தமிழ் அரங்கம்

Friday, January 22, 2010

அவசரமான தனது தேர்தலில் மகிந்தா தோற்றால், மகிந்தா குடும்பம் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்யுமா!?

இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?


மக்களுக்கு ஒரு சுபீட்சத்தை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்கவா!? இல்லை. இன்னும் ஏழு வருடங்கள், மக்களை ஓடுக்கி அவர்களை சுரண்டி தின்பதற்குத் தான் இந்த அவசரமான தேர்தல் கூத்;து. இன்னும் இரண்டு வருடத்தின் பின் தோதலை நடத்தினால், தாங்கள் வெல்ல முடியாது என்று உறுதியான ஒரு நிலையில் தான், இந்த அவசரமான திடீர் "ஜனநாயகத்" தேர்தல்.

ஆனால் விளைவு என்ன? இன்றே மண்ணை கவ்வி விடுவார் என்ற அச்சம், பீதி மகிந்த குடும்பத்தையே ஆட்டிப்படைக்கின்றது. தோற்றால் ஒரு இராணுவ ஆட்சி மூலம், தங்கள் சர்வாதிகார அதிகாரத்தை தக்க வைக்கும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.

அடுத்த இரண்டு வருடம் பின்னான தேர்தலுக்கான அவசியம் ஏன் இன்று எழுந்தது? எதிர்காலத்தில் மக்களுக்கு எதிரான அரசியல் விளைவுகள் எது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


1 comment:

Unknown said...

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் இவர்கள் பாடம்
கற்றிருப்பார்களோ.