தமிழ் அரங்கம்

Friday, February 8, 2008

தலித் தேசியத்துக்கு எதிரானது என்று கூறுவதற்காக, ஒரு தலித்விரோத மாநாடு

பி.இரயாகரன்
08.02.2008

தற்குள் தான் இந்த மாநாடு, சுற்றிச்சுற்றி வலம்வருகின்றது. இப்படி இது, தலித் மக்கள் பற்றிய மாநாடு அல்ல. தலித்தின் எதிரிகள் யார் என்று பட்டியலிடவும், அதைப் பிரகடனம் செய்வதற்காகவுமல்ல, இந்த மாநாடு. மாநாட்டு ஏற்பட்டாளர்களில் பெரும்பான்மையானோர் தீவிர வலதுசாரிகள். இவர்கள் புலியெதிர்ப்பு என்ற புள்ளியில், தம்மை ஒருங்கிணைத்து உள்ளவர்கள். இதன் நோக்கம் மிகத் தெளிவானது. தலித்தியத்தை தேசியத்;துக்கு எதிராக காட்டுவற்காகவே, தலித்துகளின் பெயரில் ஒரு மாநாடு.

இதற்கேற்ப தேசியத்தை கற்பிதம் என்று கூறவே, அ.மார்க்ஸ் வருகின்றார். அ.மார்க்ஸ் 'தேசியம் கற்பிதம்" என்றதால், அவர் மாநாட்டுக்கு வருகின்றார். இவர்கள் எதைப்பற்றி பேச போகின்றார்கள் என்றால், தலித்தியம் பற்றிப் பேச போகின்றார்களாம்! தலித்தியத்துக்கு எதிரானது தேசியம் என்று நிறுவ, இவர்கள் நடத்தும் நாடகங்கள் தான் இவை. எப்படி நிறுவுவார்கள், தேசியம் என்பது கற்பிதம், எனவே அது தலித்தியத்துக்கு எதிரானது என்பர். இதுதான் இந்த தலித் மாநாட்டின் மையமான நோக்கம்.

புலியெதிர்ப்பு அரசியலுக்கு ஏற்ப, தலித்தியத்தை தலித் மக்களைப் பயன்படுத்துவதே அதன் நோக்கம். இதைத் தவிர, தலித் மக்கள் பற்றி எந்தச் சமூக அக்கறையும், அந்த மாநாட்டுக்கு கிடையவே கிடையாது. உண்மையில் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள், அவர்கள் இயங்கும் அனைத்து பொதுத் தளத்திலும்; கொண்டு இருப்பர். இந்த அரசியல் மக்களைச் சார்ந்து இருக்கும். ஆனால் மாநாடு ஏற்பாட்டாளர்கள் பின்னனியில், இவர்களின் அரசியலில், அப்படி எதுவும் கிடையாது. இப்படிப்பட்டவர்கள், எப்படி தான் தலித் மக்களை சார்ந்து நிற்பார்.

இவர்கள் யார்? பெரும்பான்மை இலங்கை இந்திய கூலிக் குழுக்களின் அருவடிகளும், இந்த அரசியலை ஆதரிக்கின்றவர்களும் தான். தலித் மாநாட்டின் பிரதான ஏற்பாட்டாளர்களின் பெரும்பான்மை, இதன் பின் நிற்கின்றவர்கள் தான். தேசியத்தை மக்களை சார்ந்து நின்று, ஒரு அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள். அதை தீவிரமாக மறுப்பவர்கள். இவர்கள் தலித் மக்களின் பிரச்சனை மட்டும், எப்படி மக்களை சார்ந்து நின்று பார்ப்பனர்கள், தீர்ப்பார்கள். தேசியத்தில் மக்களைச் சார்ந்த அரசியலை வைக்க முடியாதவர்கள், தலித் அரசியலை மட்டும் மக்களைச் சார்ந்து எப்படி வைக்கமுடியும். இப்படி இது தலித்துக்கு எதிரானது என்பது வெளிப்படையானது.

புலியெதிர்ப்பு அரசியலை, தேசிய எதிர்ப்பாக தலித் எதிர்ப்பாக கட்டமைப்பதை அடிப்படையாக கொண்டதே இந்த தலித்மாநாடு. இந்த வகையில் முதலாவது மாநாட்டில் இருந்து, இது கொள்கை அளவில், புலியெதிர்ப்பு நிலையை தெளிவாக எடுக்கின்றது. தேசியம் என்பது கற்பிதம் என்பதன் ஊடாக, தலித்தியம் எதிர் தேசியம் என்ற கூறி, அதை புலியெதிர்ப்பு அரசியலாக்க முனைகின்றது. அதற்கேற்ற அன்னக்காவடி தான் இந்த அ.மார்க்ஸ்.

அ.மார்க்ஸ் தேசம் கற்பிதம் என்ற நூலுக்கு எதிராக 'தேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே, ஒழிய பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல" (http://www.tamilcircle.net/Bamini/books/book_02/book_02_total.htm என நான் எழுதிய விமர்சனத்துக்கு அவரால் என்றும் பதிலளிக்க முடிந்ததில்லை. அவரின் கம்யூனிச விரோதமும், ஏகாதிபத்திய சார்புக் கொள்கையும், தேசியம் என்பதையே கற்பிதமாகியது. தேசியம் என்பது பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின், வர்க்கப்போராட்ட ஆயுதமாக இருப்பதையும், அது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருப்பதையும் மறுத்தலித்தவர் தான் இவர். தேசியம் கற்பிதமாக்கி, அதனிடத்தில் உலகமயமாதல் அமருவதை (பின்)நவீனத்துவ வழியில் ஆதரித்தே இதை முன்வைத்தவர்.

இங்கு புலியெதிர்ப்புவாதிகள், அதை தமது அரசியலுக்கு ஏற்ப முன்வைக்கின்றனர். முதலில் இவர்கள் புலி சமன் தேசியம் என்று வைக்கின்றனர். தேசியம் என்பதே, புலி என்கின்றனர். இதனால் புலி தலித்துக்கு எதிரானது, எனவே தேசியத்துக்கும் எதிரானது என்கின்றனர். இப்படி புலியெதிர்ப்பு அரசியலே தலித்தாகின்றது. இதை மறுத்து, இவர்களால் ஒரு தலித் மாநாடு நடத்த முடியாது.

இன்று இலங்கையில் தலித்துகளின் எதிரிகள் யார்? புலிகள் மட்டுமா? இவர்கள் அது மட்டும் தான் என்பதைச் சொல்வது தான், மாநாட்டின் அரசியல் சாரம். இவர்கள் பின் நிற்கும் அல்லது இவர்கள் ஆதரித்து நிற்கும் புலி அல்லாத குழுக்களும், புலியைப் போல் தலித்துக்கு எதிரானது என்று, இந்த மாநாடு சொல்லி அவர்களை எதிர்க்காது. இது போல் இலங்கை இந்திய அரசுகளும், ஏகாதிபத்தியம் கூட, தலித்துக்கு எதிரானது என்று சொல்லாது. அதை மாநாடு தீர்மானமாக, ஒரு அரசியலாக எடுக்காது. இதனுடன் தொடர்புடைய அனைவரும், தலித்துக்களின் எதிரிகள் என்று எதையும் சொல்லாது. பிறகு எதற்காக? யாருக்காக? மாநாடு.

புலியை மட்டும் எதிரியாக சொல்ல மாநாடு. தமது சொந்த அரிப்புகளை தீர்த்துக்கொள்ள மாநாடு. தமது இருப்பைக் காட்டிக்கொள்ள மாநாடு.

இப்படி புலிக்கு எதிராக புலியெதிர்ப்பு அரசியலுக்கு இதை பயன்படுத்தும் ஆர்வம், அ.மார்க்சின் வருகையின் பின் உள்ள அரசியல் சதியாகும். கம்யூனிசத்துக்கு எதிராக அ.மார்க்ஸ் - ரவிக்குமார் வைத்த தலித்தியம், தமிழ் நாட்டில் நாறுவதையே நாம் காண்கின்றோம்.

சில சிலருக்கான சலுகைகளுடன், தலித்துக்கு எதிராகவே அது மாறிவிடுகின்றது. அதுவே ஒரு சாதிக் கட்சியாக, சாதி வளர்க்கும் கட்சியாக, பார்ப்பனியத்தின் தொங்கு சதையாகவும் மாறிவிட்டது. இது அதை முன்னெடுத்த நபர்கள் தொடர்பானதல்ல, அதன் கோட்பாட்டைக் கூட, இந்த பார்ப்பனிய சாதிக் கட்டமைப்புக்கு வெளியில் மீட்கமுடியாது.

இதற்கெல்லாம் வழிகாட்டியவர்கள், அதை பொறுப்பேற்காதவர் தான் இந்த அ.மார்க்ஸ். லண்டனின் புலியெதிர்ப்புக்காக கூட்டும் தலித் மாநாட்டில், தலித்தியத்தை தன் பங்குக்கும் சிதைக்க வருகின்றார். இவரோ அரசியலிலே பிரமுகர். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப இயங்கும் முகமில்லாத பினாமி.

இப்படி இந்த மாநாட்டின் நோக்கம், புலியெதிர்ப்புக்கு ஏற்ப தலித்தியத்தை முதுகுனிய வைப்பது தான். பின் அதில் ஏறி சவாரி செய்வது தான்.

தலித்துக்கு ஒரு மாநாடா என்று முதலாவது மாநாட்டை எதிர்த்தவர்கள், பின் அதை தமக்கு ஏற்ப பயன்படுத்த முனைந்தனர். அது அம்பலப்படுத்தப்பட்டது. இப்போ என்ன செய்கின்றனர், இரண்டாவது மாநாட்டை தங்களே நடத்தி, தலித்தியத்தை புலியெதிர்ப்பாக்கிவிடவே இந்த தலித் நாடகங்கள்.

இதை நடத்துகின்றவர்களின் அரசியல் என்பது, புலியெதிர்ப்பு அரசியல். சொந்தமான மக்களைச் சார்ந்த கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாது. புலியை ஒழிப்போருக்கு, கூலிக்கு மராடிக்கும் புரட்சியை செய்பவர்கள்.

மக்களை சார்ந்த எந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. அதை கேட்டால், புலியைப் போல் உறுமி, அவதூறு பொழிவார்கள். இவர்கள் எப்படி தலித்துக்கு மட்டும், மக்களை சார்ந்த அரசியலை வைத்துவிடுவார்கள்? நீங்கள் சொல்லுங்கள்.

தமிழ் மக்களுக்கு எந்த தேசியப் பிரச்சனையுமே இல்லை என்பவர்கள் தான் இவர்கள். அதை வெறும் புலிப்பிரச்சனை என்பவர்கள் இவர்கள். புலியை ஒழித்தால் எல்லாம் சரி என்பவர்கள். இப்படி தமிழ் மக்களின் தேசியம் முதல் அதற்கான தீர்வுகளைக் கூட, கோட்பாட்டு அடிப்படையில் மறுப்பவர்கள் தான் இவர்கள். ஆனால் இதில் உள்ள முரண்பாடு படு நகைச்சுவையானது. தேசியத்தைக் கற்பிதம் என்பவர்கள், தேசிய பிரச்சனை எதுவுமில்லை என்பவர்கள், தீர்வு என்று ஒன்று வரும் போது அதையும் பதம்கெட்ட மீனை விற்கின்ற வியாபாரி போல் தலையில் சுமந்து கொண்டு கூவி விற்க முனைகின்றனர்.

தேசியம் கற்பிதம் என்றால், பிறகு எப்படி தீர்வைப் பற்றி பேச முடியும். தமிழ் தேசியம், சுயநிர்ணயம் முதல் இனப் பிரச்சனை ஒன்று இருப்பதை மறுப்பவர்கள், எப்படி தீர்வு பற்றி பேச முடியும்? ஆனால் இப்படி எதிர் நிலையில் பேசுகின்றனர், துள்ளிக் குதிக்கின்றனர்.

தமிழ் மக்களின் தேசியத்தையும் புலித் தேசியத்தையும் ஒன்றாக்கி, தமிழ் தேசியத்தையே மறுப்பவர்கள் தான் இவர்கள். தமிழ் மக்களின் தேசியம் என்ற ஒன்று இல்லை என்பதால் தான், தாம் அவர்களுக்காக தனித்து போராடுவதில்லை என்கின்றனர்.

மறுபக்கத்தில் தீர்வு என்ற ஒன்று வரும் போது, ஏதோ தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அதில் ஒடி நக்க முனைகின்றனர். இப்படி இவர்களின் அரசியலே வேடிக்கைதான்.

இதில் தலித்தியம் பேசுகின்ற, புலியெதிர்ப்பு குஞ்சுகளும் அடங்கும்;. புலிக்கு வெளியிலும், அரசுடன் சோந்து இயங்கும் கூலிக் குழுக்களுக்கு வெளியிலும், தமிழ் தேசியத்தை மக்களை சார்ந்து எடுக்க மறுப்பவர்கள் தான் இவர்கள். இதனால் அப்படி ஒன்று இல்லை என்கின்றனர். ஆனால் தீர்வு வரும் போது, தலித்துகளின் பங்கு பற்றியும், பங்கிடுதல் பற்றியும் பேசுகின்றனர்.

ஆனால் தலித்துகள் தமக்கான தேசியத்தை உள்ளடக்கி, போராடும் அடிப்படையும் அந்த உரிமையை மறுக்கின்றனர். இப்படி தலித்துக்கு எதிராக இருந்தபடி, புலியெதிர்ப்பு தலித் அரசியல் செய்ய முனைகின்றனர்.

இவர்கள் தமது பிற்போக்கு அரசியலை மூடிமறைக்க, தேசியம் எதிர் தலித்தியம் என்கின்றனர். இதனாலேயே தேசியத்துக்கும் சரி, தலித்தியத்துக்கும் சரி, மக்கள் நலன் அடிப்படையில் எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து, அவர்களின் செயலுக்கான எந்த அரசியலையும் வைப்பதுமில்லை, செய்வதுமில்லை.

புலிகள் தலித் மக்களின் பிரச்சனைக்கு எதிரானவர்கள் என்பது உண்மையானது. இதனால் அதுவல்லாத அனைத்தும், தலித் மக்கள் சார்பானதா? புலியை விட படுபிற்போக்கான தலித் விரோதிகளையும், தலித் விரோத கோட்பாட்டையும் கொண்டதே புலியல்லாத புலியெதிர்ப்பு தளம். இந்தக் கும்பல் புலிக்கு எதிராக கும்மியடித்து, தலித்மக்களின் முதுகில் ஏறி புலியெதிர்ப்பு அரசியலையே கூவமுனைகினர்.

No comments: