தமிழ் அரங்கம்

Sunday, December 18, 2005

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 3

ஏகாதிபத்திய பாலியல் சுதந்திரத்தை முன்வைத்த குஷ்பு விவகாரம்

குஷ்பு போன்ற ஏகாதிபத்திய அன்னக்காவடிகளே, சமூகத்தின் உயர்குடிகளாக உள்ளனர். இவர்களின் அலட்டல் அலட்டலாகவே அப்படியே ஒரு வழமையான சினிமா வசனம் போல் போய் இருக்க வேண்டியது. ஆனால் அதை நிலப்பிரபுத்துவ பார்ப்பனிய அரசியலுக்கும், தலித்துக்களின் சாதி அரசியலுக்கும், குறுந்தேசிய பாசிசக் கூறுக்கும் இசைவாக பயன்படுத்திய போது சர்ச்சைக்குள்ளாகியது. இதற்கு கோட்பாட்டு ரீதியாக வழக்கறிஞர் ரஜனி, அ.மார்க்ஸ்… போன்றோர் தமது உலகமயமாதல் கோட்பாட்டுக்கு இணங்க விளக்கி அதை முற்போக்காக காட்டமுனைந்தனர்.

முதலில் குஷ்பு என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம். ~~பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். என்றார். இதை ~~தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? என்ற கருணாநிதியின் தமிழ்முரசு இதை அரசியலாக்கிய போது, மீண்டும் குஷ்பு தினத்தந்தியில் ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்றார்.

இப்படி சர்ச்சை உருவானது. பார்ப்பனியமயமாகும் தலித் சாதி அரசியல் இதை ஒருபுறம் காலில் கீழ் போட்டு உடைக்க, மறுதளத்தில் இதை பெண்ணியமாக சித்தரித்து தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடினர். மற்றொரு பிரிவு குஷ்புவை ஆதரிக்கும் அதேநேரம், பார்ப்பனியத்துடன் பகைக்க விரும்பாத மற்றொரு கும்பல் ஒன்று, கருத்துச் சுதந்திரம் பற்றி கேள்வி கேட்டு குஷ்புக்கு சாமரை வீசினர்.

இங்கு குஷ்பு கூறியதே தமது பெண்ணியம் என்பதே இலக்கியச் சந்திப்பு மற்றும் பெண்கள் சந்திப்பின் தீர்மானகரமான முடிவாகும்;. இந்த குஷ்பு வகையறாக்களின் பெண்ணியம் தான், தமது பெண்ணியம் என்ற நிலைப்பாட்டை தீர்மானமாக்கினர். முன்பு எந்த முடிவுகளையும் எடுக்காது கூடி குடித்து கும்மாளம் அடித்து கலையும் இலக்கியச் சந்திப்பு, முதன்முதலாக ஏகாதிபத்திய சார்பு முடிவுகளை உள்ளடக்கிய வகையில் சில முடிவுகளை எடுத்துள்ளது.

குஷ்பு வைத்தது பெண்ணியமா? இல்லை. மாறாக ஏகாதிபத்திய ஆணாதிக்க உலகமயமாதல் அமைப்பில் வெம்பிப் போகும் பெண்ணின், சொந்த சுயபுராணம். இதை சமூகத்துக்கும் பொருத்திக் காட்ட முனைந்தார். இன்றைய உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய ஆணாதிக்க சமூக அமைப்பில் நுகரும் பெண்ணின் நிலையில் இருந்து, நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு விடுத்த வக்கிரம் தான் குஷ்புவின் கூற்று.

இந்த சமூக முரண்பாடு இந்தியாவில் ஆழமாக ஊடுரூவி வரும் ஏகாதிபத்திய உலகமயமாதல் என்ற நுகர்வுப் பண்பாட்டில் இருந்து, நிலப்பிரபுத்துவ கட்டுக்கோப்பான பொருளாதார சமூக அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் இது. இது பொருளாதார துறையில் மட்டுமல்ல பாலியல் துறையிலும் கூட, ஏன் பண்பாட்டு கலாச்சாரத் துறையிலும் கூட ஏற்படுகின்றது. உலகமயமாதல் என்ற பண்பாட்டு சமூக அமைப்புக்கும், கடும்போக்கான பண்பாட்டு நிலப்பிரத்துவ அமைப்புக்கும் இடையில் எங்கும் எதிலும் முரண்பாடு உள்ளது. இதன் எதிர்நிலைத் தன்மை சார்ந்த முரண்பாட்டின் மீது ஆதரவு அல்லது எதிர்ப்புகள் தான் குஷ்பு விவகாரத்திலும் ஆளுமை பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் மக்களுக்கு எதிரானது என்ற அடிப்படையிலும், இந்த பொருளாதார அமைப்பு இரண்டும் ஆணாதிக்கம் சார்ந்தது என்ற அடிப்படையிலும், இந்த விவகாரத்தில் மக்கள் நலன் சார்ந்த கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

குஷ்பு போன்ற மேட்டுக்குடி பணக்கார நடிகைகளின் சொந்த வாழ்க்கை சார்ந்த உலக கண்ணோட்டத்தை தான், இந்த சமூகம் பின்பற்ற வேண்டும் என்ற திமிரில் இருந்தே குஷ்புவின் கருத்து கொப்பளிக்கின்றது. திமிர் பிடித்த பணக்கார நடிகைகளாக உள்ள இவர்கள், அடிமட்ட சமூகங்களையே இழிவாக எப்போதும் காண்பவர்கள். சினிமாவில் மட்டும் அதையே தமக்கு ஏற்ப திரித்து நடிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பது வக்கிரமும் பாசிசமும் தான். சமூகத்தின் அடிமட்ட மக்களுடன் தொடர்பற்றவர்கள் தான் இவர்கள். மனித வாழ்க்கையே புரிந்து கொள்ளாதவர்கள். இன்று ஏகாதிபத்திய நுகர்வை மட்டுமே, வாழ்க்கையின் அடிப்படையாக கொள்பவர்கள். இது வெறுமனே நடிகைகள் மட்டுமல்ல, பணக்காரக் கும்பலின் பொது வக்கிரமாகும். இவர்களின் வாழ்க்கைக்குள் பூதக் கண்ணாடி கொண்டு மனிதத்துவத்தை தேடவே முடியாது. ஆனால் தேட முடியும் என்று தேடி தீர்மானங்களையும்;, அறிக்கைளையும், கோட்பாடுகளையும் வெளியிடுகின்றனர்.
மக்களை ஏமாற்றிச் சுரண்டிய இந்தப் பணக்காரக் கும்பல் உலகமயமாதலை விசுவாசமாக வாலாட்டி ஆதரிப்பவர்கள். உலகமயமாதலின் நுகர்வுப்பண்பாட்டை, அந்தக் கலாச்சாரத்தை விரும்பி வலிந்து தேர்ந்து எடுப்பவர்கள்தான்;. இவர்களுக்கு என்று தனியான ஒரு கருத்தற்றவர்கள். ஏகாதிபத்திய உலகமயமாதல் நடைமுறை வாழ்வு சார்ந்த கோட்பாட்டை, கிளிப்பிள்ளை போல் மீள ஒப்புவிப்பவர்கள். அப்படியே வாழ்ந்து காட்ட முற்படுபவர்கள்.

வரைமுறையற்ற நுகர்வே இவர்களின் மையமான கோட்பாடு. பாலியலைக் கூட இந்த வகையில் தான் இவர்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உறவை வெறும் பாலியலாக மட்டும் உடல் சார்ந்ததாக குறுக்கி நுகர்பவர்கள். உறவு ஒரு சமூக உயிரிக்கு இடையிலானது என்பதையே மறுக்கின்றனர். இதனடிப்படையில் பாலியலை நுகர்வு என்ற விபச்சாரம் வரை புரிந்து, அதை உள்வாங்கிக் கொள்ளுகின்றனர். இந்த வகையில் குஷ்பு போன்றவர்கள் கருத்துரைக்கின்றனர். பாலியலை வெறும் சந்தைக்குரிய ஒரு நுகர்வாக மட்டும் சிறுமைப்படுத்தி, அதைக் கொப்பளித்து துப்பியுள்ளனர். நிலவும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்க கோட்பாடு, தமது நுகர்வு கலாச்சாரத்துக்கு சவாலாக இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாது புலம்பும் போது, மொத்த சமூகத்தையும் கேவலமாக வசைபாடுகின்றனர். ~~தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?. என்ற மற்றொரு முன்னாள் நடிகை சுபாஷனியும் தனது மேட்டுக்குடி பார்ப்பானியத் திமிருடன் வக்காளத்து வாங்குகின்றார். தாங்கள் தமிழருடன் சம்பந்தமில்லாத அன்னியர் என்பதை இந்த நடிகை தனது கூற்றிலும் கூறிவிடுகின்றார். குஷ்புவோ ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்ற தனது சொந்த வாழ்க்;கை சார்ந்த மேட்டுக்குடி விபச்சார அனுபவத்தில் இருந்த இப்படி சொல்லுகின்றார். இவர்களின் பாலியல் சார்ந்த நுகர்வு வெறிதான், இப்படி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்த வைத்தது.
பணத்துக்கு விபச்சாரம் செய்வது எப்படியோ அப்படித்தான் இந்த மேட்டுக் குடிகளின் பாலியல் நுகர்வு உள்ளது. பணத்துக்கு விபச்சாரம் செய்தலில் ஆண் மட்டும் நுகருகின்றான். ஆண் விபச்சாரர்களிடம் பெண் மட்டும் நுகருகின்றாள். பணத்துக்கு விபச்சாரம் செய்பவர்கள் இந்த சமூக அமைப்பின் வறுமை, மற்றும் ஆணாதிக்க கொடூரங்களினால் விபச்சாரியாக வாழ்க்கையில் தள்ளப்பபட்டவர்கள்.

இதில் இருந்து மாறுபட்ட மேட்டுக்குடி வாழ்க்கை சார்ந்த பாலியல் உறவு விபச்சாரமாகவே உள்ளது. எந்த மனித சமூக உறவும் இந்த பாலியல் உறவில் இருப்பதில்லை. விலையுயர்ந்த அன்பளிப்புகள், நடிப்பு சார்ந்த பாலியல் கவர்ச்சி, சினிமா பாணி காதல் நுகர்வு இப்படித் தான் இவர்களுக்கு இடையில் உறவு ஒரு விபச்சாரமாக மலருகின்றது. இங்கு நுகர்வு என்பது ஆண் அல்லது பெண் ஏதோ ஒரு பகுதிக்கு அவர்களின் தேர்வு சார்ந்து ஏற்படுகின்றது.

இந்த மே(மோ)ட்டுக்குடிகள் சொந்த வாழ்க்கை சார்ந்த கவர்ச்சியான நடிப்பு அனுபவத்தையே உலகமாக காண்பது இயல்பானது. சமூகத்தை தன்னளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கும் போது, மொத்த சமூகத்தையே இப்படித் தான் இருக்கின்றது என்று நம்புகின்றது. தமது குறுகிய வாழ்க்கை வட்டம், தமது குறுகிய நுகர்வு வெறி, தமது குறுகிய பண்பாடு என அனைத்தும் சேர்ந்து, இப்படித் தான் நாய் வேஷம் போட்டு குலைக்கவைக்கின்றது. சமூகக் கண்ணோட்டத்தையே அது மறுதலிக்கின்றது. குறிப்பாக அதே இந்திய ரூடேயின் தரவுகள் மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகிதப் பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்கள் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். சென்னையில் 82 சதவீகிதமான பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் குஷ்பு அதையும் மீறி கருத்துரைக்கின்றார். சொந்த மேட்டுக்குடி பெண்களே இப்படி கூறும் போது, சமூக ரீதியாக சீரழிந்து போன வாழ்க்கை அதையே நடிப்பாக தொலைத்த கும்பலின் குரல்கள் வக்கிரமாக வெளிப்படுகின்றன. ~~திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்று குஷ்பு கேட்கின்ற போது, சொந்த மேடடுக்குடி வர்க்கப் பெண்களையே கொச்சைப்படுத்தி கேவலப்படுத்திவிடுகின்றது. சொந்த சமூகத்துடன் கூட ஒட்டோ உறவோ கிடையாது. ஏன் இந்தியாரூடே எடுத்த தரவு சார்ந்த கருத்தைக் கூட, உள்வாங்கி கொள்ள முடியாது, சொந்த வாழ்க்கை சார்ந்த வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றனர். இதை பெண்ணியம் என்ற அ.மார்க்ஸ், வழக்கறிஞர் ரஜனி போன்றோர் ஏகாதிபத்திய விசுவாசத்துடன், அந்த சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தி குரைக்கின்றனர்.

இங்கு குஷ்பு பாலியலை திருமணத்துக்கு முன்னம் கொண்டிருக்கலாம் என்று கூறிய போது, ஒழுக்கக்கேடே முதன்மை பெறுகின்றது. இங்கு பாலியல் நுகர்வாக்கி, அதை யாருடனும் எப்படியும் என்ற விடையம் வந்துவிடுகினறது. இங்கு கற்பம் அடையாமல் இருந்தால் போதும். பால் நோய் வராமல் இருந்தால் போதும். இதைப் பெண் புரிந்து கொண்டால் சரி என்கின்றனர். இதை;தான் பெண்ணியம் என்று சிலர் கூறுகின்றனர். உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்கம் வழங்கும் பெண்ணின் ஒழுக்கக் கேட்டை மூடிமறைக்கும் வழியைக்காட்டுகின்றனர். நுகர்வதை ஊக்குவித்து அதை இரகசியமாக இந்திய சமூக அமைப்பில் பாதுகாக்க வழி கூறுகின்றார்.
இதில் எங்கே பெண்ணியம் உள்ளது. இங்கு பாலியல் நுகர்வு முன்மொழியப்படுகின்றது. எப்படியும் நுகரலாம் என்று பெண்ணுக்கு புகட்டப்படுகிறது. சமூகத் தன்மையற்ற சந்தை நுகர்வு, இங்கு கொலுவேற்று நிற்கின்றது. சந்தை மனித இனத்தின் மீது எதை செய்ய விரும்புகின்றதோ, அதை நீ உனது ஒழுக்கமாக கொள் என்பது பொருளாதாரத்தின் ஒழுக்க விதி. இந்த ஒழுக்கக்கேட்டையே குஷ்பு வகையறாக்கள் மேதாவிகள் போல் உள்வாங்கி சொந்த மேட்டுக்குடி வாழ்பனுபவங்களுடன் அதையே பேட்டியளிக்கின்றனர்.

மனித இனத்தின் விடுதலைக்காக வழிகாட்ட வக்கற்றவர்கள், தம்மைத் தாம் முற்போக்குகள் என்று கூறிக்கொள்ளும் வகையறாக்கள், இதற்காக காவடி எடுக்கின்றனர். இதுவெல்லோ பெண்ணியம் என்கின்றனர். பெரியாரை இழுத்து வைத்து புணர்ந்து காட்டுகின்றனர். குஷ்புவின் வாழக்கை சார்ந்த ஒழுக்கக்கேட்டை ஆதரித்து அ.மார்க்ஸ். ~~குஷ்பு இந்தியாடுடேவுக்குத் தெரிவித்துள்ள ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஒரு தேர்ந்த சமூகவியலாளரைப் போல அவர் கருத்துக் கூறியிருக்கிறார். மாறிவரும் சமூகப் போக்கினை குஷ்பு புரிந்து கொண்ட அளவுக்கு கூட நமது அரசியல் தலைவர்கள் கொள்ளவில்லை என்பது அபத்தமாக இருக்கிறது." அ.மார்க்சின் சமூக ஆய்வுத் தளம் எப்படி உள்ளது என்பதைத் தான் இது காட்டுகின்றது. குஷ்புவின் இந்த கூற்றின் பின் உள்ள சமூக பொருளாதார அடிப்படை தான் என்ன. அது உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய பொருளாதார உள்ளடகத்தின் கொப்பளிப்பு அல்லவா.

குஷ்பு இந்த நுகர்வுச் சந்தை விதிக்கு அமைய புலம்பும் போது, கவர்ச்சியைக் காட்டி சமூகத்துக்கு முன் தன்னை நிலைநிறுத்திய அதே திமிருடன் தான், கொப்பளித்து கருத்துரைக்க முடிகின்றது. இதைத் தான் அ.மார்க்ஸ் ஒவ்வொரு வரியிலும் உடன்பாடு உண்டு என்று கூறி, இந்த ஆணாதிக்க உலகமயமாதல் உருவாக்கும் ஒழுக்கக்கேடான மேட்டுக்குடி பெண்ணின் வாழ்வின் முறையை ஆதரிக்கின்றார். இதையே அடிமட்டத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் தமது சொந்த வாழ்வியல் முறையாக கொள்ளவேண்டும் என்று உளறுகின்றார். இதைத்தான் இந்தக் கும்பல் பெண்ணியம் என்கின்றது.

வழக்கறிஞர் ரஜினி. ~~ஆண்களைத் தலைவர்களாகக் கொண்ட அரசியல் அமைப்புகள் தங்களது சொந்த ஆதாயத்திற்காக குஷ்பு என்கிற பெண்ணுக்கு எதிராக பெண்களையே தூண்டிவிடுகிறார்கள்" என்கிறார். அடிப்படையில் குஷ்பு ஒரு பெண் என்ற வகையிலும், குஷ்புவை எதிர்த்தவர்களின் கட்சி தலைவர்கள் ஆண்கள் என்ற வகையிலும் இதை குறுக்கி, குஷ்புவுக்கு வக்காலத்து வாங்குகின்றார். ரஜனி குறித்த கட்சிகளிள் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கூறை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, குஷ்புவின் ஆடம்பரமான உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் நுகர்வு விபச்சாரத்தை சமூகமே கைக்கொள்ளவேண்டும் என்று வழக்காடுகின்றார். இவர் பாரிஸ் இலக்கிய சந்திப்பில் உலகமயமாதல் பெண்ணின் விபச்சாரத்தனத்தை, ஆதரித்து, அதன் அடிப்படையில் குஷ்புவின் ஒழுக்கக்கேட்டை ஆதரித்தார். இதை நாம் தனியாக கீழே விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த தலித் ஆய்வாளரும் ஏகாதிபத்திய உலகமயமாதலின் எடுபிடியுமான ரவிக்குமார் ~~சர்வேயின் முடிவுகளின்படி கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. அதை இந்த அளவு பிரச்சனையாக்கியிருக்கத் தேவையில்லை" என்று கூறி விடையத்தை முடக்கி தப்பிவிடவே முனைகின்றார். இதை அரசியலாக்கி மோதுவது அவர் தாங்கி நிற்கும் தலித்துகள். உலகமயமாதலை ஆதரித்து நிற்கும் மோதல் தரப்புகள், இரண்டும் சமூக பொருளாதார ஆணாதிக்கம் சார்ந்து அரசியல் ரீதியாக அம்பலமாவதை கண்டு அதில் இருந்து தப்பிவிடவே முனைகின்றார்.

1 comment:

Anonymous said...

kushpuvitku katuththuch sollum utimai undo.oru samookathai paarththu elunthamaanamaaka pesum utimai avatukku kidaijathu.unmaikku purampaka pesa mudijathu.kushpuvin katuthu poruppattathu.