தமிழ் அரங்கம்

Saturday, July 26, 2008

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் : ஊதிய உயர்வு விடுதலை தருமா?

ஊழியர்களின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. ஐ.ஏ.எஸ் தகுதி கொண்ட அரசுச் செயலர்களின் மாதச் சம்பளம் தற்பொழுது ரூ. 28,000/ தான். இதனை, ரூ. 80,000/ ஆக அதிகரிக்க வேண்டுமென ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இதோடு இந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய இதரப் படிகளையும் சேர்த்தால், அவர்களின் மொத்தச் சம்பளம் ரூ. 96,000/ ஆக எகிறிவிடும்.

முப்படைத் தளபதிகளின் சம்பளத்தை ரூ. 90,000/ ஆகவும்; தற்பொழுது ரூ. 8,250/ சம்பளம் பெறும் இளம் லெப்டினென்ட் அதிகாரிகளின் சம்பளத்தை ரூ. 25,760/ ஆகவும்; துணை இராணுவப் படைகளின் தலைமை அதிகாரியின் சம்பளத்தை ரூ. 80,000/ ஆகவும் உயர்த்த வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரையால் 60 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.

அதேசமயம், தற்பொழுது படிகளையும் சேர்த்து ரூ. 5,115/ சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு இனி ரூ. 6,790/ சம்பளம் வழங்க ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த உயர்வு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப்படியை (ரூ. 7,000/) விடக் குறைவானதாகும். கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை 18 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்துக் கொடுக்கப் பரிந்துரைத்துள்ள ஊதியக் குழு, மேல் மட்டத்தில் 60 முதல் 200 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க அறிவுறுத்தியிருக்கிறது.

No comments: