தமிழ் அரங்கம்

Friday, November 13, 2009

கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று கோவா மாநிலத்திலுள்ள முக்கியமான வர்த்தக நகரான மார்காவோவின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்கள் யார் என்பது இந்நேரம் தெரியாமல் போயிருந்தால், முசுலீம் தீவிரவாதிகளைக் குற்றஞ்சுமத்தி போலீசும்,தேசியப் பத்திரிகைகளும் "புலனாய்வு' நடத்தியிருப்பார்கள். கோவா சுற்றுலா மையம் என்பதால், இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பாகிஸ்தானின் சதி இது என மைய அரசும் சாமியாடியிருக்கும்.

எனினும், இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் ""விதி'' வேறு மாதிரி விளையாடிவிட்டது. அந்தக் குண்டு திடீரென வெடித்துவிட்டதால், அந்தக் குண்டைத் தமது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கடத்தி வந்த மால் குண்டா பாட்டீல், யோகேஷ் நாயக் என்ற இரு இளைஞர்களும் சம்பவம் நடந்த இடத்திலேயே படுகாயமடைந்து போலீசிடம் மாட்டிக் கொண்டனர். அந்த இரு இளைஞர்களும் சிகிச்சைப் பலனின்றி இறந்து போய்விட்டாலும், அவர்கள் இருவரும் ""சனாதன் சன்ஸ்தா'' என்ற இந்து மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியிருக்கிறது.

அந்த இளைஞர்கள் எதற்காகக் குண்டு வைக்க வந்தார்கள் என்பது குறித்துப் பல ஊகங்கள் கூறப்படுகின்றன. எனினும், இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதா
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: