தமிழ் அரங்கம்

Thursday, February 19, 2009

கந்தலானது அமெரிக்க மாயை!

அமெரிக்காவில் நேற்று வரை மிகவும் புகழ்பெற்ற நிதி நிறுவனமாக இருந்து வந்த பெர்னார்ட் எல். மடோஃப் இன்வெஸ்மென்ட் செக்யூரிட்டீஸ் என்ற "பிளேடு கம்பெனி' இன்று குப்புறக் கவிழ்ந்துவிட்டது. நேற்று வரை அமெரிக்காவின் மிகச் சிறந்த நிதி முதலீட்டு நிபுணராகக் கொண்டாடப்பட்ட அந்நிறுவனத்தின் அதிபர் பெர்னார்ட் மடோஃப், இன்று பண மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு "420'' குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிறுவனம் ஏறத்தாழ 5,000 கோடி அமெரிக்க டாலர் (இரண்டு முதல் இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீட்டாளர்களின் பணத்தை ஏப்பம் விட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை சூதாடி மடோஃபின் நிறுவனம் இத்துணை பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க அரசின் எந்தவொரு புலனாய்வு அமைப்பும் ஆராய்ந்து கண்டுபிடித்து விடவில்லை. மாறாக, நமது நாட்டின் சத்யம் நிறுவன அதிபர் போல, பெர்னார்ட் மடோஃபே தனது நிறுவனம் செய்துள்ள பண மோசடிகளை ஒத்துக் கொண்டுவிட்டார். இத்துணைக்கும் மடோஃப் "முதலீடு' என்ற பெயரில் நடத்தி வந்த மோசடிகள், கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிக்கலானதும் அல்ல.

No comments: