தமிழ் அரங்கம்

Saturday, June 21, 2008

சாராயச் சாவுகள் : கொலைகாரர்கள் யார்?

மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை தமிழகத்துக்குக் கடத்தி வரவும், எல்லையோரக் கிராமங்களில் விற்பனை செய்யவும் அனுமதித்து, சாராயக் கும்பலுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழகப் போலீசு, தற்போதைய சாராயச் சாவுகள் மூலம் தமது கிரிமினல் குற்றங்கள் வெளிவரத் தொடங்கியதும் அவற்றை மூடி மறைக்க பல தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது. கர்நாடகாவுக்கு வேலைக்குச் சென்றவர்கள் அங்கு விற்ற விஷச் சாராயத்தைக் குடித்து மாண்டதாகவும், தமிழகத்தில் கள்ளச் சாராயமே கிடையாது என்றும் புளுகி வருகிறது. மேலும், இறந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், பிரேதப் பரிசோதனையால் மாண்டவரின் உடல் விகாரமாகி விடும் வழக்கு வாய்தா என்று கோர்ட்டுக்கு அலைய நேரிடும் என்று பீதியூட்டி உடனடியாகப் புதைக்கச் செய்து, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது.

சாராய கிரிமினல் கும்பலிடம் வாங்கி, உள்ளூரில் சாராயத்தை விற்று கைது செய்யப்பட்டுள்ள பலரில் பின்னமங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரும் ஒருவர். இவரும் இவருக்குச் சாராய சப்ளை செய்த மாதப்பாவும் நேற்றுவரை சி.பி.எம். கட்சி ஆதரவாளர்களாக இருந்து, அண்மையில் தளி எம்.எல்.ஏ. இராமச்சந்திரன் ஆசியுடன் வலது கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர். சாராய கும்பலுடன் போலீசும் அதிகார வர்க்கமும் மட்டுமின்றி, புரட்சி பேசும் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கூட்டுச் சேர்ந்து சீரழிந்து கிடக்கிறது.

சாராயம் காய்ச்சி விற்பது என்பது நம் நாட்டில் காலங்காலமாக நடந்து வந்த தொழில்தான். ஆனால், பெரும் சீமைச் சாராய ஆலைகள் வைத்து நடத்தும் தொழிலதிபர்கள் உருவானதும், சாராய உற்பத்தி, விற்பனைக்கு விதிக்கப்படும் கலால் வரியானது அரசு வருவாய்க்கு முக்கிய மூலாதாரமாகியது. அதன் பின்னர்தான், இந்த ஏற்பாட்டுக்கு வெளியே சாராயம் காய்ச்சி விற்பது குற்றத் தொழிலாக சட்டவிரோதத் தொழிலாக்கப்பட்டது. இருப்பினும் வறுமை காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் .. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: