தமிழ் அரங்கம்

Sunday, February 3, 2008

தமிழ்மணி என்னும் பார்ப்பனமணி

பி.இரயாகரன்
03.02.2008

பார்ப்பனியம் என்பது அறிவால் நிலைநாட்டப்பட்டதல்ல. சூழ்ச்சியால், சதியால், வன்முறை கொண்ட அதிகாரத்தால் தான், சமூகத்தை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட பார்ப்பனியம் தான், தமிழ்மணத்தில் பல வேடங்களில், பல பார்ப்பனிய இடுகைகளைப் போட்டனர்.

ஏகாதிபத்தியத்திடம் நக்கியதை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் மீது காறி உமிழ்ந்தனர். பிரித்தாளும் சதியை தமிழ் மணத்தில், பார்ப்பனிய நரிப்புத்தியுடன் புகுத்தினர். இந்த நிலையில் சம்பூகன் அந்த நரிகளையும், அதன் சதிகளையும் தோலுரிக்க புறப்பட்டார். அதற்கு ஆதரவாக நாம் தோள்கொடுக்க முனைந்தோம். இவ்வாறு இட்ட பதிவுகள், முக்கியத்துவம் கருதி தனிப்பதிவாகின்றது.

தமிழ்மணி என்ற பார்ப்பனியமணி, கம்யூனிசம் மீது காறி உமிழ்ந்தபோது அதன் நோக்கம் மக்களின் உரிமை தொடர்பானதல்ல. மாறாக மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற, தமது சமூக விரோத செயல்களை பாதுகாக்கின்ற வகையில் தான், பூனூலில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்திகர்களுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்து ஒப்பாரி வைத்தனர்.

நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்யூனிஸ்ட்டுகள் கோரிக்கை முன்வைக்காத படி, சமூகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள்.

இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.

உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கருவறுக்க உருவாகின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகளும், கூடத்தான்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர முன் அவர்களின் ஜனநாயக மீறலைப்பற்றி பேசும் நீங்கள், அவர்கள் உருவாகாத மாதிரி சமூகத்தின் உரிமைகளை வழங்கிவிடுவதல்லவா நேர்மை. சரியான வழியும் கூட. அதற்காகவா! தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போராடுகின்றது.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக காறி உமிழ்வதை விட, கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளையும் ஒழித்துக் கட்டலாமே.

கோயில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபடும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அனைத்து சாதியிரும் பூசை செய்யும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அதை அவர்களின் சொந்த மொழியில் வழிபடும் உரிமை மறுப்பது ஏன்? இப்படி பற்பல. இதை நீங்கள் மறுப்பதால், கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிராகப் போராடுகின்னறனர்.

இதனால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், மற்றவர்களும், அவர்கள் நேசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடுகின்றனர். யாருக்கு எதிராக போடுகின்றனர், இதை மறுப்பவனுக்கு எதிராகத்தான். இதை கம்யூனிஸ்டுகள் செய்வதை விரும்பவில்லை என்றால், மறுப்பவனை ஒழியுங்கள். பின் கமயூனிஸ்ட்டுகளுக்கு எந்த வேலையும் இருக்காது.

10 comments:

சதுக்க பூதம் said...

//கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக காறி உமிழ்வதை விட, கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளையும் ஒழித்துக் கட்டலாமே.

கோயில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபடும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அனைத்து சாதியிரும் பூசை செய்யும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அதை அவர்களின் சொந்த மொழியில் வழிபடும் உரிமை மறுப்பது ஏன்? இப்படி பற்பல. இதை நீங்கள் மறுப்பதால், கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிராகப் போராடுகின்னறனர்.

//

மறுக்க முடியாத உண்மை

Sri Rangan said...

இரயா,வணக்கம்!
இங்கே,தமிழ்மணியை ஒரு பொருட்டாக எடுத்திருக்கும் நமக்குள் தன்னை முன்னிலைப்படுத்த அவரே சம்பூகனாகப் பதிவிடுகிறாரோ என்ற அச்சம்-ஐயம் உண்டு.

இது பார்ப்பனச் சாணாக்கியம்!

தமிழ் மணியைக் கவனப்படுத்தும் முயற்சி.

தமிழ்மணிபோன்ற அடிமைப் புத்திக்கெல்லாம் பதில்கூறுவது வீண்.
ஏனெனில்,அது மனித நோக்குக்கு குறுக்கே நிற்கும் ஒடுக்குமுறையாளர்களின் அடிவருடி-அற்பம்.
அறிவென்ற ஒன்றையே அறியாத அறிவிலி!

அந்த நாயை மதித்துப் பொருட்படுத்துவதை அது விரும்புவதால் அந்த முகம் சம்பூகனாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு!

Thamizhan said...

பார்ப்பனீயம் ஒழிக்கப் பட்டு
ஆணும் பெண்ணும் சமம்
அனைத்து மக்களும் சமம்
என்று துணிச்சலுடன் அரசும்,
நீதித் துறையும் உண்மையாக
உழைத்தால்
ஆம்!பல எதிர்ப்பு இயக்கங்களுக்கு
வேலையிருக்காது.

விடுவார்களா இந்து வெறியர்கள்?

தமிழரங்கம் said...

தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போட்டட பதிவும் அனுமதிக்கப்படமாட்டது. சமூத்ததை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வைத்திருபவனுக்கு, கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் மக்களை மீள மீள இழிவுபடுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.

Sathiyanarayanan said...

அருமையான பதிவுக்கு நன்றித் தோழரே

கூடி வாழ்ந்தாள், கோடி நன்மை
ஆகையால் அனைவரும் ஒன்று கூடி பார்ப்பன வெறியர்களை அடித்து
விரட்டுவோம்

வாழ்த்துக்கள்

தமிழரங்கம் said...

சம்பூகன் said...

இரயாக‌ர‌ன் உங்க‌ளுடைய‌ த‌ள‌த்தில் என்னால் பின்னூட்ட‌மிட‌ இய‌ல‌வில்லை, என்ன‌ கார‌ண‌மோ தெரிய‌வில்லை " " என்று வ‌ருகிற‌து, ச‌ரி நீங்க‌ள் இப்பொழுது போட்டிருக்கும் ப‌திவுக்கான‌ பின்னூட்ட‌த்தை இங்கேயே ப‌திவு செய்கிறேன்


//கம்யூனிஸ்ட்டுகள் கோரிக்கை முன்வைக்காத படி, சமூகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள்.

இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.//

நல்ல கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள், பார்ப்பனீயம் என்பதே ஜனநாயக விரோதமானதுதான், மக்களை பிரிந்து வைத்து தனது மேலாதிக்கம் நிறுவிக் கொள்வதுதான் பார்ப்பனீயம், வர்ணாசிரம அடுக்கின் ஆகக்கீழ் நிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கருத்து சொல்வதற்கும், தான் விரும்பிய உடையை உடுத்துவதற்கும், தனக்கென துண்டு நிலம் வைத்துக்கொள்வதற்கும் கூட மறுத்த சர்வாதிகாரத்தனம் கொண்ட ஜனநாயகவிரோதமானதுதான் பார்ப்பனீயம்.,

பார்ப்ப‌னீய‌த்தின் சாதிய‌ வெறியையும், வ‌குப்பு துவேஷ‌த்தையும் சுட்டிக்காட்டும் பெரியாரியவாதிகளை வ‌குப்பு துவேஷிக‌ள் என்றும் சாதி வெறியர்கள்(பார்ப்பனரகளை திட்டுகிறார்களாம்) என்றும் கூறி எதிர்பிர‌ச்சார‌ம் செய்கிற‌து பார்ப்ப‌ன‌ கும்ப‌ல், பார்ப்ப‌ன‌ கும்ப‌லின் ச‌ர்வாதிகார‌த்தை ஒழிப்ப‌தில் பெரியாரிய‌த்தோடு, மார்க்சிய‌மும் கைகோர்க்கின்ற காரணத்தால் அதை பார்த்து ப‌த‌றி போகிற‌ பார்ப்ப‌னீயம், கம்யூனிசத்தை ச‌ர்வாதிகார‌ம் என்றும், ஜன‌நாய‌க‌விரோத‌ம் என்றும் எதிர்ப்பிர‌ச்சார‌ம் செய்கிற‌து.


ச‌ம்பூக‌ன்

அசுரன் said...

தனிமையில் போராடிக் கொண்டிருந்த சம்பூகனை உற்சாகமூட்டும் வகையில் பதிவு இட்டமைக்கு நன்றிகள்.

குறிப்பாக ஜனநாயக வேசம் போட்டு TBCD சொன்னது போல ஓநாய் ஆடு நனைகிறது என்று அழுத பார்ப்பன ஏகாதிபத்திய அடிவருடி ஓநாய் அம்பலப்பட்டுள்ளது. அதன் ஜனநாயக ஊளையின் பொய்மையை தரவு ரீதியாக சம்பூகன் கட்டுரை அம்பலப்படுத்துகிறது எனில் தங்களது தர்க்க ரீதியாக அம்பலப்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

அசுரன்

அசுரன் said...

தோழர் சிரிரங்கன்,

ஏற்கனவே சம்பூகன் என்பது அசுரன் தான் என்று சொல்லி வருகிறார்கள் அம்பலப்பட்ட பார்ப்பனமணி கும்பல்,


இந்நிலையில் சம்பூகன் என்பவர் தமிழ்மணீதானோ என்று நீங்கள் சந்தேகம் எழுப்புவது சூழ்நிலையின் குறிப்பான தன்மையை கருத்தீல் கொண்டால் சிறீது கவனமாக பார்த்து சொல்லியிருக்கலாம்.

ஏனேனில், பார்ப்பனமணி தமிழ்மணத்தில் பரபரப்பை கிளப்பும் பதிவுகளுக்கு எதிர்வினை என்ற பெயரில் அவதூறு எழுதி பிரபலாமாகிக் கொண்டிருந்தவர். இவனுக்கு அத்தனை பார்ப்பினியவாதிகளும் மறைமுக ஆதரவாளர்கள்(தமிழ்மணத்திலேயே நடுநிலையாளர்கள் போல நடித்து பார்ப்பனியத்திற்க்கு பின்னால் இருந்து ஆதரவு செய்யும் பலர் உள்ளனர்).

அவர்கள் இவனை முன்னுக்கு கொண்டு வரும் வேலையை செய்தே வருக்கின்றனர். முக்கியமாக இதனை ஒரு கூட்டுபதிவாக சிறிது சிறிதாக வளர்த்து வரும் வேளையில் சம்பூகனின் தாக்குதல் மரண அடி.

பார்பனியவாதிகள் தற்கொலை செய்யும் தைரியமற்றவர்கள் எனப்தை நான் உறுதியாக நம்புகிறேன்.

அசுர்ன்

thiru said...

//நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்யூனிஸ்ட்டுகள் கோரிக்கை முன்வைக்காத படி, சமூகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள்.

இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.

உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கருவறுக்க உருவாகின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகளும், கூடத்தான்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர முன் அவர்களின் ஜனநாயக மீறலைப்பற்றி பேசும் நீங்கள், அவர்கள் உருவாகாத மாதிரி சமூகத்தின் உரிமைகளை வழங்கிவிடுவதல்லவா நேர்மை. சரியான வழியும் கூட. அதற்காகவா!//

அவசியமான, உண்மையான வரிகள்! எந்த காலத்தில் பார்ப்பனீயவாதிகள் சகமனிதனை சமமாக மதித்து சமூகத்தின் உரிமைகளை எல்லோரும் பெற்று வாழ அனுமதித்தார்கள்? எப்போதெல்லாம் பார்ப்பனீய புரோகித கூட்டத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து சீர்த்திருத்தவாதிகளும், புரட்சியாளர்களும் உருவானார்களோ அப்போதெல்லாம் இன்னொரு வடிவத்தை எடுத்து அடக்குமுறையை தொடர்ந்தவர்கள் இந்த புனிதப்பசுக்கள்!

இணையத்தில் பார்ப்பனீய எதிர்ப்பு வலுக்கும் போது பலவிதமான மோசடி வித்தைகளால் எதிர்ப்பாளர்களை விமர்சிப்பதும், களவாணித்தனம் செய்வது வாடிக்கை. பார்ப்பனீய எதிர்ப்பாளர்கள் (களத்திலும், இணையத்திலும்) ஒன்றுபடுவது இன்றைய தேவை.

தமிழரங்கம் said...

சம்பூகன் பற்றி சிறிரங்கனின் கருத்து தொடர்பாக. அசுரன் இது பற்றி எழுதியுள்ளார்.

சம்ப10கன் எழுத்தில் நேர்மை உண்டு. அதில் பார்பனியத்துக்கு எதிரான கோபம், அதை கறுவறுக்கும் புரட்சிகர நேர்மை, தர்க்கத்தில் மிக நுட்பமான திறன் என அனைத்தும் ஒருங்கே ஒரு பள்ளியல் வெளிப்படுகின்றது. அவரை தவறாக அடையாளம் காணுதல், காட்டுதல் தவறானது.

தோழமையுடன் இனைந்து நிற்றல், அவர் தனிமைப்பாடமால் பார்த்துக்கொள்ளுவது கம்ய10னிஸ்டுகளாகி எமது கடமை. இதுவே எமது அரசியல் பணிகளில் உள்ளடக்கமும் கூட. இதை சிறிரங்கள் கவணத்தில் கொண்டு, தோழமையுடன் அவருக்கு உதவுவது அவசியம்.