தமிழ் அரங்கம்

Sunday, July 20, 2008

பாரதியின் முரண்பாடுகள் அருவருக்கத்தக்கவை - மருதையன்

படைப்பாளியின் சுதந்திரம் என்பது அநேகமான சந்தர்ப்பங்களில், அது தன்னகங்காரமாக, சமூக விரோதமாக முடிகிறது. அமைப்புக்களில் இல்லாவிட்டாலும், ஓர் அமைப்பில் இணைந்து இயங்காவிட்டாலும், தனி நபராக சமூக உணர்வுடன் உழைக்கும் மதிமாறனைப் போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அதை தரம்தாழ்த்தி உள்ளடக்கத்தை கொச்சைப்படுத்தி சொல்லப்படுகின்ற விமர்சனங்களை நாம் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால், ஒரு தவறின் மீது ஏன் கடுமையாக நான் விமர்சனம் செய்கிறேன் என்றால் அதன் பொருள் என்ன? எனக்கெதிராக ஒரு வாளைத் தயார் செய்து உங்கள் கையில் கொடுக்கிறேன் என்று அர்த்தம். ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால் அது அவர் செய்தாலும், யார் செய்தாலும், நான் செய்தாலும், அதன் பொருள் என்ன? நாளை அதே போன்றதொரு வாய்ப்பில், அதே போன்றதொரு நிகழ்வில், சூழலில் அத்தகைய தவறை நான் செய்வேனாகில் அந்த வாள் கொண்டு என்னை நீங்கள் குத்த முடியும். ஏண்டா அவனுக்குச் சொன்னாய்? நீ என்ன யோக்கியமா? என்று கேட்க முடியும்?
அப்ப ஒவ்வொரு விமர்சனத்தையும் எதிராளி மீது செலுத்தப்படும் அம்பு என்று மட்டும் பார்க்கக்கூடாது. அது தன்னை எய்வதற்கு வாசகர்களுக்கும், மக்களுக்கும் ஏன் எதிரிகளுக்கும் வழங்கப்படும் அம்பு. விமர்சனங்களைச் செய்வதற்குப் பொறுப்பின்மை அல்ல; தைரியம் வேண்டும். அறிவு நாணயம் வேண்டும். அத்தகைய பக்குவத்தை தோழர் மதிமாறன் பெற்றிருக்கிறார். இன்னும் பெற வேண்டும். அவரது விமர்சனங்கள் புதுமைப்படவேண்டும். சிந்தனையும், செயல்களும் செம்மைப்படவேண்டும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.

No comments: