தமிழ் அரங்கம்

Saturday, March 7, 2009

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர்.
வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, March 6, 2009

தமிழ்நாட்டு தமிழர்களும், அவர்கள் போராட்டமும்

ராஜீவ் கொலையின் பின் ஓய்ந்து போன அலை, புலிகளின் தோல்வி நெருங்க மீண்டும் தமிழகத்தில் போராட்ட அலையாக இன்று வெடித்துள்ளது. முன்னைய அலையில் பின் இருந்து பிழைத்த பிழைப்புவாதிகள் பலர், இன்று எதிர்ப்பு நிலையில் இதை ஒடுக்குபவராகிவிட்டனர்.

சிறிய பிழைப்புவாதக் கட்சிகள் இதை கையில் எடுத்து, வாக்குபெற முனைகின்றன. ஆனால் இதற்கு வெளியில் தன்னெழுச்சியான போராட்டங்கள், அரசியல் மயமாக்கல்கள் நிகழ்கின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்த பொதுப் போராட்டம், ஈழத்தமிழர் ஆதரவு தளத்தில் வளர்ச்சி பெறுகின்றது. புலிகள் பற்றிய நிலைப்பாடு விமர்சனத்துக்கு உள்ளாக்காமல், பிழைப்புவாத ஈழ ஆதரவு அரசியலை மறுத்து இது நிகழ்கின்றது.

இங்கு புலிகளின் அரசியல் தளம் நேரடியாக கேள்விக்குள்ளாகவில்லை. ஈழ ஆதரவு பிழைப்புவாத அரசியலுக்கு மாறாக, இயல்பாக தமிழின மற்றும் சர்வதேசியமும் ஒன்றிணைந்த ஒரே தளத்தில் இன்று போராட்டம் நடக்கின்றது.

இன்று ஈழ ஆதரவான அலை, இரண்டு பிரதான அணியாகி வருகின்றது.

1.பாராளுமன்ற பிழைப்புவாத அரசியல்

2.பாராளுமன்றமல்லாத புரட்சிகர அணிகள்

இந்த இரண்டு போக்கில் பாராளுமன்றமல்லாத அணிக்குள் இரண்டு பிரிவுகள் உள்ளது.

1.வெறும் இன (தமிழ் தேசியவாதிகள்) உணர்வாளர்கள்,

2.சர்வதேசியத்தை முன்வைக்கும் சர்வதேசியவாதிகள்

பாராளுமன்ற பிழைப்புவாதிகள் படிப்படியாக அம்பலமாகி, வெறும் புலிக்குள் புலிகளைப்போல் முடங்கி வருகின்றனர். இவர்கள் அ.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும், முன்னைநாள்களின் இயக்க அவியல் அரசியல்

பிரான்சில் 'சமூகப் பாதுகாப்பு அமைப்பு" என்ற பெயரில் மார்ச் 7ம் திகதி, நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள போராட்டம், அதில் தமிழ்ப்பிரதிநிதிகளின் கோசம் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றொரு கபடமுயற்சியாகும். ஆங்கிலம் பிரஞ்சில் ஒன்றையும், தமிழில் வேறு ஒன்றையும் முன்வைத்து, இதில் கலந்து கொள்ளும் பிரஞ்சு மக்களை ஏமாற்றும் சதி முயற்சியுடன் இது ஆரம்பமாகின்றது.

இவர்கள் வைத்துள்ள கோசமோ வேடிக்கையானது. சமகாலத்துக்கு பொருத்தமற்ற வகையில், விடையத்தை திரித்து, சொந்த சந்தர்ப்பவாதத்துடன், இடதுசாரிய வேஷத்தைக் கலந்து அவிக்கின்றனர். அப்படி அவர்கள் வைத்த கோசங்கள் தான் இவை.

1. இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
2. இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!
3. அராஐகம் படுகொலைகள் காணாமல் போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
4. பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
5. பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
6. பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!"


என்கின்றது.
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈழப் போராட்டமும், உலகத் தமிழர்களின் போராட்டமும்

ஒரு இனத்தின் அவலம், உலகின் கண்ணைத் திறக்கவில்லை. மனித அவலத்தை விதைத்தவர்கள், அறுவடை செய்தவர்களிடையே யார் இதற்கு உரிமையாளர்கள் என்ற எல்லைக்குள் உலகம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது.

எம்மக்கள் கேட்பாரின்றி, நாதியிழந்த சமூகமாக அடிமைகளாகி இழிவுக்குள்ளாகி கிடக்கின்றனர். இதற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றவர்கள் கூட, ஏறெடுத்து பார்க்காத வக்கிரம். 'ஜனநாயகத்தை" மீட்பதாகவும், புலித் 'தேசியத்தை" பெற்றுத் தருவதாகவும் கூறித்தான், இந்த மனித அவலம் நியாயப்படுத்தப்படுகின்றது. இதற்குள் விதவிதமான பொறுக்கிகள். இலங்கை, இந்தியா, புலம்பெயர் சமூகம் வரை, இந்த மக்களை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழனே இப்படி என்றால், பேரினவாதத்தின் பின்னால் உள்ள சிங்களவர்கள் எப்படி மனித கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்?.

இப்படி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமும், அது உருவாக்கிய மனித அவலமும், சர்வதேசிய தன்மை பெறவில்லை. மாறாக வெறும் தமிழர் போராட்டமாக சுருங்கிப்போனது. போராட்டத்தின் குறுகிய தன்மையால், இதன் வலதுசாரிய பாசிசத் தன்மையால், ஒடுக்கப்பட்ட உலக மக்களின் அனுதாபத்தைக் கூட அது பெறத்தவறியது.

இதற்கு விதிவிலக்காக இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு காணப்பட்டது. தமிழர் என்ற அடையாளத்தின் அடிப்படையிலான ஒரு பின்னணியில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அமைப்பு வடிவம் பெற்று இருந்ததால், சர்வதேசியதன்மை.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

திருமங்கலம் இடைத்தேர்தல் : பிழைப்புவாதத்தின் விபரீதம்

நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை "திருப்புமுனை ஏற்படுத்திய திருமங்கலம்'' என்று ஆளும் தி.மு.க.வினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களும் தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள திருப்பு முனைத் தேர்தல் என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

திருமங்கலம் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமே வித்தியாசமாகவும் திருப்பு முனையாகவும்தான் அமைந்தது. கடந்த தேர்தலைவிட 18% வாக்குகள் அதிகமாகப் பதிவாகி, அதாவது இதுவரை கண்டிராத வகையில் 88.89% வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகின. தமிழகம், பீகாராக மாறிவிட்டது என்று மைய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி புலம்பியதையடுத்து, திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தலைப் பாதுகாப்பாக நடத்தி "ஜனநாயகத்தை நிலைநாட்ட' இதுவரை கண்டிராத வகையில் 4700 மாநிலப் போலீசாரும் 487 துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.

Thursday, March 5, 2009

மறப்போம். மன்னிப்போம். கொஞ்சம் சிந்திப்போம் - அ.விஜயகுமார்


பெரிய யோசனையுடனும் அகங்காரத்துடனும் ஒரு வெறியுடனும் முழுக்காட்டையும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு உடனே புறப்பட்டுள்ளார். வழியில் குட்டி முயல் ஒன்று போய்க் கொண்டிருந்திருக்கின்றது. டேய் முயலே இங்கே வாடா என சிங்கமகா ராஜா அழைக்க முயல் கூனிக்குறுகி சிங்கத்தின் முன் வந்து நின்றுள்ளது.டேய் குட்டிப் பயலே “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”என இவர் உறும “மகா ராஜா நீங்கள்தான் இந்தக் காட்டுக்கு ராஜாஅதில் என்ன சந்தேகம்” எனக்கேட்டு முயல் கூனிக்குறுகி நின்றுள்ளது. சிங்கமகா ராஜாவுக்கு ஓரளவு திருப்தி. சரி. ஓடுடா என முயலை விரட்டிவிட்டு அப்படியே மறுபக்கம் போக அங்கு ஒரு நரி போய்க்கொண்டிருந்திருக்கின்றது.டேய் நரிப்பயலே இங்கே வாடா என அழைத்து “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”எனக்கேட்க “நீங்கள்தான் மகா ராஜா.அதில் இரண்டாம் கருத்துக்கே இடம் இல்லை”எனக் கூறியுள்ளது.சரி.ஓடுடா என நரியை விரட்டிவிட்டு அப்படியே மான்,கரடி,பன்றி எனக்கேட்டு தான் தான் தலைவன் என்ற தோறணையி.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கொள்கையில் தடுமாறுகின்றோமா தோழர்களே! - தமிழச்சி

கடந்த நவம்பர் 27-ஆம் தேதியில் மரணம் அடைந்த முன்னால் பிரதமர் வி.பி.சிங் குறித்து அமைக்கப்பட்ட "புனித பிம்ப எழுத்துக்கள்" தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு "சமூகநீதிக் காவலர்", "பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர்" என்ற கற்பிதம் இருக்கின்றது. இந்நிலையிலேயே, புதிய ஜனநாயகத்தில் "காக்கை குயிலாகாது" என்ற தலைப்பில் மாற்று விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், பெரியார் முழக்கத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன், "வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்" என்ற தலைப்பில் கடுமையான எதிர்விணை செய்திருக்கிறார். "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" இது என களப்பணிகளில் ஒன்றிணைந்து செயல்படும் தோழமை அமைப்பான ம.க.இ.க. வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "வி.பி.சிங் அவர்களை, குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கிறது ம.க.இ.க." என்கிறார் தோழர் விடுதலை இராசேந்திரன்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது!

சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள பொய்க்கணக்கு மோசடியில் மறைந் துள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றால், ராமலிங்க ராஜுவின் மகன்களை முதலாளிகளாகக் கொண்டு இயங்கிவரும் மேடாஸ் நிறுவனங்களைத் தோண்டித் துருவ வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் கை வைத்தால், ராமலிங்கராஜுஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிஅதிகார வர்க்கம் ஆகியோருக்கும் இடையேயான நெருக்கம் மட்டுமல்ல, மாபெரும் ஊழல்அதிகார முறைகேடுகள் கூட அம்பலத்துக்கு வரும்.

சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, ஹைடெக் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியிலேயே அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். நாயுடு ஆட்சிக்குப் பின் வந்த ரெட்டி ஆட்சியிலோ, ராஜு அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார். காங்கிரசு ஆட்சியில் தான் மேடாஸ் நிறுவனங்களுக்கு "பம்பர்'' பரிசு அடித்தது போல, 12,000 கோடி ரூபாய் பெறுமான ஹைதராபாத் பெருநகர ரயில் திட்டம்; 1,500 கோடி ரூபாய் பெறுமான மச்சிலிப்பட்டிணம் துறைமுகத்திட்டம்; காக்கிநாடாவில் மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டு 40,000 கோடி ரூபாய் பெறுமான பல கட்டுமானத் திட்டங்கள் கிடைத்தன.அரசாங்க விதிகளின்படி.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, March 4, 2009

இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

1.பதிப்புரை : இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை

2.இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

3.இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: மேல் சாதியினரிடையே பதவி வேட்டைக்கான போட்டி

4.தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை ஏன்?

5.இட ஒதுக்கீடு: மீண்டும் மேல்சாதி மேட்டுக்குடிச் சண்டை

6.இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: பதவி வேட்டைக்கான மேல்சாதி சண்டை!

7.ஆதிக்க சாதிகளுக்கிடையிலானசண்டையில் யாரை ஆதரிப்பது?

8.வர்க்கப் போராட்டமா? வர்ண (சாதி) ஒழிப்புப் போராட்டமா?

9.இட ஒதுக்கீடு:புரட்சிகர அமைப்புகளுக்கிடையே வேறுபாடு ஏன்?

10.யார் சூத்திரன்? கேடயம் இதழின் சந்தர்ப்பவாதம்

11.இட ஒதுக்கீடு மோசடிகள்: திராவிடக் கட்சிகளை அம்பலப்படுத்தும் மண்டல்

12.பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்களா? உயர்சாதியினர் கல்வி, உரிமை மறுக்கப்பட்டவர்களா?

13.இட ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதி மன்ற மோசடி

14.வீரமணி கும்பலின் பித்தலாட்டம் அவதூறு!

15.உத்தர்கண்ட் விவகாரம்: இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மேல்சாதியினர் போராட்டம்

16.புரட்சிகர அமைப்புகள் மீது பாய்ச்சல்: த.தே.பொ.க.வின் மூளைக் காய்ச்சல்

17.பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்!

18.இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா?

சமூகத்தில் அக்கறையுள்ளோருக்கு ஓரு வேண்டுகோள்

எம்மினம், எம்நாட்டு மக்கள், உலக மக்கள் சந்திக்கின்ற பல்வேறு ஒடுக்குமுறைகளும், அடிமைத்தனங்களுமே மனித வாழ்வாகி வருகின்றது. இதன் பாலான அக்கறையற்ற சமுதாய கண்ணோட்டங்கள், பொய்யான போலியான பிரச்சாரங்கள் எம்முன் எங்கும் மலிந்து கிடக்கின்றது. இதை எதிர்கொண்டு, சழுதாயத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

இந்த வகையில் நாம் இந்த இணையம் வாயிலாகவே உங்களை சந்திக்கின்றோம். 2008 மே 1 திகதி முதலாக இந்த புதிய இணைய வடிவமைப்பின் ஊடாகவே, உங்களை நாள் தோறும் சந்திக்கின்றோம். இதன் பின் எம்மை நோக்கி வந்தவர்கள், 10 லட்சம் பேர் தலையங்கத்தில் உள்ளவற்றை பார்வையிடல் செய்துள்ளனர். இப்படி கடந்த பத்து மாதத்தில், மாதம் ஒரு லட்சம் வீதம், நாள் தோறும் 3300 பார்வையிடல்கள் நிகழ்ந்துள்ளது. அண்ணளவாக 5400 தலையங்கத்தில் விடையதானங்களைக் கொண்டு, தற்போது இத்தளம் இயங்குகின்றது. இதுவோர் செய்தித்தளமல்ல. மாறாக கற்றுக் கொள்வதற்கானதும், கற்றுக்கொடு;ப்பதற்கானதுமான இணையமாக உள்ளது. இலங்கை, இந்திய தமிழர்களின், பொது சமூக இயக்கம் மீதான பல உள்ளடக்கங்களை கொண்டு, இந்த இணையத்தை ஒழுங்கமைத்துள்ளோம்.

எதையும் ஓரே..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்களுக்கும் புலிக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் கழுதைகள்! - அகிலன்

அண்மையில் இந்திய அமைச்சர்கள் சிதம்பரம், முகர்ஐp போன்றவர்களின் பேச்சுக்கள், இவர்கள் இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களா என எண்ண வைத்தது!

இவர்களது பேச்சில் விஞ்சி நிற்பது, புலிகள் ஆயுதத்தை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதே. இதையே இணைத்தள நாடுகளும் சொல்கின்றன.

தற்போது இலங்கை அரசியலில் "ஓர் i;ரைல்" புலியெதிர்ப்பாளர்கள் அரசை எதிர்க்க மாட்டார்கள், அரச எதிர்ப்பாளர்கள் புலியை எதிர்க்க மாட்டார்கள்! முதலாம் பேர்வழிகள் புலியையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவும், இரண்டாம் பேர்வழிகள பேரினவாதத்தையும் சிங்கள மக்களையும் ஒன்றாகவும் பார்ப்பார்கள்.

இந்திய அரசு புலிகளையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்க்கின்றது. இல்லாவிட்டால் மகிந்தப் பேரினவாதம் தமிழ்மக்களை ஆயிரக்கணக்கணக்கில்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, March 3, 2009

மனிதனைத் தின்னும் இந்துத்துவம்

மனிதனைத் தின்னும் இந்துத்துவம்

"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் குரங்கினத்திலிருந்து வளர்ச்சியடைந்து மனித இனமாய்ப் பரிணமித்த பிறகு உற்பத்தியில் ஈடுபடாதவரையில் மனிதன் நாகரீகமடையவில்லை. சமூகத்திற்கான உற்பத்தியில் அறிந்தோ, அறியாமலோ ஈடுபட்ட பிறகுதான் மனிதஇனம் நாகரீகமடையத் துவங்கியது. உற்பத்தியில் ஈடுபடாத மனிதர்கள் இயற்கையோடு இணைந்த விலங்கின வாழ்வுநிலையிலேயே நீண்ட வருடங்களாகத் தேங்கி நின்றனர்.

உலகம், இயற்கை, மரணம் குறித்தான கேள்விகள் மனிதர்களுக்குள் எழுந்தபோது அவர்கள் பயந்து போனார்கள். குறிப்பாகஇ காடுகளில் இயற்கையின் வேடிக்கைகளைக் கண்ட மனிதன் மேலும் பயந்து போனான். இடி, மழை, புயல் மற்றும் பிறஉயிரினங்களின் ஒலிகள் அவனுக்குகள் பீதியை ஊட்டின. இவைகளையெல்லாம் அவன் தீயவைகளாகக் கருதினான். இவைகள் இல்லாதபோது அவற்றை நல்லவைகளாகக் கருதினான். இளங்காற்றானது பெரும்புயலாவதையும், சிறுதூறல் பெருமழையாவதையும், பயந்தோடும் மிருகங்களே பிறகு பாய்ந்து குதறுவதையும் கண்ட அவனால் நன்மை, தீமை இரண்டிற்குமான வேறுபாடுகளைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. நன்மை, தீமை இரண்டையும் தனித்தனியான ஒன்றாகவும் இவைகள் தனித்தனியாக இயக்கப்படுகின்றன என்றும் எண்ணிக் கொண்டான். இவைகளை இயக்குபவர்கள் யார்? என அறியமுடியாமல் அவர்களை இவனே உருவகப்படுத்தி வழிபட ஆரம்பித்தா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஒன்றிணைந்து இனவழிப்பை நடத்தும் பேரினவாதமும், ஒன்றிணைவை தடுக்கும் புலியிசமும்

தமிழினம் என்றுமில்லாத வகையில் ஒடுக்கப்படுகின்றது. ஒரு இனவழிப்பை நடத்துகின்றது. பேரினவாதம் தன் இருப்புச் சப்பாத்துகள் மூலம், எம்மினத்தின் மேல் காறி உமிழ்ந்தபடி நடைபோடுகின்றது. அதன் யுத்த இயந்திரமோ, தமிழ் இனத்தை உழுகின்றது. தமிழ் கைக்கூலிகளைத் தவிர, தமிழனாக யாரும் சுயமாக இருக்கமுடியாத பொது அடக்குமுறை. யுத்த பூமியில் மட்டுமல்ல, வந்த அகதிக்குள் மட்டுமல்ல, எங்கும் அடக்குமுறை. புலியல்லாத தமிழ் சிந்தனை முறை மீது அடக்குமுறை. சிங்கள இனவாதமோ, பாசிச வடிவமெடுத்து ஆடுகின்றது.

இவையனைத்தும் ஏகாதிபத்தியத்தின் துணையுடன், இந்தியாவின் ஆசியுடன் நடக்கின்றது இந்த இனவழிப்பு. மனித குலத்துக்கு எதிரான வகையில் புலிகள் செய்யும் தவறான ஒவ்வொன்றையும், பேரினவாதம் தன் இனவழிப்பை மூடிமறைக்க, தன் மேல் போர்த்திக் கொள்கின்றது. பேரினவாதம் செய்வதை இன அழிப்பாக வரையறுக்க முடியாது என்று ஐ.நா சொல்லுகின்றது. ஏனென்று கேட்டால் புலிகளும் தமிழரை கொன்று இனவழிப்பை செய்கின்றது என்ற விளக்கம் அளிக்கின்றது. இப்படி ஒரு இனவழிப்பு.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, March 2, 2009

பாரடா… உனது மானிடப் பரப்பை

பாரடா… உனது மானிடப் பரப்பை

டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி வெட்டி அரசியல்

தம் சொந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த, புலியின் பெயரால் தர்க்கம். புலியின் பாசிச வன்முறையைச் சார்ந்து, தமது சொந்த பாசிச வன்முறை மூலம் கொழுத்த திமிர்த்தனமான அரசியல் நடத்தைகள். இதுவே ஈ.பி.டி.பியின் அரசியல் அடித்தளம்.இதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிச் செய்யும் ஈ.பி.டி.பியின் மாமா அரசியலை நியாயப்படுத்த, உடனே புலியை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். இதன் மூலம் எமக்கு எதிராக, தமக்கு தாமே 'ஜனநாயக" வேஷம் போட்டுக்கொண்டு மோதுகின்றனர் பேடிகள்.

மக்களின் எதிரிகள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள், வேஷதாரிகள் என்பதை புரிந்துகொள்ள, அவர்களின் இந்தக் கூற்று சிறப்பான எடுத்துக்காட்டாக உள்ளது. 'தாயகத்தில் நின்று யாரது காலையும் நக்கிப்பிழைக்காமல் தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." தமிழ் மக்களின் எதிரியான ஈ.பி.டி.பியின் இந்தக் கூற்று, எமக்கு பல செய்திகளை சொல்லுகின்றது.

"இரயாகரன் போன்றவர்கள்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இருந்ததையும் இழந்துவிட்ட அவலநிலை தமிழன் நிலை….

தமிழ்மக்களின் தமிழீழவிடுதலைப் போராட்டம் எப்படி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது..., தமிழ் மக்களோடு இருந்த பிரச்சனை என்ன….., தரப்படுத்தலா? தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமா? சிங்களக்காடையர்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதாலா?

தமிழனை அடக்கி ஒடுக்கி அதிகாரம் சொலுத்தியது சிங்களவனா? அல்லது தமிழனைத் தமிழனா? பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தமிழர்கள் தமிழர்களாலேயே அடக்கி ஒடுக்கப்படவில்லையா?

Sunday, March 1, 2009

ரஜா மீதான ஈ.பி.டி.பியின் விமர்சனம் - நாதன்

விபச்சாரம் ஆண்பால் பெண்பால்: இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.

எடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா?… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் புரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வறுமையின் கோரம் : பெற்ற மகனை விற்ற அன்னை

இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை.

ஒரிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தின் குண்டபுட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம்லால் தாண்டி; இவரது மனைவி லலிதா தாண்டி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். பாசன வசதி இல்லாத அரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். மழையை நம்பி விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அவ்விருமாதங்களில் மட்டும்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, February 28, 2009

நான் உன்னோடு பேச வேண்டும்…

தலைவனே…!
இல்லை
நண்பனே…!
இல்லை
அண்ணணே...!


ஆம் அப்படிக் கூப்பிடத் தான் பிடித்திருக்கு
நான் உன்னோடு பேச வேண்டும்
அவசரமாக பேச வேண்டும்
இப்போதே பேச வேண்டும்
இப்போது பேசாவிட்டால்
எப்போதும் பேசமுடியாது…


அன்று…
உன்னை பேசியவன் தான்
நேற்று...


உன்னை பேசியவன் ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்யாது எடுக்கும் எந்த முடிவும், தமிழ் மக்களுக்கு எதிரானதே

புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்த சமாதானம்! எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இதை ஆராய முனைகின்றோம். இடைவிடாத அரசியல் கொந்தளிப்புகள், நிலைமைகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் குழப்புகின்றன. எமது மாறாத கண்ணோட்டத்தையும், பார்வையையும் அதிரடியாகவே திகைப்பூட்டி திணற வைக்கின்ன்றது. ஒரு புரட்சி அல்லது அழிவில், இவை அதிரடியாக நிகழக் கூடியதுதான்.


அதனடிப்படையில், எம்மை நோக்கி ஒரு தோழர் எழுப்பிய கேள்விகளைப் பார்ப்போம்.

'புலிகள் ஆயுதத்தைக் கீழே வைப்பது தொடர்பான உங்கள் கருத்துக்களைப் படித்தேன். இதில் எனக்குக் குழப்பமான விடயம் ஒன்று உண்டு. புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது ஒன்றே சாகும் மக்களைக் காக்க இருக்கும் ஒரே வழி என்று நான் சிந்தித்து வருகிறேன். இந்த முடிவுக்கு நான் வரக் காரணங்களாக அமைவன,

அர்த்தமற்றுப் போன போராட்டமும் இழப்புகளும்…!

எம்மின மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து புலிகள் நடத்துவதோ சதி அரசியல். இதன் மூலமான அரசியல் பேரங்கள், இதை அடிப்படையாக கொண்ட போராட்டங்கள் எல்லாம், விழலுக்கு இறைத்த நீராகின்றது.

புலிகள் தம் தற்காப்பை, தம் இருப்பை தம் சொந்தப் போராட்டம் மூலம் அணுக வேண்டும். அவர்கள் தம் சொந்த வழியில் இதற்கு விடை காணவேண்டும். அதைச் செய்ய வக்கின்றி, மக்களை பணயம் வைத்து, அவர்களை கொன்று குவித்து, இதன் மூலம் அரசியல் பேரம் பேச முனைவது, அடிமுட்டாள் தனமான பயங்கரவாதத் தற்கொலையாகும்.

இதன் பின்னணியில் புலிகள் நடத்தும், நடத்தவிருக்கும் போராட்டங்கள் புலிப் போராட்டம் போல் ஒரு அடி கூட முன்னேறுவதில்லை. அடிசறுக்கி வீழ்கின்றது. கடந்தகாலத்தில் அரசியல் பேச்சுவார்த்ததையை எப்படி தோற்கடித்து தாம் தோற்றனரோ, அப்படி இந்த போராட்டங்களும் நடக்கின்றது.

மக்களை கொன்று குவிக்கும் காட்சிப் படங்களை காட்டி, தமிழ் மக்களை அணி திரட்டியது போல், உலகத்தை அணி திரட்ட முடிவதில்லை. இதற்கு உலகின் ஆளும் வர்க்கங்கள், புலியின் பாணியில் அவை தம் தீர்வை வைக்கின்றது. இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, ஆயுதத்தை கீழே வைக்கக் கோருகின்றது. இதன் மூலம் இந்த மனித அவலத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுகின்றது. இப்படி புலிகள் நடத்திய அரசியல் பாணியில், பதிலடி தருகின்றது. அதற்கு அமைய புலிகள் ஊடாக ஏகாதிபத்தியங்கள் வைத்த கோசங்கள், புலிகளை முடக்க உதவுகின்றது.

உண்மையில் ஏகாதிபத்தியத்தையும், சர்வதேச சமூகத்தையும் நோக்கி எதை வைத்திருக்க வேண்டும்.

1. இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!

2. புலிகளே! மக்களை விடுவி!

3. சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!

4. புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!
இப்படி போராட்டங்கள் அதன் உண்மைத் தன்மையுடன் மக்கள் போராட்டமாக மாறியிருந்தால், உலகம் உங்களை திரும்பி பார்த்திருக்கும். உலகம் ஆயுதத்தை கீழே வை என்று கூறியிருக்க முடியாது. உங்கள் கோரிக்கையை நடைமுறைப்படுத்த கோரியிருக்கும். இதற்கு அமைய யுத்த நிறுத்தத்தை அது முன்வைத்திருக்கும்.

இதற்கு மாறாக ஏகாதிபத்திய சதிக்கு அமைய, போராட்டத்தை புலிக்கு சார்பாக இசைவாக மாற்றி, எம்மை நாமே அழித்துக்கொள்ளும் போராட்டமாக சீரழிந்து போனது. எம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்.

இலக்கற்றும், களைத்தும் போகின்ற கோசங்கள். விளைவு இரந்து வேண்டுவதும், உதவி கோரும் பிச்சைக்கார ஓப்பாரிப் போராட்டமாக மாறிவிடுகின்றது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்த, உணவை அனுப்பி போராட்டத்தை இழிவாடியது போல்தான் இதுவும்.

இதன் பின்னணியில் இதை வழிநடத்துபவர்கள் வெறும் புலிகளல்ல. ஏகாதிபத்திய நோக்குக்கு, இசைவான எல்லைக்குள் போராட்டத்ததை மட்டுப்படுத்தி வழிநடத்தப்படுகின்றது. அந்த வகையில் ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய நபர்கள், அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப போராட்டங்களை வழிநடத்தி முடக்குகின்றனர்.

இவர்கள் நடத்தும் போராட்டங்களில் மேடையேறும் மேற்கு அரசியல்வாதிகள் அனைவரும், ஏகாதிபத்திய நாட்டை ஆளும் அல்லது எதிர் கட்சியில் உள்ள ஏகாதிபத்திய பிரமுகர்கள்தான். அவர்கள் மனம் புண்படாத வண்ணம், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைக்குள், எந்த நிர்ப்பந்தத்தையும் தராத போராட்டமாக எம் மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது.

இப்படி மக்கள் அவலம் மேல் மக்களை திரட்டும் போராட்டங்கள், ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானதாக மாறிவிடுகின்றது. பரந்துபட்ட வகையில் சர்வதேச சமூகத்தை, அணி திரட்ட முடியாத கோரிக்கைக்குள் அரசியல்வாதிகளின் தயவை இரந்து பெறும் எல்லைக்குள் முடங்கிவிடுகின்றது. ஓப்பாரி போராட்டமாக, இரந்துவேண்டும் போராட்டமாக, பிச்சைச்காரர் போராட்டமாக கூனிக்குறுகி விடுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதையே எம் வரலாறு, மீண்டும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

பி.இரயாகரன்
06.02.2008

Friday, February 27, 2009

புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியல் என்பது மாமா அரசியலாகிவிட்டது

நாம் புலியெதிர்ப்பு என்ற சொல்லை முதன் முதலாக அறிமுகம் செய்து பயன்படுத்திய போது, அதற்கென்று ஒரு அரசியல் அர்த்தம் இருந்தது. இதை பலரும் எம்மிடமிருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கிய போது, நாம் பயன்படுத்திய அரசியல் அர்த்தத்தில் இருந்தும் அது திரிந்து போனது.

மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அரசியல் பேசியவர்கள் நிலைப்பாடு மாறிவந்தது. அன்று நாம் கொடுத்த அரசியல் அர்த்தத்தையே அது இழந்துள்ளது. இனி நாம் அவர்களை புலியெதிர்ப்பு அணி என்று கவுரமாக கூட அழைக்க முடியாது. மாறாக புலியெதிர்ப்பு பேசும் மாமாக்கள் என்று அழைத்தலே பொருந்தும்.

நாம் புலியெதிர்ப்பை வரையறுத்த அரசியல் அடிப்படை என்ன? அவர்கள் புலியை முதலாம் எதிரியாகவும், அரசை இரண்டாம் எதிரியாகவும் கூறி, இரண்டையும் தம் எதிரியாகவே காட்டினர். புலியை ஒழித்தலே முதன்மையானது என்றனர். இதனால் அவர்க................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஏகாதிபத்தியத்திடம் தமிழரின் தலைவிதியை ஒப்படைத்தல்!

இப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.

1987 இல் தமிழ் மக்களின் தலைவிதியை இந்தியாவை நம்பி ஓப்படைப்பதாக கூறிய புலிகள், ஒருபகுதி ஆயுதத்தை மட்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். பின்னால் இந்தியாவுக்கு எதிராகவே, புலிகள் ஒரு யுத்தத்தையே நடத்தினர். இந்தியாவின் சதிகளையும், ஆக்கிரமிப்பையும் கூட இதன் மூலம் முறியடிக்க முனைந்த புலிகள், அதற்கு ஈடாக மேலும் பாசிசத்தை தம் தலைக்கேற்றினர். இதன் மூலம் மேலும் மக்களில் இருந்து அன்னியமாகினர். இது எம் வரலாறு.

இப்படி அன்று செய்தது போல் அல்ல, இன்று மாறாக ஏகாதிபத்தியத்திடம் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்து விட்டு சரணடையும் வாய்ப்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

குத்தாட்டமே டைஃபியின் 'கலாச்சாரப் புர்ர்ரட்ச்ச்சி"

Thursday, February 26, 2009

இந்திரா பெத்த புள்ள

இந்திரா பெத்த புள்ள

அன்றைய வரலாற்றுத் தவறுகள்: இன்றைய வரலாற்றுத் தேவைகளாக, ஆக்கப்படுகிறது!

இருந்தாப் போல், ''தேடகம்'' ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது( -மாசி 20 -2009 ''தேசம் நெற்''- ). 1989ல் இருந்து இயங்கி வந்த ''தேடகம்''(நூலகம்), ''தேடல்''(சஞ்சிகை), சமூக சேவைகள், தேடல் பதிப்பகம், கலை இலக்கிய மன்றம் போன்ற உப பிரிவுகளைக் கொண்டு இயங்கி வந்த ''தமிழர் வகைத்துறை வள நிலையம்'' (கனடா), புலிகள் தீயிட்டதன் பின், பத்தோடு பதினொன்றாக யாழ் வீழ்ச்சியுடன் காணமற் போனது.

இன்று புலிகள் மீதான நெருக்கடி, இவர்களை மாம்பழத்துப் புளுவாக துடிக்க வைத்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல! புற்றீசலாக இவர்கள் இன்று வெளிட்டிருக்கும் அறிக்கை, இவர்களின் தொட்டில் கொள்கையின் தொடர்ச்சியே! ''தேடல்'' சஞ்சிகையில் வெளிவந்த கருத்துக்கள் இவர்களின் கருத்துமல்ல. "தேடலில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் எழுத்தாளர்களின் பொறுப்பு என்னும் சம்பிரதாயத்தை தாங்கி வருகிறது" என்ற பரவலான தமிழ் சஞ்சிகைகளின் ''நடு நிலைமை''க்கான தாரகை மந்திரத்தைத்தான் தேடலும் வரிந்து கொண்டிருந்தது. (அன்று புலிகளுக்கும், புலிகள் மீதான கடும் விமர்சனத்துக்கும் இடையே, இவர்கள் தம்மை ''நடு நிலைமை'' ஆளர்களாக இருத்தி வைப்பதற்கே...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, February 25, 2009

காங்கிரஸ் என்றொரு கட்சி

காங்கிரஸ் என்றொரு கட்சி

புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே

எம் மக்கள் போராட்டம் தவறான போராட்டமாகி, பாரிய மக்கள் அழிவை ஏற்படுத்தும் போராட்டமாகி, குறுகிய வட்டத்துக்குள் குறுகிய நலன்களுடன் நடந்த புலிப் போராட்டம் இன்று சிதைகின்றது. இது தன் மீட்சிக்கான எந்த வழியுமின்றி, ஏகாதிபத்தியம் வரை இரந்து வேண்டுகின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அது எதையும் செய்யத் தயாரான நிலையில் உள்ளது. வேறுவழியின்றி தவிக்கின்றது. தவித்த முயலை அடித்துண்ண இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை வலை வீசுகின்றது. அதில் சிக்கி விடுவார்களா என்ற கேள்வி, எம்முன் எழுகின்றது.

மனித உரிமை கமிசனா? போலீசு உரிமை கமிசனா?

இரும்புத்தாது கனிம வளமிக்க சத்தீஸ்கர் மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களான கோண்டு பழங்குடியின மக்களை அம்மாநிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, எஃகு ஆலை நிறுவிச் சூறையாட டாடா, மித்தல், எஸ்ஸார் முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இம்மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு எதிராகப் பழங்குடியின மக்களைத் திரட்டிப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகளை முறியடிக்க, பழங்குடியின மக்களில் ஒருசிலரைக் கொண்டே எதிர்ப்புரட்சி குண்டர்படையை ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் கட்டியமைத்துள்ளனர். இக்குண்டர்படையின் பெயர்தான் சல்வாஜுடும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டேவாடா, பிஜாபூர் மாவட்டங்களில் நக்சல் வேட்டை என்ற பெயரில் இந்தக் குண்டர் படை பழங்குடியின மக்களைக் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கிவருகிறது. பழங்குடியினரின் பல கிராமங்கள் முழுவதுமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான அப்பாவிப் பழங்குடியினர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, February 24, 2009

உண்மையான மனித அவலத்துக்கு எதிராக யாரும் போராடவில்லை!?


இதைப் பற்றி பேசுபவர்களின் அரசியலோ வலதுசாரியம் முதல் இடதுசாரிய பிழைப்புவாதம் வரை உள்ளது. இவர்கள் என்றும் மனிதனாக மனிதனுக்கு என சிந்தித்தவர்களல்ல. மனிதன் தன் விடுதலையை, தான் போராடிப் பெறுவதை, இவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மக்கள் தம் விடுதலைக்காக தாம் போராடுவதை முன்னிறுத்தி, மனித அவலத்தை முன்மொழிபவர்களல்ல.

இந்த கயவாளிப் பயல்கள் என்ன செய்கின்றனர். சிங்கள பேரினவாத அரசிடம் எம் மக்களை கொல்லாதே என்று கோருகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க கூடாது என்பது புலிகளின் பாசிசக் கட்டளை. இதற்குள் மனிதாபிமானம் பற்றி உணர்ச்சிகரமான வித்தைகள். இதன் மூலம், சிங்கள பேரினவாத அரசு கொல்லுவதை நிறுத்திவிடுமா!? எம் மக்களின் எதிரியான இந்தியாவும்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

நேபாளப் பார்ப்பனர்களின் கோரிக்கை,...

நேபாள மன்னரால் நியமிக்கப்படும் தலைமைக்குருவுக்கு அளவு கடந்த அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது. அவர் நினைக்கும் ஆட்களையே கோவிலின் இதர அர்ச்சகர்களாக அவரே நியமித்துக்கொள்ளலாம். மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகுதான், அதுவரை கோடிக்கணக்கில் கோவிலின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது வெளியே தெரியவந்தது. பசுபதி பகுதி வளர்ச்சி அறக்கட்டளையின் பொறுப்பிலிருந்து மன்னர் ஞானேந்திராவும், ராணி கோமலும் துரத்தப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் கொண்டுவரப்பட்டது. புரோகிதர்கள் வக்கிரமான பாலியல் வேட்டை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டு அவர்கள் மக்களால் நையப் புடைக்கப்பட்டிருக்கின்றனர். பசுபதிநாதருக்கு பூசை செய்யும் பிஷ்ணுதாஸ் எனும் 30 வயது புரோகிதன், சென்ற ஜூன் மாதத்தில் கோவிலுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை சாக்லேட் தருவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தான். மக்களால் பிடிபட்டு உதைவாங்கிய பிறகும், "இறைவன் இதனைச் செய்யவே தன்னைப் பூமிக்கு அனுப்பியதாக'' நியாயமும் பேசினான். அப்பூசாரி மூன்று முறை இதே போன்ற .....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பசுபதி நாதர் ஆலயப் பிரச்சினை : பாரம்பரியமா? பிராந்திய ஆதிக்கமா?

மக்களின் பேராதரவுடன் ஆயுதப்போராட்டம் நடத்தி, மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்த நேபாள மாவோயிஸ்ட் கட்சியை அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேற வைத்து, மீண்டும் ஆயுதப் போராட்ட பாதைக்குத் திருப்பித் தனிமைப்படுத்துவது எனும் செயல் உத்தியை நேபாளத்தில் இருக்கும் எதிர்ப்புரட்சி கும்பல்கள் ஒன்றுபட்டு செயல்படுத்தி வருகின்றன. நேபாளத்தில் அன்றாடம் நடக்கும் அற்ப விசயங்களைக் கூடப் பூதாகரமாக்கி மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி எரிச்சலூட்டுவதில் அங்கிருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் கை கோர்த்துச் செயல்படுகின்றன. இதற்கு இந்திய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அன்னிய சக்திகளும், கிரீடத்தை இழந்த மன்னரும் துணை நிற்கின்றனர். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட காத்மண்டு பசுபதிநாதர் கோவில் விவகாரம் இதைத்தான் உணர்த்துகிறது.

நீண்ட காலமாக தென்னிந்திய பார்ப்பனர்களைத்தான் பசுபதிநாதர் சிவாலயத்தின் தலைமை அர்ச்சகர்களாக நேபாள மன்னராட்சி நியமித்து வந்தது. தனக்கு ஏற்பட்டிருக்கும் தீராத முதுகுவலியின் காரணமாக செப்டம்பர் 2008இல் தலைமைக் குருவான மகாபலீஸ்வர பட் வேலையை விட்டு விலகினார். மேலும் இரண்டு பட்டர்களும் அடுத்தடுத்து விலகினர். பல நூற்றாண்டுகளாக பசுபதி நாதருக்கு தென்கன்னடத்தைச் சேர்ந்த பட்டர்களையும், மராட்டி, தெலுங்குப் பார்ப்பனர்களையும் நியமிப்ப..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 23, 2009

 புலிகளின் நடத்தைகளே, அவர்களுக்கு எதிரான சர்வதேச தலையீடாக மாறுகின்றது!

யாரும் தனக்குத் தானே புதைகுழியை வெட்டுவார்களா! ஆம் வெட்டுவார்கள். புலிகள் அதையே இன்று செய்துள்ளனர். அதையும் பல கோணத்தில் வெட்டுகின்றனர். 'மனிதாபிமான மீட்பு" என்ற பெயரில், புலிக்கு எதிரான ஒரு சர்வதேச தலையீடு. இதைக் கோரியே எமது போராட்டங்கள் நடந்தது என்பதுதான், எமது மக்களின் சொந்த அவலம். புலியைக் கொல்ல, புலிகள் போராடியுள்ளனர். இலங்கை அரசு மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையில் இணைத்தலைமை நாடுகளும் சேர்ந்து புலியை கொல்லக் கோரும் போராட்டமாக நடத்தியிருக்கின்றனர் புலிகள்.

புலியெதிர்ப்பு கூட்டத்தின் மெளனம்..? தமிழச்சி


குருரத்தின் எச்சத்தில் உலகத்தமிழர்கள் பதைப்புடன் கதற புலியெதிர்ப்பு கூலிக்கூட்டம் மௌனமாக அங்கீகரதித்துக் கொண்டிருக்கிறது. தலீத்தியம், பெரியாரியம், பெண்ணீயம் பேசும் தறுதலைக் கூட்டம் இந்திய, இலங்கை அரசுக்களின் இனஅழிப்பைக் கண்டும், "உண்மையான விசுவாசிகளாக நாங்கள் இருப்போம்" என மௌனங்களால் அரசியல் மொழி பேசுகிறார்கள் தரம்கெட்டவர்கள்.

ஈழத்தமிழர்களுக்காக.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈ.பி.டி.பிக்கு மனித முகம் உண்டா?!

இல்லை. மாறாக அது மகிந்த சிந்தனையிலான நவீன பாசிசம். புலியின் பாசிசத்தைச் சொல்லி, மகிந்தாவின் வாலாக ஈ.பி.டி.பியின் பாசிசம் ஆட்டம் போடுகின்றது. இதுவோ மற்றொரு புலியிசம் தான். புலி அரசியலில் இருந்து, எந்த வேறுபாடும் இதற்கு கிடையாது. இதற்கு அப்பால் புலி எப்படி தன் பாசிசத்தை நிறுவியதோ, அதையே தான் சிங்கள பேரினவாத துணையுடன் ஈ.பி.டி.பியும் செய்கின்றது.

இதற்கு வெளியில் அது மக்களைச் சார்ந்து நிற்கும் சுயாதீனமான இயக்கமல்ல. 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்ற டக்ளஸ் தேவானந்தா"வின் கூலிக்குழுவோ, ஒரு பாசிச சாக்கடை.

புலிகளின் பாசிசத்தின் முன் ஈ.பி.டி.பி நிற்க முடியாது, பேரினவாத பாசிச சேற்றில் புதைந்தவர்கள். அதற்கு முன்னம் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக இருந்தபோது, இந்தியாவின் கைக்கூலி அமைப்பாகவே இந்தியாவால் வளர்க்கப்பட்டவர்கள். இப்படி ஈழதேச விடுதலை என்ற பெயரில், கைக்கூலி அமைப்பாகத் தான் அவர்களின் வரலாறு அறியக்கிடக்கின்றது. இவர்கள் புலிக்கு மாற்று, மக்கள் சேவை என்ற கூறிவருவது எல்லாம், 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி"யது என்று கூறுவது, தமது இந்தத் கைக்கூலித்தனத்தைத் தான்.

அண்மையில் நாவலன் எழுதிய 'மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்" என்ற .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 22, 2009

உண்மைக்குள் உள்ள பொய்மைகள்

புலியெதிர்ப்பும், புலியிசமும் பேசும் உண்மைக்குள் உள்ள பொய்மைகள் அனைத்தும், மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையின் பாலான எந்த அக்கறையுமற்றதும், குறுகிய நோக்கத்துக்குட்பட்டதுமாகும். மனிதம் சந்திக்கின்ற அவலங்கள் உண்மையானது, எதார்த்தமானது. அதை கண்டு கொள்ளாத கூத்துகள் கோமாளித்தனமானது. இதற்குள் றீல்விட்டு எழுதும் புத்திஜீவிகள். உண்மையை ஒருபக்கம் அடமானம் வைத்துவிட்டு, நடிக்கும் நேர்மையீனம்.

இப்படி புலியெதிர்ப்பு பேசும் அரசியல் புலிகளின் தவறுகளை அடிப்படையாக ஆதாரமாக கொண்டு இயங்குகின்றது. இது தமிழ்மக்களின் எதிரியான அரசை ஆதரித்து, அதன் மனித விரோத செயல்களை நியாயப்படுத்தி, தமிழ் மக்களுக்கு முற்றும் எதிராக நிற்கின்றது. தமிழ் மக்களை புலியிடமிருந்து அரசுதான் மீட்க முடியும் என்கின்றது.

புலியிசம் பேசும் அரசியல், தமிழ்மக்களுக்கு எதிரான அரசின் மக்கள் விரோத செயலை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரம் புலிகளின் மக்கள் விரோ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுதந்திரமாக மக்களைப் பேச விடு!

புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை, மீண்டும் சிறை வைத்துள்ள பேரினவாத அரசு. அங்கு தெருநாயைப்போல் கல்லெறி வாங்கி ஒடியவர்கள், இங்கு மிருகக்காட்சி சாலையில் போல் நேரத்துக்கு பேரினவாத மணியடித்தால் உணவு. மற்றும்படி எங்கும் ஒரே சிறை தான். சுதந்திரமான நடமாட்டம் முதல் சுதந்திரமாக வாய் திறந்து கதைக்க கூட முடியாத மனித அவலநிலை.

இந்த மக்களின் வாழ்வையிட்டு எழும் கூச்சல்கள் கூட போலியானவை. இந்த மக்களின் பெயரில் புலிகளும் அவர்களின் பினாமிகளும் விரும்புவது என்ன? சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதித்து, இதன் மூலம் தமக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் நாலு குண்டு வெடிக்காதா என்பது அவர்கள் கவலை. இப்படி தமது ஆட்கள் மக்களின் பெயரில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற விருப்பம், கவலை.

மறுபக்கத்தில் இந்த திறந்தவெளி சிறையைக் காட்டி, வன்னியில் தாம் தடுத்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்காமல் இருக்க, நியாயம் கற்பிக்க உதவும் என்ற நம்பிக்கை. இதற்கு வெளியில் மக்களையிட்டு எந்த கவலையும் புலிக்கு கிடையாது.

மறுபக்கத்தில் அரசு புலிகளின் ஊடுருவலைக் காட்டி, திறந்தவெளி சிறைக்கூடத்தில் மக்களை அடைத்து வைத்து வடிகட்ட முனைகின்றது. இதற்கு அப்பா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, February 21, 2009

குண்டுகளுக்கு ஓடிக்கொடுக்கும் வன்னி மக்களும் குண்டுச்சட்டி அரசியலும் : ரவி (சுவிஸ்)

புலிகளின் இறுதிக் குறுகிடமாய்ப்போயுள்ள முல்லைத்தீவை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக இலங்கை இராணுவம் அறிவித்து பல வாரங்களாகிவிட்டது. இடமிடமாய்ப் பெயர்ந்த மக்களும் இடம்பெயர்ந்த மக்களும் இந்த வன்னிப் போர்ப் பொறியினுள் அகப்பட்டுப்போயுள்ளனர். விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் பாதுகாப்பு அரணாக பலியாகிப்போயிருக்கிறார்கள் அவர்கள். அவர்களின் வெளியேற்றத்தை புலிகள் தடுத்துவைத்துள்ளதாக எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனங்களும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

அதேநேரம் அரசு அவர்களின் வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் அல்லது உத்தரவாதப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர்களுடன் இருந்த சர்வதேச மற்றும் உள்ளுர் உதவிநிறுவனங்களை வன்னியிலிருந்து வெளியேற்றிய கொடுமை அந்த மக்களிடம் அச்சவுணர்வையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி பாதுகாப்பு வலயத்துள் வருபவர்களில் கொலைசெய்யப்படுபவர்கள்; போக மீதமானவர்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைபடுகிறார்கள். சுற்றிவர முட்கம்பிகள். உறவினர்களைப் பார்க்கமுடியாது. விசாரணைகள் வேறு. அவர்கள் தாம் விரும்பும் பகுதிக்கு சென்று தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிகளுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்


உங்கள் இருப்பு நீடிக்க வேண்டுமென்றால், உங்கள் போராட்டத்தை தமிழ்மக்கள் போராட்டமாக மாற்றுங்கள். போராட்டத்தை உங்கள் நலனில் இருந்தல்ல, தமிழ் மக்கள் நலனில் இருந்து திரும்பிப் பாருங்கள்.

இதன் மூலம் நீங்கள் இழைத்த தவறுளை திருத்துங்கள். நீங்கள் எந்த மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றீர்களோ, அவர்களைப் பாதுகாக்க முனையுங்கள். அவர்களை சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மக்களின் உரிமைகளை, உங்கள் பெயரில் தோற்கடிக்க அனுமதிக்காதீர்கள். இந்தத் தவறை புரிந்து, அதைத் திருத்துங்கள்.

இன்று மரணிக்கும் மக்கள் எங்களுடையதும், உங்களுடையதும் இரத்த உறவுகள். சொந்தங்கள்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : நெல்லுக்குப் பாய்ந்தது தெரிகிறது புல்லுக்குப் பாய்ந்தது…?

இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணம் ரூ. 60,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

1991ஆம் ஆண்டிலேயே உலக வங்கி தொலைபேசித் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டுமென இந்தியாவிற்கு உத்தரவிட்டிருந்தது. அப்போதிருந்த நரசிம்ம ராவ் அரசும் இதைச் சிரமேற்கொண்டு அமல்படுத்தியது. எல்லா பகாசுரக் கம்பெனிகளும் களத்தில் குதித்து, அரசிடமிருந்த தொலைபேசித் துறையின் வளத்தை ஊழல் உதவியுடன் முழுங்க ஆரம்பித்தன. அப்பொது தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் சி.பி.ஐ கட்டுக்கட்டாய்ப் பல கோடி பணத்தைக் கைப்பற்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Friday, February 20, 2009

புலிப்பினாமியாகி வரலாற்றை திரிக்கும் கனடா தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்)


இப்படி மக்களுக்காக முன்பு குரல் கொடுத்த பலர் ஒன்றில் புலியாக அல்லது அரசு சார்பாக மாறி நிற்கின்றனர். இதைத்தான் முன்பு புலி கோரியது. துரோகி அல்லது தியாகி என்றது. இதையே நவீன பாசிட் கோத்தபாயவும் அண்மையில் கூறினான்;. ஒன்றில் நீங்கள் புலி அல்லது அரசு சார்பானவர்கள், இதற்கு வெளியில் எதுவுமில்லை என்றான். இதையே இன்று பலர் தம் சொந்த நடவடிக்கை மூலம் நிறுவி வருகின்றனர்.

ஆழ்ந்த உறக்கத்தில் போன தேடகம், திடீரென நித்திரையால் எழும்பி ஐயோ தமிழ் மக்களை கொல்லுகின்றனர் என்று புலம்புகின்றனர். தம் தேடக லேபலை பயன்படுத்தி, புலிப் பினாமியாகி அறிக்கை வெளியிடுகின்றனர். இதுவரை தமிழ் மக்கள் அழியவில்லiயா? இன்று மட்டும் தானா அழிகின்றனர். எம்மினத்தின் அழிவு வரலாற்றை திரிக்கின்றனர்.

இவர்கள் வெளியிட்ட அறிக்கை, இலங்கை இந்திய அரசின் இனவழிப்புக்; கொள்கையை கண்டித்திருந்தால் நாங்களும் உடன்படமுடியும். ஆனால் அது, இதன் மூலம், புலிக்கு வக்காலத்து வாங்குகின்றது. கடந்த வரலாற்றில் மக்களுக்காக போராடி மடிந்தவர்கள் எல்லார் மீதும் காறித் தூற்றி,...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சத்யம் மோசடி: தனியார்மயத்தின் மகிமை!

ஜனவரி 7, 2009 அன்று இந்தியாவை ஒரு பெரும் பூகம்பம் உலுக்கியதைப் போன்று சத்யம் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, தனது நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும், இந்தியப் பங்குச் சந்தை பரிமாற்ற வாரியத்திற்கும் எழுதிய கடிதத்தில், "கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுவனத்தின் ஆண்டு வரவுசெலவு கணக்குகளில் 7,106 கோடி ரூபாய் அளவிற்குத் தில்லுமுல்லுகள் செய்திருப்பதாக''த் தானே வலிய வந்து ஒத்துக் கொண்ட செய்தி அன்று வெளியாகியது.

"சத்யம் நிறுவனத்திற்குப் பல்வேறு வங்கிகளில் 5,040 கோடி ரூபாய் ரொக்கச் சேமிப்பாக இருப்பதாகவும், அதன் மூலம் 376 கோடி ரூபாய் வட்டி கிடைத்திருப்பதாகவும், 1,230 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், 490 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வர வேண்டிய கடனாகவும் காட்டப்பட்டிருப்பது அனைத்தும் பொய்க் கணக்கு'' என்ற உண்மையை அக்கடிதத்தில் போட்டு உடைத்து இருந்தார், ராஜு. அவர் இந்தப் பொய்க்கணக்குகளின் மூலம் தம்மாத்துண்டு சத்யத்தைப் பன்னாட்டு நிறுவனம் ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கினாரா அல்லது சத்யத்தின் இலாபத்தை உறிஞ்சித் திவாலாக்கினாரா என்பதுதான் இம்மோசடியின் பின் மறைந்துள்ள மர்மம்.

Thursday, February 19, 2009

கல்வியும் தமிழ் தேசியமும்


தரப்படுத்தல் என்ற ஒன்றை இலங்கை அரசு கொண்டு வந்த போது, இனவாத கண்ணோட்டமே அடிப்படையாக இருந்தது. இருந்த போதும் இதை எதிர்த்த தமிழ் பிரிவுகள் பிற்போக்கான மேல் தட்டு வர்க்க கனவுகளை மையமாக வைத்தும், யாழ் மேலாதிக்க மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டே இதை இன அரசியலாக்கினர்.

இந்த மேல்தட்டு கனவுகள் குறுந் தேசியமாகிய போதும், இந்த மேல் தட்டு பிரிவுகள் போராட களம் புகவில்லை. யாழ் மையவாத "எஞ்சினியர், டாக்டர்" கனவுகளை நனவாக்க தொடங்கிய போராட்டத்தில், அவர்கள் பங்குபற்றவில்லை. குறுந்தேசியம் ஆயுதப் போராட்டமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் கூட, தமிழ் மக்களுக்கு இந்த "எஞ்சினியர்கள், டாக்டர்கள்" சேவை ................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இன்றைய தமிழின அழிப்புக்கு எதிராக கூட, புலிகளுடன் சேர்ந்து போராட முடியாது போனது ஏன்?


எமது எதிரியான இலங்கை, இந்தியா, ஏகாதிபத்தியம் அனைத்தும், எம் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது. அவன் எப்படி, எந்த வழியில் எம் மக்களின் மேல் யுத்தம் செய்கின்றானோ, அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். எதிரியின் நுட்பமான ஓவ்வொரு செயலையும் நாம் முறியடிக்க வேண்டும். எதிரி எவற்றை தன் ஆயுதமாக தம் கையில் எடுக்கின்றானோ, அதை தவிடுபொடியாக்க வேண்டும். அதை புலிகள் செய்ய முடிவதில்லை. நாம் அதை செய்யக்கோருகின்றோம்.

ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை புலியிடம் என்ன சொல்கின்றது? ஆயுதத்தை கீழே வை என்கின்றது. மக்களை விடுவி என்கின்றது. இதையே சிங்கள பேரினவாதம் கொக்கரித்தபடி கூறுகின்றது. இதற்கு வெளியில் அவன் பிரச்சாரம் செய்யவில்லை.

இப்படி எதிரி தமிழ் மக்களின் நண்பனாக, மனிதவுரிமைவாதிகளாக தன்னை காட்ட முனைகின்றது. புலிகளை இதன் எதிரியாக காட்டுகின்றது. இதுதானே உண்மை.

இந்த பிரச்சாரம்,........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கந்தலானது அமெரிக்க மாயை!

அமெரிக்காவில் நேற்று வரை மிகவும் புகழ்பெற்ற நிதி நிறுவனமாக இருந்து வந்த பெர்னார்ட் எல். மடோஃப் இன்வெஸ்மென்ட் செக்யூரிட்டீஸ் என்ற "பிளேடு கம்பெனி' இன்று குப்புறக் கவிழ்ந்துவிட்டது. நேற்று வரை அமெரிக்காவின் மிகச் சிறந்த நிதி முதலீட்டு நிபுணராகக் கொண்டாடப்பட்ட அந்நிறுவனத்தின் அதிபர் பெர்னார்ட் மடோஃப், இன்று பண மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு "420'' குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிறுவனம் ஏறத்தாழ 5,000 கோடி அமெரிக்க டாலர் (இரண்டு முதல் இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீட்டாளர்களின் பணத்தை ஏப்பம் விட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை சூதாடி மடோஃபின் நிறுவனம் இத்துணை பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க அரசின் எந்தவொரு புலனாய்வு அமைப்பும் ஆராய்ந்து கண்டுபிடித்து விடவில்லை. மாறாக, நமது நாட்டின் சத்யம் நிறுவன அதிபர் போல, பெர்னார்ட் மடோஃபே தனது நிறுவனம் செய்துள்ள பண மோசடிகளை ஒத்துக் கொண்டுவிட்டார். இத்துணைக்கும் மடோஃப் "முதலீடு' என்ற பெயரில் நடத்தி வந்த மோசடிகள், கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிக்கலானதும் அல்ல.

Wednesday, February 18, 2009

இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

நிலச் சூறையாடலில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், பொருளாதார அடிப்படைகளையும் பரந்த தளத்தில் சிங்கள இனவாதிகள் அழித்தொழித்துள்ளனர். இதைத் தமிழ் தேசியம் இன்று வரை எதிர்த்துப் போராடவில்லை. குறுந் தேசியமல்லாத தேசிய போராட்டம் இந்த நிலம் சார்ந்தும், அந்த மக்களின் உழைப்பு சார்ந்தும் போராடியிருக்க வேண்டும். பிரதானமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அடிப்படையாக கொண்டு யாழ் தேசியமாகவே குறுந் தேசியம் வளர்ச்சி பெற்றது. சூறையாடப்பட்ட நிலத்தில் வாழ்ந்த மக்களையிட்டும், அவர்களின் அடிப்படை பொருளாதார வளங்கள் சார்ந்தும் தேசியத்தை முன்னெடுக்கத் தவறி, குறுந் தேசியத்தை தனது அரசியலாக்கியது.

தேசிய அழிப்பில் பாரம்பரிய நிலம், அதன் மேலான பொருளாதாரம், அது சார்ந்த பண்பாடுகள், அதை அடிப்படையாகக் கொண்ட மொழி அழிக்கப்பட்டது. தேசிய அழித்தொழிப்பு வரலாற்றில் முக்கியமான இரண்டில் இது ஒன்றாகும். மற்றையது மலையக மக்கள் மேல் நடத்தப்பட்ட ஒடுக்குமுறையாகும். இவை இரண்டிலும் தொடங்கிய இனவழிப்பு விரிவாகி பல்வேறு துறைகளிலும் மாறிச்சென்றது..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களின் எதிரிகளோ பலர்


இதை அண்டி வாழும் ஓட்டுண்ணிகளையும், தமிழ் சமூகம் பல்வேறு தளத்தில், வௌ;வேறு முகத்துடன் அடையாளம் காண்கின்றனர். ஆனால் இந்த எதிரிகள் பற்றி மயக்கம், தெளிவின்மை தமிழ் சமுகத்தில் சூழல் சார்ந்து, ஒரு முரண்பாடாக இருப்பதும் உண்மை. இது மக்களை மக்களுக்காக போராட வைப்பதை தடுத்து நிறுத்துகின்றது.

எம் அனைத்து விமர்சனமும், முயற்சிகளும், தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட வழிகாட்டுவது தான். தமிழ் மக்கள் வௌ;வேறு தளத்தில் சந்திக்கின்ற நெருக்கடிகளை பொதுமைப்படுத்தி, அதை நோக்கி மக்களின் செயலை கோருவதுதான். இதற்கு வெளியில் வேறு எந்த அரசியல் நோக்கமும் எம்மிடம் கிடையாது. எந்த குறுகிய அரசியலை நாம் ஆதரிக்கவும், இதன் பின்னால் செல்லவும் போவதில்லை. மக்களின் விடுதலைக்கு உதவாத, எந்த இடைக்கால வழிகாட்டலையும் தீர்வுகளையு.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிங்கள பேரினவாதம் மக்களை படுகொலை செய்வதில் இருந்து மீட்க மறுத்து, அதற்கு உதவியதால் எமது ராஜினாமா

இன்று சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களை கொத்துகொத்தாக கொல்லுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கவே தாம் போராடுவதாக கூறிய புலிகள், தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு பதில், அவர்களைப் பலியிட வைக்கின்றது. பின் அதை தம் சொந்த சுயநலத்துக்காக பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழ்மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை புலிகள் இன்று மறுத்து நிற்கின்றனர். இந்த வகையில் இன்று தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, தமிழ் மக்களுக்கும் பொது அமைப்புகளுக்குமே உண்டு. ஆனால் பொது அமைப்புகள் புலிகளின் வால்களாக மாறி, தமிழ்மக்களை கொல்வதை ஊக்குவித்து அதை வைத்து பிரச்சாரம் செய்கின்றது.

இதை மறுத்தால் புலியின் சர்வாதிகார வழியில் அணுகுகின்றது. இதுபோல் தான் 1985 களில் பின்னால் எம் மண்ணில் இருந்து சகல மாற்றுக் கருத்துக்களையும், மிக திட்டமிட்ட முறையில் புலிகள் அழித்தொழித்தனர். அத்துடன் எம் மண்ணில் இருந்த சகல பொது.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, February 17, 2009

புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்

தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது. இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.

புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது. மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள், அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.

இதன் வரலாற்று வேர் ஆழமானது. பேரினவாதம் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்களை எதிர்கொள்ளவே இயக்கங்கள் தோன்றின. அவை படிப்படியாக சமூகவிரோத குண்டர் குழுக்களாக, கொலைகாரக் குண்டர்களாக, மாபியாக்களாக, அன்னிய கூலிக் குழுக்களாக சிதைந்து சின்னபின்னமாகினர். இதன் மூலம் மொத்த மக்களையும் தமக்கு எதிராக நிறுத்தினர். இவர்களிள் இந்த சொந்த நடத்தையைத்தான் தேசிய விடுதலை என்றனர். மக்களுக்கு எதிரான இந்த துரோகத்தையும், சமூக விரோதத்தையும் எதிர்த்தவர்களை, துரோகியாக காட்டிக் கொன்றனர்.

இந்த மக்கள் விரோத அரசியல்..................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பகுத்தறிவை இல்லாதாக்கும் பிரச்சாரங்கள்

ஒரு சமூகத்தின் அவலம், எதையும் சுயமாக சீர்தூக்கி பார்க்க முடியாது இருத்தல் தான். பகுத்தறியும் மனித உணர்வை இழந்து, மலடாகி வாழ்தல் தான். மற்றவர்களின் சுய தேவைக்கு ஏற்ப, என்னை நான் அறியாது இழத்தல் தான். என் உழைப்பு மற்றவனால் சுரண்டப்படுவது தெரியாது நாம் எப்படி இருக்கின்றோமோ, அப்படித்தான் இதுவும்.

இதற்கு அமைய நாம் மனிதத்தன்மை இழந்து விடுகின்றோம். உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் எந்த இடைவெளியும் இன்றி போகின்ற சமூகம், சமூகத்தில் நிலைத்து நீடித்து நிற்க முடியாது. மற்றவர்களின் தேவைக்குள் சிதைந்து போகின்றது.

இதைத்தான் புலிகளும் அரசும் செய்கின்றது. ஒருபக்கத்தில் மக்கள் அல்லலுற்று அவலப்படும் எத்தனையோ விதமான வாழ்க்கை. மறுபக்கத்தில் இதன் மேல், அரசும் புலிகளும் நடத்துகின்ற பிரச்சாரப் போர். இதில் எதை கேட்கின்றனரோ, அதை நம்புகின்ற நிலையில்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 16, 2009

இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

"ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்கு சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ்

தமிழ் மக்களின் தம்மை ஒரு தேசியமாக இனம் கண்டு போராடுமளவுக்கு, சிங்கள பெரும் தேசிய இனவாதிகளின் இனயொடுக்குமுறை காணப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் தொடங்கிய இனவாத ஒடுக்குமுறை, சுதந்திரத்தின் பின் வேகம் பெற்றது.
இது தமிழ் இனத்துக்கு எதிராக மட்டுமல்ல, மற்றைய சிறுபான்மை இனங்கள் மேலும் கையாளப்பட்டது. இந்த பெருந்தேசிய இன ஒடுக்குமறைக்கு தமிழ் இனவாதிகளும் காலத்துக்கு காலம் ஒத்துளைத்து, இனவாதத்தை புரையோட வைத்தனர். இந்த இனவாத அரசின் கட்டமைப்புக்கு காலத்துக்கு காலம் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் பல வழிகளில் தூணாகினர். இது இன்று வரை இது ஒரு அரசியலாகவுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் இனவாதம் வர்க்கப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஒரு அரசியலாக வளர்ச்சி பெற்ற போது, அதை இடதுசாரிகள் எதிர்த்து தொடர்ச்சியான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. பராளுமன்ற எல்லைக்குள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

யூத இனவெறி பயங்கரவாதப்பேயாட்டம்

பாலஸ்தீன மக்களின் மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரையும், முற்றுகையையும் கிறிஸ்துமஸுக்குப் பிறகு இசுரேல் மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இடையே கையெழுத்தான "ஆஸ்லோ'' சமாதான ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காசா முனையைத்தான் இப்பொழுது இசுரேல் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

காசா முனை மூன்றுபுறம் இசுரேலையும், மற்றொருபுறம் எகிப்தையும், மத்தியத்தரைக் கடலையும் எல்லையாகக் கொண்ட, 270 சதுர கிலோமீட்டரே பரப்புடைய சிறிய நிலப்பரப்பாகும். காசா முனையில் இருந்து ஒரு பொருள் வெளியேற வேண்டும் என்றாலோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் காசா முனைக்கு உள்ளே வர வேண்டும் என்றாலோ, அதற்கு இசுரேலின் அனுமதி கிடைக்க வேண்டும். இவ்வளவு ஏன், காசா முனையைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனர், பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசமான மேற்குக் கரையில் வாழும் மற்றொரு பாலஸ்தீனரையோ, தனது உறவினரையோ சந்திக்க வேண்டும் என்றால்கூட, இசுரேலின் அனுமதியைப் பெற வேண்டும். அந்தளவிற்கு காசா முனை இசு ரேலின் முற்றுகையின் கீழ் இருந்து வருகிறது. அதனால்தான் காசா முனை உலகின் மிகப் பெரிய திறந்தவெளி சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது. இசுரேலின் இக்காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாகத்தான் 15 இலட்சம் பாலஸ்தீனர்கள் காசா முனையில் வாழ்ந்து வருகின்றனர்.

போர் என்றால்கூட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மட்டும்தான் தாக்க வேண்டும் என்கிறது, சர்வதேசச் சட்டம். ஆனால், வீடுகள், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகக் கட்டிடங்கள், மின் நிலையங்கள், குடிநீர் இறைக்கும் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிக்கும்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 15, 2009

உண்மைகளும்; கற்பனைகளும்

மிகவும் நெருக்கடிமிக்க வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்;. அதிரடியான அரசியல் நிகழ்வுகள் கூடிய ஒரு காலம். நாளை நாம் திட்டமிட்டபடி, வாழமுடியாது. இந்தியாவினால் அனைத்தும் இன்று தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்தியா உருவாக்கிய புலி மற்றும் புலி அரசியல் ஊடாகவும், இலங்கை அரசின் ஊடான இந்திய அழித்தொழிப்புக்கு ஊடாகவும், எம் வாழ்வில் இந்தியா தலையிடுகின்றது. எம் மக்களின் வாழ்வு முதல் மக்களின் சுயநிர்ணயஉரிமை வரை, இந்தியாவின் நோக்குக்கேற்ப அவை அழித்தொழிக்கப்படுகின்றது. இதை புரிந்து கொண்டவர்களை அன்று அழித்தனர். எஞ்சியவர்களை அரசியல் ரீதியாக சிதைந்தனர். ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

உறைபனி உணர்த்தும் உண்மைகள்

உறை பனியை நெருங்கிவிட்ட நடுநடுங்க வைக்கும் கடுங்குளிர்; நூறு அடிக்கு முன்னே இருப்பது கூடத் தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டம்; வாகனங்கள், ரயில்கள், விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன; குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் உறைந்து சில்லிட்டன என்று கடுங்குளிரின் தாக்கத்தை கொட்டை எழுத்துக்களில் நாளேடுகள் படம் பிடித்துக் காட்டின. வாட்டியெடுக்கும் கடுங்குளிரில் கிழிந்த சாக்குகளையே போர்வையாக்கிக் கொண்டு, கைய்யது கொண்டு மெய்யது பொத்தி நடுங்கிக் கொண்டிருந்த வீடற்றநடைபாதைவாசிகளான உழைக்கும் மக்கள் குளிரில் விறைத்து அடுத்தடுத்து மாண்டு கொண்டிருந்தனர். பீகாரில் 60 பேர்; உ.பி.யில் 50 பேர்; டெல்லியில் 20 பேர்; பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானில் 20 பேர் என குளிருக்குப் பலியான மக்களைப் பற்றிய செய்தியை இதே நாளேடுகள் துணுக்குச் செய்தியாக வெளியிட்டு அலட்சியப்படுத்தின.

Saturday, February 14, 2009

மக்களுக்காக போராட மறுக்கும் புலியும், போராட்டத்தை வழிகாட்டத் தெரியாத தற்கொலை சமூகமும்


எப்படி போராடுவது என்று தெரியாது, போராட முனைபவனை வழிகாட்டத் தெரியாது, உணர்ச்சிக்குள்ளும், தற்கொலைகளாகவும், குடிகாரராகவும், சதா புலம்புபவராகவும் சமூகத்தை எட்டி உதைக்கின்றனர்.

இதன் விளைவுதான் முருகதாசன். அவன் தன் சொந்த முரண்பாட்டையே, தொடர்ந்து போராடுங்கள் என்று கூறிவிட்டு, தான் செத்துப் போகும் அவலம். இதுதான் அவனின் வழிகாட்டல். அவனை வழிகாட்டிய புலியின் அரசியல். தற்கொலைக்கே சமூகத்தை இட்டுச் சென்றவர்கள் தானே புலிகள். இவர்கள் எதை எப்படி உற்பத்தி செய்கின்றனர்?

என் வீட்டில் நடந்த உதாரணம். 11 வயதே நிரம்பிய எனது மகனை, முன்பின் தெரியாத அதே வயதே ஓத்த தமிழ் சிறுவன் அணுகி, 'நீ சிங்களவனா என்று கேட்டு, நீ சிங்களவன் எனின் உன்னைக் கொல்வேன் என்றான்". மகனின் பதிலுக்கு முன்னமே, இதை கூறிவிட்டு செல்லுகின்றான். இதை நாம் முறையிட்டால், இந்த நாட்டின் சட்டபடி கிரிமினல் குற்றம். எம்மை புலிநாட்டு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களின் பாதுகாவலன் தானல்ல என்ற நிலையை உருவாக்கும் புலிகள்

சிங்கள பேரினவாதம் தன் சுதந்திரமாக பிரிட்டிஸ்சார் கொடுத்த சுதந்திரத்தையே கருதியது முதல், தமிழினத்தை ஓடுக்குவதன் மூலம் தான் சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. தமிழ் தலைமைகள் இதனுடன் ஓத்துழைத்தும், விலகி வந்த நிலையில், சிங்கள பேரினவாத ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடும் ஆயுதப் போராட்டமாக அது மாறியது. இப்படி கடந்த 30 வருடமாக பண்புமாற்றம் பெற்ற இந்த போராட்டத்தை பயன்படுத்தி, ஒரு இன அழிப்பாகவே பேரினவாதம் நடத்திவருகின்றது.

கடந்த காலத்தில் சிங்கள இனவாதத்தை எதிர்கொண்ட தமிழ் தலைமைகள், ஏன் இந்த இனவாதம் என்ற அடிப்படையில் இருந்து அதை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதை பயன்படுத்தி, அரசியல் செய்யும் தம் சொந்த பிழைப்புத்தனத்தையே தமிழின உணர்வாக்கினர். இதன் அடியில் இருந்து வந்த ஆயுதப்போராட்டம் அதை மீறவில்லை. புலிகள் ஒரு தனி சர்வாதிகார பாசிச மாபியாக் கும்பலாகவே சீரழிந்தது. அரசியல் ரீதியாக செத்துப் போனவர்கள், மக்களிடமும் அரசியல் ரீதியாக தோற்றனர். இதனால் ஆயுதங்கள் மூலம் தமிழ்மக்களை ஓடுக்கியவர்கள், இன்று சிங்கள பேரினவாத எதிரியுடன் தம் ஆயுதங்களைக்கொண்டு மக்கள் மேலான தம் ஓடுக்குமுறையை தக்கவைக்கமுடியாது தோற்று வருகின்றனர்.

இப்படி சிங்கள ஓடுக்குமுறைக்குள் தமிழ் சமூக....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?

துயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாhவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே வாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் தமது பிழைப்புவாத அரசியலுக்கு கட்சிகள் தீக்குளிப்பை ஆயுதமாகப் பாவிக்கும் கொடுமையான மனப்பாங்குக்கு எதிராக தமிழக மக்கள் நின்றாகவேண்டும். கட்சிகளுக்காகவும் தலைவர்களுக்காகவும் தீக்குளிக்குமளவிற்கு மனித உயிர் மலிவாகிப்போகுமெனில்இ எதிரி எம் மக்களைக் கொல்வதில் மேலோங்கியிருக்கும் மனப்பான்மையை நாம் கேள்விகேட்க அருகதையற்றவர்களாகிவிடுவோம். தமிழக அரசியல்வாதிகள் தொடக்கம் இப்போ புலிகள்வரை இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பு நீண்டிருக்கிறது. இதை அவர்கள் உதாசீனம் செய்வது பொறுப்பற்ற செயல்.

தமிழகத்தில் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தின்போது ஒரு (இலங்கைத்) தாய் தன் இருகரங்களையும் கூப்பி தயவுசெய்து இளைஞர்கள் தமது உயிரை இவ்வாறு அழித்துக்கொள்ள வேண்டாம் என்று கதறியழுதபடி கூறினாள். அவள் தாய். உயிரின் பெறுமதி அறிந்தவள். ஆனால் புலிகளும் தமிழின உணர்வாளர்களும் இந்தத் தீக்குளிப்பை கொண்டாடினார்கள் என்று ஒருவர்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, February 13, 2009

புலிகளே சொல்லுகின்றனர், செய்கின்றனர்.

பொய்யையும், புனைவையும் பாசிசம் 'வோட்டர் மார்க்"காக அடிக்கின்றது. இதை நாம் சொல்லவில்லை. புலிகளே சொல்லுகின்றனர், செய்கின்றனர். மனித அவலத்தை உருவாக்கி, அதை 'வோட்டர் மார்க்" அடித்து, தமிழனின் உணர்ச்சியை தட்டியெழுப்புகின்றனராம். உலகத்திலேயே ஆக படித்த முட்டாள்களைக்; கொண்ட சமூகத்தின், தமிழன் என்ற உயிர் துடிப்பு இப்படி 'வோட்டர் மார்க்" வழியாகத்தான் புலிகள் உருவாக்குகின்றனர்.

இதற்கு இங்கு மனித அவலம் பிரச்சாரப் பொருளாகின்றது. இதனால் மனித அவலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதன் மேல் கற்பனைகள், புனைவுகள், இட்டுகட்டல்கள், பொய்கள் என்று பொழியப்படுகின்றது. இந்த வகையில் இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் நம்பும் வண்ணம், அவர்களை ஏமாற்றும் வண்ணம் 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்ப"தை புலிப் பாசிசம் மறுக்கவில்லை, அதைச்செய்கின்றது. அதைச் செய்யவும்; கோருகின்றது!

நடந்த ஒரு நிகழ்ச்சி, அதையொட்டி புலியின் 'வோட்டர் மார்க்" பிரச்சாரத்தையும் அதில் உள்ள 'மனித அக்கறையையும்" பார்ப்போம். விசுவமடு இடைத்தங்கல் முகாமில் மக்களுடன் மக்களாக வந்த புலிகள், நடத்திய தற்கொலை தாக்குதலை எடுங்கள். இங்கு இதைப்பற்றி புலிகள் எப்படி 'வோட்டர் மார்க்" அடித்து சொன்னார்கள் என்பதையும், இதற்கு பலியானவர்கள் எப்படி நியாயவாதம் செய்தார்கள் செய்கின்றார்கள் என்பதையும் போகிறபோக்கில் பலரும் அறிந்ததுதான். ஆனால் அதன் உள்ளடக்கத்தை உடைத்து பார்த்தால், எம் படித்த அறிவிலித்தனம் புலிக்கூடாகத் தெரியும். மஞ்சள் காமாலை நோய் மாதிரி, எல்லாம் புலிக்கூடாக பார்க்கும் மனிதவிரோத மனநோய் தெரியும். எப்படிப்பட்ட மனித விரோதிகள் நீங்கள் என்ப.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, February 12, 2009

இந்திய சிங்கள அரசுகளின் ஈழத் தமிழின அழிப்புப் போர்! தமிழகமே, விழித்தெழு! போராடு!!

இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் கடந்த நான்கு மாத காலமாக சிங்கள இனவெறி இராணுவம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய போரைத் தீவிரமாக நடத்தி வருகிறது. பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் , கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் முல்லைத் தீவைச் சுற்றி வளைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், ஒட்டு மொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூர போரை நடத்தி ஈழத்தைச் சுடுகாடாக்கி வருகிறது.

தப்பியோடும் போது கைப்பிடித்து வந்த உறவுகளை குண்டுத் தாக்குதலில் பறிகொடுத்து, பிணமாக வீதியோரங்களில் விட்டுச் செல்லும் அவலம்; தென்திசைக் காற்றில் கந்தக நெடியுடன் வீசும் பிணவாடை; உணவில்லை; மருந்தில்லை; குடியிருக்கக் குடிசையுமில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த கணம் உயிரோடு இருப்பதற்கான உத்தரவாதமே இல்லை. வன்னி நிலப்பரப்பெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்த நான்கு இலட்சம் ஈழத் தமிழர்கள், இன்று முல்லைத் தீவின் காட்டுப்பகுதிகளில் விரட்டி முடக்கப்பட்டுள்ளனர். தமிழன் வாழ்விடங்களை அழித்து, தமிழன் உயிர்களைக் குடித்து கிளிநொச்சி, ஆனையிறவு, பரந்தன், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் என விரிந்து ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம், முல்லைத் தீவு முழுவதையும் தமது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழினத்தை அழிக்க உதவும் பாசிசப் பிரச்சாரங்கள்

காயடிக்கப்பட்ட தமிழனை, புலிகள் கூறுவது போல் 'வோட்டர் மார்க்" மூளைகளையே பாசிசம் உற்பத்தி செய்கின்றது. மனிதனின் பகுத்தறியும் அறிவையே மறுப்பதும், உருட்டல் மிரட்டலை மனித உணர்வாக வளர்ப்பது, நேர்மையற்ற சமூக நடத்தையை மனிதப்பண்பாக கொள்ள வைப்பதுமே பாசிசத்தின் தேர்வு.

அப்பாவி மக்கள் மேல் திணிக்கும் இந்த மனிதத்தன்மையற்ற பாசிச நியாயவாதங்கள், அபின் உண்டவர்கள் போல் புத்திபேதலித்தவர்களை உருவாக்குகின்றது. மதப்பிரச்சராம் போல், இதன் தர்க்கவாதத்தில் நாணயம் எதுவுமற்று அனைத்தையும் அப்படியும் இப்படியும் திரித்துப் புரட்டுகின்றது.

தமிழினம் சந்திக்கின்ற மனித அவலம், அந்த அழிவில் இருந்து மக்களை மீட்பதற்கு வழி தேடுவதற்கு பதில், குதர்க்கமாகவே வாதிட்டு தமிழினம் அழிவதற்கு துணை போகின்றனர். இதற்குள் கருத்தை வைப்பவர்களும், வாதிடுபவர்களும், தாம் இன்று வாதிட்டது நாளை தவறு என்று தெரிகின்ற போதும் அதற்காக மனம் வருந்துவது கிடையாது. அதற்காக வெட்கப்படுவது கிடையாது. மாறாக அலட்டிக் கொள்ளாது, புதிய பாணியல் நியாயப்படுத்தி அதை வாதிடுவதும் அரங்கேறுகின்றது.

தமிழினத்தின் இன்றை.................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, February 11, 2009

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள்.

இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.

நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.

வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம்.

உங்கள் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், இன்றும் நீங்கள் மக்களுக்கு செய்யக் கூடியதுண்டு.

1. நீங்கள் கடந்தகாலத்தில் மக்களுக்கு இழைத்த அனைத்து தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை உணரும் வண்ணம், அதை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யுங்கள். நாளை அவர்கள் உங்களை மதிக்கும் வண்ணம், தவறை உணர்ந்ததற்காக நன்றி கூறும் வண்ணம், உங்கள் வரலாற்றை அவர்களுக்கு விட்டுச்செல்லுங்கள்.

2. நீங்கள் மக்களை விடுவிக்காவிட்டால், அவர்களின் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பேரினவாதம் கொக்கரித்துள்ளது. பேரினவாதம் உங்கள் இரத்த உறவுகளையும் உங்களுடன் சேர்த்து கொல்வதை, நீங்கள் அனுமதிக்க போகின்றீர்களா!? தயவு செய்து அவர்களை விடுவித்து, மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் வரலாற்றை முடியுங்கள். தவறுகள் தவறாக இதனுடனாவது நிறுத்திவிடுங்கள்.

3. உங்களுடன் சண்டையில் நிற்கின்றவர்களில், சண்டை செய்ய விரும்பாதவர்களை விடுவியுங்கள். அவர்களால் சண்டை செய்ய முடியாது. இந்த தவறையும் திருத்திக் கொண்டு, மொத்த தவறுகளையும் ஓத்துக் கொண்டு, அதற்காக போராடுங்கள். அதன் பின் ஒருநாளும் சரண் அடைந்து விடாதீர்கள். மக்களுக்காக போராடி மரணியுங்கள். வரலாறு அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றது.

4. நாம் ஏன் தோற்றுப்போனோம்? அதை வழமையான உங்கள் பதிலுக்கு பதில், மனித வரலாற்றில் தேடுங்கள். அதிகாரம் முதல் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருந்தும், பெரும் படையிருந்தும் ஏன் தோற்றோம்? வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள். இதை கடந்தகால மனித வரலாறு காட்டுகின்றது. ஏன் உங்கள் வரலாறு இன்று காட்டுகின்றது. இதை இன்றாவது உணர்ந்து, அதை ஓத்துக்கொண்டு, உங்கள் காலத்தில் அதை திருத்திக் கொள்வதன் ஊடாக, மனித வரலாறு உங்களை போற்றவையுங்கள். தியாகங்களை வரலாறு கொச்சைப்படுத்த விட்டுவிடாதீர்கள்.

கடந்த வரலாற்றில் அதன் தவறுகளையும் உணர்வதன் மூலம், இன்றே வரலாற்றை மாற்றமுடியும். நாளைய தலைமுறை அதை உணரும்; வண்ணம், மக்களை இன்றே நேசிக்க முனையுங்கள். இந்தக் கணமே, அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

மூன்று சகாப்தமாக மனிதத்தை சிதைந்து சின்னாபின்னமாக்கிய உங்களின் அரசியல் வரலாற்றில் இருந்து, உங்கள் இறுதி மூச்சை மனிதத் தன்மையாக்குங்கள். அதை வரலாற்றில் புதைத்து விடாதீர்கள். மொத்த தவறையும் உணர்ந்து, வரலாற்றை சரி செய்யுங்கள்.
பி.இரயாகரன்
03.02.2009

தற்கொலைகள் விடுதலையாகிவிடாது!

தற்கொலைகளே அரசியலாகிப்போன தமிழ்மக்கள் வாழ்வில் முத்துக்குமாரு போன்ற இளைஞர்களின் தற்கொலைகள் எந்தவௌhரு மாற்றத்தையும் ஏறபடுத்திவிடாது. மாறாக மக்களின் அழிவில் அரசியல் புரியும் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்படும் கூத்துக்களுக்கு, ஓர் தென்புகோலாக அமையும். அதுவே வாக்கு வங்கிகளாகவும் மாறும்!

இலங்கையில் சிவகுமாரன் தற்கொலை அரசியலின் பிதாமகன். தமிழ்த்தேசிய அரசியலில் அவன் அன்று எடுத்த நஞ்சுக்குப்பி இன்று சகல புலிகளினதும் கழுத்தில் 'விடுதலைக்" குப்பிகளாக தொங்குகின்றது.

உலகில் எந்தவொரு விடுதலைப் போராட்ட இயக்கமும் கழுத்தில் நஞ்சுக்குப்பியை தொங்கவிட்டு, தற்கொலைப் போரையே வாழ்வாதாரமாகக் கொண்டு, விடுதலைப்போர் நடாத்தியதாக வரலாறு இல்லை. குறைந்தபட்சம் கொள்ளையடிக்கும் பயங்கரவாதக் கும்பல்கள் கூட இதைச் செய்வதில்லை.

புலிகளுக்கு தலைவர் சயனைற் குப்பியை கையில் கொடுக்கும்போது, நீ யாரிடமும் பிடிபடும் சந்தர்ப்பத்தில் இதை அருந்தி அழிந்து போகக் கடவாய் என சபித்தே அனுப்புவார். அதன் விளைவு விடுதலைப் போராளிக்குரிய சகல தன்மைகளையும் இழந்து, ஓர் சாதாரண இராணுவ சிப்பாய் போன்றே களம் செல்கின்றான். நீ எப்படியாவது போராடி மடிந்தால் உன்கடமை முடிந்துவிடும் அவன் கழுத்தில தொங்கும் குப்பி நாளாந்தம் அவனுக்கு அதைச் சொல்லிக் கொணடேயிருக்கும்.

உண்மையான விடுதலை இயக்கங்களினதும், புரட்சிகர வெகுஐனப் போராளிகளினதும் நிலை அதுவல்ல. உன் உடல் பொருள் ஆவி அத்தனையும் மக்களுக்கே! நீ எதிரியிடம் பிடிபடும்போதும் எத்தகைய அடக்குமுறை சித்திரவதைகளுக்கு.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுயதம்பட்டம் + சாதிப்பற்று = தா.பாண்டியன்


2008ஆம் ஆண்டின் "டாப் 10'' அரசியல்வாதிகளுள் ஒருவராக தா.பாண்டியனை ஆனந்த விகடன் வார இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. இதற்காக அவரைப் பாராட்டிப் புகழ்ந்து, அக்கட்சியின் ஒவ்வொரு மாவட்டக் குழுவும் தினமும் அரைப்பக்க விளம்பரங்களை "ஜனசக்தி''யில் வெளியிட்டு வருகின்றன. பாண்டியன் புகழ் பரப்பும் "ஜனசக்திக்கு'' பாண்டியன்தான் ஆசிரியர்.

"இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்த சிவப்புக் கம்பளம்'', "உழைக்கும் மக்களின் உண்மைத் தோழர்'', "தமிழகத்தின் ஆரோக்கிய அரசியல் சூறாவளி', "சிவப்புச் சூறாவளி'', "தொழிலாளி வர்க்கத்தின் விடிவெள்ளி''. — இவை எல்லாம் தா.பாண்டியனார் புகழ்பாடிய விளம்பரங்களில் அவருக்குச் சூட்டப்பட்ட கிரீடங்கள். இவை போதாதென்று அண்மையில் "தானைத் தலைவர்'.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தவறை திருத்த மறுப்பதன் மூலமே, தமிழினம் மேலும் ஆழமாக அழிகின்றது

தவறை புரிந்துள்ளதாக தம்மைக் காட்டிக்கொண்டு நியாயவாதம் செய்பவர்கள், ஓரு நாணயத்தின் இரண்டு பக்கமாகவும் இருக்க முனைகின்றனர். ஓரு பக்கம் தவறு உண்டு என்பதும், மறுபக்கம் தவறை தொடர்வதுமாக உள்ளனர். இவர்கள்தான் ஆபத்தான நயவஞ்சகப் பேர்வழிகள். தமிழினம் அழிக்கப்படும் இன்றைய நிலையிலும், அதில் குளிர்காய்கின்ற குள்ளநரிக் கூட்டங்கள்.

எம் போராட்டத்துக்கு ஏன் இந்தக் கதி எற்பட்டது? அதை திருத்த மறுக்கின்ற, அந்த தவறை சொல்ல மறுக்கின்ற, அதற்கு எதிராக போராட மறுக்கின்றவர்கள் தான், தமிழினத்தின் அழிவில் பிழைக்கின்றவர்கள்.

புலிகளின் பின் நின்ற பலர், புலிக்கு வெளியில் நிற்பதாக பாசாங்கு செய்தபின் இன்று புலியுடன் ஓட்டிக்கொண்ட ஓட்டுண்ணிகள், போராட்டத்தின் தவறே இன்றைய எம் நிலைமைக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர். அதேநேரம் புதிய தவறை நியாயப்படுத்திக்கொண்டு மூச்சுவாங்க அடியும் வாங்குகின்றனர்.

இவர்கள் தவறாக கருதுவதோ புலிப்பாசிசம் தன்னைத்தான் அம்பலப்படுத்தும் வகையில் செய்தவையைத்தான். அம்பலப்படமல்................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, February 10, 2009

இலங்கையை ஆளும் வர்க்கம், பாசிசத்தை ஏன் தெரிவு செய்தது

இந்தத் தெரிவில் முக்கிய பங்கு புலிக்கு உண்டு. சமாதானம் மேல் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், யூ.என்.பி யை ஆதரித்து அவர்களை வெல்லவைத்து தம்மை தோற்கடித்த விடுவார்கள் என்று புலிகள் பயந்தனர். சமாதானம் மூலம் தம் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாவதை தடுக்கவும், யுத்தம் மூலம் தம் நிலையை இலகுவாக்க முடியும் என்று புலிகள் நம்பினர்.

இந்த அடிப்படையில் யுத்தத்தை வெல்ல விரும்பிய புலிகள், அப்பாவி வேஷம் போட்ட மகிந்தாவை தம் தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம் தெரிவு செய்தனர். தமிழ் மக்களை தேர்தலில் வாக்களிக்கவிடாது தடுத்து, தேர்தல் பகிஸ்கரிப்பாக மாற்றி யூ.என்.பி யைத் தோற்கடித்தனர். வன்னியில் ஓரேயொருவர் வாக்கு போட்டபோது, அவனின் கட்டை விரலையே புலிகள் வெட்டினர். இப்படி யூ.என்.பிக்கு வீழ்ந்த ஓரு வாக்கு மூலம், மகிந்த வெற்றி பெற்றார். மகிந்தாவை வெல்ல வைத்த இந்த இரகசிய சதிப் பேரத்தின் பின்னணியில், சில சலுகைகளை மகிந்தாவிடம் புலிகள் கோரினர். பணம் முதல் கருணாவை தம்மிடம் ஒப்படைத்தல் வரை அது நீண்டது.

புலியைப் போல் மகிந்தாவும் பாசிட்டாக இருந்ததால், சிலதைக் கொடுத்து புலிகளை இலகுவாக ஏமாற்ற முடிந்தது. புலிகள் தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, அதை எதிர்கொள்ள வடக்கில் 'மக்கள் படை" என்ற பெயரில் தொடர்ச்சியான தாக்குதலை இராணுவம் மீது நடத்தினர்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, February 9, 2009

ஒரு திடீர் தீர்வு!

யாரெல்லாம் இன்றைய யுத்தத்தை ஆதரிக்கின்றரோ, அவர்கள் தமிழினத்தின் காவலராக நண்பராக மகுடம் சூட்டப்படும் சதி இன்று அரங்கேறி வருகின்றது. இது எப்படி சாத்தியம்? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இரகசிய நிகழ்ச்சிநிரல்கள் இதை மறுக்கவில்லை.
கருணாநிதி முதல் இலங்கை அரசு வரை போற்றப்படவும், புலிகள் தூற்றப்படவும் கூடிய நிலைமை, இந்த சமூக அமைப்பில் ஏற்படும். இந்த வகையில் ஓரு சதி அரங்கேறுகின்றது.

தமிழரின் உரிமையின் பெயரில் இலங்கை, இந்தியா, நோர்வே முதல் ஏகாதிபத்தியங்கள் வரை, எல்லோரும் கூடி ஒரு இரகசிய சதியை இந்தியாவில் வைத்து தொடங்கியுள்ளனர். இந்த வகையில் புலிகளின் அழிப்பைத் தொடர்ந்து, ஒரு திடீர் தீர்வு தமிழருக்கு கொடுக்கப்படும்.

இதை இவ்வளவு காலமும் தருவதற்கு புலிகள் தடையாக இருந்ததாக காட்டி, தாம் இதை கொடுப்பதற்காகவே புலிகளுடன் போராடியதா..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சுயநிர்ணயத்தை மறுக்கும் போலி (சி.பி.எம் சந்திப்பு) கம்யூனிஸ்டுகளின் கழுதை அரசியல்

போலி மார்க்சியம் பேசி இந்தியாவின் வர்க்கத் போராட்டத்தை மறுதலித்துவிட்ட போலிகள், இன்று இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை மறுக்கின்றது. இதன் மூலம் இலங்கை பேரினவாதத்துக்கு கொம்பு சீவி உதவும் அதேநேரம், இந்திய மேலாதிக்கவாதிகளின் விஸ்தரிப்பு கொள்கைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இப்படி இதற்குள் மார்க்சியத்தை விளக்க, மார்க்சிய மேற்கோளைக் கொண்டு, இந்த சி.பி.எம் கழுதைகள் கனைக்கின்றது.

'இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு" என்று 'சந்திப்பு" இணையத்தை நடத்தும் சி.பி.எம் கழுதை கே.செல்வப்பெருமாள், இந்திய வர்க்கப் போராட்டத்தை தாம் எப்படி மறுதலித்தனரோ அதே பாணியில், மார்க்சிய மேற்கோள்களை திரித்து பயன்படுத்துகின்றது. வர்க்கப் போராட்டத்தை தம் சொந்த வர்க்க அரசியலில் மறுத்துவிட்ட பின், இவர்கள் பயன்படுத்தும் மார்க்சிய மேற்கோள்கள் இவர்கள் அளவில் அர்த்தமற்ற போகின்றது. இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணயத்தை மறுக்க பயன்படும் மேற்கோள்கள் கூட, மக்களின் உரிமையை மறுக்க தம் திரிபுக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

இந்த சி.பி.எம் கழுதைகள் 'இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு" என்ற பெயரில் 'மாநில சுயாட்சியை வழங்கிடவும்" என்று கனைக்கின்றது. இந்த கழுதைக்கு.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, February 8, 2009

"வன்னி மக்ககளை மீட்கின்ற அரசும்"! "வன்னி மக்களைக் காக்கிற புலிகளும்"

என்னடா கொடுமை இது? சோத்துப் பருக்கைகளைக் கூட பெற நாதியற்ற யுத்தத்தை நடத்திக் கொண்டும், அதற்குள்ளே வன்னி மக்களை இருத்திக் கொண்டும் இலங்கை மக்கள் எல்லோரையும் ஏமாந்த சோணகிரியாக்கி வருகிறார்கள். "வன்னி மக்ககளை மீட்கின்ற அரசும்"! "வன்னி மக்களைக் காக்கிற புலிகளும்"! மெண்டு.

உலக உணவுத் திட்டத்தினர் உணவுகளை வன்னிக்குள் கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில, வன்னிக்குள் அவர்களைக் கூட்டிச் சென்று வருவதற்கான முயற்சியை தமிழ் கூட்டமைப்பினர் ஏன் முயலக் கூடாது? பட்டினிச் சாவுக்குள்ளும் அம்மக்கள் சிக்கி தவிக்காத படி உடனடியாகவே புலிகள் அம்மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி விட வேண்டு மென்றும் ஏன் கோரக் கூடாது? ஏன் புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் அருளாமல் இருந்து வாருகிறார்கள். "யுத்தத்தை நிறுத்து, யுத்தத்தை நிறுத்து" என்று மூக்காலே சிந்துவதைத் தவிர, நாவில எதுவும் எழாதோ?

அது எப்படி நடக்கும். தனி ஒரு மனிதனில் நம்பிக்கை வைத்து தமிழீழ யுத்தத்தை நடத்துவதும், அது போல தனிமனிதர்களில் -வெளிநாட்டவரில்- நம்பிக்கை வைத்து யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் தமிழ் அதிசயப்பிறவிகள் காலங்காலமாக நடத்தி .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழரினுரிமை ஊடாக அரங்கேறவுள்ள அரசியல் பிழைப்புத்தனம்


கருணாநிதி முதல் இலங்கை அரசு வரை போற்றப்படவும், புலிகள் தூற்றப்படவும் கூடிய நிலைமை, இந்த சமூக அமைப்பில் ஏற்படும். இந்த வகையில் ஓரு சதி அரங்கேறுகின்றது.

தமிழரின் உரிமையின் பெயரில் இலங்கை, இந்தியா, நோர்வே முதல் ஏகாதிபத்தியங்கள் வரை, எல்லோரும் கூடி ஒரு இரகசிய சதியை இந்தியாவில் வைத்து தொடங்கியுள்ளனர். இந்த வகையில் புலிகளின் அழிப்பைத் தொடர்ந்து, ஒரு திடீர் தீர்வு தமிழருக்கு கொடுக்கப்படும்.

இதை இவ்வளவு காலமும் தருவதற்கு புலிகள் தடையாக இருந்ததாக காட்டி, தாம் இதை கொடுப்பதற்காகவே புலிகளுடன் போராடியதாக கூறுவர். இதன் மூலம் தமக்கு எதிரான முந்தைய நிலையை மறுக்க இது உதவும். இப்படி தி.மு.க முதல் இலங்கை ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலியல்லாத அரசியல் வெற்றிடமும் பாசிசம்தான்

புலியொழிப்பு ஊடாக, இலங்கை பாசிசத்தையே வெளிப்படையாக தெரிவுசெய்கின்றது. அந்த பாசிசம் தமிழின அழிப்பாக மகுடம் சூட்டுகின்றது. கோத்தபாய வார்த்தையில் சொன்னால், தாம் அல்லாத அனைத்தும் புலி. அதாவது இரண்டு விடையம் தான் இருக்கமுடியும்; என்றான்.

ஓன்று புலிக்கு ஆதரவு. மற்றது புலி அழிப்புக்கு ஆதரவு. மற்றும்படி கருத்து எழுத்து சுதந்திரம் என்பது, சமூகத்துக்கு கிடையாது. இதைத்தான் இந்த அமெரிக்கா பாசிட் அறிவித்துள்ளான். இப்படி ஒன்று புலி அல்லது புலியை அழிக்கும் தாம் மட்டுமே இருக்க முடியும். இதுவல்லாத அனைத்துக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றான்.

இந்த பாசிசத்தைத் தான், புலி சொன்னது, செய்தது. இன்று அதையே வெளிப்படையாக மகிந்தாவின் தம்பியும், யுத்தத்தை நடத்தும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் கூறுகிறான். இன்று நடைபெறும் காணாமல் போதல்கள், கடத்தல்கள், இனம் தெரியாத படுகொலைகள்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.