ஐனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் முக்கிய தேர்தல் பிரகடனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையை இல்லாதாக்குதல், மகிந்தாவின் குடும்ப ஆட்சியை – அரசியலை ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Monday, December 14, 2009
Sunday, December 13, 2009
போராளி என்பவன் யார்? – நன்றி விடுதலைப் புலிகள்
புலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் 7 இதழில் கூறினார்கள். எதைச் செய்தால் அது போராட்டமல்ல என்று அன்று சொன்னார்களோ, அதை தாமே கடைப்பிடிக்காமல் மரணித்துப் போனார்கள்.
அன்று மற்றவனை கொல்லவும், ஒடுக்கவும் இதைச் சொன்னார்கள். அதை அன்றிலிருந்து தாங்களே இன்றுவரை செய்து இறுதியில் தற்கொலை செய்து மரணித்துப் ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, December 12, 2009
மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்
ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை
வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது……
ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து
கூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்றிப் பிளந்து
சிக்கிச் சிறகொடிந்து சிறைப்பட்ட புறாவுமாய்
ஜயகோ யாருக்காய் மடிந்தேன் எனக்கேட்கிறான்…
மொத்தமாய் கல்லடுக்கி மூடிக்கிடக்கிறது
தேசத்திற்காய் மோதுங்களென கட்டளையி..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
கடந்த வரலாற்றை சொல்வது "இடதுசாரி" அரசியலுக்கு எதிரானதா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8)
கடந்தகாலத்தில் எம்மக்களுக்கு எதிரான வரலாற்றை இருட்டில் வைத்திருப்பதே, இன்று பலரின் "இடதுசாரிய" பம்மாத்து அரசியலாக உள்ளது. மக்களை அவர்களின் சொந்த விடுதலைக்கு முன்னின்று வழி நடத்த முனையாது செயல்பட்டவர்கள், அதை மூடிமறைப்பதே இன்றைய புரட்சிகர அரசியல் என்கின்றனர். இதை நாகரிகமான பண்பான அரசியல் நடைமுறையுடன் கூடிய தோழமை என்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், இதை அம்பலப்படுத்துவது அவசியமானது. மக்களை வரலாற்று அறிவற்றவராக வைத்திருக்கவே திடீர் மார்க்சிய.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, December 11, 2009
”இப்ப நாங்கள் அழுவதில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பம். என்ன நடக்கிறது எண்டு.”: நேர்காணல் தொகுப்பு : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி
பாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொல்ல வைத்தது, அசோக்கும் குமரனும் தலைமையிலான புளட் (பகுதி 2)
சுழிபுரம் படுகொலை நிகழ்த்தப்பட்டது 25 ம் திகதி கார்த்திகை மாதம் 1984 ம் ஆண்டு.
மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. ஆனால் அதனை மறுத்து துண்டுப்பிரசுரம் வெளிவருகின்றது.
மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.
தள அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்த முன்னணி தோழர்களின் போராட்டம் இவர்களை நோக்கி மேலும் உத்வேகப்பட்டது. இவர்களின் மவுனங்களும் தட்டிக்கழிப்புகளும் கலைந்ததாயில்லை.
தீப்பொறி தனது வெளியேற்றத்தை அறிவித்து (15.02.1985) ஏறக்குறைய இரண்டரை மாதத்தின் பின்னால் புதியதோர் உலகம் (தளத்தில் அரசியலுக்கு .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, December 10, 2009
நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்…? நண்பர்கள் யார்…?
சுயநலம் மனிதனோடு பிறந்தது. ஏதோ ஒருவகையில் எல்லோருடைய சிந்தனையிலும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. நான், எனது, என் குடும்பம், என் உறவுகள் என்ற எண்ணமும் செயற்பாடும் மனித சிந்தனையோடு மேலோங்கி நிற்கின்றது.
இன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.
தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் நேர்மையோடு தன் கடுமையான உழைப்பால் முன்னேறும் மனிதனால் தான் சமூகத்தையும் பாதுகாக்க முடியும். அவனால் தான் இன்னொரு மனிதனுடைய உழைப்பையும், அவன் வாழ்க்கைச் சிரமத்தினையும் புரிந்து கொள்ள முடியும். வேலையெதுவும் இன்றி தொலைபேசியிலும், கம்பியூட்டரிலும்,....... ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
மக்கள் விடுதலை இராணுவமும், புதிய ஜனநாயக கட்சியும் வைக்கும் அரசியல்
மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பெயரில், சமகாலத்தில் இரண்டு முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது.
1. திடீர் மார்க்சியம் பேசியபடி ஆயுதப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.
2. மார்க்சியம் பேசியபடி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி உருவாக்கம் பற்றி பேசுகின்றது.
பாசிச அரசின் யுத்த குற்றங்களாகட்டும், இன்றைய இனவாத வடிவங்களாகட்டும், அதன் தேர்தல் நாடகங்களாகட்டும், மக்களை அதன்பால் அரசியல்மயப்படுத்துவதே மைய அரசியல் வடிவமாகும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான ஒரு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, December 9, 2009
பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா?
ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
மிக நல்ல அரசியல் ஜோக்கும், அரசியல் சேறடிப்பும்
"உங்களுக்கிருந்த ஒரே ஒரு அரசியல் உறவான என் உறவும் துண்டிக்கப்பட்டு அரசியல் அநாதையாக்கப்பட்டீர்கள்"
இது மிக நல்ல அரசியல் ஜோக்.
"1990களின் பிற்பாடு.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, December 8, 2009
யாழ். விதவைகள்
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் "நேர்மை" (பகுதி 1)
தீப்பொறி தன்னுடைய உட்கட்சிப் போராட்டத்தின் இறுதியில் கொலைக்கரங்களிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னமேயே, தளத்தில் மத்திய குழுவிலிருந்த அசோக் குமரன் போன்றோர்களை நோக்கி தள அமைப்புக்களின் நிலைப்பாடுகள் கோபக்கனலாகியிருந்தது. தள அமைப்புக்களானது தளத்தில் தங்கள் முன்னால் நடமாடிய மத்தியகுழுவின் தளப் பிரதிநிதிகளை எல்லாவிதமான புளட்டின் அராஜகங்களுக்கும் பதில் தர வேண்டிய நிலையில் நிறுத்தி போராடிக் கொண்டிருந்தது.
Monday, December 7, 2009
எனது இயக்க இலக்கம் 1825, வரலாற்றை திரிக்கும் அசோக்கிடம் சில கேள்விகள்
தற்போது இனியொருவில் வெளியான றயாகரன் மீதான சேறடிப்புக் கட்டுரை தொடர்பான எழுத்துக்களையும் அதற்கான பதில்களையும் அவதானமாகப் பார்த்துவருகின்றேன். இதில் என்ன வேடிக்கை என்றால் சமூகம் சார்ந்தவர்கள் யார் என்பது பற்றி இடையில் குறுக்கிட்டு எழுதும் நாவலனின் எழுத்துக்கள் தான்.
முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்
நான் யாழ் மாவட்டத்தை ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
சிந்தியகுருதியெலாம் செங்கம்பளமாய் விரித்துப்போட்டபடி.......
வெந்து புண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்தது
மனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியது
சாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்..தப்பிய
பிள்ளைகள் உடலெங்கும் ரவைகளாய்
ரணத்தின் பொழுதுகளிலும்
துரும்பைத்தன்னும் அசையென மனிதம் உறுத்தாதிருப்பது எப்படி......
கனத்துவெடித்து கதறும் முனகலிலும்
சினத்தை தூண்டும் சிறுமையில் எப்படிவாழ முடிகிறது......
இனத்தின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, December 6, 2009
Saturday, December 5, 2009
பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)
Friday, December 4, 2009
நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)
அசோக் தீப்பொறியின் போராட்டத்தையும், தளக்கமிட்டியின் போராட்டத்தையும், பல சிறு குழுக்களின் போராட்டத்தையும், மறுத்தும் திரித்தும், அனைத்தையும் ஒன்றாக இட்டுக் கட்டியதுடன், "எங்களோடும்" என்று கூறி றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ்யுடன் சேர்ந்து நின்றதை மூடிமறைத்ததைப் பார்த்தோம். இந்த வரலாறு தான் இப்படி என்றால், அசோக் நாவலனுடன் சேர்ந்து கடந்தகால மற்றொரு வரலாற்றை திரித்து மறுக்கும் அரசியல் அசிங்கமோ இங்கு இயல்பில் எதிர்ப்புரட்சி அரசியலாகும்.
இங்கு நாவலன் துணையுடன் அசோக் கூறுகின்றார்
அந்த வரலாற்றை இன்று ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
புலிஆண்ட புலத்து மனங்கள்
நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறு
வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்
போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்
நாட்டைக் காட்டிக்கொடுக்கோமென
இரத்தம் தோய்ந்த கரங்களா
ல்புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்…
பழைய எல்லாத்தீர்மானங்கட்கும் மேலானதாய்
வழங்கப்போவதாய் விஞ்ஞாபனங்கள் தயாராகிறது
புலிகளை வைத்து அரசியல் நடத்தியவர்கள்
யாரை ஆ+ரத்தழுவுவதென குழம்பிப்போய்..நாளை
காலமோட்டும் கனவுகள் மட்டுமாய்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, December 3, 2009
வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)
கடந்தகால மனித விரோதங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டதே எம் வரலாறு. படுபிற்போக்கான அரசியல் கூறுகள், தம் வன்முறைகள் மூலம் உண்மைகளை குழி தோண்டி புதைத்தது. சமூகம் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போனது. இதற்குள் சகல பிற்போக்கு சக்திகளும், தம்மை மூடிமறைத்துக் கொண்டே நீச்சலடித்தனர். (வரலாற்று ஆவணங்கள் இணைப்பு)
சென்ற பகுதியில் குறித்த ஒரு ஆவணம் மூலம், வரலாற்றை திரித்துப் புரட்டும் அசோக்கிசத்தை மட்டுமல்ல, "இனியொரு" வின் சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தையும் சேர்த்துப் பார்த்தோம். அதைச் சுற்றி வெளிவந்த 10 ஆவணங்களை, வரலாற்றை திரிப்பவர்களுக்கு எதிராக முதன் முதலாக இந்த கட்டுரை மூலம் உங்கள் முன் வெளிக்கொண்டு வருகின்றோம்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, December 2, 2009
தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத "நேர்மை" அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)
"மக்களை அரசியல் மயப்படுத்த” காடு மேடுகள் எல்லாம் திரிந்து, அடுத்த புத்தாண்டில் (சித்திரையில்) தமிழீழம் என்றவர்கள் இவர்கள். இப்படி "அரசியல் மயப்படுத்த"ப்பட்டவர்களை ஏமாற்றி பிடித்துச் சென்றவர்கள், அதில் ஒரு பகுதி இளைஞர்களை கொன்றார்கள். இது வரலாறு.
இதையா அசோக் புளாட் வரலாறாக சொல்லுகின்றார். இந்த கொலைகாரப் புளட்டை எதிர்த்து புளாட்டில் இருந்த வெளியேறி வாழ வழியற்று வாழும் டேவிட் ஐயா எழுதிய "கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும்" என்ற நூலில் 286 படுகொலைகள் பின்தளத்தில் நடந்ததாக எழுதியுள்ளார்.
இப்படி உட்படுகொலையை புளாட் செய்தது. அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தான் அசோக்.
கொலைகார முகுந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவர் தான் இன்று ஈ.என்.டி.எல்.எவ் ஏஜண்டாக இருக்கும் ஜென்னி.
டேவிட் ஐயாவுக்கு இருந்த நேர்மை ஒரு துளிதன்னும் இவர்களுக்கு கிடையாது.
யார் இந்த........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, December 1, 2009
வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை ஜாரையும் விட்டு வைத்ததில்லை -ஜீவமுரளி
வரலாறு என்பது மக்களின் போராட்டங்களே என மாக்ஸ் எழுதிவைத்துப் போவதற்கு முன்னரும், அவர் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னரும், மக்கள் வாழ்ந்தார்கள். மன்னர்களும் வாழ்ந்தார்கள். மன்னர்கள் கொலைகளும், மக்கள் போராட்டங்களும் செய்தார்கள். மக்களின் வரலாற்றை மாக்ஸ் மன்னர்களுக்காகவன்றி மக்களுக்காகவே தொகுத்து தந்தார். மாக்ஸின் உழைப்பிலே மனிதர்கள் குறைந்தபட்சம் கற்றுக்கொள்ள........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
