தமிழ் அரங்கம்

Wednesday, May 21, 2008

நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!

நேபாளத்தில் 10.2.2008 அன்று நடைபெற்ற அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் 10 வழக்குரைஞர்கள் சர்வதேசப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 856 பார்வையாளர்கள், நேபாளத்தில் தேர்தல் நடைபெற்ற எல்லாத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். சர்வதேசப் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்தத் தேர்தல் அமைதியாகவும், முறைகேடுகள் இன்றியும் நடைபெற்றது என்று 856 சர்வதேசப் பார்வையாளர்களும் ஒருமனதாக அறிவித்தனர்.

நேபாளத்தில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த மன்னராட்சியை அகற்றும் பொருட்டு நடைபெற்றுள்ள இந்தத் தேர்தல், மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேர்தல் நேபாள மாவோயிஸ்டு கட்சி நடத்திய 10 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் மற்றும் மக்கள் இயக்கம் தோற்றுவித்த சாதனை என்று கூறுவது மிகையல்ல. மன்னராட்சியை அகற்றுவது, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்துவது என்ற இரு கோரிக்கைகளுமே மாவோயிஸ்டுகளால் மட்டுமே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகும்.

எனினும், இந்தத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு மாவோயிஸ்டுகள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அமெரிக்க அரசு கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதனையொட்டி, இத்தேர்தலைக் கண்காணிக்கும் பொருட்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தலைமையில் நூற்றுக்கணக்கான தேர்தல் பார்வையாளர்களும் வந்திருந்தனர்.
.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

tamilcircle தளத்தில் ஓடை வசதி தந்தால் நன்றாக இருக்கும். அது வரையாவது இங்கு முழுமையான கட்டுரைகளைத் தரலாம். நன்றி

தமிழரங்கம் said...

ஓடைவசதி செய்யப்பட்டுள்ளது.