தமிழ் அரங்கம்

Tuesday, January 19, 2010

யாழ் சமூகம் 20 வருடத்துக்கு முந்தைய மாதிரி ஒரு சமூக அமைப்பல்ல!?

நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.


அவர்கள் யுத்த சிதைவுகளை வைத்துக் கூறவில்லை. சுற்றுவட்டாரத்தில் நடந்த மாற்றத்தை வைத்துக் கூறவில்லை. கால் இடறும் வண்ணம் உள்ள இராணுவ நடமாட்டத்தை வைத்துக் கூறவில்லை. அவர்கள் எதைக் வைத்துக் கூறுகின்றனர்.

அது தன் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அது சார்ந்த வாழ்வியல் முறையையும் இழந்து, நிற்கும் லும்பன் தனத்தை வைத்துக் கூறுகின்றனர். ஆம், இன்றைய யாழ் சமூகம் தன் வாழ்வுசார் சமூகப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கூட இழந்து நிற்கின்றது. இதுதான், இவர்கள் சொல்;லும் செய்தி. அது தன் நுகர்வு வெறியால் வெம்புகின்றது. லும்பன் குணாம்சம் கொண்ட சமூகமாக மாறி, தனிமனிதர்களைச் சுற்றிய ஒரு உலகம் கட்டமைக்கப்பட்டிருகின்றது. லும்பன் தனத்துடன் கூடிய சுயநலம், எல்லா சமூக விழுமியங்களையும் அழிக்கின்றது.

பணம் தான் வாழ்வின் விழுமியமாக, அதை உழையாது பெற்று வாழ்வதும், வரைமுறையின்றி நுகர்வதும் இலட்சியமாகின்றது. உலகமயமாதல் சந்தை முதல் நாடகத் (சீரியல்) தொடர்வரை இதற்கு அமைய, உழைப்பில் இருந்த யாழ் சமூகத்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: