தமிழ் அரங்கம்

Friday, June 19, 2009

பாக். இராணுவம் – தாலிபான் மோதல்: நிழலா? நிஜமா?


அந்நாட்டிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலுள்ள மாலாகண்ட் பகுதியில் “அமைதியை” ஏற்படுத்த, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இநிபாஸ் ஹரியத் இ முஹமதி என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்போடு பாகிஸ்தான் அரசு ஓர் உடன்பாடு செய்துகொண்டது. இதன்படி, மாலாகண்ட் பகுதியில் ஸ்வாட் சமவெளியையும் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நிஜாம் இ அத்ல் என்ற ஷரியத் நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்கு கைமாறாக, தெஹ்ரிக் இநிபாஸ் அமைப்பு தனது சகோதர அமைப்பான தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினை ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுமாறு செய்ய வேண்டும். ஆனால், நடந்த்தோ பாகிஸ்தான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது.

1 comment:

Anonymous said...

தீவிரவாதம் என்றுமட்டும் குறிப்பிடிருக்கலாமே "இஸ்லாமிய" தீவிரவாதம் என்று குறிப்பிட்டு எங்கள் மனதை ஏன் புண்படுத்துகிறீர்கள்.முஸ்லிம்களில் மட்டும்தான் தீவிரவாதிகள் உள்ளனரா?.இவர்களை ஏன் ஜாதி பெயரிட்டு அழைப்பதில்லை"மாவோயிஸ்டு,நக்ஸலைட்,வீரப்பன்" மற்றும் இன சுத்திகரிப்பு செய்த இவர்களை "RSS,vhp,சங்பரிவார்,ஹிட்லர்,புஷ்" ஏன் அவர்களுடைய‌ ஜாதி பெயரிட்டு அழைப்பதில்லை.இதற்க்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்காது.இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கூறுகிறீர்களே இவர்களால் இஸ்லாமிற்க்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன நன்மை உண்டாயிற்று.இன்னும் சொல்லப்போனால் உலகத்தில் பிற சமுதாயத்தவரால் அதிகமாக பலியாவது இஸ்லாமியர்கள்தான்"ஈராக்,லெபனான்,சூடான்,ஆஃப்கானிஸ்தான்,பாலஸ்தீன்,ஏன் நம் இந்திய மண்ணில் கூட அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள்தான்" என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் இப்படி கூறமாட்டீர்கள் ச்கோதரர்களே.மற்ற மதத்திலுள்ள தீவிரவாதிகளையும் ஜாதி பெயரிட்டு அழைக்க சொல்லவில்லை.தீவிரவாதி என்பவர்கள் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள்.தீவிரவாதிக‌ளுக்கு ஜாதி முத்திரையிட்டு மற்ற மக்கள் மன‌தையும் புண்படுத்தாதீர்கள்.