தமிழ் அரங்கம்

Tuesday, May 12, 2009

ஈழப் "போர் நிறுத்தம்": காங்கிரசு - தி.மு.க.கம்பெனியின் கபட நாடகம்

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து

போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு, "இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சாகும் வரை உண்ணாவிரதம்" எனும் சூப்பர் நாடகத்தை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலைக் காட்சியாக அரங்கேற்றினார், இந்த "தமிழின"த் தலைவர்.

இதற்குக் கதை, வசனம், நடிப்பு, இயக்கம் அனைத்துமே அவர்தான். கதாநாயகனும் அவர்தான். கதாநாயகிகள் இருவர். அவர்கள் கருணாநிதியின் தலைமா
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: