தமிழ் அரங்கம்

Sunday, September 30, 2007

புலிகளின் நிதர்சனம் டொட் கொம்மின் அசிங்கம்

பி.இரயாகரன்
30.09.200


னது கட்டுரை ஒன்றுக்கு நடந்த கதை, நான் எழுதிய மற்றொரு கட்டுரையின் உதாரணமாகிவிடுகின்றது. 28.09.2007 அன்று நிதர்சனம் டொட் கொம் எனது கட்டுரை ஒன்றை எடுத்து பிரசுரித்துள்ளது. அதன் பின்னணியைப் பார்ப்போம்.

1. கட்டுரையில் புலிக்கு எதிரான பகுதி நீக்கப்பட்டு, அதை தமக்கு மட்டும் சார்பாக மாற்றி பிரசுரமாகியுள்ளது. பார்க்க : http://www.nitharsanam.com/?art=24465

2. எங்கே இந்தக் கட்டுரையை எடுத்தோம் என்ற மூலம் இன்றி அது நிதர்சனத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை என்பதான வகையில் பிரசுரமாகியுள்ளது. ஏதோ தமக்கு நான் எழுதியதாக காட்டுகின்ற மாயையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். பார்க்க எனது கட்டுரையை : http://www.tamilcircle.net/unicode/general_unicode/214_300/244_general_unicode.html

இப்படித் தான் புலிகளின் ஊடகவியல் இயங்குகின்றது. புலிக்கு எதிரான பகுதியை நீக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால், அவர்கள் இரண்டு விடையத்தை நேர்மையாகச் செய்திருக்க முடியும்.

1. புலிகள் சுயவிமர்சனம் செய்து, நடைமுறை ரீதியாக தம்மை மாற்றிக்கொண்டு இதை இல்லாததாக்குவது.

2. இல்லையேல் புலி பற்றிய எமது விமர்சனம் தவறு என்றால், அதை விமர்சிப்பது. அந்த சுதந்திரம் உங்களிடம் உண்டு.

வெட்டியும் ஒட்டியும் அதை தமக்கு சார்பாக திரிப்பது, புலிகள் பற்றிய எமது விமர்சனத்தை தொடர்ச்சியாக உறுதி செய்து நிற்கின்றது.

எனது பெயரில் வெளி வந்த, எமது இணையத்தில் வந்த கட்டுரையில், சில பகுதிகளை நீக்கி சேர்த்து தமக்கு சார்பாக மாற்றுவது தான் புலி ஊடகவியலாகின்றது. இது போல் புலியெதிர்ப்பு தேனீயும் செய்துள்ளது. நான் எழுதிய முஸ்லீம் மக்கள் பற்றிய எனது கட்டுரையை அவர்கள் பிரசுரித்த போது, வேறு ஒருவரின் பெயரில் அதை வெளியிட்டது.

இப்படி தமிழ் மக்களுக்கு உண்மைகளைச் சொல்லும் எம்மை மறைத்தும் திரித்தும் தான், தமது மக்கள் விரோதத் தன்மையைப் பலப்படுத்திக் கொள்கின்றனர். இப்படி போக்கிரி ஊடகவியல் மூலம், மக்களுக்கு உண்மைக்கு பதில் பொய்யைப் புனைந்து விடுகின்றனர்.

35 comments:

Bharathy said...

இது அவர்களிக்கு சுயமாக சிந்திக்கும் சொந்தசரக்கு இல்லை என்பதயும்,அவர்களின் நரித்தன்த்தையும் தெளிவாகவே காட்டுகின்ற்து.

அம்பலப்படுத்தியமைக்கு நன்றிகள் ...

-/பெயரிலி. said...

உங்கள் கட்டுரையைப் பிரசுரிப்பதாகவிருந்தால், முழுமையாக எடுத்துப்போட்டிருக்கவேண்டும். அதற்கான நெறி நிதர்சனம்.கொம்மிற்கு இல்லையென்பதே உண்மை.

நிதர்சனம்.கொம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றதாக எண்ணிக்கொண்டு அதன் கோணங்கித்தனமான செயற்பாடுகளால் எதிரான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது என்பதைக்கூட உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. :-(

மு. மயூரன் said...

நிதர்சனம் போன்ற ஆபாச வலைத்தளங்கள் இப்படியான ஊடக அறங்கள் பற்றியோ, அல்லது வேறேதாவது அறங்கள் பற்றியோ கணக்கிலெடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியுமா?

அசுரன் said...

தங்களது ஏகாதிபத்தியத்தின் நிழலில் இலங்கை புத்தகத்தை சமீபத்தில் மீண்டும் மறுவாசிப்பு செய்தேன். வெகு தெளிவாக இன்று புலிகள் வலையில் மாட்டிக் கொண்டு விழிப்பதை உணர முடிந்தது. அவர்களது அரசியலே இன்று சொந்த முடிவின்பாற்ப்பட்டு செல்வது என்ற நிலையில் இல்லாமல் ஏகாதிபத்தியங்களின் மிரட்டலுக்குட்பட்டே இயங்கி வரும் பொழுது அவர்களது அரசியல் மீது வைக்கும் விமர்சனங்களை மட்டும் எந்த வகையில் அவர்களால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள இயலும்?

முற்றிலும் பரிதாபத்திற்குரியவர்களாக உள்ளனர். இந்த மூன்று அணிகளும் சேர்ந்து(புலி எதிர்ப்பு, புலி, சிங்கள் பேரினவாதம்) ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியே தமது இருப்பை நியாயப்படுத்திக் கொண்டு மக்களை மீளா அடிமைத்தனத்தில் சிக்க வைத்துள்ளனர்.

தங்களது கட்டுரையை இந்த கோழைத்தனமான அரசியலுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.

விபு யின் சுய அழிவுப் பாதை தமிழீழத்தின் நியயாமான விடுதலை போராட்டத்தை சர்வதேச சமூகத்தின் முன்பு கொச்சைபடுத்தியுள்ளதை தவிர்த்து சாதித்தது ஒன்றுமில்லை.

அசுரன்

தமிழரங்கம் said...

மயூரனுக்கு

கணக்கில் எடுத்தல் அவசியமா! என்பது, அது தமிழ் மக்கள் மத்தியில் வகிக்கும் தாக்கத்தைப் பொறுத்தது. புலிகளின் பல செய்தி நிறுவனங்கள் நிதர்சனத்தைச் சார்ந்து செய்திகளை பிரசுரிக்கின்றன, வாசிக்கின்றன. புலிகளின் ஆதாரவளர்கள் இதை நம்பியே இயங்குகின்றனார்.

புலிகளின் உத்தியபூர்வமாக கடந்த காலத்தில் எதைத்தான் உரிமை கோரியுள்ளனர். இது போன்ற அதற்கேற்றவாறு நூற்றுக்கணக்கான இணைங்கள். அவர்கள் அதைக் கண்டித்து தமது நேர்மையை செயல்படுத்துகின்னரா! இல்லையே.

புலிகள் எதைத் தான் உரிமை கோருகின்றனர். எதையும் உரிமை கோராது செய்கின்றனர். அதற்கு எற்ப இணையங்களும் இயங்குகின்றது.

தவறுகளை திருத்தல் புலியில் நடந்தால் தான், அது போன்று அனைத்த தளங்களிலும் (இணையங்களில்) நடக்கும்.

தமிழ் மக்களின் தலைவிதியே இப்படி சிறுமைப்படுத்தி சின்னபின்னப் படுத்தப்படுகின்றது.

வி.சபேசன் said...

நிதர்சனம் இணையத்தளம் புலிகளினுடையது அல்ல. நிதர்சனத்தை புலிகளினுடையது என்று சொல்லி நீங்கள் மேற்கொள்ளும் அரசியலும் அசிங்கமானதே!

தமிழரங்கம் said...

எது அசிங்கம்?

புலியினுடையது அல்ல என்று சொல்லும் உரிமை உங்களுக்க யார் தந்தது?

நீங்கள் என்ன புலியா?

அது புலியினுடைதல்ல என்று புலிகள் பிரச்சாரம் செய்து தங்களைத் தாங்கள் திருத்தட்டும்.

இடையில் பினாமிகள் தேவையில்லை

அதன் பின் எது அசிங்கம் என்று கதையுங்கள்.

வி.சபேசன் said...

நிதர்சனம் இணையத்தளம் தமது அல்ல என்று விடுதலைப் புலிகள் அறிக்கை கூட ஒரு முறை வெளியிட்டிருந்தார்கள். அதை நிதர்சனம் இணையத்தளமும் முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.
நிதர்சனத்தை விடுதலைப் புலிகள் நடத்துவது இல்லை என்பதை, நிதர்சனம் இணயத்தை ஊன்றிக் கவனித்தாலே புரிந்து கொள்ள முடியும்.
உலகெங்கும் இருக்கும் தமிழ் ஊடகங்களை விடுதலைப் புலிகள் தமது செய்திகளை சொல்வதற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்தும் பயன்படுத்துவார்கள். ஆனந்தவிகடனில் இருந்து நிதர்சனம் இணையத்தளம் வரை காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றபடி விடுதலைப் புலிகளின் செய்திகளை தாங்கி வரலாம்.
விடுதலைப் புலிகளுக்கு சாதகமான செய்திகள் சில வேளைகளில் டிபிஎஸ் ஜெயராஜ் மூலமாகவும் வரும் ராஜகரன் மூலமாகவும் வரும்.
இவைகளை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது

-/பெயரிலி. said...

அசுரன்
எதற்காக ஈழத்தமிழர்களின் வரலாற்றை முழுவாசிப்பினைச் செய்து நீங்கள் எங்களுக்கு வழங்கக்கூடாது?

ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டிலே இந்தியாவிலே முதல்வாசிப்பினைச் செய்யும் இந்து இராமுக்கும் இடைவாசிப்பினைச் செய்யும் அவரது எடுபிடிகளுக்கும் மறுவாசிப்பினைச் செய்யும் உங்களைப் போன்றவர்களுக்கும் ஒரு கோதாரி வித்தியாசமுமில்லை. அவரவர் அரிப்பினைத் தீர்க்க மார்க்ஸ் தொடக்கம் மண்டைக்காடுவரைக்கும் மயிர்பிளந்து அலட்டுவீர்கள். ஆனால், மனுசனுக்கு ஒரு பிரயோசனமுமில்லை. நிதர்சனம்.கொம் நடத்தும் கூட்டத்தின் அரைலூசுத்தனத்துக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை உங்களதும் இராயகரனினதும் கணிசார்மக்கள்புரட்சி.

நடைமுறையிலே உள்ள பிரச்சனைகளுக்குத் துரும்பைக்கூட எடுத்துப்போடமுடியாதவர்கள், தொடர்ந்து வழவழவென்று அரற்றுவதால் என்ன பயனாகப்போகிறது?

இராயகரனைத்தான் விடுங்கள்; அவரது கட்டுரைகள் பிற்காலத்திலே ஸ்ரீலங்கா/ஈழ அரசியல் ஆராய்ச்சிமாணவர்களுக்காவது புலிசார்வலதுசாரி, புலியெதிர்ப்புவலதுசாரிசாராமல் அரசியல்நிகழ்வுகளுக்கான பதிவுகளாகப் பயன்படலாம். உங்களைப் போன்றவர்கள் என்ன பயனாவார்கள்?

/இந்த மூன்று அணிகளும் சேர்ந்து(புலி எதிர்ப்பு, புலி, சிங்கள் பேரினவாதம்) ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியே தமது இருப்பை நியாயப்படுத்திக் கொண்டு மக்களை மீளா அடிமைத்தனத்தில் சிக்க வைத்துள்ளனர்./

உங்களின் நாலாவது இந்திய ஆக்கிரமிப்புவாதம் எங்கே போய் மறைந்து கொண்டது? உங்களின் கக்கத்துக்குள்ளேயே அல்லது கச்சைக்குள்ளேயா? பெரிய மீளா அடிமை புலிக்கே ஆளாய் பிறரை மிகவேண்டா மக்களைப் பற்றி ஒப்பாரிவைக்கும் நீங்கள், உங்களின் பாரத நாட்டின் அரசியல், ஊடாகமகான்கள் ஈழத்தமிழர்மீதான செயற்பாட்டிலே காட்டிய காட்டும் திருவிளையாடல்கள் குறித்துச் சத்தமின்றியிருப்பது, போடாங்கோ என்றா அல்லது பொடாவுக்குப் பயந்தா?
அல்லது, உங்களின் புரட்சிப்பாதையிலே, போர்ப்பறைமுழக்கத்திலே இதுவும் ஒரு பதுங்குகுழித்தாக்குதல் உத்தியா?

உங்களைப்போல தத்துவம்சார்'போராளி'களுக்கும் போர்ப்பறைக்கும் வெறுமனே மறைந்திருந்து ஒற்றைக்கல்லை எடுத்து எதிரியென்று தனக்குச் சேதமிழைத்த கோலியாத்துக்கு எறியும் குட்டிடேவிட்டுகளும் இண்டிபாட்டாக்களும் மேலோமேல்.

நீங்களெல்லாம் மார்க்ஸியப்போராளிகள்! வெட்கக்கேடு. You are nothing but an N.Ram in making.

குழைக்காட்டான் said...

/***புலியினுடையது அல்ல என்று சொல்லும் உரிமை உங்களுக்க யார் தந்தது? ****/

எடுத்தவுடன் 'புலிப்பினாமி', 'ஏகாதிபத்திய கூலி' என்று குற்றம் சுமத்தும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தார்களோ அவர்களே சபேசனுக்கும் கொடுத்திருக்கலாமல்லவா?

இரயா , உங்கள் ஆக்கங்களை அவற்றிலுள்ள குறைகளை விலத்தி தொடர்ந்து வாசிப்பவன். எனவே புலிகள் உங்களுக்க்கு மறுமொழி சொல்ல ஒருவரை நியமித்து உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் தரவேண்டியது அவர்களது கடமை என நினைப்பதை தவிருங்கள்.

அசுரன் said...

Peyarili is so overwhelmed with feelings that he didn't even find logics in his argument.

The three so called groups are the sons of soil, where as the India, The USA, The China, The Japan and whatever the country that try to influence and Intrude in to the political economic life of the Srilankan and Elam people are not belong to that soil.

Now just go back to my comment and ur comment and find where your's lacks logic.

Talkins about Imperialism onslaugh and Indian Expansaionism in Eelam was entirely different story.

and, I never had good opinion about my writtings and they are never so valuable and never so intellectual:-))... They are just Provocative , That is all. But it seems Peyarili has some positive opinon about my writtings... :-)) Thanks Peyarili...

Thats apart....

Why don't you read Rayagaran's articles (or else his book that I have mentioned in my previous Comments) and reply with strong proof that Liberation Tigers are not Bankrupt as for as Elam Liberation is considered.

Can you do that? Please let me know...


Asuran

கொழுவி said...

//புலியினுடையது அல்ல என்று சொல்லும் உரிமை உங்களுக்க யார் தந்தது?//

புலியினுடையது எனச் சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

நீங்கள் அரச உறுப்பினரா என்ற எதிர்க்கேள்வியும் ஒன்றுள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள் நண்பரே . .

2004 இலிலேயே புலிககளுடைய நிதர்சனம் பிரிவைச் சேர்ந்த சேரலாதன் நிதர்சனம்.கொம் குறித்து தெரிவித்து அதனுடைய தகவல்கள் தவறானவை எனத் தெரிவித்து தமக்கும் அவர்களுக்கும் எதுவித சம்பந்தமில்லையெனவும் அறிவித்திருந்தார். (ஒருவேளை புலிகள் ஆதரவுப் பத்திரிகைகளில் அவ் மறுப்பு அறிக்கை வெளிவந்தமையால் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். )

வருடா வருடம் ஒவ்வொரு செய்திகளுக்கும் தமது மறுப்பைப் புலிகள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களோ என்னவோ?

இதை விட நிதர்சனம் தொடர்பில் புலிகள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்? தடுத்து நிறுத்துவது உங்கள் மொழிகளில் ஜனநாயக மறுப்பாக பாசிசமாக ஆகிவிடாதா? :)

அற்புதன் said...

Note This Points too...
It is highly saddening to read some misinformation campaign against our website.

On several occasions its have also accused Nitharsanam.com of being operated by the LTTE. Its is completely untrue.

We note that LTTE's official media network bears the name of "Nidharsanam" which may have caused confusion to you.

NiTharsanam and NiDharsanam are two different Non Related Media organisations, two different Non Related Media Logo, two different Non Related Media Banners, two different Non Related Meaning, operated by two different Non Related Media groups of people for two completely different Non Related purposes.

NiTharsanam.com's one and only mission are to provide honest and reliable information to the Tamil people and Multi-ethnic societies at a pace suitable for the information era.

NITHARSANAM IS THE ONLY ONE MEDIA WEBSITE UPDATING NEWS ON ALL SRILANKAN THREE LANQUAGE.

NITHARSANAM can confirm that 'mudslinging' and vilification of journalists is a common practice across the Srilanka and that these allegations are rarely founded on truth.

Associate Editor
Ranjan
+44 788 304 0709

http://www.nitharsanam.com/?page=xinfo

குழைக்காட்டான் said...

/**I never had good opinion about my writtings and they are never so valuable and never so intellectual:-))... They are just Provocative ***//

How convenient !!!
Haa..Ha.haaa!!!

-/பெயரிலி. said...

/Peyarili is so overwhelmed with feelings that he didn't even find logics in his argument./
Is it so? thanks for the enlightment. For the courtesy, let me lend my hand ;-)
I too felt the same overwhelming feeling on you congradulatory note on Rayakaran's write up. Rather than looking into the reality and the necessities, you - like him- talk about the suffering of eelam people in length :-)
In case, you might not know, I have seen NLFT and PLFT people a lot (considering their numbers ;-)).

/The three so called groups are the sons of soil, where as the India, The USA, The China, The Japan and whatever the country that try to influence and Intrude in to the political economic life of the Srilankan and Elam people are not belong to that soil./
Pal, let me yawn first. Ok, done. Now back to you. Yea! yes!! I know Sons of soils, sons of desert and Laurel & Hardy stories. I do not want to go into all those argument for this moment; my target here is specific. My question is the fishing expedition called Indian interest in this troubled water. That's all

/Now just go back to my comment and ur comment and find where your's lacks logic.

Talking about Imperialism onslaugh and Indian Expansaionism in Eelam was entirely different story/

OOPS! sorry I did not understand the dibbirence bitveen American Imperialism and Indian Expansionism. That's put a big hole in my logic balloon. What's your point?
Let me guess the arguements
1. Imperialism, the larger evil, has to be condemned, and expansionism, the puppish imp, is ok
2. Expansionism is not imperialism
3. We, the super highway foot soldiers of real maxism are physically stationed in India, so it is ok
4. Let us find the communist/socialism/peaceful Ideal India first according to our philosopy and work programs and then we cross the sethu/strait to liberate eelam tamils (and their bortherns Lanka Sinhala) from the feudalism and imperialism of what we think. and

/and, I never had good opinion about my writtings and they are never so valuable and never so intellectual:-))... They are just Provocative , That is all. But it seems Peyarili has some positive opinon about my writtings... :-)) Thanks Peyarili.../
You are welcome, buddy (means comrade, believe me) :-)

/Thats apart....

Why don't you read Rayagaran's articles (or else his book that I have mentioned in my previous Comments) and reply with strong proof that Liberation Tigers are not Bankrupt as for as Elam Liberation is considered./

Thanks for the suggestions. Anyway For your information, as far as I know,
1. I have been reading him and about him almost for two decades,
2. I am very clear to myself about where LTTE is bankrupt in its concepts & actions,
3. I am very clear to myself why some people, who fully wished for the best of PLOTE and EROS (of course, in concepts - cowards are like that, you know ;-)) in one time have been taken a (conceptual) stand to accept some of LTTE's nationalistic goals at this moment. These people conditionally prefer the existence of the right-wing LTTE to Indian Brahmanist_spineless_treacherous, so called Leftist mafia and the illutionary comrades who work for an political equivalent of Einstien's unified theory (Sieg Heil Trosky!!) ,
4. Indian Expansionism is a form of Imperialism, and
5. What Marx said in his ....

/Can you do that? Please let me know.../

I do not have to do anything as you have said. I am ready to debate with you today on anything what you point out as I am sure I know better than you on what you are talking and what is good for eelam

Seriously, I do know and of course hesistant about the rightwing flavor and ingredients in some of the LTTE's politics and policies. However, I am ok with it to an extent as they are far and far better for eelam people than what N. Ram and his ilks, and Indian so called marxists can provide. I like reading Rayakaran, and conceptually agree with many of the things he says. [Certainly, sorry and sympathetic for what happened to him before he was leaving eelam.] However, in the reality, ONLY philosophy can not defend us; it can only help to keep ourselves feel good about ourselves in the expense of our exisistence in that island.

/Asuran/

-/peyarili.

தமிழரங்கம் said...

நிதர்சணம் டொட் கொம் புலிகளுடையாத அல்லது யாருடையாது என்று வாதிப்பதால் விடையங்கள் தலைகீழாக மாறிவிடாது. புலிகள் எதையெல்லாம் செய்கின்னரோ, அதைத் தான் நிதர்சணம் டொட் கொம் செய்கின்றது. புலிகளின் இழிவான மலிவான நடைமுறை உத்திகள் தான், நிதர்சனம் டொட் கொம். அதனால் தான் அது புலிக் குரலாக இருக்கின்றது. இதைவிட புலிக்கு வேறு குரல் வேறு விதத்தில் கிடையாது.

இதனால் புலிகளின இணையமாக இருப்பது தெளிவானது. இல்லை என்று நீங்கள் கூறுவதால், அதை பொய்யாகிவிடாது.

நிதர்சனம் டொட் கொம் தனது அறிவிப்பு ஒன்றில் தமக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று அறிவிதலை வெளியிட்டு இருந்தனர். அதனால் அது புலி அல்லாதாகிவிடாது.

இல்லை புலிகள் தான் அதை அறவித்து இருந்தாலும், அது உண்மையாகிவிடாது.

அது தனக்கு அவதூற்றை எற்படுத்தும் வகையில் ஈடுபடுகின்றது என்று நிதர்சணம் டொட் கொம் புலிகள் கருதினால், அவர்கள் அதற்கு எதிராக என்ன செய்தார்கள்?

புலிக்கு அந்த யோக்கியதை கிடையாது. எதை புலி செய்கின்றதோ, அதை நிதர்சனம் பிரதிபலிக்கின்றது.

மறுபக்கத்தில் புலிகள் மறுப்புகள் என்பது உண்மையற்றது, என்பதை உலகம் அறியும். கடந்த காலத்தில் ராஜிவ் கொலை, அனுதாரபுரத் தாக்குதல், காத்தாங்குடி பள்ளிவாசல் படுகொலை, அண்மையில் இந்தியா வள்ளம் தொடர்hபான புலி மறப்பு, அமிர்தலிங்கம் கொலை, இப்படி எத்தனை ஆயிரம் சம்பவங்களை புலிகள் மறுத்தனர். பின் அவை உண்மை என்று நிறுவப்படவில்லையா? இந்த விவாதம் புலிகளைப் பொறுத்த வரையில் அவசியமற்றது. அனைத்தும் அது ஊர் உலகம் அறிந்தது.

நிதர்சணம் டொட் கொம் செய்து போன்று இழிவான செயல்களை புலிகளின் வரலாறு முழுக்க மண்டிக் கிடக்கின்றது. எத்தனை பொது அமைப்புகள் முதல் பத்திரிகை வனொலிகள் கோயில் ஈறாக புலிகள் அபகரித்தவை பற்பல. நிதர்சணம் டொட் கொம் பிச்சை வாங்க வேணும். எத்தனை எத்தனை எத்தனையோ சம்பவங்கள்.

இதை வரலாற்றில் நிறுவ வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அந்தளவுக்கு அவை அம்பலப்பட்டு கிடக்கின்றது. நிதர்சணம் டொட் கொமைக் காட்டி புலியைப் புனிதப்படுத்த யாராலும் முடியாது.

அடுத்து அசுரன் மீதான தாக்குதல். அயல்நாட்டைச் சோந்தவர் என்ற அடையாளம் மூலம் விறண்டுவதுதால் புலிப் பாசிசம் ஜனநாயமாகி மறைந்துவிடாது.

அசுரன் கொண்டுள்ள அரசியல் நிலைபாடு சார்ந்தவாகள் இந்தியா அரசை எதிர்த்துப் போராடுபவர்கள். மனிதர்களுக்காக அவர்களின் பிரச்சனைக்காக போராடுபவர்கள். ஈழ ஆதாரவு புலி பினாமியாக குழைக்கும் பிழைப்பவாதிகள் போல், அவர்கள் தாடவைக் கண்ட அஞ்சியது கிடையாது இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை எதிர்தது பல சிறைகள் சென்றவர்கள். நீங்கள் அமைதிப்படை என்று 50 கோடியை ரூபாவை வாங்கி கொஞ்சிக் குலாவிய காலத்தில் கூட, ஆக்கிரப்பு என்று அறிவித்து எதிர்த்து போராடியவர்கள்.

ராஜிவ் கொல்லப்பட்ட நிலையில், கொல்லப்பட்ட வேண்டிய மக்கள் எதிரி தான் என்று கூறியவர்கள் அவாகள். நீங்கள் செய்த கொலை மறுத்து கிட்டு, அதை அவர்கள் (புதியஜனநாயகம்) செய்தாக குற்றம் சாட்டிய வரலாறு எம்முன் உண்டு. இங்கு புலிகள் ஆள்காட்டியாக, மறுபுறம் தாம் செயததை மற்றவன் மீது போடும் மூடிச்சுமாற்றித்தனம். நிதர்சணம் டொட் கொம் இங்கிருந்து இப்படித்தான் இந்த இழிவான பாதையில் தான் உருவாகினது. புலி வேறு நிதர்சணம் வேறுயல்ல. இதெல்லாம் மாற்ற முடியாது

அவர்கள் சர்வதேச வாதிகள். ஈராக் இருக்கட்டும், இலங்கையாகட்டும் எங்கும் அவர்கள் உங்களிடம் இருந்து மாறுபட மக்களுக்காக குரல்கொடுப்பவாகள்.

துரம்பைக் கூட எடுத்து போட முடியாதவர்கள் அரற்றுவதால் என்ன பயன் என்று கேட்பது அர்த்தமற்றது. சரி அதுவல்லாது பாறங் கல்லையே தமழ் மக்கள் மேல் போட்டு, புலிகளில் மரணித்த 20000 பேர், துரொகி என்ற புலிகள் கொன்ற 10000 மேற்பட்டவர்கள், போராட்டத்pன் பெயரில் 70000 மேற்பட்ட மக்களின் மரணம் என, இப்படி எல்லமே அர்த்தமற்றறு கிடப்பது தெரியவில்லையா? இதை மறைக்க மற்றவன் மீது குதறுவதா!

இவை எவையும் அர்த்தமற்றதாக மாறுவதை வலராறு காட்டும். இதனால் இறந்து போனவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அனைத்தையம் புலிகள் கேலிக்குரிய வகையில் அலங்கோலப்படுத்தியுள்ளனர். எது பிரயோசனமாக நீங்கள் கருதிக்கொண்டு புலம்புகின்றிர்களோ, அது பொய்மையானது என்பது வலராற்றில் இருந்து தடுத்து நிறுத்திவிட முடியாது.

கணணி சார் புரட்சி, இதை விட மேலானது. அதில் ஒரு நேர்மை உண்டு. யாரையும் எமாற்றவில்லை.

தமிழக மக்களை எதிரியாக்கிவிட்டு, தாடவுக்கு பயந்தவர்கள் என்று அலம்ர்வது அரசியல் வங்குரோத்தின் விளைவாகும்.

புலியிடம் அரசியல் இருந்தால் தானே, இவர்களிடம் அரசியல் வரும்.

-/பெயரிலி. said...

ரயாகரன்
அசுரன் போன்றவர்களைப் பற்றி அவர்களின் தளமே சொல்லுகின்றதாலே, நீங்கள் சொல்வதைக் கேட்டு இடைத்தரகர்களாக உள்வாங்கிக்கொள்ளும் அவலம் எனக்கில்லை :-)

தியாகி, துரோகி போன்ற உங்களது புலிகள் தொடர்பான கதைகளை என்னிடம் சொல்லவில்லையென்றே நம்புகிறேன். பாலசிங்கம், இரட்ணசபாபதி ஆகியோர் இறந்தபோது, நான் எழுதிய பதிவினைப் பார்த்திருப்பீர்களென நம்புகிறேன்.

ஏதோ நீங்களும் அசுரனுமேதான் தனித்து நின்று உலகத்திலே மக்கள் போராட்டத்தினைக் காக்கும் துவாரபாலகர்கள் போன்ற மாயைகள் உங்களுக்கிருந்தால், சொல்வதற்கொன்றுமில்லை. உங்கள் கருத்துகளை, கருத்தளவிலே முரண்படவும் எனக்குக் காரணமில்லை. ஆனால், எழுதிக் கிழித்ததற்கப்பால், என்னத்தினை நடைமுறையிலே பயனுள்ளதாக நீங்கள் எழுதிக்கிழிக்கும் மக்களுக்கு முன் வைத்திருக்கின்றீர்களென்று கேட்கிறேன். பதிலைச் சொல்லுங்கள்.

/அசுரன் கொண்டுள்ள அரசியல் நிலைபாடு சார்ந்தவாகள் இந்தியா அரசை எதிர்த்துப் போராடுபவர்கள். மனிதர்களுக்காக அவர்களின் பிரச்சனைக்காக போராடுபவர்கள்.

அவர்கள் சர்வதேச வாதிகள். ஈராக் இருக்கட்டும், இலங்கையாகட்டும் எங்கும் அவர்கள் உங்களிடம் இருந்து மாறுபட மக்களுக்காக குரல்கொடுப்பவாகள்./

இதுபோல, கருத்துகளைப் பேசியவர்களைப் பார்த்திருக்கிறோம், பேசியும் பார்த்திருக்கின்றோம். ஆனால், பிரச்சனையென்னவென்றால், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், ஆதிக்கவிரிப்பியல், குடியேற்றவாதம் இப்படியாக, வரிகளினாலே மட்டும் புரட்சியையென்ன ஒரு பிள்ளைப்பூச்சியைமட்டும் வென்றுவிடமுடியாதென்பதே நடைமுறை நமக்குக் காட்டியது.

அப்படியானால், முதலிலே அங்கே போராடிவிட்டு வரட்டும். அல்லது,

எனது கருத்து மிகவும் எளிமையானது. இந்தியாவின் மார்க்ஸியம்சார் சிறுகுழுக்களிலே மதிப்புண்டு (யார் கேட்டார்கள் என்றால், கிடக்கட்டும் ;-)); மார்க்ஸியப்போலிகளான CPM, CPI என்பனவற்றுக்கும் வேறெந்த இந்தியக்கட்சிக்கும் பெரிதாக எவ்வித்தியாசமுமில்லை. குறிப்பாக, இக்கட்சிகளின் பார்ப்பனிய குண்டாத்தலைமைகள் ஒழியும்வரைக்கும்.

இந்தியாவின் சிறுகுழுக்களான புரட்சிக்காரர்களின் கொள்கைகள் விருப்புக்குரியனவே; ஆனால், அவற்றினை நடைமுறையிலே எத்துணை சிறப்பாகப் பயன்படுத்தலாமென்பதைக் கவனிக்காமல், தத்துவத்துள்ளே மயிர்பிளக்கப்போனால், உங்களைப் போன்றவர்களின் NLFT, PLFT நிலையிலேதான் போய் நிற்பார்கள். (தீப்பொறி போன்ற குழுக்களுக்காவது அதற்குரிய காலத்தேவையிருந்தது) இதற்குள்ளே சர்வதேசியப்புரட்சியென்பதெல்லாம் ஆகிவரக்கூடிய காரியமில்லை. உங்கள் புத்தகத்தைப் படித்து ஈழத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டாராம். புலத்திலே குந்திக்கொண்டு களத்துநிலைமைகளுக்கு அறிக்கை விடுக்கின்றவர்களும் இவருக்கும் என்ன வித்தியாசம்?

ஈராக் குறித்து வேண்டுமானால், நானும் "முற்போக்காகவோ", "மிகமுற்போக்காகவோ", "ஒரேபோக்காகவோ", "வயிற்றுப்போக்காகவோ" எழுதி என் புரட்சிப்போராளி அரிப்பைத் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், அது நடைமுறையிலே என்னைச் சுற்றின பிரச்சனைகளைத் தீர்க்கப்போவதில்லை. ஒரே புரட்சியிலே உலகம் உய்த்துவிடுமென்றும் நான் நம்பவில்லை.

நம்பிக்கை என்பது வேறு; அதனைப் பயன்படுத்தவேண்டிய நிலைக்காக, எம்மைத் தக்கித்து நகர்த்துவதென்பது வேறு. ஸ்டாலினும் சரி, மா சேதுங்கும் சரி ஏதோ கட்டத்திலே இப்படியாக ஒட்டித்தான் போகவேண்டியிருந்தது. அதைவிட்டுவிட்டு, நடைமுறைக்குப் பயனாகாமல், தத்துவரீதியிலே நியாயங்களை வரிசைப்படுத்தி, வகுத்துக்கொண்டிருந்தால், நாளைக்கு நமது தத்துவங்களை வாசிக்கக்கூட ஆளில்லாமற்போகும்.

ஏகாதிபத்தியத்தினை எதிர்ப்பவர்கள் அவர்கள் இருக்கும் நாடுகளிலேயாவது அதற்கான துரும்பைச் செயலளவிலே எடுத்துப்போட்டாற் போதுமானது. அதைவிட்டுவிட்டு, அடுத்தவன் பிரச்சனைக்கெல்லாம் ஏகாதிப்பத்தியம் என்று வைத்தியமூலிகையும் பத்தியச்சாப்பாடும் கொடுத்துக்கொண்டிருந்தால்,.....
...கட்டியிருந்த கோவணமும் நிச்சயமில்லை.

மக்கள் போராட்டம் மக்கள் போராட்டமென்று புலிகள் ஏமாற்றுகின்றார்களென்று திட்டிக்கொண்டிருப்பவர்கள், அம்மக்கள் உங்களைப் போன்ற மக்கள்போராளிகள் எழுதுவதை வாசிக்கின்றார்களா, மக்கள் போராளிகளாகக் கருதிக்கொள்கின்றார்களா என்றாவது யோசிக்கின்றீர்களா?

அசுரன் said...

பெயரிலிய எனக்கு கொடுத்த பதில் பின்னூட்டத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும் எனது விளக்கம் தேவைப்படுகிறது.

//Talkins about Imperialism onslaugh and Indian Expansaionism in Eelam was entirely different story.
//

மேற்சொன்ன இந்த வரிகளை நான் வேறு அர்த்தத்தில் கொடுத்திருந்தேன். ஆனால் இதனை ஏதோ நான் இந்திய ஆக்கிரமிப்பையும், ஏகாதிபத்தியத்தையும் வெவ்வேறு என்று நான் கருதுவதாக நினைத்து கருத்து தெரிவித்துள்ளார் பெயரிலி.

விபு, புலி எதிர்ப்பு கும்பல் மற்றும் சிங்கள் பேரினவாதம் என்ற இலங்கை மற்றும் ஈழம் சார்ந்த மக்களின் பிரதிநிதிகள் குறித்து பேசுவதும், இலங்கையை ஆக்கிரமிக்க துடிக்கும் அமெரிக்க உள்ளிட்ட ஆக்கிரமிப்பாள்ர்கள்(இதில் இந்தியாவும் அடங்கும்) குறித்து பேசுவதும் வெவ்வேறானவை என்ற அர்த்ததிலேயே அதனை குறிப்பிட்டிருந்தேன்.

அதாவது அந்த மேற்சொன்ன வரிகளுக்கு முன்பு இந்த் பின்வரும் வரிகள் இருந்தன.
//The three so called groups are the sons of soil, where as the India, The USA, The China, The Japan and whatever the country that try to influence and Intrude in to the political economic life of the Srilankan and Elam people are not belong to that soil.
/


மற்றபடி இந்தியாவைவிட அமெரிக்க பெரிது அவனை விட இவன் பெரிது என்பது போன்ற அர்த்தத்தில் அதாவது பெயரிலி சொல்வது போன்ற் அர்த்தில் அதனை முன் வைக்கவில்லை. (ஈழம் குறித்து எனது சொற்பமான பிற வாதங்களிலும் கூட இந்த அம்சத்தில் உறுதியாக நின்று வாதிட்டுள்ளேன்)

இங்கு முன் வைக்கப்பட்டுள்ள அடிபப்டையான கேள்விகளுக்கு விமர்சனங்களுக்கோ பதில் சொல்ல வக்கற்ற பெயரிலி இது போன்ற ஒன்றிரண்டு வார்த்தை பிறழ்வுகளிலேயே தனது மொத்த அரசியல் பிழைப்பையும் வைத்திருப்பது பரிதாபமாகவே இருக்கீற்து.

கேள்விகள் கேட்டாலே ஏதோ ஒட்டுமொத்த புரட்சிக்கும் நானும், ரயாகரனும் குத்தகை எடுத்துள்ளதாக எமக்கும் சேர்த்து சிந்தித்து எழுதுகிறார் பெயரிலி. நேர்மையின் சிகரம் எனிலு ரயாகரன் பட்டியலிட்டுள்ள முந்தைய பின்னூட்டத்திற்க்காவது அவர் பதில் சொல்லியிருக்கலாம். அதனை செய்யவில்லை. தனது பதிவிலும் கூட புரளி பேசுவதை தாண்டி வேறைதையும் அவர் செய்யவில்லை.

தேசிய வெறி கூச்சலிட்டு இலங்கையின் வளங்களை, ஈழ மக்களின் வாழ்க்கை கொள்ளையிடும் இந்த கும்பல்கள் அதே கூச்சலின் ஊடாகத்தான் சில பத்து சக ஜனநாயக இயக்கங்களை அழித்து நொறுக்கினர். 80 களின் மத்தியில் முழுவதும் இப்படிப்பட்ட இணை வரலாறாகவே இருக்கின்றன. இந்தியாவை இன்று எதிர்ப்பதாக கூறும் இதே கும்பல்தான் இந்திய ஆக்கிரமிப்பை நியாயம் என்று சொல்லியவர்கள் அன்று.

முன்பொருமுறை இந்த போலி தேசியவாத செண்டிமெண்ட் கும்பல்களை புரளி பேசும் போலி தமிழ் தேசியவாதிகள் என்று விமர்சனம் செய்ததை பெயரிலியின் எதிர்வினை மீண்டும் நிரூபிக்கிறது. தர்க்க, தரவு ரீதியாக எதுவும் பேச இயலாமல் சக போராளிகளின் ரத்தத்தின், தியாகத்தின் மூலமே தமது அரசியலை புனிதப்படுத்தும் போலித்தனம். இந்த செண்டிமெண்ட் பின்புலத்திலேயே கேள்விமுறையின்றி எம்மை எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள் - 'ஒன்று நீ என்னுடன் அல்லது எனது எதிரி" என்கிற பாசிச மிரட்டல். எல்லாம் கலந்த கலவையாக பெயரிலியின் எதிர்வினை இருக்கிறது.

விபுயின் நிலைப்பாட்டை, ராணுவ மோகத்தை விமர்சித்தால் ஈழத்தின் ஆயுதம் தாங்கிய போராட்டத்தையே நாம் வெறுப்பதாக கதை கட்டுவது எந்த வகை நியாயம் என்றூ தெரியவில்லை. ஈழ விடுதலையும் விபுயும் பிரிக்க முடியாதைவை என்ற இவர்களின் குருட்டுத்தனமான நம்பிக்கை இன்று எங்கு வந்து நின்றுள்ளது என்றால் ஈழ மக்கள் சர்வதேச புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆதரவின்றி தனித்து நிற்க்கும் நிலையில் வந்து நின்றுள்ளது. ஏனெனில் விடுதலைப் புலிகள், பெயரிலி போன்றவர்களுக்கு வேண்டுமானல் புரட்சிகர இயக்கமாக மாயத் தோற்றாம் தரலாம். ஆனால் 80 களில் விபுக்கு இருந்தது போன்ற ஒரு சர்வதேச ஆத்ரவு தற்போது கிடையாது. ஈழத்தின் துயரங்கள் தமிழகத்தில் பேரலைகளை கிளப்பிய காலம் ஒன்று உண்டு. தீலீபனின் வீரத் தியாகம் எழுப்பிய உணர்ச்சி இன்றும் காவியம்தான். ஆனால் அப்படி ஒரு உணர்ச்சி பிணைப்பு இன்று இல்லாமல் செய்ததில் விபுயின் முட்டாள்தனமான எதிர்கால நோக்கற்ற ராணுவ சாகச வழியின் தோல்வியே முன்நிற்கிறது. உலகில் தேசியம் உள்ளிட்ட குறுகிய கண்ணோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எல்லாம் பாசிசமாகவோ, குறுங்குழு பய்ங்கரவாதமாகவோ(பாலஸ்தீனம் உள்ளிட்டு) சுருங்கிய மர்மம் குறித்து பரிசிலித்து கற்றுக் கொள்ளூம் பழக்கமெல்லாம் இவர்களுக்கு கிடையாது. இவர்களின் (நமதின்) எதிரி சர்வதேச நோக்கம் திட்டம் கொண்டு செயல்படும் பொழுது, இவர்கள் மட்டும் குறுகிய பிரதேசவாத நோக்கில் என்னவிதமான வெற்றியை ஈட்ட முடியும் அதுவும் உலகமய காலகட்டத்தில் என்பதற்க்கு இன்னுமொரு உதாரணமாக விபு இருக்கிறார்கள்.

துரதிருஷ்டம்தான்...

விபு யை ஈழ விடுதலையின் ஒட்டு மொத்த குத்தகைக்காரர்களாக ஏற்றுக் கொள்வதும், இதற்க்காக அது கடந்த வந்த பாதைகளையும், இன்று ஈழ மக்களுக்கு செய்து வரும் துரோகங்களையும் மறந்து விடச் சொல்கிறார் பெயரிலி. மக்களுக்கு விடுதலையை யாரும் வாங்கி தந்து விட முடியாது எனப்தை அவர் புரிந்து கொள்ளட்டும். விபுயின் வரியிடலுக்கு எதிராக ஈழத்தில் நடந்த ஈழ மக்களின்(மீனவர்கள் உள்ளிட்டு) ஸ்ட் ரைக் உள்ளிட்டவை அவரிடம் என்னவிதமான கருத்தை உருவாக்கியிருக்கும் என்றூ தெரியவில்லை. அல்லது பிராபகரனின் மகனுக்கு விசா வாங்கித் தந்த இலங்கா ஆளும் வர்க்கங்கள் என்ற சம்பவம் அவரிடம் என்னவிதமான உணர்வை உருவாக்கியிருக்கும் என்று தெரியவில்லை. விபுயின் மீதான விமர்ச்னங்களுக்கு அவர் வைக்கும் எதிர்வினைகளில் தொக்கி நிற்ப்பது வலிந்து திணிக்கப்பட்ட ஆவேசமேயன்றி வேறல்ல.

அசுரன்

அசுரன் said...

//இதுபோல, கருத்துகளைப் பேசியவர்களைப் பார்த்திருக்கிறோம், பேசியும் பார்த்திருக்கின்றோம். ஆனால், பிரச்சனையென்னவென்றால், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், ஆதிக்கவிரிப்பியல், குடியேற்றவாதம் இப்படியாக, வரிகளினாலே மட்டும் புரட்சியையென்ன ஒரு பிள்ளைப்பூச்சியைமட்டும் வென்றுவிடமுடியாதென்பதே நடைமுறை நமக்குக் காட்டியது. //


பெயரிலி மெற்சொன்னவாரு நம் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பொழுதுதான் உலகெங்கும் மேற்சொன்ன அரசியல் புரிதலுடனான புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் வெற்றி ஈட்டிக் கொண்டிருக்கின்றன. பூனை கண்னை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றதாம பெயரிலியின் நிலைமை அதனையொத்ததாக இருக்கிறது.

நேபாளத்தில் நக்சல்பாரி புரட்சி சித்தாந்தமே வெற்றி யீட்டியுள்ளது. லத்தின் அமெரிக்காவின் இன்றைய முழக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்புதானேயன்றி தேசிய- பிரதேச விடுதலையல்ல.

இஸ்லாமிய பிற்போக்கு பயங்கரவாதிகள் கூட உலக கண்ணோட்டத்துடன் ஏகாதிபத்தியம் என்று வரயறைத்து எதிர்க்கும் செயல்திட்டம் கொண்டு செயல்படும் பொழுது இங்கே ஒருவர் நம் காதில் கூச்ச நாச்சமின்றி பூ சுற்றுகிறார்.

இவர் சிலாகித்து போற்றூம் விபுக்களின் ஆட்சி பிரதேசத்தில் மக்களுக்கு என்னவிதமான விடுதலை கிடைத்துள்ளது என்று பெயரிலி சொல்லட்டும். நேபாளத்தின் புரட்சியாளர்கள் மக்கள் விடுதலையையும் நாட்டின் விடுதலையையும் பிரித்து பார்க்கவில்லை. விபு இங்கு எந்த இடத்தில் உள்ளது என்று பெயரிலியே சொல்லட்டும்.

அசுரன்

-/பெயரிலி. said...

அசுரன்,
நீங்கள் தோடம்பழத்தையும் எலுமிச்சம்பழத்தையும் கலந்து தூக்கியெறிந்து பிடித்து விளையாடுகிறீர்கள்.

இயங்கும் நக்ஸல்பாரிகளுக்கு ஆதரவாகப் பேசப்போய்த்தான் சிங்களபேரினவாதக்கட்சியான ஜேவிபியினை இந்தியாவுக்குச் சகோதர மார்க்ஸியக்கட்சியென்று சொல்லி வரவேற்ற மரபுமார்க்ஸியக்கட்சியாள் 'சந்திப்பு'டன் பெரிய சண்டை வந்தது (செல்வநாயகி சுகுமாரனின் ஆனந்தவிகடன் கட்டுரையை எடுத்துப்போட்ட பதிவில்). அதனால், இயங்கும் மார்க்ஸியம் & மக்கள் தழுவிய நக்ஸல்பாரிகளுக்கு - சொல்லப்போனால்- நான் ஆதரவாகத்தான் வக்காலத்து வாங்குகிறேன். அதை முதலிலே நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் CPM, CPI போலிகளை அதேநேரத்திலே முறைத்துப் பார்க்கிறேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

இப்போது, நேபாளநக்ஸல்பாரிகள் பற்றி: நீங்கள் சொல்லும் அவர்களின் புரட்சிகர வெற்றியை அண்மைக்காலம்வரை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதுவும் முழுமையான புரட்சிகர ஆட்சியாக வரமுடியாமல், ஓரளவுக்குச் சமரசம் செய்தவண்ணம் ஏன் ஆட்சியமைத்தார்கள் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். மேலும், ஆட்சியிலே அமர்ந்தபின்னர், அவர்களின்ச் செயற்பாடுகள் எத்துணை வெற்றியாகவிருந்தன என்பதையும் காண்க. சரி அவற்றைப் பின்னைய விளைவுகளாக விடுவோம். அவர்களின் நக்ஸல்பாரிவகைப்போராட்டம் வெற்றிபெறவோ தோன்றவோ காரணமாகவிருந்த சூழலைக் காண்போமா? இந்தியாவிலும் நக்ஸல்பாரி இயக்கங்கள் காலூன்றியிருக்கும் இடங்களிலே கிட்டத்தட்ட அப்படியான சூழ்நிலைதான். அவர்கள் தனிநாட்டுக்காகப் போராடுவதில்லை. அவ்வகைப்போராட்டங்கள், சமூகநிலையிலே ஒரு (கீழ்த்)தளத்திலேயிருக்கும் மக்கள் இன்னொரு (மேலுள்ள) தளத்திலேயிருக்கும் சிறுபான்மையரை எதிர்த்துப் போராடும் போராட்டம். அதற்கு மக்கள் போராட்டமாக, ஏகாதிபத்தியம் முதல் பொருளாதாரம் சார்ந்த மார்க்ஸியக்கோட்பாடுகள் வென்றுவிடக் கோலாகிறன. ஆனால், அதேபோராட்டத்தை அதே அடிப்படையிலே சென்னை, மும்பாய், காலிகட் சேரிப்புறங்களிலே நகரின் செல்வாக்கான மக்களுக்கெதிராக நடத்திக் காட்டி வெல்வீர்களா? ஈழம்-ஸ்ரீலங்கா என்பவறிடையே கூர்மையடைந்திருக்கும் பிரச்சனையிலே பொருளாதாரம், இரண்டாம் நிலைக்குப் பின்னாலும் தள்ளப்பட்டிருக்கின்றது; இருப்பு என்பது மொழி, இனம் சார்ந்த சிக்கலாகத்தான் இன்றைய நிலையிலே முதன்மைக்கூற்றாகவிருக்கின்றது. இரயாகரனின் குறுந்தேசியவாதம், ஏகாதிபத்தியவாதம் எல்லாம் மார்க்ஸியத்திலே குழைத்துக்கொடுத்தாலும் எடுபடவாய்ப்பில்லை. எண்பதுகளின் தொடக்கத்திலே, இப்படியான கோட்பாட்டின் அடிப்படையிலான மார்க்ஸிய இயக்கங்கள் போராட்டத்தை எடுத்துச்செல்ல வாய்ப்பினைக் கொண்டிருந்தன. ஆனால், அவை (இரயாகரன் சார்ந்திருந்த பேச்சியக்கம் உட்பட) தம் தலையிலேயே மண்ணைப்போட்டுக்கொண்டு, மக்களிடமிருந்து அந்நியமாகிவிட்டன. போரிலேயே பிறந்த அடுத்த தலைமுறையிடம் எங்கோ நகர்ந்த போரின் மையத்திலே போய், ஏகாதிபத்தியம் என்பதைச் சொல்ல எதுவிதமான பயனுமேற்படப்போவதில்லை இரயாகரன் இன்று (09/10/2007) இட்டிருக்கும் பதிவைப் பாருங்கள்; புலிகளிலே அவர் ஆண்டுகளுக்கு முன்னாலே அவருக்கு இன்னல் வந்தபின்னுங்கூட என்ன நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் என்று. இன்று எங்கே புலிகள் குறித்து நகர்ந்திருக்கின்றார்?
நிற்க; புரட்சிகரயுத்தம் வெற்றியென்று சில உதாரணங்களைக் காட்டுகிறீர்கள்; தோல்வியடைந்த இடங்களும் மார்க்ஸியம் பயன்படுத்திய வகையிலே பின்னடைவு கொண்ட இடங்களையும் (சீனா, இரஷியா/சோவியத்/கிழக்கு ஐரோப்பா, எதியோப்பியா, வியட்நாம், ஓரளவுக்கு; சீனாவிலே நான்காண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். அதன் நிலை எனக்கு ஓரளவுக்கு அனுபவமாகத் தெரியும்) பாருங்கள்.

அடுத்ததாக, தென்னமரிக்க அண்மைய அமெரிக்க எதிர்ப்பலையினை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை மறுக்கமுடியாது. ஆனால், தென்னமரிக்காவின் எதிர்ப்பலையைத் தனியே மார்க்ஸியத்தின் வெற்றி என்று கொள்ளமுடியாது. தென்னமரிக்காவிலே மண்ணின்மைந்தர்கள் வெற்றிபெறுவதும் அவர்கள் உரம்பெறுவதும் ஓர் உந்துதலாகும். (ஈழத்தின் உந்துதலும் அதுவே). அதேநேரத்திலே, வெனிஸூலாவிலே, இடதுசாரி சாவாஸும் எண்ணெய்நிறுவனத்தொழிலாளிகளும் முட்டிக்கொண்டிருந்ததைவைத்துக்கொண்டு தொழிலாளர்களின் சார்பினைக் கொள்வீர்களா அல்லது சாவாசினுடையதா?

சுருக்கமாக என்ன சொல்லவருகின்றேன் என்றால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதும் எனக்கும் உண்டு; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலேயிருக்கும். ஆனால், அதனை முன்வைத்துப் போராட்டம் நடத்துவதற்கு அதுவே எம்மை முதன்மையாகப் பாதிப்பதாகவிருக்கவேண்டும். எந்தவொரு தத்துவத்தினையும் பயன்படுத்த, அதற்கான சூழலும் தேவையுமிருக்கவேண்டும். ஈழத்தைப் பொறுத்தமட்டிலே இரயாகரன் தோற்பது அதனாலேதான்; மேலும், போதாக்குறைக்கு, அவர் தியாகு சொல்வதுபோல, மார்க்ஸியம் என்பதே நடைமுறைக்கான பேச்சுத்தானே என்றிருக்கின்றார். அந்த நடைமுறைக்கொவ்வாநிலையைத்தான் நான் சுட்டினேனேயொழிய வேறில்லை.

நான் எழுதியதை நன்றாக வாசித்துப் பாருங்கள்; சொற்கள்மட்டுமே ஆயுதமாக வென்றுவிடமுடியாது என்றுதான் சொல்கிறேனேயொழிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு/எதிர்ப்பு இல்லை/தேவையில்லை என்றல்ல.

விடுதலைபுலிகளின் பிரதேசத்திலேயும் நேபாளத்திலேயும் ஒத்துப்பார்க்க, இரண்டும் ஒரே வகைப்பட்ட தேவையோ, போராட்டமோ, செயற்றிட்டமோ இல்லை.

அசுரன் said...

பெயரிலி,

விபுயிடம் எமக்கு உள்ள முக்கியமான விமர்சனம் நீங்களே குறிப்பிடுகின்ற ஏகாதிபத்தியம் குறித்த பாரிய புரிதலும் அது ஈழப் பிரச்சினையில் ஆற்றும் பாத்திரம் குறித்த புரிதலும். இதனை உள்ளிட்ட ஈழ விடுதலைக்கான செயல்தந்திரமும் இல்லாமயையே.

மேலும் நான் இங்கு வலியுறுத்தியது மார்க்ஸியம் சாராத போராட்டம் என்ற அம்சத்தையல்ல மாறாக ஏகாதிபத்தியம் முதன்மை எதிரிகளில் ஒன்றூ என்ற புரிதல் இல்லாததையே ஆகும்.

இன்று உலகின் எந்தவொரு பிரச்சினையும் விரும்பியோ விரும்பாவிடிலோ அது ஏகாதிபத்திய நடவடிக்கைகளுடன் பின்னி பிணைந்துள்ளது. ஈழமும் அப்படித்தான். ஈழ விடுதலை ஏகா எதிர்ப்பின்றி சாத்தியமில்லை. இதன சமீபத்திய விபுக்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை சொல்கின்றன.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் இது வரை மிகத் தெளிவாக மக்களாட்சி தத்துவம் அல்லது இன்றைய காலகட்டத்திற்க்கான புதிய ஜனநாயக புரட்சியின் பாதையிலேயெ சென்று வருகிறார்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். புதிய ஜனநாயக புரட்சி என்பது பிற்போக்கு ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான கூட்டாட்சியாகும்.

//நான் எழுதியதை நன்றாக வாசித்துப் பாருங்கள்; சொற்கள்மட்டுமே ஆயுதமாக வென்றுவிடமுடியாது என்றுதான் சொல்கிறேனேயொழிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு/எதிர்ப்பு இல்லை/தேவையில்லை என்றல்ல.//

நீங்கள் ஏகா எதிர்ப்பு தேவை என்கிறீர்கள். அதனை உள்ளிட்ட செயல்தந்திரமே வெற்றி பெறும் என்ற அர்த்திலேயே இதனை சொல்கிறீர்கள் என்று கருதுகிறேன். ஆனால் விபுகள் ஏகாவிடம் அல்லவா நட்பு பாராட்ட விரும்பி வேண்டுகிறார்கள்?

மறைந்த பாலசிங்கம் விடுதலையடைந்த ஈழத்தின் பொருளாதாரம் உறுதியாக உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரம் என்றே கூறினார் அல்லவா?

இதனைத்தான் இந்த சமூக விஞ்ஞான பார்வையற்ற விபுயின் செயல்தந்திரத்தின் விளைவுகளைத்தான் விமர்சிக்கிறோம்.

கம்யுனிஸம் தோல்வியடைந்தது என்பது குறித்த உங்களது கருத்தில் முற்றிலும் மாறுபடுகிறேன். இது குறித்து சில பத்து பதிவுகள் விரிவாக ஓரளவு சராசரி ஆட்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாக அசுரனில் இட்டுள்ளேன். வாய்ப்பிருந்தால் படித்து பார்க்கவும் விமர்சிக்கவும்.

அசுரன்

அசுரன் said...

///
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதும் எனக்கும் உண்டு; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலேயிருக்கும். ஆனால், அதனை முன்வைத்துப் போராட்டம் நடத்துவதற்கு அதுவே எம்மை முதன்மையாகப் பாதிப்பதாகவிருக்கவேண்டும். எந்தவொரு தத்துவத்தினையும் பயன்படுத்த, அதற்கான சூழலும் தேவையுமிருக்கவேண்டும். ஈழத்தைப் பொறுத்தமட்டிலே இரயாகரன் தோற்பது அதனாலேதான்; மேலும், போதாக்குறைக்கு, அவர் தியாகு சொல்வதுபோல, மார்க்ஸியம் என்பதே நடைமுறைக்கான பேச்சுத்தானே என்றிருக்கின்றார். அந்த நடைமுறைக்கொவ்வாநிலையைத்தான் நான் சுட்டினேனேயொழிய வேறில்லை.
//

ஏற்கனவே எனது முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது போல, ஏகா எப்போதுமே ஒவ்வொரு பிரதேசத்தின் பிற்போக்கு கும்பல்களுடன் இணைந்தே செயலாற்றுகின்றன. ஒவ்வொரு பகுதியளவிலான முரன்பாடுகளையும் தனது சுரண்டலை மறைக்கும் கேடயமாக ஏகா பயன்படுத்திக் கொள்கிறது. இதனை இன வெறி ரத்த சக்தியில் பிறண்டு கிடக்கும் இன்றைய ஆப்பிரிக்கா முதல் உலகின் பல்வேறு பகுதிகளீலும் ஏகாவால் கொம்பு சீவிவிடப்படும் முரன்பாடுகள் அனைத்தும் நமக்கு உணர்த்துகிறது. இங்கு இந்தியாவில் கூட அரை நிலபிரபுத்துவ சாதிய உற்பத்தி முறை ஏகாவின் சுரண்டல் தேவைக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ள வேளையிலே சாதி ஒழிப்புதான் பிரதானம் என்று ஏகா எதிர்ப்பு தேச விடுதலைப் போரை முற்றிலும் கை கழுவிய பெரியாரிய பார்வையும் இந்த அம்சத்திலே விமர்சனம் செய்ய்த் தகுதியானதே(பெரியார் திராவிட கழகத்தார் ஏகா எதிர்ப்பின் தேவையை சமீப காலங்களீல் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது, குறைந்த பட்சம் அதன் கீழ் மட்ட உறுப்பினர்கள்)(இதனை ஒரு விவாதமாக செய்ய இங்கு இயலாது.)

லங்காவோ வேறு இடமோ அங்குள்ள பிரதான முரன்பாடுகளுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட வரலாற்று பின்புலம் உண்டு இதை மறுக்கவில்லை ஆனால் இன்று அந்த முரன்பாடுகள் நிலவி வேரூண்றி நிற்பதன் காரணம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் தேவைதானேயன்றி வேறல்ல. இது ஈழம் முதல் அப்கானிஸ்தான் ஆப்பிரிக்கா வரை எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.

லங்காவிலும் கூட விபுக்களுக்கு 'ஆக்கிரமிப்பு வெறி கொண்ட' இந்தியா முன்பு உதவி செய்ததில் ஈழ விடுதலை குறித்த எண்ணமல்ல மாறாக ஈழம் இந்தியாவின் எதிர்கால அடிமையாகும் என்ற கனவே காரணமாக இருந்தது என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். சமீபத்திய சமாதான பேச்சுவார்த்தை என்பதும் கூட உண்மையில் ஈழ விடுதலையை பலி கேட்ட கட்ட பஞ்சாயத்துதான் என்பதையும் மறுக்க மாட்டீர்கள் என்றூ நம்புகிறேன்.

இப்படி சொல்வதின் அர்த்தம் லங்கா இன வெறி கும்ப்லை எதிர்ப்பதை பின்னுக்கு தள்ளுங்கள் என்று அர்த்தமல்ல, மாறாக லங்கா இன வெறி கும்பல் எந்த வகையிலெல்லாம் ஏகா வின் அடியாள் படையாக இருக்கிறது என்பதையும், தமிழர் விரோத மனபான்மையை, இன வெறயை஢ ஊட்டி லங்கா மக்களை அது ஏமாற்றி வருவதையும், உலக ஜனநாயக புரட்சிகர ச்கதிகளுடன் ஈழ விடுதலைக்கு உள்ள பொது நோக்கங்களையும் விரிவாக முன் வைத்தும் ஈழ மக்களை அரசியல் ரீதியாக ஆயுத பானியாக்குகிற, சர்வதேச சமூகத்தை, லங்கா ஜனநாயக சக்திகளை ஈழ விடுதலைக்காக அணி திரட்டுகின்ற ஒரு நடைமுறை கொண்டுள்ளதாக ஏன் விபுவால் செய்லபட இயலவில்லை? உலக முழுவதும் இது போன்ற நடைமுறை கொண்ட பல புரட்சிகள் உள்ளன. அவற்ற்லிருந்து விபுக்கள் கற்றுக் கொண்டது கொரில்லா தந்திரங்களை மட்டும்தானா? விபுக்களால் தம்மை புணரமைப்பது சாத்தியமா? இந்த ஒரு காரணத்தினாலேயே ஈழ விடுதலை என்பது விபுக்கள் ஈழ அரங்கிலிருந்து வெளியேறினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையிலே தற்போதைய நிலைமை உள்ளது என்று புரிந்து கொள்ள நம்மை தள்ளுகிறது.


உண்மையில் நடைமுறைக்கோவ்வாத செய்லமுறையை கொண்டுள்ள புலிகளின் செயல்தந்திரமே இன்றைய இந்த அவல நிலைக்குக் காரணம். புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களின் உணவுக்காக உண்ணாவிரதம் இருந்தது தமிழகத்தில் என்னவிதமான உணர்வலையை உருவாக்கியது? ஏன் ஈழம் இன்று தமிழ் மக்களை பாதிப்பதில்லை. ஈழத்தின் துயரங்கள் அனைத்தும் விபுயின் ராணுவ சாகச சவடால்களின் உரத்த மொழியில் கறைந்து காணமல் போவது ஏன் உங்களுக்கு உறுத்தவில்லை. ஈழத்தின் துயரமல்ல மாறாக விபுயின் சவடால் அரசியலே பெரும் விவாதப் பொருளாக இருப்பது யாருடைய தவறீனால் விளைந்தது? உலகம் ஈழத்தின் படுகொலைக்களுக்காக ஏன் ஒரு சின்ன சலனத்தைக்கூட வெளிக்காட்டவில்லை? இந்த ரசாயன மாற்றத்தின் காரணம் என்ன? சர்வதேச மக்களின் ஆதரவின்றி ஈழம் விடுதலையடைந்து விடுமா? அது சாத்தியமா? ஈழத்தின் விடுதலை என்பது ஈழ மக்களை மட்டுமல்ல உலக மக்களை ஈழ விடுதலைக்கு ஆதரவாக வென்றெடுப்பதுடன் இணைந்துள்ளதை மறுந்து விடாதீர்கள்.

ரயாகரன் வெறுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்றூ அவரை விமர்சிப்பதில் தவறில்லை ஆனால் அப்படிச் சொல்லும் முன்பு ஈழத்தில் பாசிச நடைமுறைகளை கைகொண்டுள்ள புலிகளையல்லவா நாம் முதற்கண் விமர்சிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு அல்லவா இரயாகரனின் நடைமூறைகளை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது? ரயாகரன் இது குறித்து அவர் மீது வைக்கப்பட்ட இதே விதமான மயூரனின் வ்஢மர்சனத்திற்க்கு சரியான அம்சத்தில் பதில் தெரிவித்துள்ளார். அவர் தனக்கு வரலாறு வழங்கிய ஒரு குறுகிய தளத்திலிருந்து தனது கடமைகளை செய்து வருகிறார் என்றே நாம் கருத இடமுள்ளது.

அசுரன்

thiagu1973 said...

தோழர் அசுரன் அருமை அருமை உங்கள் கட்டுரை ,

மேலும் பெயரிலி நடைமுறை மார்க்சியம் எண்டு எதோ கதைத்து கொண்டு இருக்கிறார் .

அது என்னவெண்டு கொஞ்சம் விசாரிச்சு சொன்னால் . அந்த நடைமுறை மார்க்சியத்தை நாமும் தமிழ் நாட்டில் பயன்படுத்தலாமே.

மேலும் ஏகாதிபத்தியம் என்பதை தோழர் இரயாகரன் அல்ல லெனின் கண்டறிந்து சொன்னார் என்பதை சொல்லவும் நான் மிகுந்த பிரயாசையோடு முயன்றேன் .

thiagu1973 said...

//இராயகரனைத்தான் விடுங்கள்; அவரது கட்டுரைகள் பிற்காலத்திலே ஸ்ரீலங்கா/ஈழ அரசியல் ஆராய்ச்சிமாணவர்களுக்காவது புலிசார்வலதுசாரி, புலியெதிர்ப்புவலதுசாரிசாராமல் அரசியல்நிகழ்வுகளுக்கான பதிவுகளாகப் பயன்படலாம். உங்களைப் போன்றவர்கள் என்ன பயனாவார்கள்?
//

அசுரனது பதிவுகள் எதற்கு பயன் படும் என நீங்கள் முடிவு செய்ய கூடாது பெயரிலி .


அசுரன் ரயாகரனின் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு ஒரு கணிப்பு வந்தார் என்று தானே தாங்கள் குதிக்கிறீர்கள் .

நீங்கள் ஏதாச்சும் புத்தகம் எழுதி இருந்தால் கொடுங்கள் வாசிப்போம்.

இயங்கியலை ஆய்வு செய்ய ஹெகலை படித்து
பொருள் முதல்வாதத்தை அறிய பயர்பாக்கை படித்து உலகம் பூரா சுத்தி வருவதற்க்கு பதில்

இயங்கியல் பொருள்முதல் வாதம் இதை ஒட்டுக்க உணர மார்க்ஸ்-எங்கெல்சை படிச்சால் போதும்

எதுக்குங்க ஒரே சக்கரத்தை இரண்டு முறை கண்டு பிடிக்கோணும்.

அம்மாதிரி இருக்கிற நஞ்சான் குஞ்சான் எழுத்தாளர்களின் ஈழம் பத்திய பதிவுகள் எல்லாத்தையும் படிச்சு ஈழத்தை புரிந்து கொள்வதை விட

நேரா இரயாகரனை படிச்சு உண்ரலாம் எனும் முடிவுக்கு அசுரன் வந்து இருக்கலாம்
அதற்கு காரணம் அசுரன்னின் தப்பு அல்ல ,

மாறாக சரியான தகவுகள் இல்லாமலும்
ஒரு சார்பாகவும் எழுதபட்டுள்ள ஈழ நூல்கள் தானெ ..

இவர் இதை படிக்கனும் அவர் அதை படிக்கனும் என்று நீங்களாகவே உக்கார்ந்து எப்படி சொல்லமுடியும் பெயரிலி தமாஸால்ல இருக்கு உங்கள்
போக்கு.

அவரது கருத்துக்கள் அந்த புத்தகத்தின் அடிப்படையில் இருந்தால் அதை குறித்து அதன் ஓட்டைகள் உங்களுக்கு தெரிந்தால் அதை குறித்தும் விவாதிக்காமல்

இந்தியாவில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி மாதிரி .

தீர்ப்பு வழங்க கிளம்பிடாதீங்கோ.

வரட்டா

தமிழரங்கம் said...

1."ரயாகரன் வெறுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவரை விமர்சிப்பதில் தவறில்லை" என்ற விடையத்தில், பெயரிலி கூறுவது போல் நான் பேசுவதாக வைத்துக்கொள்வோம். ஏன் கணணிக்கு முன் அமாந்து புரட்சி பேசுவதாகவும் கூட வைத்துக் கொள்வோம். இப்படி எதுக்கும் உதவாது என்றும் எடுப்போம். அல்லது புறம்போக்கு என்று வைத்தக்கொள்வோம்.

நடைமுறை பற்றி பேசும் நீங்கள், நான் புலியல்ல என்று சொல்லும் நீங்கள், எப்படி நீங்கள் மக்கள் புரட்சியை செய்கின்றீர்கள். அதைச் சொல்லுங்கள். "புலியல்லாத நீங்கள்" மக்களுகாக உண்மையாக உழைத்தல், நானகிய இரயாகரன் உங்களுடன் நடைமுறையில் (அது நீங்கள் கதைக்கும் கணணியாக இருந்தாலும் சரி) வேலை செய்யத் தயாரகவே உள்ளேன்.

2.நடைமுறைக்கு அப்பால் இயங்குவதாக எடுத்தால், ஒரு எழுத்தளான் அல்லது விமர்சகர் என்று எடுங்களேன். இதைச் செய்யக் கூடாதா? அல்லது எப்படி செய்யவேணும்

பி.இரயாகரன்

அசுரன் said...

//ரயாகரன் வெறுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்றூ அவரை விமர்சிப்பதில் தவறில்லை //

I mean to say that anybody has the right to criticise anybody.

I didn't mean ரயாகரன் வெறுமே பேசிக் கொண்டிருக்கிறார்.

But UNfortunately the sentence formation gives that meaning too.

I am terribly feel sorry about that.

Asuran

தமிழரங்கம் said...

இரயாகரன் செய்யக்கூடிய நடைமுறை இதில் எதுவாய் இருக்கக் கூடும் என்று யாராவது சுட்டிக்காட்ட முடியுமா ? இயங்கங்கூடிய தளங்கள் யாவை ?

1. விடுதலைப்புலிகளுடன் சேர்ந்தியங்குவது – கதை கந்தல்
2. இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களோடு சேர்ந்தியங்குவது - துரோகி
3. இந்தியப் பிராந்திய மேலாதிக்க ஆதரவுடைய குழுக்கள் நபர்களுடன் தளம் அமைப்பது – கைக்கூலி
4. ஏகாதிபத்திய சார்புநிலை கொண்ட அணிகளுடன் ”மனிதஉரிமை” அமைப்புக்களுடன் NGO களுடன் இயங்குவது – எதிர்ப்புரட்சியாளன்
5. மத அடிப்படையுடைய ”மனிதவுரிமை” அமைப்புக்களுடன் சேர்ந்தியங்குவது – அடிப்படை மதவாதி சீர்திருத்தவாதி
6. இந்த எல்லாத்தளத்திற்குள்ளும் தன்னை நுழைப்பது. பிழைப்புவாதி
7. வாயை மூடிக் கொண்டு தன் சோலியைப் பார்த்துக் கொண்டு வாழாவிருப்பது - சுயநலவாதி

இவற்றைத் தவிர இடைவிடாது போராடிப் பெற்றிருக்கும் இந்த சிறிய தளத்திற்குள்ளும் எழுதுவதையும் கைவிட வேண்டுமென்றா கோருகின்றீர்கள்.

சிறி

தமிழரங்கம் said...

அசுரன் உங்கள் குறித்து அவை எழுதப்படவில்லை.
பெயரிலியை நோக்கி அவை கேட்கப்பட்டது.
சிறி என்பவர் ஈமெயில் மூலம் அனுப்பியது பெயரிலியை நோக்கி கோருகின்றது.

thiagu1973 said...

// mean to say that anybody has the right to criticise anybody.

I didn't mean ரயாகரன் வெறுமே பேசிக் கொண்டிருக்கிறார்.

But UNfortunately the sentence formation gives that meaning too.

I am terribly feel sorry about that.

Asuran
//

தோழர் asuran

அவர் உங்களை எழுதவில்லை ,

ஆனால் பார்த்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது .

ஆனால் அடுத்த பாராவில்

//நடைமுறை பற்றி பேசும் நீங்கள், நான் புலியல்ல என்று சொல்லும் நீங்கள், எப்படி நீங்கள் மக்கள் புரட்சியை செய்கின்றீர்கள். அதைச் சொல்லுங்கள். "புலியல்லாத நீங்கள்" மக்களுகாக உண்மையாக உழைத்தல், நானகிய இரயாகரன் உங்களுடன் நடைமுறையில் (அது நீங்கள் கதைக்கும் கணணியாக இருந்தாலும் சரி) வேலை செய்யத் தயாரகவே உள்ளேன்.
//

இது பெயரிலியை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விதான் என தெரிந்தது.


தோழர் இரயாகரன் இனிமேல் பெயர் போட்டு கேள்வி கேளுங்கள் ஏனெனில்

அவரது வார்த்தைகளை எடுத்து இன்னொருவரை கேள்வி கேட்பதால் தான் இந்த புரிதல் தவறு நடந்தது .

நன்றி

thiagu1973 said...

//இவற்றைத் தவிர இடைவிடாது போராடிப் பெற்றிருக்கும் இந்த சிறிய தளத்திற்குள்ளும் எழுதுவதையும் கைவிட வேண்டுமென்றா கோருகின்றீர்கள்.
//

சிறி

அவர்கள் இரயாகரனை நோக்கி நீட்டும்

இதை இதை மட்டுமே சொல்லமுடியும் .

ஆனால் ரயாகரனும் துப்பாக்கி தூக்கி போராடும் ஒரு நிலை அங்கு உருவாக்கப்படவில்லை என்பதற்க்கு
புலிகள் தான் காரணம் என்றவிசயத்தை

வசதியாக மறந்து .

சரியாக இருக்கிறது சாட்டை அடியாக இருக்கிறது உங்கள் கேள்பி

இதை ஒரு விவாதமாக பெயரிலி தொடரனும் என கேட்டு கொள்கிறேன் .

இதற்கு பதில் அளிப்பதன் மூலம்

-/பெயரிலி. said...

இரயாகரன்/அசுரன்/தியாகு/சிறி

நண்பர்களே நாலுநாட்கள் இணையப்பக்கம் குந்தி, சொந்தவாழ்க்கைப்போராட்டம் துண்டாகிப்போச்சு. சில நாட்கள் தவணை தாருங்கள். வந்து பதில் எழுதுகிறேன்.

அதற்குமுன்னால்,

மூன்று வசனங்கள் சிறி என்பவருக்கு:

/இவற்றைத் தவிர இடைவிடாது போராடிப் பெற்றிருக்கும் இந்த சிறிய தளத்திற்குள்ளும் எழுதுவதையும் கைவிட வேண்டுமென்றா கோருகின்றீர்கள்/ - சிறி

இல்லை; அப்படி எங்காவது ஒரு வரி சொல்லியிருக்கின்றேனா என்று பாருங்கள். என்னைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எனதாக்காதீர்கள். இரயாகரனைப் பற்றி எப்படியெல்லாம் குற்றஞ் சாட்டிப் பார்க்கலாமென்று அவருக்கு ஆதரவாகச் சொல்லும் நீங்கள், அவரோ அவரைச் சார்ந்த தோழர்களோ என்னைப் போன்றவர்களை புலிப்பாசிசப்பினாமிமாபியா என்று அடைப்பது பற்றி ஒரு வரியும் சொல்லாதது வியப்பு அளிக்..................கவில்லை.


சில வசனங்கள் இராயகரனுக்கு:

தமிழ்மணம் என்பது ஈழத்தவர் அல்லாதோர் நடத்தும் மாற்றுக்கருத்துகளை அனுமதிக்கும் வாய்ப்புள்ள தளம் என்று சொல்லியிருக்கின்றீர்கள். தமிழ்மணம் ஒரு தளமல்ல, திரட்ட அனுமதி தரப்பட்ட அனைத்துவலைப்பூக்கருத்துகளையும் அளவுமீறிய தனிநபர்தாக்குதலாக இல்லாதவிடத்து திரட்டிக்கொள்ளும் திரட்டிமட்டுமே என்பது இங்கே சுட்டவேண்டிய முதலாவது விடயம். அதிலே ஈழத்தினைச் சாராத தமிழர்கள் நடத்துவதால் மட்டுமே அவ்வாறிருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியல்லயென்பதைக் தமிழ்மணத்தின் தாயமைப்பின் வலைப்பக்கத்தினைப் பார்த்தால், புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன். கருத்துச்சுதந்திரத்தின் காவலர்கள் நீங்களும் உங்கள் நண்பர்களும் மட்டுமல்ல - மார்க்ஸியத்தின் வழிக்குப் பந்தம் தாங்கும் ஆட்களும் நீங்கள் மட்டுமேயல்ல என்பதைப்போல.

நன்றி.

தமிழரங்கம் said...

பெயரிலிக்கு
விவாதமே தமிழ் மணத்தை ஈழத்தமிழர் நடத்தினால் என்ன நடக்கும் என்பது தான். தமிழ் மணம் பற்றி விவாதத்தை இதற்கள் நான் தொடர விரும்பலில்லை

-/பெயரிலி. said...

/ தமிழ் மணம் பற்றி விவாதத்தை இதற்கள் நான் தொடர விரும்பலில்லை/

1000% ஒத்துப்போகிறேன். நீங்கள் ஈழத்தமிழர் நடத்தாத தமிழ்மணம் பற்றி எழுதியபோது, அன்றே நானும் தமிழ்மணம் பற்றி இதற்குள்ளே இழுக்காததற்குக் காரணமே அதுதான்.

/விவாதமே தமிழ் மணத்தை ஈழத்தமிழர் நடத்தினால் என்ன நடக்கும் என்பது தான்./

நீங்கள் நான் தமிழ்மணத்தின் தாயமைப்பின் அங்கத்தவர் பக்கத்தினைச் சுட்டிக்காட்டியதைத் தவறாக எண்ணிக்கொண்டீர்களென எண்ணுகிறேன். அதிலே ஈழத்தமிழனுமிருக்கின்றான் என்பதை (மிகவும் தயக்கத்துடன்) சுட்டிக்காட்டமட்டுமே.

தமிழரங்கம் said...

இந்த விவாததுக்கு அப்பால் எந்த கருத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த வகையில் ஈழநாதன் பதிவு ஒன்று அனுமதிக்கப்படவில்லை. என் பற்றிய அவரின் இச்த கேள்விக்கு நிச்சயமாக சான் பின்னால பதிலளிப்பேன்.

பாதை said...

பெயரிலி அவர்களே

நீங்கள் இட்ட இந்தப் பின்னூட்டத்தில் தொக்கு நிற்பது என்ன

//அவரவர் அரிப்பினைத் தீர்க்க மார்க்ஸ் தொடக்கம் மண்டைக்காடுவரைக்கும் மயிர்பிளந்து அலட்டுவீர்கள். ஆனால், மனுசனுக்கு ஒரு பிரயோசனமுமில்லை. நிதர்சனம்.கொம் நடத்தும் கூட்டத்தின் அரைலூசுத்தனத்துக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை உங்களதும் இராயகரனினதும் கணிசார்மக்கள்புரட்சி.

நடைமுறையிலே உள்ள பிரச்சனைகளுக்குத் துரும்பைக்கூட எடுத்துப்போடமுடியாதவர்கள், தொடர்ந்து வழவழவென்று அரற்றுவதால் என்ன பயனாகப்போகிறது? //

//அவரோ அவரைச் சார்ந்த தோழர்களோ என்னைப் போன்றவர்களை புலிப்பாசிசப்பினாமிமாபியா என்று அடைப்பது பற்றி ஒரு வரியும் சொல்லாதது வியப்பு அளிக்..................கவில்லை.//




தமிழ் மக்களின் விடுதலைக்கு பாதகமான தவறான போக்குகளையும் அவை எவ்வகைப்பட்டனவாயினும் சரி எந்தத் தரப்பினரால் இழைக்கப்படுவதாயினும் சரி புலிகள் உள்ளீடாய் அவற்றை நேர்மை நின்று ஈவிரக்கமின்றி பாரபட்சமின்றி அக்குவேறு ஆணிவேறாய் துணிந்து நின்று (தனிப்பதி போட்டாகிலும் ) காட்ட சாட்டமாய் விமர்சிப்பீர்களாயின் காலம் உங்களை வேறுவிதமாய்க் கணித்துக் கொள்ளும்.

சிறி