Monday, June 16, 2008

பாசிசத்தின் கூடாரம் தான் தேசம் நெற்

புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார்.

பாரிஸ் கூட்டத்தை திரித்தும், புரட்டியும், தேசம்நெற்றை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக விளம்பரப்படுத்த முனைந்தனர். இதை ஜனநாயகத்தின் பெயரில், அதன் ஜனநாயக விரோதத்தை இட்டுக்கட்டுவது கூட பாசிசம் தான்;. (இதை எழுதிய சுரேஸ் பினாமியா? அண்மையில் கள்ள கிரடிற்காட்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதற்காக, இதே சுரேஸ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தது பலர் அறிந்ததே. இதில் இவர் அறியா வண்ணம் பினாமியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி தேசநெற்றிலும் இவர் பினாமியா? என்ற சந்தேகம் உண்டு.)

கேள்வியே இது தான். தேசம்நெற்றை கண்டிப்பது, இதற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது, அதை பார்க்க வேண்டாம் என்று கோருவது கூட, ஒரு ஜனநாயக உரிமையா? இல்லையா?. இங்கு இதை மறுப்பது தான் பாசிசம்.

தேசத்துக்கு எதிராக ஏன் எதற்கு இவை கோரப்படுகின்றது என்பது தான், அதாவது மக்கள் நலனுடன் தொடர்புடையாத இல்லையா என்பது தான், இதன் நோக்கத்தை தீர்மானிக்கின்றது. ஆனால் தேசம்நெற் சதியாளர்கள், இதை மறுக்கும் ஜனநாயக உரிமையையே ஜனநாயகம் என்கின்றனர். இந்த உரிமையை மறுக்கும் பாசிசத்தை, ஜனநாயகம் என்றனர். இதைத்தான் தேசம்நெற் வளர்க்கின்றது. வெட்கக் கேடான மனித விரோத பாசிச காழ்ப்;புகளாகவே, அவற்றைக் கொட்டி தமது பாசிச அரிப்பைத் தீர்க்கின்றனர்.

தமது இந்த பாசிச காழ்ப்புகளை, முன்னைய இயக்க அடையாளத்தின் ஊடாக முத்திரை குத்துவதாக மாறியது. நாயைவிடக் கேவலமான பாசிசக் குலைப்பு. அவர்களின் அரசியலை வைத்து விவாதிக்க முடியாது, அவதூறுகள் மூலம் பினாற்றுவது தான், இவர்களின் மொத்த அரசியல் ஆகிவிட்டது. அவர்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளனரோ அதே அரசியலைத் தான், இந்த புதிய பாசிச 'ஜனநாயக" ஜாம்பவான்கள் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

சமுதாயத்தின் தேவையுடன் இயங்காத எவையும், சமூகத்துக்கு தேவையற்றவை. அவை சமுதாயத்துக்கு எதிரானவை. இவையோ சமுதாயத்துக்கு எதிராக நஞ்சிடுபவை தான். பொருளை உற்பத்தி செய்தாலும் சரி, கருத்தை உற்பத்தி செய்தாலும் சரி, அது சமுதாய நலனுக்கு எதிரானது என்றால், அவை இந்த சமூக அமைப்புக்கு தேவையற்றது.
.

No comments: