தமிழ் அரங்கம்

Thursday, July 17, 2008

தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

நக்சல்பாரி எழுச்சியைக் காட்டிக் கொடுத்த மார்க்சிஸ்டு தலைமையை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறி மா.லெ. இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட (மறைந்த) தோழர் ரங்கனாதனின் கிராமம் காரப்பட்டு. சுற்றுவட்டார நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி அவற்றின் ஊடாக உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை அவர் உருவாக்கி வளர்த்திருக்கும் கிராமம் அது.

தலித் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான கலவரங்கள் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற காலங்களிலும் கூட சாதிவெறி தலைதூக்காத கிராமம் காரப்பட்டு. உள்ளூர் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த தலித் மக்களைத் திரட்டி வெற்றிகரமானதொரு கோயில் நுழைவுப் போராட்டத்தை வி.வி.மு. நடத்திய கிராமம் அது. அப்போராட்டத்தின் விளைவாக நிலைநாட்டப்பட்ட தலித் மக்களின் கோயில் நுழைவு உரிமையை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் கிராமம்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு தலித் மக்களும் பிற சாதியினரும் ஒருவரையொருவர் அழைப்பதையும் ஒரே பந்தியில் அமர்ந்து கலந்துண்பதையும் தனது பண்பாடாகவே மாற்றிக் கொண்டிருக்கும் கிராமம். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்களை அழைப்பதும், அவர்கள் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதும், வி.வி.மு. நடத்தும் ஊர்க்கூட்டங்களில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் வழமையாக நடைபெற்று வரும் கிராமம் அது.

தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போவதில்லை. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட பெரிதும் வாய்மொழியின் அடிப்படையிலேயே நடைபெறும் அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையும் நேர்மையும் நிலவி வரும் கிராமம் அது. கள்ளச்சாராய விற்பனை அங்கே நெடுநாள் முன்னரே ஒழிக்கப்பட்டுவிட்டது. குடித்துவிட்டுத் தெருவில் ஆடுவதும், பொது இடங்களில் புகை பிடிப்பதும் அங்கே தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து விடவில்லை. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத்தப்படுகின்றன. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய பிழைப்புவாதிகளும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட லும்பன்களும் இவற்றை எதிர்க்கத்தான் செய்தனர். தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: