தமிழ் அரங்கம்

Monday, May 11, 2009

காங்கிரசு கயவாளிகளுக்குச் செருப்படி மட்டும் போதாது!

"ஒரு ஆலமரம் விழும்போது பூமியில் அதன் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்''. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதும் டெல்லியிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில், பலர் காங்கிரசு குண்டர்களால் கொல்லப்பட்டது குறித்துக் கேட்டபோது ராஜீவ் காந்தி திமிராகக் கூறிய பதில் தான் இது.

அந்தக் கலவரத்தின் போது காங்கிரசு குண்டர்கள், கையில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு சீக்கியர்களைத் தேடித்தேடிக் கொன்றனர். இதுநாள் வரை கலவரத்துக்குக் காரணமான காங்கிரசு தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் சீக்கியர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவரை வைத்துச் சீக்கியர் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கேட்கும் நாடகம் ஒன்றை நடத்திக் காட்டினார்களே தவிர, குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை.

அந்தக் கலவரத்தைத் தூண்டி விட்டதுடன், சீக்கியர் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்தியதாக ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார், எச்.கே.எல் பகத் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக விசாரணை.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: