தமிழ் அரங்கம்

Sunday, July 13, 2008

புலிப் புலனாய்வு அறிக்கை மீது : வதந்தி எது? உண்மை எது? சரி பகுத்தறியும் திறன் தான் எது?

''வதந்திகளை நம்பவேண்டாம் : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்" 12 யூலை 2008 வெளியிட்டுள்ள புலி அறிக்கை, மீண்டும் 10 வருடங்கள் கடந்த பின் வந்துள்ளது. யாழ்குடாவை எதிரி கைப்பற்றிய காலத்திலும், இது போன்ற அறிக்கை ஒன்றை புலிகள் விட்டு இருந்தனர். புலி சந்திக்கின்ற பொதுநெருக்கடி, மக்கள் புலியை தோற்கடிக்கின்ற உண்மையை பளிச்சென்று இந்த அறிக்கை போட்டு உடைக்கின்றது.

புலிகள் தம்மையும், தமது கடந்தகாலத்தையும் திரும்பி பார்க்க மறுப்பது, மறுபடியும் புலனாகின்றது. மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, பாசிச அரசியல் தாற்பாரியத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

எது வதந்தி, எது உண்மை என்ற எதையும் ஊகிக்க முடியாத வகையில், மக்களை இட்டுச்சென்றது யார்?, எதிரியா? இல்லை. புலிகளாகிய நீங்கள் தான். எப்போது தான் நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். உண்மை எப்போதும், மக்களின் மண்டைக்குள் குசுகுசுத்தபடியே உயிர் வாழ்கின்றது. இப்படி உண்மைகள் மக்களின் மண்டைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளது.

No comments: