தமிழ் அரங்கம்

Tuesday, December 22, 2009

திடீர் அரசியல் சாக்கடையில், மக்களுக்கு எதிரான வரலாறுகள் புதைக்கப்படுகின்றது

தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் மூலம் ஆயிரம் ஆயிரம் கொடுமைகள் நிகழ்ந்த போது, அதற்கு ஆதரவாக "முன்னேறிய பிரிவு" என்று கூறிக்கொள்ளும் கூட்டம் செயல்பட்டது. இதற்கமைய ஆழ்ந்த உறக்கத்தில்; கிடந்தவர்களும், எதிர்ப்புரட்சி அரசியலை அரசியலாக செய்தவர்களும், "திடீர் ஆய்வு", "திடீர் மார்க்சியம்" "திடீர் புரட்சி" என்று இன்று கடைவிரிக்கின்றனர்.


சரணடைந்து புலித் தலைவர் "மே 18" செத்ததாக பேரினவாதிகள் அறிவிக்க, திடீர் அரசியல் பிழைப்புவாதமும் உசுப்பேற்றப்பட்டது. அந்த "மே 18" பெயரில் இயக்கம் முதல் சுயவிமர்சனம் என்றால் என்ன என்று விளக்கும் இலங்கை பு.ஜ கட்சி ஈறாக, அரசியலில் புதுவே~ம் போடுகின்றனர். புலிகள் மே 18 இருந்தவரை, தமிழ்மக்கள் பட்ட துன்பங்களுக்கும் சரி, தேசிய விடுதலையில் பெயரில் புலிப் பாசிட்டுகள் மாபியாத்தனத்துடன் நடத்திய கொடுமைகளையும் கண்டு கொள்ளாத கூட்டம் தான், அன்று தாம் அதற்கு எதிராக போராடியதாக இன்று கூறுகின்றது. திடீர் மார்க்சியம், ஆய்வுகள், அறிக்கைகள், விளக்கங்கள் என்று கடைவிரிக்கின்றனர். இதற்கு அமைவாக கடந்த தங்கள் எதிர்ப்புரட்சிக் காலத்தையும், பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், இருட்டில் வைத்திருக்க தீவிரமாக முனைகின்றனர். அன்று நடந்த போராட்டத்தை எதுவுமற்றதாக காட்ட, தாம் விரும்பியவாறு முத்திரை குத்துகின்றனர். "கம்யூட்டர் புரட்சி" என்றும், "மார்க்சிய கோசங்கள்" என்றும், "தனிநபர் தாக்குதல்கள்" என்றும், "மேல் ப+ச்சு சிவப்பு கோசங்கள்" என்றும், "யாழ் மேட்டுக்குடி" மொழி என்றும், "ஜனநாயகமற்ற எழுத்தென்றும்" தாங்கள் எதிர்ப்புரட்சி அரசியல் பேசிய காலத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை இட்டுக்காட்ட முனைகின்றனர்.

இதன் மூலம் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: