தமிழ் அரங்கம்

Friday, October 7, 2005

தண்ணீர்க் கொள்ளையர்கள்

சென்னையில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட தண்ணீர் வியாபாரிகள் முதலாளிகள் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். சென்னை தாம்பரம் வட்டாரத்தில் 20 கிராமங்களிலிருந்து மட்டும் 20,000 லாரிகள் அன்றாடம் தண்ணீர் கொண்டு செல்கின்றன என்று கூறுகிறது, சென்னை வளர்ச்சி ஆய்வுக்கழகம் (MIDS) என்ற அரசுசார் நிறுவனத்தின் ஆய்வு. திருவள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு கிராமங்களிலிருந்து மட்டும் அன்றாடம் 1000 லாரிகள் தண்ணீரைக் கொண்டு செல்வதாகவும், பாலாற்றின் கரைப்பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும் கூறுகிறது இந்த ஆய்வு.

தண்ணீர் வியாபாரிகளில் பலர் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் இவர்கள் நகரங்கள், பெருநகரங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்கள், ஊற்றுக்கள் ஆகியவைகளை விலைக்கு வாங்கி, அங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வந்து புட்டிகளில் அடைத்து பெரும் இலாபத்திற்கு விற்கின்றனர் பல ஆயிரக்கணக்கான லாரிகளில் அன்றாடம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்கப்படுகின்றது.

யார் எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்ற ஒழுங்குமுறை எதுவுமில்லை; போட்டா போட்டிதான் நிலவுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் எடுத்து, அவ்வளவையும் நல்ல விலைக்கு விற்று கூடிய விரைவில் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தண்ணீர் முதலாளியின் ஆசையாக வெறியாக இருக்கின்றது; நகர்ப்புறங்களில் உள்ள பெரும் பெரும் நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவறைகளுக்குக் கூட நல்ல குடிநீர் லாரி லாரியாய் வந்து இறங்குகிறது.

நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்காகத் தவிப்பது அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீர் முதலாளிகளின் லாப வெறி அதிகரிக்கிறது. சல்லடைக் கண்ணாகப் பூமியைத் துளைத்தெடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அதை ஈடுகட்ட ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தைக் கூட்டுகிறார்கள். அதுவும் வறண்டு இன்னும் ஆழப்படுத்துகிறார்கள்.

இந்தப் பகல் கொள்ளைக்காரர்களின் லாபவெறிக்கு இணையாக பம்பு செட்டுகளின் குதிரைத்திறன் 500750 என அதிகரிக்கிறது. குழாய்க் கிணறுகளின் விட்டம் அதிகரிக்கிறது. வெறி கொண்டு உறிஞ்சும் இந்த எந்திரங்களின் மூர்க்கத்தனத்தில் பூமி ஒரு குழந்தையைப் போலத் துடிக்கிறது. சுற்று வட்டார விவசாயிகளின் வீடுகள் நடுங்குகின்றன. மரங்களும் செடி கொடிகளும் வாடித் துவண்டு கருகுகின்றன. வழக்கமாக நீர் அருந்திய குளம் குட்டைகள் வறண்டு போனதால் போகுமிடம் தெரியாமல் பிரமை பிடித்தாற்போல் அலைகின்றன, கால்நடைகள்.

நீர்வளம் கொழித்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தை இரண்டே ஆண்டுகளில் சுடுகாட்டுப் பொட்டலாக மாற்றியதே கொக்கோ கோலா நிறுவனம், அது இப்படித்தான

நன்றி தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?

-----------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

3 comments:

b said...

ஒரு முக்கியமான விடயம். இம்முறை சென்னை சென்றபோது எந்த இடத்திலும் தண்ணீர்ப் பஞ்சத்தை நான் காண நேரவில்லை.

அந்த அளவிற்கு எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கிறது. மழைக்காலம்கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கீதா said...

மூர்த்தி.. தண்ணீர் பஞ்சத்தை 'நீங்க' பார்க்கவில்லை தானே தவிற தண்ணீர் பஞ்சமே இல்லைணு சொல்ல முடியாது. கொஞ்சம் விருகம்பாக்கம் பக்கம் போய் பாருங்க.

கீதா
http://geeths.info

தமிழரங்கம் said...

குடிக்கம் நீரையே வியபாரம் செய்து பணம் சம்பதிக அனுமதிக்கும் எமது அடிமை மோகம் பற்றி கேள்வி இது. எமது மனித தன்மை பற்றி இது கேள்விக்கு உள்ளாக்கின்றது.? இது சொந்த மனைவியையே படுக்கவிட்டு பணம் சம்பதிக்க, பாய்விரித்த தொழில் நடத்துவதற்கு நிகரானது. அடுத்து தேசியத் தன்மை வாய்ந்த, இயற்கையான குடிபானங்களை அழிக்கும் வக்கிரம் பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. குஸ்பு எதோ சொன்னா என்றவுடன் விழுந்தடித்து புலம்பும் பல்லவிககள் அப்பால், சில பன்னாட்டு கொள்ளைக்காரர்கள் சூறையாட அனுமதிக்கும் எமது மௌனம் சார்ந்த வெக்கங் கெட்ட மனக்கேட்டை என்ன என்பது.