தமிழ் அரங்கம்

Sunday, July 13, 2008

உத்தப்புரம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசிய ஓட்டுக் கட்சிகள்

உத்தப்புரத்தில் சட்டவிரோத ஒப்பந்தத்தை 1989இல் உருவாக்கியவர்களை "பெரிய மனிதர்கள்' என்று சொல்லி புளகாங்கிதம் அடையும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பழைய செய்தித்தாள்களை எல்லாம் ஒன்றுவிடாமல் தேடி, எங்குமே தீண்டாமை பற்றி எழுதப்படவே இல்லை என்று சொல்லி இருக்கிறார். ""ஏன் சி.பி.ஐ. இந்த விசயத்தில் போராடவில்லை?'' எனக் கேட்பவர்களுக்கு ""நான் அசைவன் எனக் காட்டிக் கொள்ள எலும்புகளைத் தொகுத்து மாலை போட்டு ஆட வேண்டிய தேவையில்லை'' எனத் தெனாவட்டாகக் கட்டுரை எழுதுகிறார். மேலும் அவ்வூரில் உண்மையைக் கண்டறியக் குழு அமைத்து, அங்கு நில வுவது "ஆன்மீகப் பிரச்சினை' என்ற மாபெரும் கண்டுபிடிப்பை அறிவித்திருக்கிறார். "அமைதி'யாக இருந்த ஊரில் அதே அமைதி தொடர வேண்டும் என்பதற்காக உத்தப்புரத்திற்கு ஒருமுறை பயணமும் செய்தார்.

தா.பாண்டியன் விரும்பும் அதே அமைதியைத்தான் பிள்ளைமார் சங்கத் தலைவர் முருகேசனும் விரும்புகிறார். ""பல அப்பாவி தலித்துகள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் சகோதர சகோதரர்களாகத்தான் வாழ விரும்புகிறார்கள். சில சமூக விரோதிகள்தான் தலித்துகளைத் தூண்டி விடுகின்றனர்'' என்று கூறும் முருகேசனின் விருப்பமெல்லாம் என்றென்றைக்கும் தலித்துகள் அப்பாவிகளாகவே இருக்க வேண்டும் என்பதே. அவர்கள் அப்பாவிகளாக இருக்கும் வரை "அமைதி' இருக்கும். இந்த அமைதியைத்தான் வலது கம்யூனிஸ்டு தா.பாண்டியனும் விரும்புகிறார்.

சாதி ஒழிப்பிற்காகவே இயக்கம் கண்ட திராவிடர் கழகம், சாதித்திமிர் பிடித்த பிள்ளைமார்களைச் செல்லமாகக் கண்டித்து தலையங்கம் எழுதியது. அச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளாத தி.க., ""சுவரை ஏதோ கோபத்தில் எழுப்பி இருக்கக் கூடும்'' என விளக்கம் கொடுத்தது. ரேசன் கார்டுகளை ஒப்படைத்துவிட்ட பிள்ளைமார்களுக்கு புத்திமதி சொல்லித் திருத்த ""பிள்ளைமார் சமூகத்தில் படித்தவர்கள், அதிகாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தங்கள் கடமையினைச் செய்ய முன்வரவேண்டும்'' என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் உத்தியைச் செயல்படுத்த பிள்ளைமாரில் முற்போக்காளர்களைத் தேடி அலைந்து அலுத்துப்போனது..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: