தமிழ் அரங்கம்

Friday, May 15, 2009

கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது!

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது, பாரதீய ஜனதா கட்சி. தேர்தல் என்றாலே கருப்புப் பணத் திருவிழா என்பது ஊரறிந்த உண்மை. கட்சிக்குள் "சீட்'' வாங்குவதில் தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்து, ஆட்சி கவிழ்ந்து விடாமல் காப்பது முடிய ஓட்டுக்கட்சி அரசியலில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவது ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அப்படிபட்ட புழுத்து நாறும் ஓட்டுச்சீட்டு அரசியலில் புரண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க., "தாம் ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களுக்குள் தோண்டியெடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்'' எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரசுக் கட்சியோ இக்கருப்புப் பண வேட்டை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "பா.ஜ.க., கருப்புப் பணம் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக''க் குற்றஞ்சுமத்தி வரும் அக்கட்சி, கருப்புப் பணம் பற்றிய உண்மை விவரங்களை வெளியிட மறுக்கிறது. வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ்தாஸ் குப்தா, "இக்கருப்புப் பணம் பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தான் எழுதிய கடிதத்தை அவர்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்துவிட்டதாக''ப் புலம்பி வருகிறார்.

சுவிஸ் வங்கியில்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: