தமிழ் அரங்கம்

Saturday, October 18, 2008

ஷகீலா : கவர்ச்சி சுதந்திரமா? பர்தா கண்ணியமா?


2003ஆம் ஆண்டு பாளையங்கோட்டை கலைவாணி திரையரங்கில் ஓடிய "இளமைக் கொண்டாட்டம்' என்ற திரைப்படத்தில் சென்சார் செய்யாத காட்சிகளில் ஷகீலா நடித்துள்ளார் என்பதற்காக அவர் மீதும், அவருடன் நடித்துள்ள நடிகர் வினோத் மீதும், திரையரங்க நிர்வாகிகள், ஊழியர்கள் மீதும் தணிக்கை செய்யப்படாத படத்தைத் திரையிடுதல் மற்றும் ஆபாசமாக நடித்துக் கூட்டம் கூட்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கின் வாய்தாவுக்காக நெல்லை வந்த ஷகீலா பர்தாவில் மறைந்து கொண்டு வந்த போதிலும் நீதிமன்ற வளாகத்தையே மக்கள் கூட்டத்தால் நிரப்பி விட்டார். நீலத்திரையில் பார்த்த கனவுக்கன்னி கருப்புத் திரைக்குள் ஒளிந்து வந்த போதிலும், தமது கனவுக்கன்னியை நேரில் தரிசிக்கும் பரவசமான வாய்ப்பை அங்கிருந்த மக்கள் இழக்க விரும்பவில்லை. ஷகீலாவின் வாய்தா என்றைக்கு என்ற தேதியை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் கவர் பண்ண காமிராவோடு நிருபர்களும் வந்து விட்டார்கள். வழக்கை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார் நீதிபதி. தேதியை ஷகீலா குறித்துக் கொண்டாரோ இல்லையோ, நிருபர்களும் ரசிக மகாஜனங்களும் நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்கள்.

No comments: