தமிழ் அரங்கம்

Saturday, October 15, 2005

எனது பெயரில் பதிவிடுவர்களின்


அரசியல் நேர்மை எதுவோ, அதுவே கொலைகளை செய்து விட்டு அதை மறைக்கும் வாதங்களும், நியாயவாதங்களும். கருத்தை எதிர் கொள்ளமுடியாது துசாணத்தால் எனது பதிவில் பதிவிட்டவர்கள், இன்று எனது பெயரில் ஈழநாதன், ஜனநாயகம், துண்டில்... போன்ற தளங்களில் பதிவிடுகின்றனர். அதவது தமது சொந்த செயல்பாட்டை கூட நியாயப்படுத்த முடியாது, எனது பெயரால் அதை செய்கின்றனர்.

இது எம்மண்ணின் சாபக்கேடுதான். சொந்த தயாகத்தை, சொந்தப் போராட்டத்தைக் கூட சரியானது எனச் சொல்ல முடியாத நிலையில், அதை மற்றவன் பெயரால் சொல்லும் அளவுக்கு போராட்டம் சிதைந்து விட்டது.

1986ம் ஆண்டு மிகவும் தீர்க்கதரிசனமாக பல்கலைக்கழக மாணவாகள் இதை எப்படி பார்த்தார்கள். இந்த மனிதவிரோத கும்பலுக்க எதிராக போராடிய போது அவர்கள் சரியாகவே ஒட்டிய செய்தியில்

3 comments:

dondu(#11168674346665545885) said...

உங்கள் பெயரிலும் அவ்வாறு பின்னூட்டம் இட ஆரம்பித்து விட்டார்களா? இந்த கேடுகெட்ட பழக்கம் என்னையும் படுத்தி விட்டது. இது பற்றி நானும் பதிவு போட்டிருக்கிறேன். பார்க்க.
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

tamil_circle@yahoo.no

குறிப்பிட்ட அந்தப் பதிவுகளில் எழுதப்பட்ட பாலனின் சம்பவம் என் வலைப்பதிவில் நானெழுதிய பதிவு. நேற்றுத்தான் பார்த்தேன் அந்தப் பதிவு அப்படியே படியெடுத்து குறிப்பிட்ட பக்கங்களில் உங்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.
ஏறத்தாள மூன்று மாதங்களின் முன் எழுதப்பட்ட இப்பதிவு இப்போது தோண்டி எடுக்கப்பட்டு போடப்படுகிறது. அப்பதிவை எழுதியவன் நான்தான் என்றாலும் உங்கள் பெயரில் அதை எழுதுவது நானில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறேன். ஒரு வாரத்தின் முன் இப்பதிவு யாழ் களத்தில் யாரோ ஒருவர் எடுத்துப் போட்டதாக அறிகிறேன். அதன்பின்தான் அப்பதிவு இங்கே உங்கள் பெயரில் ஒட்டப்படுகிறது.
உங்கள் பெயரில் அந்தப் பின்னூட்டத்தை இடுபவர் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது.
இப்போது சம்பந்தமேயில்லாமல் எங்கெங்கோவெல்லாம் அப்பதிவு பதியப்படுகிறது. இது பாலனையே கொச்சைப்படுத்தாகத்தான் முடியும். அதை அந்த அநாமதேயப் பேர்வழி உணர்வாரா தெரியாது.

நன்றி.

தமிழரங்கம் said...

நட்புடன் வசந்தன் மற்றும் டோண்டுக்கு

உங்கள் ஆதாரவக்கும் ஒத்துலைப்புக்கு மனமார்ந்த நன்றிகள். எந்தக் கருத்தையும் நன்றியுடன் தனது சொந்தப் பெயரில் அல்லது புணை பெயரில் போடுவது இட்டு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது எந்தளவுக்கு எவ்வளவு மாறுபட்ட கருத்ததாக இருந்தாலும், அது மதிப்புக்குரியதே. முரண்பாடுகள் இன்றி பூமியும் சரி, பூமியின் இயற்கையும் சரி இயங்காது. அதாவது அது உயிர்வாழ முடியாது. இந்த இயற்கையில் உள்ள மனிதர்கள் எந்த மட்டில்.

குறிப்பாக வசந்தன் போட்ட கருத்தினை எனது பெயரில் போட்டபோது, அதில் உள்ள ஒரு தியாகத்தையே கேவலப்படுத்துவது தான். இந்த தியாகம் எதாற்காக எப்படி செய்யப்படுகின்றது என்பது பற்றி எனக்கு மாறுபட்ட அபிராயங்கள் இருந்த போதும் கூட, தியாகம் செய்ய முன்வந்த உணர்வு மதிப்புக்குரியதாக உள்ளது. அதாவது தனிப்பட்ட அந்த மனிதன் தியாகம் செய்ய முன்வரும் போது, சுயநலன் சார்ந்த தனிமனித அரசியலையே கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது. தனிமனிதர்கள் தம்மை தியாகம் செய்யும் போது, அது உண்மையான சமூக விடுதலையை அடையாத வரை, அந்த தியாகம் அர்த்தமற்றதாக இருந்த போதும் கூட, இந்த தியாகத்துக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக போராடி தியாகத்தை பாதுகக்கப்பட வேண்டியது அவசியம். இந்த தியாகத்தை கொச்சைப்படுத்தி வருபவர்கள், தமது சுயநல அரசியல் பயன்படுத்தும் போது, தியாகங்களை மற்றவர் பெயரால் ஒட்டிக் கேவலப்படுத்துவது நிகழ்கின்றது.

இது சமூகத்தின் எல்லா துறைக்கும் பொருந்தும். கருத்தால் கருத்துக்கு பதிலளியுங்கள். மக்கள் மேல் நம்பிக்கை இருந்தால், மக்களை நேசித்தால், உங்கள் சரியான கருத்து வெற்றிபெறும். அதைவிடுத்து கருத்தைச் சொல்பவனை கொல்வது அல்லது இது போன்ற மற்றவன் பெயரால் ஆள் மாறட்டம் செய்பவர்கள சுத்த அயோக்கியர்கள். இங்கு எந்த நேர்மையும் கிடையாது. எந்த மனிதப் பண்பும் கிடையாது. ஒளித்த நின்று கல்லெறியும் கும்பலாகவேயுள்ளது.

இவர்கள் சமூகத்தில் இழிந்தபோன எந்தச் செயலையும் செய்யும் வகையாறுகள். சமூகத்தில் தம்மை அடையளம் காட்டின் மதிபற்றவர்கள். சமூகத்தில் ஒளித்து நின்ற கொண்டு, சமூத்தையே பிறண்டித் திண்பவர்கள். சமூக பண்பாடுகள், சமூக கலச்சாரங்கள் எதுவுமற்ற உண்மையான சமூக விரோகள் இவர்கள்.
பி.இரயாகரன்
16.10.2005