை நிவாரணம் கூட அளிக்க மறுக்கிறது.



""ஒரு காலத்தில் பருத்தி எடுக்க இராஜஸ்தானிலிருந்து கூலி விவசாயிகள் திரள் திரளாக இங்கு வருவார்கள்.பருத்தியை ஏற்றிச் செல்ல எங்கள் வட்டாரத்தில் லாரிகள் வந்து குவியும். இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது. பருத்திக்காக லாரியோ டிராக்டரோ இங்கு வருவதில்லை. பிழைப்பைத் தேடி நாங்கள் இராஜஸ்தான் மாநிலத்திற்கு கூலி வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்'' என்று பருத்தி விவசாயிகளின் அவலத்தை விளக்குகிறார் கல்பஞ்சரா கிராமத்தைச் சேர்ந்த அமர்சிங்.



தாராளமயம் தோற்றுவித்த பயங்கரம் பஞ்சாப் மாநிலமெங்கும் தலைவிரித்தாடும் சூழலில், இப்போது விவசாயிகளின் தலையில் இடியென இறங்கியுள்ளன, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். பஞ்சாபில் தற்போது 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்டு, விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் 20க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவ முயற்சித்து வருவதாக அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார். ""எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டு கலகம் செய்ய முயற்சிக்கின்றனர். நான் முதல்வராக உள்ளவரை கறாராகச் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மாநிலத்தைத் தொழில்மயமாக்கியே தீருவேன்'' என்று திமிராகக் கொக்கரிக்கிறார் அவர். அடுத்தடுத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சண்டிகரிலிருந்து அமிர்தசரஸ் வரையிலான வீதியெங்கும் விவசாயிகள் திரண்டு அடுத்து என்ன செய்வது என்று கவலையோடு விவாதிக்கின்றனர்.



சண்டிகரைச் சுற்றியுள்ள கிராமங்களின் வீடுகளில் இப்போது புதிய எண்கள் குறியிடப்பட்டுள்ளன. ""1.6, 1.4, 0.7'' என்றெல்லாம் குறியிடப்பட்டுள்ள இந்த எண்கள், புதிய கதவிலக்க எண்கள் அல்ல. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக அரசாங்கம் கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான நிவாரணத் தொகையை (இலட்ச ரூபாய் கணக்கில்) அந்தந்த விவசாயிகளின் வீட்டுக் கதவுகளில் உள்ளாட்சி நிர்வாகம் எழுதி வைத்துள்ளது. லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்தவனைப் பார்த்து மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு லாட்டரி சீட்டை வாங்கி ஏமாறுவதைப் போல, அரசாங்கம் செய்யும் இந்த மோசடியைப் புரிந்து கொள்ளாமல், பல விவசாயிகள் தாங்களும் நிலத்தை விற்கக் கிளம்புகின்றனர். அரசாங்கமோ, சுயவிருப்பத்துடன் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்பதாக மாய்மாலம் செய்கிறது.



சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம். பஞ்சாபிலோ முப்போகம் விளையும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது சட்டவிரோதமாயிற்றே என்று கேட்டால், ""நாங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை; விவசாயிகள் சுயவிருப்பத்துடன் நிலங்களை விற்கிறார்கள்; நாங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வருகிறோம்'' என்கிறார் பஞ்சாப் முதல்வர்.



தரிசு நிலங்களில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு, ஒரு போகம் சாகுபடியாகும் நிலங்களிலும் நிறுவலாம் என்று மாறி, பின்னர் இரு போகம் சாகுபடியாகும் நிலங்களில் 10% வரை கையகப்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு, இப்போது முப்போகம் விளையும் பூமியையும் கொல்லைப்புற வழியாக ஆக்கிரமிக்க எல்லா ஏற்பாடுகளையும் கைக்கூலி ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இதற்காகவே காலனிய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட, 1894ஆம் ஆண்டின் நிலக் கையகப்படுத்தும் சட்டம் புதிய பெயரில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, ""பொதுப் பயன்பாட்டுக்கு'' என்ற பெயரில் நில உரிமையாளரின் ஒப்புதலின்றி எந்த நிலத்தையும் மாநில அரசு கையகப்படுத்தலாம். இதை எதிர்த்து வழக்கு தொடரக்கூட முடியாது. மே.வங்க போலி கம்யூனிஸ்டு ஆட்சியிலிருந்து காங்கிரசு, பா.ஜ.க. ஆட்சி வரை எல்லா மாநில அரசுகளும் இச்சட்டத்தைக் கையிலேந்தி விவசாயிகளை நாடோடிகளாக்கி விட்டு விளைநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன.



இவையெல்லாம் தரகுப் பெருமுதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள் என்பது மட்டுமல்ல; ஏழை நாடுகளின் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்து, உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யத் துடிக்கும் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கச் சதியின் ஓர் அங்கம்தான் இவை. ""உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து; ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து "மலிவான' விலையில் உணவு தானியங்களை இறக்குமதி செய்!'' என்று உத்தரவிடுகிறது, உலக வர்த்தகக் கழகம். இதனடிப்படையில் மானியக் குறைப்பு, ரேசன் உணவுப் பொருட்களின் விலையேற்றம், அரசு கொள்முதல் நிறுத்தம், ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானிய இறக்குமதி என அடுத்தடுத்து தாக்குதல்களை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்டனர். இப்போது அதைத் தீவிரப்படுத்தும் வகையில், விளைநிலங்களை ஆக்கிரமித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வருகின்றனர்.



ஒரிசாவின் கலிங்கா நகர். மே.வங்கத்தின் சிங்கூர் நந்திகிராமம், மகாராஷ்டிராவின் ராய்காட், உ.பி.யின் தாத்ரி, தமிழகத்தின் ஓசூர், பஞ்சாபின் பர்னாலா எனத் தொடரும் விவசாயிகளின் போராட்டங்கள் வெறும் நிலத்திற்காகவும் கூடுதல் நிவாரணத்திற்காகவும் நடக்கும் போராட்டங்கள் அல்ல; இவை மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கம்.



இவற்றை ஒருங்கிணைத்து மறுகாலனிய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போரை நடத்த வேண்டியுள்ளது. நாடும் மக்களும் இன்னுமொரு பகத்சிங்கையும், கட்டபொம்மனையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

· குமார்



Friday, March 30, 2007

அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் திருட்டு

உயிர்நிழல் ஆசிரியரின் இருப்பிடத்தினுள் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் திருட்டு

க்ஸில் வெளியீட்டகத்தின் வெளியீடாக காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் 'உயிர்நிழல்' சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மியின் வீட்டில் 'விடுதலை'ப் புலிகள் திருடர்களாகப் புகுந்து வீட்டைச் சூறையாடி அங்குள்ள ஆவணங்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த முக்கியமான ஆவணங்களில் ஐரோப்பா தழுவி நடைபெறும் இலக்கியச் சந்திப்புத் தொடர்களின் பதிவுகளும் அடங்கும்.


மாற்றுக் கருத்து அல்லது 'ஒற்றை'க் கருத்தற்று வேறு கருத்துகள் சொல்வதைக் கேட்பதிலோ அல்லது அவை பரவலாகிச் செல்வதிலோ தாங்கள் உடன்பாடற்றவர்கள் என்பதில் இவர்கள் என்பதில் இவர்களிற்கு என்றைக்குமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.


1990ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், மறைந்த மலையக எழுத்தாளர் என். எஸ். எம். இராமையா அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று பாரிஸில் மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது மறுத்தோடிகளால் நடத்தப்பட்டபோது அங்கு உளவு பார்ப்பதற்காக 'விடுதலை'ப் புலிகளின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்த மறுத்தோடிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பதால் இது தங்களால் 'போடப்பட்ட' ஒரு துரோகிக்கான அஞ்சலிக் கூட்டமாயிருக்கலாமோவென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.


இப்படித்தான் ரஜனி திரணகம விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு ஓராண்டின் பின்னர் ஒரு கூட்டத்தை அவர் நினைவாக இந்த மறுத்தோடிகள் ஒழுங்குபடுத்தியிருந்த பொழுது, கூட்டம் ஆரம்பித்து சில மணிகளிலேயே அங்கிருந்த பேச்சாளரையும், கூட்டத்தில் இருந்தவர்களையும் நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற பாணியிலும் மக்கள் 'வேறு' கருத்துக்களைக் கேட்டால் குழம்பி விடுவார்கள் என்னும் தோரணையிலும் நடந்து கொண்டார்கள். 'நீங்கள் மக்களைக் குழப்புகின்றீர்கள். இதை நாங்கள் அனுமதிக்க முடியாது' என்னும் ரீதியில் அவர்களின் வெளிப்பாடுகள் இருந்தன. அவர்கள் ஆவேசப்பட்டுக் கருத்துத் தெரிவிக்கும்போது புகைப்படம் பிடித்ததனால் அவ்விடத்திலேயே புகைப்படக்கருவி பறிக்கப்பட்டு அதனுள்ளிருந்த பிலிம் சுருள் அவர்களால் அவ்விடத்திலேயே அபகரிக்கப்பட்டது. புகைப்படம் என்றால் என்ன, ஆவணம் என்றால் என்ன என்பதை அவர்கள் தெளிவாகவே அறிந்திருந்தார்கள்.


இந்தரீதியில், இந்த மறுத்தோடிகள் நடத்தும் சந்திப்புகளிலும் கலந்துரையாடலிலும் இவர்கள் வந்து கலவரம் செய்ததனால், ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து இந்த மறுத்தோடிகளின் ஒரு பகுதியினரால் 1992ம் ஆண்டு பாரிஸில் முதல்முதலாக நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு இவர்களின் வருகைக்கு அனுமதியளிக்கப் பின்நின்றது. மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பதென்பதும் அடாவடித்தனங்களை அனுமதிப்பதென்பதும் வௌ;வேறானவை என்பதை இவ்விடத்தில் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். பின்பு சில இடைத் தரகர்களினால் இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்களிடம் அனுமதி கேட்டும், தாங்கள் சந்திப்பில் வந்து எந்தக் குழப்பங்களும் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியின் பின்னரும் அவர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் இந்த இலக்கியச் சந்திப்பில் தந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


'பள்ளம்' சஞ்சிகையை வெளியிட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்களில் ஒருவரான கலைச்செல்வனை 1990ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி என் கண்முன்னாலேயே என் இருப்பிடத்தில் இருந்து சில குண்டாந் தடியர்கள் கடத்திச் சென்று ஏறத்தாழ 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான சித்திரவதைக்குப் பின், பொலிஸ் முறைப்பாடு தீவிரமாகி இருக்கின்றதென்ற செய்தியை அறிந்து கொண்டு, அந்தி மயங்கும் மாலை வேளையில் ஒரு சாலையோரத்தில் கொண்டு வந்து வீசி எறிந்து விட்டுப் போனார்கள். அதன் பின்னர் பள்ளம் சஞ்சிகை நிற்பாட்டப்பட்டது. புகலிடத்திலும் அச்சத்தில் உயிர் வாழ்தல் என்பது என்னவென்று புரிய வைத்தல் முடியாதது. சித்திரவதையின் பின்னிருந்த மரண ஓலம் என்னுள் ஊடுருவி அதிர்ந்தொலித்ததை இன்றும் என்னால் உணர முடிகின்றது.


ஒரு உயிரைக் கொய்தலின் கொடுமை அல்லது மரணம் துரத்தும் அவலத்தைத் தெரிந்தபடி வாழ்தல் என்பதன் கொடூரத்தை கையில் ஆயுதங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதுவே கோட்பாடாகக் கொண்டவர்களால் என்றைக்குமே புரிந்து கொள்ளப்பட முடியாதது.


1994ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அன்று தோழர் சபாலிங்கம் அவருடைய வீட்டில் வைத்துப் பட்டப் பகலில் வேட்டு வைத்துத் தீர்க்கப்பட்டதென்பது ஒவ்வொரு மறுத்தோடியினதும் ஈரல்குலையையும் நடுங்க வைக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை. குரல்கள் மட்டும்தானுள்ளன என்று இந்த மறுத்தோடிகள் தொடர்ந்தார்கள். மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான்;. ஆனால் அதை நிரணயிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எமன் காரியாலயத்தில் தூதுவர்களாக தொழில் புரிவதற்கான விசா பெற்றுக் கொண்டு இருப்பதுபோல்தான் இவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எம தூதுவர்களாகத் தங்களை இந்த மறுத்தோடிகள் அடையாளம் காண வேண்டும் என்பதைச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலெல்லாம் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்;. இவர்களிற்கு யானைக்கும் ப+னைக்கும் வித்தியாசம் தெரிவதில்லைப் போலும்; சூடு கண்ட ப+னை அடுப்பங்கரையை நாடாதுதான். ஆனால் யானை பற்றிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. துப்பாக்கியை விடப் பேனா வலிமை வாய்ந்ததென்று இவர்கள் நம்புகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.


பேனாமுனைகளுக்கெதிரான தொடர்ந்த துப்பாக்கி தூக்கல்களும், ஒரு நபரை அழிப்பதன் மூலம் ஒரு கருத்தை அழித்துவிட முடியும் என்னும் இவர்களின் கொச்சைத்தனமான விளக்கங்கள் எவ்வளவு நுண்ணறிவுடன் மறுத்தோடிகளால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்னும் ஒரு மாயத் தோற்றத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.


விமர்சனம் என்பது யாராலும் எப்போதும் எங்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வைக்கப்படலாம் என்பதும் அதை எதிர்கொள்ள குண்டாந்தடிகளும் துப்பாக்கிகளும் தேவையில்லை என்பதை இப்படியான அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


சபாலிங்கத்தில் கொலைக்குப் பின் புகலிடத்தில் இருந்து வெளிவந்த எண்ணற்ற பத்திரிகைகள் அடக்கி வாசித்தன. பல படிப்படியே நின்று போயின.


'புகலிடத்தில் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு எதுவும் இல்லை. யாரும் இல்லை. நாங்கள் இருக்கும்வரை உலகின் எந்த மூலைக்கு நீங்கள் ஓடினாலும், எங்களுக்கு ஒத்தூதினால் உங்களது உயிர் உங்களுக்கு. அன்றேல் அது எங்களுக்கு.» என்ற சுலோகத்தை கோட்பாடாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


'அன்பான' மிரட்டல்கள், 'செல்லமான' தட்டிக் கொடுப்புகள் 'இரகசியமான' பொட்டு வைப்புகள் என்று இவர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.


ஒருவரின் இருப்பிடத்திற்குச் சென்று அவர் இல்லாதபொழுது ப+ட்டை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்து அந்தரங்க ஆவணங்களைத் திருடிச் சென்றிருப்பதற்கு இவர்களுடைய வழக்காடு மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. இவர்கள் இவ்வாறு அத்துமீறி நுழைந்ததுபோல் இவர்களின் கோட்டைக்குள் உத்தரவின்றிப் புகாது, அங்கு கொன்று புதைத்தவர்களின் தகவல்களில் ஓரிரண்டையாவது எங்களுக்குச் சொல்வார்களா?


நாங்கள் உங்களிடம் எங்கள் தோழன்கள், தோழிகளுக்கு என்ன நடந்தது, அவர்களை என்ன செய்தீர்கள் சொல்லுங்கள் என்று துரத்தித் துரத்திக் கேட்டோம். அந்த ஓல விழிப்புகள் தேய்ந்து தேய்ந்து, இப்போது அந்தத் தோழன்களும் தோழிகளும் பிறந்தார்களா? வாழ்ந்தார்களா? என்னும் நிலைக்கு ஆக்கிவிட்டிருக்கிறீர்கள்.


உங்களுடைய இந்தக் கோழைத் திருட்டானது எந்த அசைவையாவது ஒரு கணம் நிறுத்தி வைத்து விடக் கூடும் என்று நீங்கள் ஏதாவது கனவு கண்டால் அதற்கு இந்த மறுத்தோடிகள் என்றும் தலை சாய்க்க மாட்டார்கள் என்பதைப் பகிரங்கமாக உங்களிடம் சொல்வதற்கு மீளவும் ஒரு சந்தர்ப்பத்தை நீங்களாக உருவாக்கித் தந்திருக்கின்றீர்கள்.


கலந்துரையாடல்களின், சந்திப்புகளின் ஆவணங்களை நீங்கள் ஒன்றும் அதிலுள்ள விடயதானங்களுக்காகத் திருடிச் சென்றிருக்கமாட்டீர்கள் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.


மனிதநேயம், மனிதாபிமானம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் உங்கள் கோட்டைக்குள் இருந்து சிறிதாவது வெளியே வரவேண்டும்.


ரஜனி திரணகமவின் ஓராண்டு நினைவாக பாரிஸில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் 'விடுதலை'ப் புலிகளின் பிரதிநிதி ஒருவர் எழுந்து «ரஜனியைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று நீங்கள் நேரில் பார்த்தீர்களா?» என்று ஆவேசமாகக் கேட்டார். கேட்டவரைப் பார்த்து அனுதாபப் படலாமேயன்றி ஆத்திரப்படமுடியாது. பாவம் அவர்கள். எய்தவரிருக்க அம்பை ஏன் நோவான் எனபதுபோல்தான்.


இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகவும் (இன்று 16 வருடங்களின் பின்னும்) அவர்கள் இதே கேள்வியைக் கேட்கக் கூடும். இப்படிக் கேட்பவர்களிற்கு விடை தெரிய வேண்டுமானால்,


1. பாரிஸில் சபாலிங்கத்தின் செயற்பாடுகள் யாருக்கு வேண்டப்படாததாக இருந்தன?


2. 'பள்ளம்' சஞ்சிகை எவருக்கு இடைஞ்சலாக இருந்தது?


3. ரஜனியின் எழுத்தும் செயற்பாடும் யாருக்கு உவப்பானதாக இருக்கவில்லை?


4. இன்னும் இலக்கியச் சந்திப்பு மற்றும் இங்கு மறுத்தோடிகள் நடாத்தும் கருத்தரங்குகள், நினைவுகூரல்கள் யாருக்கு விசனத்தைக் கொண்டு வருகின்றன?


என்பது போன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதிலைத் தேடினால், அதை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.



It is a simple log


உயிர்நிழல் சஞ்சிகையானது வெறும் தனிநபர் அரசியலையோ அல்லது இயக்க அரசியலையோ கொண்டிராது பாசிசத்துக்கெதிரான, ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவு கொடுக்காத ஒரு அரசியலைக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் தெளிவுபடுத்தி, இந்த ஆவணக் கொள்ளையானது வெறுமே தனிநபருக்கெதிரானதாகக் கொள்ளாது, இது மறுத்தோடிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் அனைவர்மீதும் இந்த 'விடுதலை'ப் புலிகளின் கோரக்கரங்கள் நீண்டிருப்பது குறித்த எச்சரிக்கை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று உயிர்நிழல் மறுத்தோடிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் விழிக்கின்றது.



உயிர்நிழல் சார்பாக


லக்ஷ்மி


Thursday, March 29, 2007

புரட்சிகர வன்முறையும் மனிதாபிமானமும்

புரட்சிகர வன்முறையும் மனிதாபிமானமும்

பி.இரயாகரன்
28.03.2007


ன்றைய சமுதாய அமைப்புமுறை வன்முறைக்குரிய ஒன்றாகவே உள்ளது. இன்று காணப்படும் ஜனநாயகம் கூட, வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு வர்க்கத்தின் கருவியாகும். வன்முறைக்குரிய ஜனநாயக அமைப்பில், சமூகங்களை ஒழுங்குபடுத்தி அடக்கிவைத்துள்ள சமூக அமைப்புமுறையும் கூட வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவேவுள்ளது. உண்மையில் சர்வாதிகாரம் என்பது ஒரு வர்க்கத்தின் ஜனநாயகமாக உள்ளது. இங்கு எழும் மனிதாபிமானம் என்பது வர்க்கத்தின் எதிர்வினைகளை அடிப்படையாக கொண்டது. இதற்கு வெளியில் எதுவும் இருப்பதில்லை.


இந்த சமுதாய எதார்த்த இருப்பை உள்வாங்கி, அதை தத்துவார்த்த ரீதியாக விளக்குவதே மார்க்சியம். சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கும் மார்க்சியம், தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான நீடித்த ஒரு இயக்கமாக காண்கின்றது. வர்க்கங்கள் நீடிக்கும் வரை, வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாக காண்கின்றது. இந்த வர்க்கப் போராட்டம், அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இந்த வர்க்க அமைப்பில் ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் இருப்பதில்லை. இதுவே எதார்த்தம். சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுவனுக்கும் ஒரேநேரத்தில் ஜனநாயகம் நிலவமுடியாது. இப்படி இருக்க முடியும் என்பது, மக்களை ஏமாற்றுகின்ற மோசடி. இந்த மாதிரி மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் மோசடியில், மார்க்சியம் ஈடுபடுவது கிடையாது.


பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வரும் போது, பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு என்பதை தெளிவுபடுத்துகின்றது. சுரண்டுபவனுக்கும், சமூக ஒடுக்குமுறை செய்வதற்கும் சுதந்திரம் கிடையாது. இதில் எந்த தனிமனிதனுக்கும், விதிவிலக்குகளை அனுமதிப்பதில்லை. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. சமூகத்தினுள் தான் ஜனநாயகம். இதற்கு வெளியில் இருப்பதாக கூறுவது, சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து எந்த விளக்கமும் பெறாது. சமூகத்தை ஒடுக்கித் தான் பெறமுடியும்.


புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க, இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இன்றைய சுரண்டல் வர்க்க அமைப்பிலும், உள்ளார்ந்த ஒரு விதியாகவே இது நடைமுறை ரீதியாக உள்ளது. இங்கு சுரண்டுவது மாற்ற முடியாத ஒரு சர்வாதிகார வர்க்க நிபந்தனைக்கு உட்பட்டது. இங்கு ஜனநாயகம் எதுவும் செல்லுபடியாவதில்லை. பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மைக்கு எதிராக போராடுவது, இந்த சுரண்டல் வர்க்க சர்வாதிகார அமைப்பின் பொதுவான நடைமுறை ரீதியான எதார்த்தமாகவே உள்ளது. இந்த வகையில் ஜனநாயகம் வெளிப்படையாக மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது. சுரண்டுவதற்குத் தான் ஜனநாயகம் சேவை செய்கின்றது.


வர்க்க சர்வாதிகாரம் பற்றிய தெளிவு, மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியமும், மக்களை ஏமாற்ற ஜனநாயகம் பேசுகின்றவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. இதேபோல் டிரொட்ஸ்கிய வலதுசாரிகளும் சரி, அனைத்து வர்க்க பினாமிகளும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில், இவர்களுக்கு இடையில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே குலைக்கின்றனர். மக்களை பொதுத்தளத்தில் நிறுத்தி, அவர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர். பின் அவதூறுகளை வர்க்க நோக்கிற்காக கட்டமைக்கின்றனர். அவதூறுகள் புனையப்பட்டு முன்வைக்கப்படுகின்றது.


ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒரு வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்ற வரைதான், அது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. அது உயிர் வாழ்தற்கான ஜனநாயக மறுப்புக்குரிய சமூக அடிப்படையே அதற்கு இருப்பதில்லை.


இது வர்க்கங்களற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்ததை சுரண்டல் சமூக அமைப்பு மூடிமறைக்கின்றது. இந்த எதார்த்தத்தை எடுத்துக்காட்டி, அனைத்து வர்க்கத்துக்கும் (மக்களுக்கும்) ஜனநாயகம் என்ற பொய்மையையும், அதன் சர்வாதிகாரத் தன்மையை மார்க்சியம் அம்பலப்படுத்தி அதற்கு எதிராக போராடுகின்றது. இதை யாரும், எந்த சமூக முரண்பாட்டு பிரிவுகளும் செய்வதில்லை.


ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே இனம்காட்டி மார்க்சியம் மட்டும்தான், சமுதாயத்தை மாற்றி மக்களின் அதிகாரத்தை உருவாக்கப் போராடுகின்றது. அதாவது எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கையும் துல்லியமாக வேறுபடுத்தி, அதை வெளிப்படுத்திப் போராடுகின்றது. இந்த வகையில் பாட்டாளி வர்க்க சமுதாயத்தில், சுரண்டலைக் கோரும் ஜனநாயகத்தை சுரண்டும் வர்க்கத்துக்கு மறுக்கின்றது. மாறாக இதன் எதிர்நிலையில் உள்ள முதலாளித்துவமும், வர்க்கங்களை அடக்கியாள உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும், அதன் பண்பியல் உருவாக்கும் சமூக எதார்த்தத்தை மார்க்சியமே இலகுவாக புரிந்து கொள்ளவைத்து போராடுகின்றது.


வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்துள்ள நிலையில், சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை உருவாகின்றது. இதுவல்லாத எல்லா நிலையிலும் சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம், எப்போதும் நிர்வாணமாக வெளிப்படையாக இருப்பதில்லை. மாறாக தன்னை, தனது சுரண்டும் வர்க்க சர்வாதிகாரத் தன்மையை மூடிமறைத்து கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக, மற்றைய வர்க்கத்துக்கு சலுகை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை கவர்ச்சிப்படுத்திக் காட்டமுனைகின்றது. மூடிமறைக்கப்பட்ட இந்த ஜனநாயகம், ஒரு முதலாளித்துவ சுரண்டல் சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது. அது சூக்குமமாகவே காட்சியளிக்கின்றது. சமுதாயத்தில் நிலவும் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும், சுரண்டும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை வெளிப்படையாக நிர்வாணப்படுத்திக் கொள்கின்றது. இன்று ஜனநாயகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் எல்லா அரசுகளும், உள்ளடகத்தில் சுரண்டலை நடத்துவதற்கான சர்வாதிகார பாசிசக்கூறை உள்ளடக்கியபடி தான், தன்னை மூடிமறைத்துக் கொண்டு கவர்ச்சியாக்கிக் கொள்ள முனைகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே, வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.


மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமையும், தனிமனித சுதந்திரமும் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது அதுவாகவே நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம், தனிமனித சுதந்திரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ (ஜனநாயக) சர்வாதிகார அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர் வர்க்கத்துக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.


ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்து வர்க்கத்துக்குமானதாக இருக்க முடியாது. அது ஒரு சர்வாதிகாரமாக இருக்கின்றது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போடுவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது, பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம் அதன் தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை முதலாளித்துவ ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. இந்த மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதுக்கு அப்பால், சர்வாதிகாரம் ஜனநாயகமாகிவிடாது.


மனித அவலமாகவே புரையோடிப் போயுள்ள வர்க்க சமூக அமைப்பில் செழிப்பும் காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்களின் அவலம் தான் சிலரின் செழிப்புக்கான ஒன்றாகவும், வாழ்வுக்கான அடிப்படையாகவும் உள்ளது. இதைத்தான் பொதுவாக அனைவரும் ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றனர். இந்த சுரண்டல் அமைப்பில் இதற்கு வெளியில், இதற்கென வேறு கருத்து கிடையாது.


பொதுவாக ஜனநாயகம் என்பதை கருத்துச்சொல்லும் உரிமை, வாக்களிக்கும் உரிமை என்ற குறுகிய எல்லைக்குள் தான் விளங்கி, அதுவாக மட்டும் பார்க்கப்படுகின்றது. ஜனநாயகம் எப்படி மனித வாழ்வியல் கூறுகளில் செயல்படுகின்றது என்று பார்க்கப்படுவதில்லை, பார்க்க அனுமதிப்பதில்லை. சாதாரணமான ஊடகங்கள் இதைத்தான் அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.


மனிதர்களின் சமூக வாழ்வியல் கூறு வன்முறையான சுரண்டல் வழிகளில், சமூக முரண்பாட்டு போக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதையே ஜனநாயகம் என்கின்றனர். மற்றைய சக மனிதனின் உழைப்பை சுரண்டி வாழ்வதைத்தான் ஜனநாயகம் என்கின்றது. அதைத்தான் சுதந்திரம் என்கின்றனர். மற்றைய மனிதனின் உழைப்பை திருடி வாழ்வதை எப்படி ஜனநாயகம் என்று, பகுத்தறிவுடன் நாம் கூறமுடியும். ஆனால் அப்படி கூறப்படுவதுதான் இன்றைய உலக கட்டமைப்பாகும். இதை மறுப்பது, மீறப்படுவதை ஜனநாயக விரோதம் என்று கூறுமளவுக்குத்தான், மனித சிந்தனைத் தளமும் மலடாக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த அமைப்பை இந்த எல்லைக்குள் வன்முறை மூலம் தான் பாதுக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அமைப்பை பாதுகாப்பது ஏது? பாராளுமன்றங்களும், நீதித் துறையும், ஆயுதம் ஏந்திய காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த சுரண்டும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் சர்வாதிகார நிறுவனங்களாகும்.


இது பெரும்பான்மை மக்களின் விருப்பை வாக்கில் மட்டும் தான், ஏமாற்றுகின்ற அரசியல் மோசடிகளுடன் அங்கீகரிக்கின்றது. சமூக வாழ்வியல் நடைமுறைகளில் அல்ல. நடைமுறை வாழ்வில் பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் ஒரு விடையத்தை, இந்த சர்வாதிகார நிறுவனங்கள் ஜனநாயக உள்ளடகத்தில் ஏற்றுக்கொள்வது கிடையாது.


வர்க்க அமைப்பில் ஜனநாயகம் வர்க்கங்களுடையதே. வர்க்க அமைப்பு உருவாக்கும் சமூக முரண்பாட்டிலும் கூட இது பொருந்தும். ஆணாதிக்க அமைப்பின் ஜனநாயகம் பெண்ணுக்கு எதிரானது. பார்ப்பனிய சாதிய இந்துத்துவ அமைப்பின் உயர்சாதிய ஜனநாயகம் தாழ்ந்த சாதிகளுக்கு எதிரானது. இனவாத அமைப்பில் அதிகாரத்தைக் கொண்ட இனத்தின் ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட இனத்துக்கு எதிரானது. இப்படி சமூக முரண்பாட்டின் அனைத்துக் கூறிலும், ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவே இயங்குகின்றது. சிறுபான்மையினரின் நலனில் இருந்து இயங்குகின்ற ஜனநாயகம், பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, சர்வாதிகார சமூக அமைப்பு வழியாகத்தான் பேணப்படுகின்றது. இந்த வகையில் தான் கல்வி முதல் சமூகத்தின் அனைத்துத் துறையும் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. மக்கள் தாமாக சுயமாக சிந்திக்க, செயலாற்ற அனுமதிப்பதை மறுப்பதின் சாரம் தான், ஜனநாயகமாகவுள்ளது. இதை மக்கள் எதிர்க்கின்ற போது, சர்வாதிகார பயங்கரவாத வன்முறை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. சுரண்டப்படும் சக மனிதர்கள் எந்தக் கேள்விகளுமின்றி அடங்கிவாழும் வாழ்க்கை முறை தான், ஜனநாயமாக காட்டப்படுகின்றது. இதுவே இன்றைய உலக எதார்த்தமாக உள்ளது.


இந்த எதார்த்தம் மனித அவலத்தின் பிறப்பிடமாக உள்ளது. மக்கள் ஒரு கஞ்சிக்கே வாழமுடியாத அவலம். ஒருபுறம் சுரண்டல் அவலங்கள், மறுபுறம் சமூக அவலங்கள். இந்த தனிச்சொத்துரிமை அமைப்பு கட்டமைத்துள்ள தனிச் சொத்துரிமைச் சட்டங்களையே, உலகமயமாதல் மறுக்கத் தொடங்கியுள்ளது. பெரிய சொத்துடைய சிறுபான்மையினர், சிறிய சொத்துடைய பெரும்பான்மையினரின் சொத்துக்களை பலவழிகளில் அபகரிப்பது ஜனநாயகமாகியுள்ளது. பெரிய சொத்துடைய சிறுபான்மை சட்டங்களை வளைத்து, தனக்கு இசைவாக உருவாக்கியும், இதற்கு அப்பால் சிறுபான்மை சொத்துரிமையை வன்முறை மூலமும் அபகரிக்கின்றது. சொத்துடமையை இழத்தல், சுரண்டல் வழிமுறைகளால் மட்டும் நடக்கவில்லை. சமூக முரண்பாடுகளால் மட்டும் நடக்கவில்லை. சொத்துடமையை அபகரிக்கும் பொதுச் சட்டங்களாலும் அபகரிக்கப்படுகின்றது. மக்கள் காலகாலமாக வாழ்ந்த வாழ்விடங்கள், வாழ்வை அளித்த நிலங்கள், அவர்களின் வாழ்வியல் அறிவு என அனைத்தையும், மக்களிடம் இருந்து பலாத்காரமாக புடுங்கி கொடுப்பதே ஜனநாயமாக பீற்றப்படுகின்றது. உலகமயமாதலில் உலகளாவிய சொத்தை சிலரின் தனிப்பட் சொத்தாக்கி வரும் சட்ட நடைமுறைகளைத் தான், இன்று ஜனநாயகம் என்கின்றனர்.


இதை எதிர்த்து மக்கள் தமது கருத்தை வெளியிடுகின்றனர், போராடுகின்றனர். இதை இந்த ஜனநாயகத்துக்கு எதிரானதாக காட்டுவது முதல் ஒடுக்குவது வரை, சாதாரணமான நிகழ்ச்சிப் போக்காகவே உள்ளது. இதைத்தான் ஜனநாயகம் என்கின்றனர். மக்களின் அடிப்படை உரிமையை மறுத்து, மக்கள் மேல் வன்முறையை ஏவுவதையே மனிதவுரிமை என்கின்றனர். இந்த நிலையில் அரச பயங்கரவாதமே, ஜனநாயகத்தின் அச்சாக மாறி நிற்கின்றது. இது உலகம் தளுவியது. மக்கள் இந்த ஜனநாயக அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, தமது சொந்தவழிகளில் சொந்த கோரிக்கைகளுடன் போராடுகின்றனர். அரச பயங்கரவாதம் வன்முறையாகும் போது, இது தனிமனித பயங்கரவாதம் முதல் அணிதிரட்டப்பட்ட புரட்சிகர வன்முறையாக வளர்ச்சியுறுகின்றது.


மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கம் இந்த ஜனநாயகம், மக்களை வேட்டையாடுவதையே அன்றாட நிகழ்ச்சி போக்காகவும் அதுவே உலகம் தளுவியதாகியும் விட்டது. இதனால் இதன் எதிர்வினைகள் பலவாக மாறுகின்றது. ஜனநாயகபூர்வமான போராட்டம் முதல் புரட்சிகரமான வன்முறை போராட்டங்கள் உலகெங்கும் அன்றாடம் நடக்கின்றது. இந்த போராட்டத்தை வன்முறையாக, பயங்கரவாதமாக சித்தரிப்பதே அரச பயங்கரவாதத்தின் சுரண்டல் சர்வாதிகர அரசியலாகவுள்ளது.


இந்த புரட்சிகரமான வன்முறைக்குள் தனிமனித பயங்கரவாதத்தை, அதாவது மக்களை அவர்களின் பிரச்சனையூடாக அணிதிரட்டாத பயங்கரவாதத்தை நாம் உள்ளடக்கி விடவில்லை. இருந்தபோதும் கூட தனிமனித வன்முறைக்கு பின்னால் உள்ள காரணம், அரச பயங்கரவாதத்தின் விளைவுகளே என்பதை அடித்துக் கூறுகின்றோம்.


பொதுவாக ஜனநாயகம் பேசும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், மக்கள் திரள் அமைப்புக்களால் நிகழ்த்தப்படுகின்றது. மற்றது உதிரி வர்க்க நபர்களால் அல்லது உதிரி குட்டிபூர்சுவா குழுக்கால் மக்களின் பிரச்சனைகளில் இருந்து விலகி நடத்தப்படுகின்றது. இந்த வகையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான வன்முறைகளே இவைகள். மக்களுக்கு எதிரான சுரண்டும் அரசபயங்கரவாதமே, எதிரான வன்முறைக்கு அரசியல் அடிப்படையாகும். இதில் அந்த மக்கள் சார்ந்து நிற்கத் தவறுகின்ற போக்கின் மீது, மக்கள் சார்ந்து நிற்ககோரும் எல்லைக்குள் தான், மக்களைச் சாராத வன்முறை மீதான எதிர்வினையையும் போராட்டத்தையும் கோருகின்றது.


புரட்சிகரமான மக்கள் வன்முறை, மக்களுக்கு எதிரான அனைத்துக் கூறுகளின் மீதும் சரியானதும் நியாயமானதுமாகும். இதை மக்கள் தமது சொந்த போராட்ட வழிமுறைகள் மூலம் தெரிவு செய்கின்றனர். புரட்சிகர வன்முறை ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து சமூகக் கோரிக்கையையும் உள்வாங்கி செயல்படுவது மட்டும் தான் முரணற்றது. அந்த வகையிலான போராட்டம், மக்களின் ஜனநாயகத்தை மீட்பதை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள், இதை சிறுபான்மை சுரண்டும் வர்க்கம் மீதான போராட்டத்தில் எதிர்ப்பதில் வன்முறை வடிவமும் ஒன்று.


இங்கு நிகழும் வன்முறை மீது மனிதாபிமானப் பிரச்சனையை, எப்படி புரட்சிகரமான வன்முறையாக கையாள்வது என்பதை அவர்கள் தமது சொந்த நடைமுறையில் புரிந்து கொள்கின்றனர். அரச பயங்கரவாதத்தை நடத்துகின்ற அதன் உறுப்பினர்கள், அதை வழி நடத்துகின்றவர்கள் மீதான புரட்சிகர வன்முறைகள், மனிதாபிமான பிரச்சனைகளை எழுப்புவதில்லை. அங்கு ஒரு வர்க்கத்தின் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தையே நடத்துகின்றனர்.


மனித அவலத்தை உருவாக்கும் மனிதாபிமானத்துக்கு எதிரான மனிதவிரோதிகள், மனிதாபிமானிகளாகவே இருக்கமுடியாது. இங்கு இருக்கலாம் என்பது, மனிதாபிமானத்துக்கே எதிரானதாகவே இருக்கும். குடும்ப உறுப்புகள் சந்திக்கும் மனிதாபிமான பிரச்சனைகளை, புரட்சிகர வன்முறை நிராகரிப்பதில்லை. அதை புரட்சிகரமான மக்கள் திரள் வழிகளில் அணுகுகின்றது, சக மனிதன் என்ற எல்லைக்குள், அவனின் உணர்வுகளையும் உரிமைகளையும் பரஸ்பரம் அங்கீகரித்து அணுகி தீர்வு காண்கின்றது. மாறாக அவர்களை எதிரியாக காண்பதில்லை. புரட்சிகரமான மக்கள் திரளின் ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் எந்த எதிர்புரட்சிகர நபர் சார்ந்த சமூக உறுப்பினரை உள்வாங்கி, அவர்களையும் புரட்சிகர உறுப்பாகவே கண்டு போராடுகின்றது.


புரட்சிகர மக்களின் அதிகாரத்தை பொறுத்து, அந்த சமூக உறுப்பினரின் வாழ்வுக்கு வழிவகைகளை செய்து கொடுக்கின்றது. புரட்சிகரமான வன்முறை மனிதனை மனிதன் மதிக்கும் எந்த சக மனிதனையும் அழிப்பதுமில்லை, தண்டிப்பதுமில்லை. மாறாக புரட்சிக்கு எதிராக பயன்படுத்தப்படும் எதிரியை கூட, வென்று எடுக்க முனைகின்றது.


இந்த வகையில் தான் புரட்சிகரமான போராட்டங்கள், வன்முறைகள் கையாளப்படுகின்றது. பரந்துபட்ட மக்களின் தேவைகள், குறிக்கோள்களை அடைத்தல் என்பது, அதன் மையமான நோக்கமாக உள்ளது. சமூக ரீதியாக ஒடுக்கவோ, சுரண்டவோ அனுமதிக்காத போராட்டங்கள், வன்முறைகள், இதற்கு எதிரானவர்கள் மீது கையாளுகின்றது.


இதை மறுக்கின்ற, சக மனிதனை ஒடுக்குகின்ற, மற்றவன் உழைப்பை சுரண்ட விரும்புகின்ற உதிரியாக கொண்ட சமூக விரோத உறுப்புக்கள், தம்மை பாதுகாக்க சித்தாந்த ரீதியாக மனிதாபிமானப் பிரச்சனை பற்றி கூச்சல் போடுகின்றனர். ஆனால் அவர்கள் சாதாரணமாக இயல்பில் நிலவுகின்ற மனிதாபிமான சமூகப் பிரச்சனைகள் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதே, அந்த ஒட்டுண்ணி வர்க்கத்தின் மிகச் சிறந்த அடையாளமாகும். சமூக ரீதியாகவே அவலங்களை உருவாக்கி, மனிதாபிமான பிரச்சனைகள் உற்பத்தி செய்யும் இழிவான வர்க்கமும் இவாகள் தான். இவர்கள் புரட்சிகர வன்முறை நிகழும் போது, அதை ஓட்டி எழுப்பும் ஆபாசமான மனிதாபிமானக் கூச்சல்கள் அனைத்தும், சக மனிதனை சுரண்டும் உரிமைக்காகவும், சமூக ஒடுக்குமுறை செய்து வாழும் அற்பத்தனத்தை காப்பதற்காகவும் தான். இழிந்து போன இந்த வர்க்கம், தான் கொண்டுள்ள மனித முகத்தின் பின் இதைத் தவிர வேறு எதையும் காட்சிப்படுத்துவது கிடையாது.