தமிழ் அரங்கம்

Thursday, April 16, 2009

துரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும் : நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -4)

புலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம்! தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் புலிகள் சேர்வதையிட்டு, எமக்கு (பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கூறுகின்றனர்) அக்கறையில்லை என்கின்றனர்.

இப்படி துரோக அரசியல் மோசடி ஒருபுறம். மறுதளத்தில் புலிகள் பற்றி விவாதிக்க தேவையில்லை என்;று கூறிக்கொண்டு, அவர்களை சரணடையக் கோருகின்றனர். துரோகத்தை செய்யும்படி கோருவோம், ஆனால் துரோகத்தை செய்யாதே என்று கூறுவது பற்றி விவாதிப்பது எமது வர்க்கத்தின் அரசியலில்லை என்கின்றனர்.

சொந்த துரோக அரசியல் விவாதத்தில் இருந்து தப்பவும், விவாதம் செய்ய முடியாத நிலையிலும், சந்தர்ப்பவாதமாக தொடர்ந்து இருக்கவும், சமகாலத்திய விடையத்தில் மௌனத்தை அரசியல் ஆக்குவது தான் பலரின் அரசியல் மோசடித்தனமாகும். இதற்காக அவர்கள் இது எம் வர்க்கத்தின் பிரச்சனையில்லை என்று கூறிக்கொண்டு மெதுவாக நழுவுகின்றனர். இந்த சமூக அமைப்பில் அனைத்து இயக்கமும், வர்க்க எல்லைக்குள் இருக்கின்ற போது, அது எமது வர்க்க பிரச்சனையில்லை என்று கூறி நழுவுவது சந்தர்ப்பவாத அரசியல்.

தேசிய இனப்பிரச்சனை எம்......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: