தமிழ் அரங்கம்

Saturday, September 24, 2005

ராஜனி திராணகம நேர்மையான...

ராஜனி திராணகம நேர்மையான அரசியலை திரிப்பதற்கு எதிராக

ராஜனி திராணகம தனது நடைமுறை சார்ந்த சொந்த போராட்டத்தில் மக்களுடன் சோந்து நின்றார். மிக கொடூரமான எதார்த்த நிலைமைகளில் கூட, அவரின் வீரம்செறிந்த போராட்டம் மக்களைச் சார்ந்து இருந்தது.

அதை அவர் தனத சொந்த நடைமுறை சார்ந்து முறிந்தபனைக்கான நூலில் எழுதிய போது "எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்ததிற்குள் நாமும் புதைந்து போய்விடுகிறோம். புத்தி சுவாதீனத்தின் மெல்லிழையையும் இழந்து, எந்தவிதமான எதிர்ப்புனர்வுமின்றி இந்தப் பயங்கரவாத வன்முறைப் புதைகுழிக்கு சமூகம் இடங்கொடுத்துவிடப் போகிறதோ என்றும் நாம் அஞ்சுகின்றோம்;. மனித ஆளுமைகள், ஆற்றல்களை எல்லாம் பறிகொடுத்துவிட்ட நிலையில் சமூகம் இருகின்றது. ஒவ்வொரு புத்தியுள்ள மனிதனும் எரிந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறான். எங்கள் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் இல்லை. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் இல்லை. ஏஞ்சினியர்களோ மேசன்மாரோ அல்லது வேறு தொழிலாளர்களோ இல்லாததால் -----" ஒரு தேசத்தின் வாழ்வியல் விதியை குறித்து ராஜனி திராணகம தனது படுகொலைக்கு சில நாட்களின் முன்பு இப்படித் தான் எழுதினார்.

அவர் தொடர்ந்தும் எழுதும் போது "எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டவும் அதனை ஒழுங்குறச் செய்வதற்கான சில வழிவகைகளைத் தேடவும் இது முக்கியம் என்பதற்காகத்தான், புறநிலை ஆய்வு என்பதை வெறும் கல்விவளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சியாக மட்டும் நாம் கருதவில்லை. புறநிலை நோக்கும், சத்திய தேடலும், விமர்சபூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும் எமது சமூகத்தத்திற்கு இன்று மிக அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம். இதனை விட்டால் நமது சமூகத்திற்கு வேறு மார்க்கமில்லை என்ற ரீதியில் நாம் இதை கைக்கொண்டுள்ளோம்" என்றார். ராஜனி திராணகமவின் எழுத்து எவ்வளவு முக்கியத்துவமுடையதோ, அந்தளவுக்கு அவரின் ஏழுத்தில் உள்ள உண்மையும் மிக முக்கியத்துவம் உடையதாகவே எம்முன் உள்ளது.

அவர் இதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி கூட எழுதியுள்ளார். ராஜனி திராணகம படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களின் முன்பாக எழுதிய கட்டுரையில் "... மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான – தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள்ளிலிருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் உருவாக மாட்டாது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட கடினமான பணியாகும்" என்றார்.

இதையா இன்று ராஜனி திராணகம பெயரில் செய்கின்றனர்? இல்லையே! ராஜனி திராணகம பெயரில் பாய்விரித்து விபச்சாரம் செய்கின்றனர்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

4 comments:

குழைக்காட்டான் said...

எங்க உங்கட ராஜினி திரிணகம பற்றின விரிவான கட்டுரை? அதுதான் யோகி பற்றி எழுதிய்ருக்கிறன் எண்டாதயுங்கோ!

தமிழரங்கம் said...

ரஜனி பற்றி தனிக்கட்டுரை எதையும் நான் எழுதவில்லை. அந்த தேவை எழவுமில்லை

குழைக்காட்டான் said...

/***ராஜனி திராணகம பெயரில் பாய்விரித்து விபச்சாரம் செய்கின்றனர்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net****/

விரிவான கட்டுரைக்கு என கீழே சுட்டி கொடுத்திருந்தீர்கள் அது தான் கேட்டேன்.
மேலும் அந்ததேவை எழவில்லை என விழக்க முடியுமா?
இந்திய ராமதாஸ் பற்றி எழுதவேண்டிய தேவை இருக்கும்போது ஏன் நீங்கள் நன்கறிந்த ஈழவிவகாரத்தில் இல்லை எனக்கருதுகிறீர்கள்?

தமிழரங்கம் said...

எழுதவற்கான தேவைக்குரிய சூழல் எழவில்லை. தெளிவான நிலைபாட்டை ரஜனி பிந்தைய காலத்தில் கொண்டிருந்தாh. இப்படி நிலைபாட்டை கொண்டிருந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள். அதை தான் நாம் எடுத்து பிரசுத்தோம். நீஙகள் எழுப்பிய பின் அதை முன்மை கொடுத்து; எழுத வேண்டி தேவை உணருகின்றேன்.

ராம்தாஸ் பற்றிய கட்டுரைகள் புதியஜனநாக கட்டுரைகள்.