தமிழ் அரங்கம்

Tuesday, October 14, 2008

இந்திய – அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் : துரோகத்தின் வெற்றி!

இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை (123 ஒப்பந்தம்) நிறைவேற்றுவதற்கான இறுதிக் கட்ட பேரங்கள் நடந்து வருகின்றன. சர்வதேச அணுசக்திக் கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இந்திய அணு உலைகளைக் கண்காணிப்பது தொடர்பான ஒப்பந்தமும்; யுரேனியம் உள்ளிட்ட அணு மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக, அணுமூலப் பொருட்கள் வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒப்பந்தமும் நிறைவேறியுள்ள நிலையில், 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் சடங்கு மட்டுமே எஞ்சியிருக்கிறது.

123 ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறி, நடைமுறைக்கு வரும் நாள் நெருங்க நெருங்க, அதனின் உண்மையான முகமும்; இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட "அரும்பாடுபட்டு வரும்'' மன்மோகன் சிங் பிரணாப் முகர்ஜி எம்.கே நாராயணன் சிவசங்கர் மேனன் அனில் ககோத்கர் என்ற ஐவர் கும்பல் கடைந்தெடுத்த பித்தலாட்டப் பேர்வழிகள் என்பதும் அம்பலமாகி வருகிறது.

No comments: