தமிழ் அரங்கம்

Friday, May 23, 2008

தீவிரவாத ஒழிப்பும் போலீசின் அத்துமீறல்களும்

நீதிபதி: எனது மேசையின் மீதுள்ள ஆவணங்கள், ""இவர் முக்தர் அல்ல'' எனத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகையால், இவரின் உண்மையான பெயர் என்ன?
போலீசு அதிகாரி: அஃப்டாப் ஆலம் அன்சாரி என்பது இவரின் உண்மையான பெயர்.நீதிபதி: நீங்கள் தவறான நபரைக் கைது செய்துள்ளீர்கள் என்பதுதான் இதன் பொருள். இந்தக் கொடூரமான தவறு எப்படி நடந்தது?

நீதிபதியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் போலீசு அதிகாரி மௌனமாக நிற்கிறார்.

— இது ஏதோவொரு திரைப்படத்தின் திரைக்கதை வசனம் அல்ல. கடந்த ஆண்டு (2007) நவம்பர் மாதம் உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த உண்மையான விசாரணை இது.
இந்த விசாரணையின் முடிவில் அஃப்டாப் ஆலம் அன்சாரி, கொல்கத்தா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என்பதும், உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்புக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் நிரூபணமாகி, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அப்பாவி அஃப்டாப் தீவிரவாதியாக உருமாற்றம் செய்யப்பட்ட கதையோ, புலனாய்வு என்ற பெயரில் போலீசார் நடத்திவரும் அத்துமீறல்களையும், அவர்களின் அடிமுட்டாள்தனத்தையும் ஒரு சேர அம்பலப்படுத்துகிறது. ""உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக முகம்மதுகாலித், தாரிக் குவாஸ்மி என்ற இரு தீவிரவாதிகளைக் கைது செய்து உ.பி. போலீசு விசாரணை நடத்தியபொழுது, அவர்கள் உ.பி. குண்டு வெடிப்பின் மூளையாகச் செயயல்பட்டவன் "முக்தர் என்ற ராஜு என்ற அஃப்டாப்' என்றும்; அவன் கோரக்புரைச் சேர்ந்தவன் என்றும் சாட்சியம் அளித்தார்களாம். கொல்கத்தாவைச் சேர்ந்த அஃப்டாபையும் முக்தர் எனச் செல்லமாக அழைக்கும் பழக்கம் இருந்ததாலும், அவரும் கோரக்புரைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த இரண்டு பொருத்தங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, கூலித் தொழிலாளி அஃப்டாபைக் குண்டு வைக்கும் தீவிரவாதியாகக் குற்றஞ் சுமத்திக் கைது செய்திருக்கிறது, உ.பி. போலீசு.
.

No comments: