தமிழ் அரங்கம்

Tuesday, April 21, 2009

இனவழிப்பு யுத்தமா அல்லது அரசு-புலி யுத்தமா நடக்கின்றது!?

அரசியலை துறந்தோடிய எம் சமூகத்தில், புலி-புலியெதிர்ப்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைக்குள் ஒரு இனவழிப்பு அழகாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதுவொரு இனவழிப்பல்ல, அரசு-புலி என்ற தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த அழிவு யுத்தம் என்று எம்மை அரசியல் ரீதியாக திருத்த முனைகின்றனர். வெட்கக்கேடானதும், மானம் கெட்ட அரசியலாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைக் கண்டுகொள்ளக் கூடாது. இந்த அழிவை மௌனமாக அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் தமிழினம் மீதான ஒடுக்குமுறையின் தொடர்ச்சியில் ஒரு அங்கம் தான் இது என்பதை, மறுக்கின்றனர். எல்லா புலியெதிர்ப்பு அரசியலும் போல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை விடுதலைப் புலிகளின் அழிவின் ஊடாக பார்க்கின்றனர்.

விடுதலைப்புலிகள் அழிந்தால் நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்கின்றனர். இதற்காக அவர்கள் வைக்கும் காரணங்கள் வேறுபட்ட போதும், விடுதலைப்புலிகளின் அரசியல் அழிவை தம் சொந்த அரசியல் முன்னெடுப்புகள் ஊடாக முன்னெடுக்கவில்லை. இன்று பேரினவாதம் தன் இனவழிப்பின் ஒரு அங்கமாக, அதற்கு தடையாக இருந்த புலிகளை அழிக்கின்றனர். இப்படி தம் சொந்த அரசியல் நெருக்கடியில் சிக்கிய புலிகளிடம், ஆயுதத்தை கையளிக்கவும் சரணடையவும் கோருகின்ற அரசியல் முன்வைக்கப்படுகின்றது. இதன் மறுபக்கத்தில் புலிகளே இந்தத் ஒரு துரோகத்துக்கான அரசியல் பேரங்களை ஏகாதிபத்தியங்கள் ஊடாக நடத்துகின்றனர்.

மொத்தத்தில் ஒ......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: