தமிழ் அரங்கம்

Sunday, February 15, 2009

உறைபனி உணர்த்தும் உண்மைகள்

உறை பனியை நெருங்கிவிட்ட நடுநடுங்க வைக்கும் கடுங்குளிர்; நூறு அடிக்கு முன்னே இருப்பது கூடத் தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டம்; வாகனங்கள், ரயில்கள், விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன; குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் உறைந்து சில்லிட்டன என்று கடுங்குளிரின் தாக்கத்தை கொட்டை எழுத்துக்களில் நாளேடுகள் படம் பிடித்துக் காட்டின. வாட்டியெடுக்கும் கடுங்குளிரில் கிழிந்த சாக்குகளையே போர்வையாக்கிக் கொண்டு, கைய்யது கொண்டு மெய்யது பொத்தி நடுங்கிக் கொண்டிருந்த வீடற்றநடைபாதைவாசிகளான உழைக்கும் மக்கள் குளிரில் விறைத்து அடுத்தடுத்து மாண்டு கொண்டிருந்தனர். பீகாரில் 60 பேர்; உ.பி.யில் 50 பேர்; டெல்லியில் 20 பேர்; பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானில் 20 பேர் என குளிருக்குப் பலியான மக்களைப் பற்றிய செய்தியை இதே நாளேடுகள் துணுக்குச் செய்தியாக வெளியிட்டு அலட்சியப்படுத்தின.

1 comment:

Muruganandan M.K. said...

மனித மனங்களும் மரத்துவிட்டன. அதனால்தான் இத்தகைய அலட்சியப் போக்கு.