தமிழ் அரங்கம்

Thursday, August 7, 2008

கெட்டாலும் மேன்மக்கள்.....

வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ளயாருக்கும்
ஆர்வம் இல்லை.
பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை

புல்லரிக்க வைக்கவில்லையா?
குற்றவாளிதனது குற்றத்தை

உணர்ந்துகுமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயானஅகழிகளை
நிரப்பும்பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...என்ன
இருந்தாலும்மேன்மக்கள் மேன்மக்களே!

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, August 6, 2008

சரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போரின் வன்முறை அரசியலும்

சரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.


சரவணனை தாக்கிய அரசியல் 'தமிழ்" தேசியம். இந்த 'தமிழ்" தேசியத்தை இன்று புலிகள் கொண்டுள்ளனர் என்பதால், அது புலிக்கு எதிரான கண்டனமாகின்றது. இப்படி புலியெதிர்ப்பு அரசியல் இங்கு, கும்மியடிக்கத் தொடங்குகின்றது. இதனடிப்படையில் தான் கண்டனங்கள் வெளி வந்தன. ஆனால் இது புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

வன்முறை அரசியலின் மூலம் 'தமிழ்" தேசியத்தில் மட்டுமா உண்டு? இல்லை, 'தமிழ்" தேசிய மறுப்பிலும் கூட அதுவுள்ளது. இதற்கான சமூக அடிப்படையும், அதன் அரசியல் அடித்தளமும், எம் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தன சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. இப்படி இந்த வன்முறையின் அரசியல் மூலம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வன்முறை பலதளத்தில் பல பின்னணியில் நிகழ்கின்றது...

அறிவுக் களஞ்சியம்


இவை பலதளங்களில் இருந்து பெறப்பட்டது. பல உங்களுடையது. இதன் மூலக் குறிப்புகளில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்வும்;. அவை திருத்தப்படும்;. உங்கள் அபிராயங்கள், இதில் சேர்க்க கூடியவைகளை தந்து உதவுவது உட்பட உங்கள் பங்களிப்பு கோரப்படுகின்றது. இலகுவாக, வெளிப்படையாக அனுகும் வகையில் தளத்தை அமைக்கின்றோம். இந்த தளத்தில் எந்த ஒரு சொல்லையும், ய+னிக்கோட் மூலம் தேடுதல் பகுதியல் இட்டும், நீங்கள் தேட முடியும்.

தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக ஒப்பந்த பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள்.

தற்காலிகத் தொழிலாளர்கள் காலை 7.30 மணிக்கு ஆலைக்குள் நுழைந்தால், பணிநேரப்படி 4.30 மணிக்கு அவர்களுக்கு வேலை முடிந்தாலும், மாலை 67 மணி வரை கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். இதுதவிர, "இணிட்ணிஞூஞூ " என்ற பெயரில் ஒருசேர இரண்டு ஷிப்ட் (16 மணி நேரம்) வேலை வாங்கிக் கொண்டு, சட்டப்படி தரவேண்டிய இரட்டிப்பு ஊதியத்தைத் தராமல் ஏய்ப்பது, சீருடைபாதுகாப்புச் சாதனங்கள் இன்றி வேலை செய்ய நிர்பந்திப்பது, மருத்து ஈட்டுறுதிக்காகவும்.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 5, 2008

கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக...

சென்னைகுரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் 7ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ. 1,500, 11ஆம் வகுப்புக்கு ரூ. 2,500, அரசு இலவசமாகத் தரும் பாடப்புத்தகங்களுக்கு ரூ.100 என கடந்த ஆண்டில் பல லட்ச ரூபாயை மாணவர்களிடம் கொள்ளையடித்த நிர்வாகம், இவ்வாண்டு வசூல் வேட்டையை நடத்தியது. இதனையறிந்த புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியினர், ""பெற்றோர்ஆசிரியர் கழகம் எனும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்போம்! சட்டவிரோத கட்டாய நன்கொடைக்கு முடிவு கட்டுவோம்!'' எனும் முழக்கத்துடன் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் இப்பகுதியில் விரிவாகப் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக பெற்றோர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டி 17.6.08 அன்று காலை 11 மணியளவில் பள்ளித் தலைமையாசிரியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெருந்திரளாகப் பெற்றோர்களும் மாணவர்களும் சூழ, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தால் அரண்டு போன பள்ளி நிர்வாகமும் பெற்றோர்ஆசிரியர் கழகப் புள்ளிகளும் இனி நன்கொடை ஏதும் வாங்கமாட்டோம்; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். மாவட்டக் கல்வி அதிகாரிகள் இப்போராட்டச் செய்தியை அறிந்ததும், மறுநாளே அப்பள்ளியில் சோதனை நடத்தி, மாணவர்களிடம் கட்டாயமாகப் பறித்த தொகையை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நன்கொடை எதுவும் மாணவர்களிடம் வாங்கக் கூடாது என்று அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமணா அறிவித்துள்ளார்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, August 4, 2008

துரோகியின் மரணம்


வெளிவரவுள்ள நூலில் இருந்து

ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். அவரின் நூலான ~~தி குலாக் ஆர்சிபிலாகோ மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது. இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முனைந்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் நடந்த முதலாளித்துவ மீட்சியில் தப்பி ~~ஜனநாயகவாதியானவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.

ஸ்டாலினை தூற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் தேன்நிலவை தொடக்கிய சமாதான சக வாழ்வு நாயகன் குருசேவின் துணையுடன், 1962 இல் தனது நூல்களை பதிப்பிக்க தொடங்கினான். ஒரு கைதியின் வாழ்க்கை என்ற ''ஐவான் டெனிசோவிச" என்ற 'வாழ்வின் ஒரு நாள்" என்பது அவர் பதிப்பித்த முதல் நூலாகும். இதையே குருசேவ் ஸ்டாலின் எதிர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினான். சோல்ஜெனித்சின் நூலான ~~தி குலக் ஆர்சிபிலோகோ என்ற அவரது நூலுக்கு 1970 இல் ஏகாதிபத்திய ஆதாரவுடன் நேபால் பரிசு பெற்றது. இவர் ஏகாதிபத்திய நாடுகளின் பிரபலமான ~~ஜனநாயகவாதியாகி, சோவியத் எதிர்ப்பிரச்சாரத்தின் கள்ளத் தந்தையானன். 1974 இல் சோவியத் குடியுரிமையை துறந்து சுவிட்சர்லாந்திலும், பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அவர் ஒரு நாஜி அனுதாபி, ஆதரவாளன் என்பது மறைக்கப்பட்டு, உழைப்பு முகாம் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!

எங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?

புலிகள் ஒரு எதிர்தாக்குதலை நடத்தவே, தந்திரமாக பின்வாங்குவதாக நம்பும் பிரமை அதிகரித்துள்ளது. எதிர்த்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கனவு, எதார்த்தத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படையை தளபதிகளுக்கு காட்ட வெளிக்கிட்டது முதல், தளபதிகள் மிக விரைவில் வெற்றித் தாக்குதல் என்ற அறிக்கைகள் விட்டு, அவை ஒய்ந்துள்ள நிலையிலும், கனவுகள் பிரமைகள் நம்பிக்கைகளாகின்றது.

புலிகள் முதல் அரசு வரை இப்படி நம்புவது, ஒருதலைப்பட்சமாக அதிகரித்து பல்வேறு ஊகங்களாகின்றது. இந்த எல்லைக்குள் ராஜதந்திரிகள் முதல் தொடர்ச்சியாக கருத்துரைப்பவர்கள் அனைவரும், இப்படியே இதற்குள்ளேயே கருத்துரைப்பதுடன், அதையே எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். நிலைமையை ஆராய அடிப்படையான தரவுகளின்றி, கடந்தகால அனுமானங்களில் இருந்து இவை வெளிப்படுகின்றது.

நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 3, 2008

சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை - ஒரு தொழிற்சங்கம் உருவான கதை

ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், குகீகீ, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் ""மாவீரன்'' ஜேப்பியாருக்கு ""என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?'' என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.

கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே "வாடா! போடா! என்ன மயிரு?' என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.

Saturday, August 2, 2008

நூல் அறிமுகம் : இளமையின் கீதம்

கார்க்கியின் "தாய்' நாவல், ஒரு அரசியலற்ற தாயின் சமூக அக்கறையினூடாக, அவள் அரசியல்படுத்தப்படுவதை விளக்குகிறது. யாங்மோவின் "இளமையின் கீதமோ', ஒரு பிற்போக்கு நிலவுடமைச் சமூகத்தின், ஆசை நாயகி ஒருத்தியின் மகளான டாவோசிங்கின் எளிய தேசப்பற்று, அவளைக் கம்யூனிஸ்ட் கட்சி தோழராக மாற்றிய வரலாற்றுக் கட்டத்தையே விளக்குகிறது எனலாம்.

கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்து, கிராமப்புற பள்ளி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள் டாவோசிங். ஒரு நிலப்பிரபுவிற்கு ஆசை நாயகியாக அவளை மாற்றத் துடிக்கும் உறவினர்களை எதிர்த்துக் கொண்டு, அவளைக் காதலிக்கிறான் பல்கலைக் கழக மாணவனான யூ யூங்சே. அவனுடன் நகரத்திற்கு வந்த பிறகு, ஒரு புத்தாண்டு விருந்தில் அவளுக்கு கம்யூனிச அறிமுகம் கிடைக்கிறது. லூ சியாசுவான் என்ற தோழர் அவளுக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

அதன் பிறகு கட்சிக்காக ஆசிரியராகிறாள்; கிராமங்களுக்கு செல்கிறாள்; உளவாளியாகச் செயல்படுகிறாள்; அடக்குமுறைக் காலங்களில் அஞ்சாமல் வேலை செய்கிறாள்; கைதாகி சிறைப்படுகிறாள்; இறுதியில் டிசம்பர் 16 ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுகிறாள். ஒரு எளிமையான கிராமத்துப் பெண் படிப்படியாக போராளியாக மாற்றப்படுவதன் தருணங்களை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. கூடவே பல தோழர்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கைகளையும் அறிகிறோம்
........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, August 1, 2008

அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களைகைவிட வேண்டும்!கையில் தீச்சட்டி ஏந்திதீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!— இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.

""பெருசு அப்படித்தான் வயசான காலத்துல பேசிவிட்டு திரியும். நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,
எடுடா கரகத்தை,குத்துடா அலகு காவடியை,வெட்டுடா பிறந்தநாள் கேக்கை— இது மு.க. அழகிரியின் மதுரைக் கொண்டாட்டங்கள்.

மனைவி காந்தி கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்க,மகன் துரை தயாநிதி பிளக்ஸ் பேனர்களில்பாட்டன் சொத்துக்கு உரிமை கோர,மகள் கயல்விழி அப்பாவுக்கு வந்த வாழ்த்துச் செய்திகளை மலராகத் தொகுத்து வெளியிட்டு வீரவாளைப் பெற,அழகிரியின் 57ஆவது பிறந்தநாள் படையெடுப்பில்தங்கை கனிமொழியும் தன் பங்குக்குஅண்ணா வழியில் போய்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, July 31, 2008

பாரிசில் நடந்த '1983-2008 நெடுங்குருதி" கூட்ட ஏற்பாட்டாளர் நடத்திய துப்பாகிச் சூடும், பேரினவாத அரசுக்கு ஆதரவான கூட்டமும்

அ.மார்க்ஸ் என்ற மார்க்சிய விரோதி, ஏகாதிபத்தியம் முன்வைக்கும் தேசிய எதிர்ப்பை தேசிய விரோதத்துடன் வாந்தியெடுக்க, பாசிச பேரினவாதத்தைப் பலப்படுத்தும் ஒரு புலியெதிர்ப்பு அரசு சார்புக் கூட்டமாக அது அரங்கேறியது. இந்த இந்தியப் பிரமுகர்கள் ஓசியில் சுற்றுப் பிரயாணம், ஒசி குடியில் அரசியல் விபச்சாரம் செய்ய வாய்ப்பளிக்கும் கூட்டத்தில், ஒருவரை படுகொலை செய்ய முயன்ற மனித உரிமை மீறல் மேல் எந்தக் கண்டனமுமின்றி அ.மார்க்ஸ் தனது அரசியல் வங்குரோத்தை அரங்கேற்றினார். அ.மார்க்ஸ் இந்தியாவில் மனிதவுரிமைக்கான ஒரு கண்காணிப்பு அமைப்பில் இருப்பதும், இங்கு அவ்வுரிமையை மீறுவோர் கூட்டத்தில் பங்கு கொண்ட போக்கிலித்தனத்தை என்ன என்பது. அத்துடன் கூட்டமே பேரினவாத அரசு சார்புக் கூட்டம். சோபாசக்தி, சுகனினதும் அரசியல் விபச்சாரத்தில், விபச்சாரம் செய்வது தான் அ.மார்க்ஸ்சின் அரசியலாகும்.

Wednesday, July 30, 2008

விலைவாசி உயர்வு: பட்டினிக்குள் தள்ளப்படும் தமிழகம்

கடந்த ஓரிரு ஆண்டுகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை, ஏறத்தாழ 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தீராத நோய்க்கு ஆட்பட்டுள்ள பல நோயாளிகள் மருந்து உட்கொள்வதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வீ.எஸ். நடராசன். விலைவாசி உயர்வைச் சமாளிக்க இன்று தங்களின் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் மக்கள், நாளை பட்டினி கிடந்து நிலைமையைச் சமாளிப்பார்களா?

உழைக்கும் மக்களிடம் காணப்படும் இந்தச் சகிப்புத் தன்மைதான், பெட்ரோல் விலை உயர்வு என்ற இடியை மக்களின் தலையில் இறக்கும் தைரியத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பெட்ரோல் விலையை முன்னரே உயர்த்தியிருக்க வேண்டும்'', ""விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பொருளாதார வளர்ச்சி இருந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என மன்மோகன் சிங் திமிராகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 29, 2008

பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!

பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.

எந்தக் கோணத்தில் செய்யப்படும் வியாக்கியானமாக இருந்தாலும், அவையனைத்தும் உலக நிதிமூலதனக் கும்பலை, பன்னாட்டு நிறுவனங்களை, அமெரிக்க வல்லரசை, ஒரு வார்த்தையில் கூறினால் உலக முதலாளித்துவத்தையே குற்றவாளி என்று அடையாளம் காட்டுகின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக உலகெங்கிலும் ஒரே நேரத்தில் எழும்பியிருக்கும் இந்த செயற்கை சுனாமி, இயற்கை சுனாமியைப் போலன்றி, ஏழைகளின் மீது மட்டுமே பேரழிவை ஏவி வருகின்றது.....
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, July 28, 2008

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!


இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன். ""வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்தார்.

""பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.
ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?

Sunday, July 27, 2008

புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்

புலிகளின் அழிவு எப்படித்தான் சாத்தியமாகின்றது யாரும் இன்னமும் நம்பாத, நம்பமுடியாத வேகத்தில் நடக்கின்றது. புலிகளிடம் பாரிய படை உண்டு. அதே ஒர்மமும் உண்டு. ஆனால் யுத்தத்தில் நிற்க முடியவில்லை. ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக இழக்கப்படுகின்றது.

அன்று ஒவ்வொரு பிரதேசமும் புலிகளால் பிடிக்கப்பட்ட போது ஆர்ப்பரித்து கூத்தாடிய கூட்டம், இன்று ஒப்பாரி கூட வைக்காமல் புலியைப் புதைக்கின்றனர். எதுவும் நடவாத மாதிரியும், தமக்கு எந்த சம்பந்தமுமில்லாத மாதிரியும் காட்டிக்கொண்டு, புலியை திட்டித் தீhப்பதும் இழிவாடுவதும் மெதுவாக வெளிப்படுகின்றது. புதிய அரச ஆதரவுக் கும்பல் ஒன்று, இங்கிருந்து புற்றீசல் போல் உருவாகின்றது.

இந்தக் கும்பலின் சுயநலத்துடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், கூத்துகள், வக்கிரங்கள் மனிதத்தை சாகடிக்க வைத்தது. போராட்ட உணர்வையும், உணர்ச்சியையும் உறிஞ்சிக் குடித்தது. சுயநலம் புலித்தேசத்தின் நெம்புகோலாக, அவை வீங்கி வெம்பியது. இது மலிவாக மலினமாக, இதை புலித்தேசியமாக ஊட்டப்பட்டது.

இங்கு உண்மையும், மனித வாழ்வும் புதைக்கப்பட்டது. மனித அழுகுரல்கள் புலித் தேசிய இசையாக்கப்பட்டு அதற்கு ஏற்பவே பாசிச நடனமாடப்பட்டது.

எல்லாம் சரியாக இருப்பதாக காட்டப்பட்டது, நம்பப்பட்டது. ஆம் இது போலியான அடுக்குமாடிக் கட்டிடம் என்பது, யாரால் தான் நம்பமுடியும்? நாம் மட்டும் தான் இதை அரசியல் ரீதியாக, இதன் பொய்யான விம்பத்தை முன் கூட்டியே முன் அறிவிக்க முடிந்தது.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, July 26, 2008

 பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.
2. தமிழ் மக்களின் கடந்தகால அவலங்களுக்கு காரணமானவர்களை தெளிவுபடுத்திய ஒரு கூட்ட அழைப்பைக் கோரினோம்.

3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்....
இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது.

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் : ஊதிய உயர்வு விடுதலை தருமா?

ஊழியர்களின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. ஐ.ஏ.எஸ் தகுதி கொண்ட அரசுச் செயலர்களின் மாதச் சம்பளம் தற்பொழுது ரூ. 28,000/ தான். இதனை, ரூ. 80,000/ ஆக அதிகரிக்க வேண்டுமென ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இதோடு இந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய இதரப் படிகளையும் சேர்த்தால், அவர்களின் மொத்தச் சம்பளம் ரூ. 96,000/ ஆக எகிறிவிடும்.

முப்படைத் தளபதிகளின் சம்பளத்தை ரூ. 90,000/ ஆகவும்; தற்பொழுது ரூ. 8,250/ சம்பளம் பெறும் இளம் லெப்டினென்ட் அதிகாரிகளின் சம்பளத்தை ரூ. 25,760/ ஆகவும்; துணை இராணுவப் படைகளின் தலைமை அதிகாரியின் சம்பளத்தை ரூ. 80,000/ ஆகவும் உயர்த்த வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரையால் 60 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.

அதேசமயம், தற்பொழுது படிகளையும் சேர்த்து ரூ. 5,115/ சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு இனி ரூ. 6,790/ சம்பளம் வழங்க ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த உயர்வு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப்படியை (ரூ. 7,000/) விடக் குறைவானதாகும். கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை 18 முதல் 24 சதவீதம் வரை அதிகரித்துக் கொடுக்கப் பரிந்துரைத்துள்ள ஊதியக் குழு, மேல் மட்டத்தில் 60 முதல் 200 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க அறிவுறுத்தியிருக்கிறது.

Friday, July 25, 2008

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்

உலக மேலாதிக்கத்தையே ஜனநாயகத்தின் பெருமையாக பீற்றித்திரியும் இடமான வாஷிங்டனிலிருக்கும் அமெரிக்கப் பாராளுமன்றமான கேப்பிட்டல் கட்டிடத்தையும், காலனிகளை உருவாக்கும் அமெரிக்கத் தாகத்தை சுதந்திர வேட்கையாக மாற்றி அதனை நினைவுகூறும் வண்ணம் மான்ஹாட்டனில் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் சுதந்திரதேவி சிலையையும் கட்டி எழுப்புவதற்கு வேலை செய்தவர்கள் கருப்பின அடிமை மக்கள். இதற்கான கூலிகூட அம்மக்களுக்குத் தரப்படாமல், அவர்களை வேலை வாங்கிய வெள்ளை முதலாளிகளுக்குத்தான் தரப்பட்டது.
அமெரிக்கப் பெருமிதத்தின் சின்னங்கள் அனைத்தும் கருப்பின மக்களின் இரத்தம் கலந்து கட்டப்பட்டவைதான். வெள்ளை நிறவெறியினுடைய மூலம் ஐரோப்பாவென்றாலும், அதை வைத்தே ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால் அது அமெரிக்காதான்.
கி.பி 1600களின் மத்தியில் ஆப்பிரிக்காவிலிருந்து மந்தைகளைப்போல பிடித்து வரப்பட்டார்கள் ஆப்பிரிக்க மக்கள். இதே காலத்தில்தான் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாறே நிறவெறியால் எழுதப்பட்டதுதான். கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மட்டுமல்ல பின்னர் வந்த லத்தீன் அமெரிக்கர்களும், ஆசியர்களும் கூட அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். 1778இன் சுதந்திரப் பிரகடனமும், 1860இல் நடந்த உள்நாட்டுப் போரும் நிறவெறியின் மீதுதான் நின்றுகொண்டிருந்தன.

உடனே நாடே குமுறத் தொடங்கியது. எங்கும் எதிலும் கருப்பின மக்களின் மீதான துவேசம் பொங்கி வழிந்தது. போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சார்லஸ் சொன்ன அடையாளங்களுடன் கூடிய கருப்பின இளைஞன் தேடப்பட்டான். பின்னர் பென்னட் என்ற கருப்பின இளைஞன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவே கண்ணீர் விடும்படி சென்டிமெண்ட் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டன ஊடகங்கள். கருப்பின மக்கள் அனைவருமே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்தது. சார்லஸின் தம்பி மாத்திவ் உண்மையை ஒப்புக்கொண்டான். மனைவியை சார்லஸே கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவள் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காப்பீட்டிலிருந்து பெரும் பணம் கிடைக்கும் என்பதுதான் கொலைக்கான காரணம். "அண்ணனுக்கு துப்பாக்கி வழங்கியது நான்தான்' என்று தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

Thursday, July 24, 2008

பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.

3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்.

இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. இப்படி அரச ஆதரவு கும்பல் இன்றி, மக்களுக்காக தனித்துவமாக போராட மறுக்கின்ற புலம்பெயர் நடத்தைகளும் நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானது. பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில், அந்த மக்களை மீண்டும் மீண்டும் ஏறி மிதிக்கின்ற தொடர்ச்சியான வழமையான சடங்குத்தனமான முயற்சிகள் தான் இவை.
... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 23, 2008

சிறப்பு வெளியீடு : 25ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்


இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.

ஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.

Tuesday, July 22, 2008

சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்

எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது. இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர். .... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, July 21, 2008

பணம் அலுக்கவில்லை பகட்டு அலுத்துவிட்டது - குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

ஸாவின் எனும் மேட்டுக்குடி ஓட்டல் நிறுவன முதலாளி, ""இது உடைமை உணர்ச்சிக்கு மாறாக இருத்தலின் உணர்ச்சியாகும்'' எனத் தெரிவிக்கிறார். இவ்வாறு பஞ்சு மெத்தையில் புரண்டவாறு இருத்தலை தேடியலைந்து, யதார்த்த உலகத்தில் கிடைக்காததாலோ என்னவோ, "இரண்டாம் வாழ்க்கை' எனும் இணையதள விளையாட்டில் மேட்டுக்குடியினர் இறங்குகிறார்கள்.

செயற்கையான உலகமான இந்த விளையாட்டில், அந்த உலகத்திற்கென தனி நாணயம் உள்ளது. அங்கே நகைகள், ஆடைகள், அணிகலன்கள், அசையாச் சொத்துக்கள் என எல்லாப் பொருட்களையும் வாங்கவோ, விற்கவோ முடியும். அந்த இணையத் தளத்தில் அவர்களது ரசனைக்கேற்ற பொருட்களை நிறுவனங்கள் விளம்பரப் படுத்துகின்றன; காட்சிக்கு வைக்கின்றன. இந்த செயற்கை நுகர்வு உலகத்தில் அவர்களது இருத்தலின் தேடல் தொடர்கிறது.

நடுத்தர வர்க்கத்தை "உட்கார்–வாயை மூடு, வாங்கு' எனக் கட்டளையிடுகிறது நுகர்வுத் தொழில். விளம்பரங்களின் வழியாக நுகர்பொருட்களால் கட்டமைக்கப்பட்ட ஆளுமைகளை முன்வைத்து செயற்கைத் தேவைகளை உருவாக்குகிறது. ஆனால், சொத்து சேரச் சேர நுகர்பொருளை மென்மேலும் சொந்தமாக்கிக் கொள்வது தனது ஆளுமையை அடையாளம் காண்பது என்ற நிலை அவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. எனவே, தனக்கான பிரத்தியேகமான நுகர்பொருளைத் தேடும் ரசனையை நோக்கித் தாவுகிறது கோடீசுவர வர்க்கம்... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, July 20, 2008

பாரதியின் முரண்பாடுகள் அருவருக்கத்தக்கவை - மருதையன்

படைப்பாளியின் சுதந்திரம் என்பது அநேகமான சந்தர்ப்பங்களில், அது தன்னகங்காரமாக, சமூக விரோதமாக முடிகிறது. அமைப்புக்களில் இல்லாவிட்டாலும், ஓர் அமைப்பில் இணைந்து இயங்காவிட்டாலும், தனி நபராக சமூக உணர்வுடன் உழைக்கும் மதிமாறனைப் போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அதை தரம்தாழ்த்தி உள்ளடக்கத்தை கொச்சைப்படுத்தி சொல்லப்படுகின்ற விமர்சனங்களை நாம் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால், ஒரு தவறின் மீது ஏன் கடுமையாக நான் விமர்சனம் செய்கிறேன் என்றால் அதன் பொருள் என்ன? எனக்கெதிராக ஒரு வாளைத் தயார் செய்து உங்கள் கையில் கொடுக்கிறேன் என்று அர்த்தம். ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால் அது அவர் செய்தாலும், யார் செய்தாலும், நான் செய்தாலும், அதன் பொருள் என்ன? நாளை அதே போன்றதொரு வாய்ப்பில், அதே போன்றதொரு நிகழ்வில், சூழலில் அத்தகைய தவறை நான் செய்வேனாகில் அந்த வாள் கொண்டு என்னை நீங்கள் குத்த முடியும். ஏண்டா அவனுக்குச் சொன்னாய்? நீ என்ன யோக்கியமா? என்று கேட்க முடியும்?
அப்ப ஒவ்வொரு விமர்சனத்தையும் எதிராளி மீது செலுத்தப்படும் அம்பு என்று மட்டும் பார்க்கக்கூடாது. அது தன்னை எய்வதற்கு வாசகர்களுக்கும், மக்களுக்கும் ஏன் எதிரிகளுக்கும் வழங்கப்படும் அம்பு. விமர்சனங்களைச் செய்வதற்குப் பொறுப்பின்மை அல்ல; தைரியம் வேண்டும். அறிவு நாணயம் வேண்டும். அத்தகைய பக்குவத்தை தோழர் மதிமாறன் பெற்றிருக்கிறார். இன்னும் பெற வேண்டும். அவரது விமர்சனங்கள் புதுமைப்படவேண்டும். சிந்தனையும், செயல்களும் செம்மைப்படவேண்டும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.

புலம்பெயர் இலக்கியத்தில் மக்கள் நலன் மறுப்பும் இதற்கெதிரான போராட்டமும்

ஆரம்ப புலம்பெயர் இலக்கியம் மக்களின் நலனை உயர்த்தியது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு அது படிப்படியாக மக்களுக்கு எதிராகவே மாறத் தொடங்கியது. புதிய சொத்துடைய மத்தியதர வர்க்கமாகவும், முதலில் சொந்தமாக பணத்தை கொண்டு வாழத் தொடங்கிய சூழல்களும், இந்த சூழலுக்கு ஏற்ப வலதுசாரிய பூர்சுவா குடும்பங்கள் உருவானது. இவர்கள் முன் மக்கள் நலன்சார் அரசியல் என்பது, தமது புதிய பூர்சுவா வாழ்வியல் இருப்புக்கு எதிரானதாக கருதியது. இதனால் மக்கள் நலன் அரசியலை எதிர்ப்பது, இவர்களுக்கு அவசியமாகியது.

இப்படி மக்கள் விரோத கோட்பாடுகள், கருத்துக்களே எங்கும் குடிபுகுந்தது. நான், நாங்கள் மட்டும் தனித்து நின்றோம். மறுபக்கத்தில் இடது கலந்த வலதுசாரியம் புலி எதிர்ப்பை அளவுகோலாகக் கொண்டு, மக்கள் அரசியலைத் திரித்து அதில் மிதக்க முனைந்தது.

இதை நான், நாங்கள் மட்டுமே கடுமையாக எதிர்த்து நின்றோம். மக்கள் அரசியலை இதற்கு எதிராக உயர்த்தினோம். இயல்பாகவே நாம் இவர்களின் முதல் எதிரிகளானோம். இவர்கள் தமது செயல்பாட்டுக்கு எதிர்ப்பைச் சந்தித்தது, எம்மிடம் இருந்துதான். எமது எதிர்ப்பு என்பது அரசியல் தளத்தில் இருந்ததால், இது தனிப்பட்ட முரண்பாடாகா வண்ணம் எமது கடுமையான ஈவிரக்கமற்ற விமர்சனத்தை முன்வைத்தோம். இதை தனிப்பட்ட முரண்பாடாக்க முனைந்த போதெல்லாம், அதை நாம் தோற்கடித்தோம்.

Saturday, July 19, 2008

கொம்பனித் தெரு சம்பவம் புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர்

கொம்பனித் தெரு சம்பவம் : புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர், மக்களின் வாழ்விடங்களையும் கூட அன்னியனுக்காக தரை மட்டமாக்குகின்றனர்.

இலங்கையில் நடப்பது இதுதான். 'பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் பணம் சம்பாதிப்பது ஒருபுறமாயும் நாட்டின் தேசியவளத்தையும் மக்களின் அடிப்படை வாழ்வையும் விற்பது மறுபுறமாயும் அரங்கேறுகின்றது. 'புலிப்பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து சம்பூர் பிரதேசம் இந்திய வல்லாதிக்கத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதே போல் கொம்பனித் தெருவில் வசித்த 600 குடும்பங்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டு, அவர்கள் 'பயங்கரவாத ஒழிப்பு" இராணுவத்தால் நிர்க்கதியாக அடித்துத் துரத்தப்படுகின்றனர். இவை எல்லாம் யாருக்காக? யாருடைய நலனுக்காக? மக்களின் நலனுக்காகவா எனின், நிச்சயமாக அதுவல்ல. மாறாக பணம் கொழுத்தவன் மேலும் கொழுப்பதற்காகத் தான்.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இயக்கத்திடம் ஜனநாயகத்தைக் கோரிய மக்கள் போராட்டம்

அன்று உண்மையான நேர்மையான சமூக பற்றாளர்கள், தேசியபற்றாளர்கள் தான், உண்மையாக இந்த மக்களுக்காக முதல் களப்பலியானார்கள். ஆனால் இவர்களை யாரும் இன்று வரை போற்றுவது கிடையாது. இவர்களை நான் நாங்கள் மட்டும் தான், போற்றுகின்றோம். அவர்களிள் அரசியலை நாம் மட்டும் தான், முன்வைக்கின்றோம். அவர்களின் வாரிசுகள் நாங்கள். இதையும் இன்று சிலர் திரிக்க முனைகின்றனர். பிந்தைய புலியின் இயக்க அழிப்புக்குள், இதையும் சேர்த்து குழைத்து தீத்தவே முனைகின்றனர். புலி மட்டும் தான் அனைத்தும் என்ற கண்கட்டு வித்தையைக் காட்டி, அதுவே வரலாற்று உண்மை என்று காட்ட முனைகின்றனர்.

Friday, July 18, 2008

எம்.ஆர்.ராதா: பெரியாரின் துருவேறாத போர்வாள்!

பார்ப்பனரல்லாத "மேல்'சாதி இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. அவர்களிடம் புராணங்களின் மீது ஒருவித விமர்சனமற்ற மரியாதையையும், உதிர்ந்து கொண்டிருந்த கூட்டுக் குடும்பங்களின் மீது ஒரு அனுதாபம் கலந்த கரிசனையையும் இப்படங்கள் தோற்றுவித்தன. கதாநாயகர்களின் சோகத்தில் மாத்திரமே தனது துன்பங்களை இனம் காணப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களிடம் யதார்த்தத்தை ஈவிரக்கமின்றி முன்வைத்தன ராதாவின் பாத்திரங்கள்.

1942இல் ராதா நடித்த "இழந்த காதல்' எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த "போர்வாள்' நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமெனக் கோருகிறது. பிரகாசம் அரசாங்கம் இக்கருத்து பிரிட்டிஷாருக்கு எதிரானது என்பதால் நாடகத்தைத் தடை செய்தது. 1947இல் கருணாநிதி எழுதிய "தூக்குமேடை' பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.

Thursday, July 17, 2008

தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

நக்சல்பாரி எழுச்சியைக் காட்டிக் கொடுத்த மார்க்சிஸ்டு தலைமையை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறி மா.லெ. இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட (மறைந்த) தோழர் ரங்கனாதனின் கிராமம் காரப்பட்டு. சுற்றுவட்டார நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி அவற்றின் ஊடாக உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை அவர் உருவாக்கி வளர்த்திருக்கும் கிராமம் அது.

தலித் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான கலவரங்கள் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற காலங்களிலும் கூட சாதிவெறி தலைதூக்காத கிராமம் காரப்பட்டு. உள்ளூர் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த தலித் மக்களைத் திரட்டி வெற்றிகரமானதொரு கோயில் நுழைவுப் போராட்டத்தை வி.வி.மு. நடத்திய கிராமம் அது. அப்போராட்டத்தின் விளைவாக நிலைநாட்டப்பட்ட தலித் மக்களின் கோயில் நுழைவு உரிமையை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் கிராமம்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு தலித் மக்களும் பிற சாதியினரும் ஒருவரையொருவர் அழைப்பதையும் ஒரே பந்தியில் அமர்ந்து கலந்துண்பதையும் தனது பண்பாடாகவே மாற்றிக் கொண்டிருக்கும் கிராமம். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்களை அழைப்பதும், அவர்கள் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதும், வி.வி.மு. நடத்தும் ஊர்க்கூட்டங்களில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் வழமையாக நடைபெற்று வரும் கிராமம் அது.

தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போவதில்லை. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட பெரிதும் வாய்மொழியின் அடிப்படையிலேயே நடைபெறும் அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையும் நேர்மையும் நிலவி வரும் கிராமம் அது. கள்ளச்சாராய விற்பனை அங்கே நெடுநாள் முன்னரே ஒழிக்கப்பட்டுவிட்டது. குடித்துவிட்டுத் தெருவில் ஆடுவதும், பொது இடங்களில் புகை பிடிப்பதும் அங்கே தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து விடவில்லை. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத்தப்படுகின்றன. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய பிழைப்புவாதிகளும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட லும்பன்களும் இவற்றை எதிர்க்கத்தான் செய்தனர். தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 16, 2008

ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது?

இதை செய்தது, சொந்த தமிழ் தேசிய இனத்தில் இருந்த எதிர்புரட்சி அரசியல் தான். அது கையாண்ட வழி, சூழ்ச்சிகரமானது. முதலில் அது செய்தது என்ன? ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாக காட்டிக்கொண்டது. இப்படி அந்த மக்கள் தமது சொந்தக் கோரிக்கையுடன் ஒரு தேசியத்துக்காக அணிதிரளா வண்ணம் தடுத்தது. இதன் மூலம் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களை ஒடுக்கியது தான் எமது தேசிய வரலாறாகும்.............. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மகரஜோதி பொய்! ஐஸ் லிங்கம் பொய்! பக்திப் பரவசமும் பொய்!

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. "கஞ்சாவே பேரின்பம்' என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

"மாலை போடுவது மடமை' என்று நீங்கள் சாடினால், "ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்' என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். "பனிலிங்கம் பொய்' என்று நீங்கள் கூறினால், ""இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்'' என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள். ...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 15, 2008

உணர்வு

ஒளிபுகாத
அடர்காட்டின் நடுவில்
அரிவாள்களைக் கூராக்கி
பாதை செய்கிறோம்

ஏளனச் சிரிப்புகளும்,

வன்மம் பொங்கும்
ஊளைச் சத்தங்களும்,
முற்றும் அறிந்த
மேதாவித்தனங்களும்,
திரும்பும் திசைகளிலெல்லாம்
எதிரொலிக்கின்றன.

புதைசேறு அழுத்துகிறது

புரட்ட முடியாத பாறைகளில்
யுகங்கள் கழிகின்றன.
அரவம் நெளிகிறது.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவுடன், ஜே.வி.பி நடத்திய வேலை நிறுத்தம்

உலகில் அரசியல் அதிசயங்கள் நடக்கின்றன. இலங்கை தொழிலாளி வர்க்கத்தின் காலை உடைத்து விட்டுத்தான், இவர்கள் எல்லாம் கூட அரசியல் நாடகமாடுகின்றனர். ஜே.வி.பி திடீரென தொழிலாளர் என்று கோசம் போட, யூ.என்.பி.யும், புலிப்பினாமியான கூட்டமைப்பும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க அரசியலுடன் எழுந்திடா வண்ணம், இவர்கள் செய்கின்ற அரசியல் திருகுதாளங்கள் இவை. தொழிலாளியின் முதுகில் குத்தித் தான், இவர்கள் தமது சொந்த அரசியல் செய்கின்றனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் வெற்றி பற்றி அரசும் ஜே.வி.பியும் கூச்சல் போடுகின்றனவே, அப்படியாயின் தோற்றவர்கள் யார்? ஆம் தொழிலாளி வர்க்கம் தான், மீண்டும் தோற்றுப் போனது. அவர்கள் தோற்றுப்போகும் வகையில், தொழிலாளியின் பெயரால் ஒரு பொருளாதார வேலை நிறுத்தம்;. தொழிலாளியின் பொருளாதார அவலத்துக்கு காரணமான அரசியல் போராட்டத்தை தவிர்த்து, பொருளாதார போராட்டத்துக்குள் முடக்கி தொழிலாளியை தோற்கடித்தனர். இது தான் ஜே.வி.பி அரசியல்;. இதனால் தான் இனவாத முதலாளித்துவ யூ.என்.பி.யும், புலிப்பினாமியான முதலாளித்துவ கூட்டமைப்பும் ஆதரித்தனர்.

இவர்கள் எல்லாம் இதன் மூலம் தத்தம் சொந்த அரசியலை செய்தனர். ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு எப்படி அரசு ஆதரவு அரசியலாக்கப்படுகின்றதோ, தேசியத்தின் பெயரில் எப்படி புலிப் பாசிசம் அரங்கேற்றப்படுகின்றதோ, அப்படியே தான் தொழிலாளியின் பெயரில் இவர்கள் அரசியல் செய்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக புலியின் பெயரால் பச்சை இனவாதத்தைக் கக்கிய ஜே.வி.பி தான், இனவாத அரச பாசிசத்தைக் கட்டியெழுப்பியது. ஜே.வி.பி இன் இந்த இனவாதம் தான், கட்சியின் ஒரு பகுதியை அரசின் ஒரு பகுதியாக்கியது. ஜே.வி.பி தொடர்ந்து இனவாத அரசியலை நம்பி அரசியல் செய்யமுடியாது. அதை அரசு ஜே.வி.பியின் ஒரு பகுதியை பிளந்து, தனக்கு ஆதரவாக வைத்தபடி
..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, July 14, 2008

தமிழக போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சி

சாதி வேறுபாடுகளைக் கடந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய இக்கிராமங்களில் சாதிக் கலவரம் ஏன்? ஏற்கெனவே இக்கிராமங்களில் சாதியப் பகைமையும் மோதல்களும் நடந்துள்ளனவா? இல்லை. இது சாதிக் கலவரமில்லை; சிறு வாய்த் தகராறையே ஊதிப் பெருக்கி சாதிக் கலவரமாகச் சித்தரித்து, போலீசும் அதிகார வர்க்கமும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய மக்களைப் பழிவாங்கவே திட்டமிட்டு இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளன. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (ஏகீகஇ) உண்மையறியும் குழுவினர் இக்கிராமங்களுக்கு நேரில் சென்று நடத்திய விசாரணையின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.


எலியார்பத்தி கிராமத்தில் கடந்த 4.5.08 அன்று டீக்கடை ஒன்றில் போதையில் இருந்த இரண்டு பேருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, அவ்வூர் பெரியவர்களால் சமரசம் செய்து தீர்க்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சிறுபான்மையாகத் தாழ்த்தப்பட்டோரும் பெரும்பான்மையாக வலையர்கள் எனப்படும் பெரும்பிடுகு முத்தரையர் சாதியினரும் உள்ளனர். சாதிய இழிவு நீடித்தபோதிலும், இருதரப்புக்குமிடையே தகராறுகளோ மோதலோ நடந்ததில்லை. டீக்கடையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு தீர்க்கப்பட்ட போதிலும், முத்தரையர் சாதி சங்கத் தலைவர் இராசு தலைமையில் சில இளைஞர்கள் தலித் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தினர். அவர்கள் மீது சிறுத்தைகள் கட்சியினர் கூடக்கோவில் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்க, அதனடிப்படையில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அடாவடிகளும் போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்தலும் தமிழகமெங்கும் தொடர்கின்றன. ஆனால் போலீசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வழக்குத்துக்கு மாறாக, எலியார் பத்தியில் அன்றிரவே பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, July 13, 2008

புலிப் புலனாய்வு அறிக்கை மீது : வதந்தி எது? உண்மை எது? சரி பகுத்தறியும் திறன் தான் எது?

''வதந்திகளை நம்பவேண்டாம் : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்" 12 யூலை 2008 வெளியிட்டுள்ள புலி அறிக்கை, மீண்டும் 10 வருடங்கள் கடந்த பின் வந்துள்ளது. யாழ்குடாவை எதிரி கைப்பற்றிய காலத்திலும், இது போன்ற அறிக்கை ஒன்றை புலிகள் விட்டு இருந்தனர். புலி சந்திக்கின்ற பொதுநெருக்கடி, மக்கள் புலியை தோற்கடிக்கின்ற உண்மையை பளிச்சென்று இந்த அறிக்கை போட்டு உடைக்கின்றது.

புலிகள் தம்மையும், தமது கடந்தகாலத்தையும் திரும்பி பார்க்க மறுப்பது, மறுபடியும் புலனாகின்றது. மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, பாசிச அரசியல் தாற்பாரியத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

எது வதந்தி, எது உண்மை என்ற எதையும் ஊகிக்க முடியாத வகையில், மக்களை இட்டுச்சென்றது யார்?, எதிரியா? இல்லை. புலிகளாகிய நீங்கள் தான். எப்போது தான் நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். உண்மை எப்போதும், மக்களின் மண்டைக்குள் குசுகுசுத்தபடியே உயிர் வாழ்கின்றது. இப்படி உண்மைகள் மக்களின் மண்டைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளது.

உத்தப்புரம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசிய ஓட்டுக் கட்சிகள்

உத்தப்புரத்தில் சட்டவிரோத ஒப்பந்தத்தை 1989இல் உருவாக்கியவர்களை "பெரிய மனிதர்கள்' என்று சொல்லி புளகாங்கிதம் அடையும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பழைய செய்தித்தாள்களை எல்லாம் ஒன்றுவிடாமல் தேடி, எங்குமே தீண்டாமை பற்றி எழுதப்படவே இல்லை என்று சொல்லி இருக்கிறார். ""ஏன் சி.பி.ஐ. இந்த விசயத்தில் போராடவில்லை?'' எனக் கேட்பவர்களுக்கு ""நான் அசைவன் எனக் காட்டிக் கொள்ள எலும்புகளைத் தொகுத்து மாலை போட்டு ஆட வேண்டிய தேவையில்லை'' எனத் தெனாவட்டாகக் கட்டுரை எழுதுகிறார். மேலும் அவ்வூரில் உண்மையைக் கண்டறியக் குழு அமைத்து, அங்கு நில வுவது "ஆன்மீகப் பிரச்சினை' என்ற மாபெரும் கண்டுபிடிப்பை அறிவித்திருக்கிறார். "அமைதி'யாக இருந்த ஊரில் அதே அமைதி தொடர வேண்டும் என்பதற்காக உத்தப்புரத்திற்கு ஒருமுறை பயணமும் செய்தார்.

தா.பாண்டியன் விரும்பும் அதே அமைதியைத்தான் பிள்ளைமார் சங்கத் தலைவர் முருகேசனும் விரும்புகிறார். ""பல அப்பாவி தலித்துகள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் சகோதர சகோதரர்களாகத்தான் வாழ விரும்புகிறார்கள். சில சமூக விரோதிகள்தான் தலித்துகளைத் தூண்டி விடுகின்றனர்'' என்று கூறும் முருகேசனின் விருப்பமெல்லாம் என்றென்றைக்கும் தலித்துகள் அப்பாவிகளாகவே இருக்க வேண்டும் என்பதே. அவர்கள் அப்பாவிகளாக இருக்கும் வரை "அமைதி' இருக்கும். இந்த அமைதியைத்தான் வலது கம்யூனிஸ்டு தா.பாண்டியனும் விரும்புகிறார்.

சாதி ஒழிப்பிற்காகவே இயக்கம் கண்ட திராவிடர் கழகம், சாதித்திமிர் பிடித்த பிள்ளைமார்களைச் செல்லமாகக் கண்டித்து தலையங்கம் எழுதியது. அச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளாத தி.க., ""சுவரை ஏதோ கோபத்தில் எழுப்பி இருக்கக் கூடும்'' என விளக்கம் கொடுத்தது. ரேசன் கார்டுகளை ஒப்படைத்துவிட்ட பிள்ளைமார்களுக்கு புத்திமதி சொல்லித் திருத்த ""பிள்ளைமார் சமூகத்தில் படித்தவர்கள், அதிகாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தங்கள் கடமையினைச் செய்ய முன்வரவேண்டும்'' என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் உத்தியைச் செயல்படுத்த பிள்ளைமாரில் முற்போக்காளர்களைத் தேடி அலைந்து அலுத்துப்போனது..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, July 12, 2008

அமெரிக்க தேல்தல் : "அந்நியப் பெயரைக் கொண்ட ஒரு கருப்பு மனிதனை நம்பி, இந்த நாட்டின் பாதுகாப்பை ஒப்படைக்க முடியுமா?''

அறியப்படாத அமெரிக்கா

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது. .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.

Friday, July 11, 2008

ஜனநாயக கோசத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியத்தை எப்படி இயக்கங்கள் திரித்தன?

தமிழ் தேசியத்தையே தமிழ் மக்களுக்கு எதிராக திரித்த வரலாறு தான், எமது தேசிய வரலாறு. ஏன் ஜனநாயக வரலாறும் கூட. வெறும் புலிகளல்ல, அனைத்து பெரிய இயக்கங்களும் இதைத்தான் செய்தன. மக்களை தமது எதிரியாகவே நிறுத்தின.

அனைத்து பெரிய இயக்கங்களும், அன்னிய சக்திகளின் அரசியல் ஏஜண்டுகளாக இருந்தனர், இருக்க முனைந்தனர். அவர்களையே தமது நண்பனாக, தோழனாக கருதினர். மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், மக்கள் இடையே இருந்த முரண்பாடுளை களைந்த ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டத்துக்கு பதில், அதற்கு வேட்டுவைத்தனர். இதில் தியாகியானோர் வரலாறு போற்றப்படுவதில்லை. அவர்களை தூற்றியபடி, மக்களிடையேயான முரண்பாடுகளை பாதுகாத்து, அதை மேலும் ஆழ அகலமாகிப் பிளந்தனர்.

Thursday, July 10, 2008

விலைவாசி உயர்வு : காங், பா.ஜ.க.வின் வில்லத்தனங்கள்

முன்நோக்குமுன்பேர வர்த்தகம் என்பது உண்மையில் கையிருப்பில் வைத்துள்ள பொருட்களை வைத்துக் கொண்டு பேரங்கள் பேசி வாணிபம் செய்வதில்லை. ஒரு மாயையான கையிருப்பைக் காட்டி (கையிருப்பில் உள்ள சரக்கு மற்றும் எதிர்காலத்தில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் சரக்கு மட்டுமல்ல, அவற்றின் மதிப்புகள் தேவைகள் பற்றிய ஊகங்கள் அடிப்படையில்) நடத்தப்படும் சூதாட்டம் ஙடிணூtதச்டூ tணூச்ஞீஞு ணிண tடஞு ஞச்ண்டிண் ணிஞூ திடிணூtதச்டூ ண்tணிஞிடு. சான்றாக 200506ஆம் ஆண்டில் கௌர் தானிய உற்பத்தி 6 இலட்சம் டன்கள்தாம். ஆனால், பண்டப்பரிவர்த்தனையில் 1,692.6 இலட்சம் டன்கள் கையிருப்பில் இருப்பதாக ஊகம் செய்து கொண்டு முன்நோக்கு வர்த்தகம் நடத்தப்பட்டது. 10 இலட்சம் டன் உள்நாட்டு உற்பத்தியும் 5 இலட்சம் டன் இறக்குமதியுமாக மொத்தம் 15 இலட்சம் டன் அர்கர் பருப்பை வைத்துக் கொண்டு 137.39 இலட்சம் டன் இருப்பதாக ஊக வணிகம் நடத்தப்பட்டது. இதிலிருந்து ஊக வணிகம் எவ்வாறு விலைவாசி யைத் தாறுமாறாக எகிறச் செய்யும் என்பது புரியும். ஊகவணிகத்தால்தான் சர்வதேச பெட்ரோலிய விலை எகிறியிருக்கிறது. உண்மையில் பெட்ரோலியப் பற்றாக்குறையால் அல்ல என்று இப்போது சிதம்பரம் உட்பட ஆட்சியாளர்களே ஒப்புக் கொள்கிறார்கள். .......... .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 9, 2008

இயக்கங்கள் ஏன் ஆயுதமேந்தின? ஏன் ஆயுதத்தை வைத்துள்ளனர்?

தமிழ் மக்கள் தமக்கிடையிலான சமூக முரண்பாடுகளை களைவதற்கும், தமக்கிடையில் ஐக்கியப்படுவதற்கும் எதிராகத்தான், இயக்கங்;கள் ஆயுதமேந்தின. இதுவே உட்படுகொலைகளில் தொடங்கி இயக்க அழிப்புவரை முன்னேறி, அதுவே துரோகமாகவும், ஒற்றைச் சர்வாதிகாரமுமாகியது. புலிச் சர்வாதிகாரத்தை எதிர்த்தோர், அரச கூலிப் படைகளாகியுள்ளனர். மக்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புரட்சியை நியாயப்படுத்தத் தான், தேசியம் ஜனநாயகம் என்ற வார்த்தைகளை; இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் ஆயுதத்தை வைத்திருப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. இந்த ஆயுதம் ஏந்திய குண்டர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிளவையும், சிதைவையும், அழிப்பையும் தான் மக்களுக்கு பரிசளிக்கின்றனர். இப்படிப் பேரினவாதத்துக்கு துணையாகவே, தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கின்றனர்.
இப்படி இவர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்புரட்சியை மூடிமறைக்கவே, அனைத்துத் தரப்பும் முனைகின்றனர். இதனால் தான் மக்களுக்காக நடந்த போராட்ட வரலாற்றை மறுக்கின்றனர். மக்களுக்காக போராடியவர்களை கொன்று போட்டபடி, தாம் அந்த மக்களுக்காகத் தான் போராடுவதாக கூற முனைகின்றனர். மறுபக்கத்தில் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர். இப்படி விதம் விதமாக படம் காட்டுவது, ஒரு திட்டமிட்ட சதிகார அரசியலாகும்.

Tuesday, July 8, 2008

அம்மணமானது இந்திய தேசியம்!

இந்த ஒப்பந்தத்திற்கும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிறார், மன்மோகன் சிங். ஆனால், ஒப்பந்தம் குறித்து இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த அமெரிக்காவின் அரசுச் செயலரும், 123 ஒப்பந்தத்தின் சூத்திரதாரியுமான நிக்கோலஸ் பர்ன்ஸ், ""இந்தியா, ஈரானுடனான தனது பொருளாதார உறவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; உலகம் மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள இத்தருணத்தில், சர்வதேச சமூகத்தோடு இணைந்து இந்தியா செயல்பட வேண்டும்'' என அறிவுரை வழங்கியிருக்கிறார். (தி ஹிந்து, 7.08.07, பக்:10).

ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படையணியில் சேர்ந்து விடுங்கள் என்ற நெருக்குதலைத் தவிர, இந்த அறிவரைக்கு வேறு பொருள் கிடையாது; இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து போடப்பட்டுள்ள ஹைட் சட்டமோ, ""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு இசைவாக இருக்க வேண்டும்'' என நிபந்தனை விதிக்கிறது.
... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்? அணுசக்தி ஒப்பந்தம்

""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்

இந்திய அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணைக்கு 63% (23 per cent + Rs 7.50 per litre) வரி விதிக்கிறது. அதாவது, ஒரு பேரலின் விலை ரூ 2918 எனில், அதற்கு நமது அரசாங்கம் விதிக்கும் இறக்குமதி வரி ரூ 1839. ஆக இறக்குமதிக்குப்பின் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை ரூ 4757! அத்துடன் விடவில்லை.
எண்ணை நிறுவனம் உற்பத்தி செய்த பெட்ரோல் மற்றும் அதன் கழிவுகளுக்கு, மத்திய அரசு விற்பனை வரி வேறு விதிக்கிறது. அதுவும் சாதரன வரி அல்ல. 25% முதல் 30% வரை! அத்தோடு விட்டதா என்றாலும் இல்லை!

எண்ணை நிறுவனங்கள் படு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றன. உதாரணதுக்கு - IOCயில் ஒரு கார் ஓட்டுனர் சுமார் ரூ 20,000 சம்பளமாக பெறுகிறார். நம்ம ஊரு கால் Taxi ஓட்டுனர் ரூ 2,000 சம்பளதுக்கு படாத பாடுபடுகிறான். ஒரு IT நிறுவனதின் செலவுகளை மிஞ்சுகிறது இந்த எண்ணை நிறுவனங்களின் செலவுகள்.
உண்மை இப்படி இருக்க, அரசுகள் நமக்கு மானியம் வழங்குவதாகவும், அதனால் அரசுக்கு பளு கூடுவதாகவும் கூசாமல் கூறுகிறார்கள்!
...

"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்?"

நாட்டின் எண்ணெய்எரிவாயுத் தேவையில் 25 முதல் 30 சதவீதம் வரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திச் செலவு, சுத்திகரிப்புச் செலவு, அவசியமான இலாபம் ஆகியவற்றைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்வதன் மூலம் எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் உலகமயக் கொள்கைப்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் இந்த எண்ணெய்எரிவாயுவும் சர்வதேச விலையில்தான் இங்கு விற்கப்படுகிறது. மேலும், அரசுக்குச் சொந்தமான அரபிக் கடலிலுள்ள பன்னாமுக்தா எண்ணெய் வயல், கிழக்கே கோதாவரி எரிவாயுக் கிணறுகள் ஆகியன தனியார்மயக் கொள்கைப்படி தரகுப் பெருமுதலாளி அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. நம்முடைய பொதுச் சொத்தான எண்ணெய்எரிவாயுவை எடுத்து, உலகச் சந்தையின் விலைக்கு நமக்கே விற்று, பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் ரிலையன்ஸ் அம்பானி கொள்ளையடித்துக் கொள்ள தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இதுவும் போதாதென கலால் வரி, வாட் வரி, விற்பனை வரி, நுழைவு வரி என மத்தியமாநில அரசுகள் வரியாகக் கொள்ளையடிக்கின்றன. ...கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, July 6, 2008

பாசிச சேற்றில் படுத்துப் புரளும் பன்றிகள்

மாற்றுக் கருத்து, விவாதம், விமர்சனம் என எதுவாக இருந்தாலும், இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. விளைவு போராட்டம், தேசியம், விடுதலை, ஜனநாயகம், சுதந்திரம் எல்லாம், தனக்குரிய அர்த்தத்தையே இழந்துவிடுகின்றது. இதனால் இவை மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. ஊடகவியல் முதல் கருத்துத் தளங்கள் வரை, இப்படி இதற்குள் புதையுண்டு கிடக்கின்றது.

விளைவு பினாற்றுவது, பீற்றுவது, கொசிப்பது, கொச்சைப்படுத்துவது, வம்பளப்பது, வாய்ப்பந்தல் போடுவது, அரட்டை அடிப்பது, திரிப்பது, சேறடிப்பது, தூற்றுவது என்று விதவிதமாக மக்களுக்கு எதிராக கருத்துத்தளத்தில் பேலுகின்றனர். இதையே இவர்கள் மாற்றுக் கருத்து, விவாதம், விமர்சனம், கருத்துச் சுதந்திரம் என்கின்றனர்.
.. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!


ஒபாமா, கிறித்துவின் ஐக்கிய தேவாலயம் என்ற கிறித்துவ மதப் பிரிவைச் சேர்ந்தவர். இப்பிரிவின் மத குருவான ரைட், அமெரிக்கா, கருப்பின மக்களுக்கு இழைத்த கொடுமைகளைக் குறிப்பிட்டு, ""இறைவன் அமெரிக்காவை ஆசிர்வதிக்கத் தேவையில்லை; சபிக்கட்டும்'' எனப் பல ஆராதனைக் கூட்டங்களில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஹிலாரியின் ஆதரவாளர்கள் இப்பேச்சுக்களைத் தோண்டியெடுத்து வெளியிட்டு, அதன் மூலம், ஒபாமாவை அமெரிக்காவிற்கு எதிரானவராக தேச பக்தி அற்றவராகச் சித்தரித்தனர்.

இத்துணை அவதூறுகளுக்குப் பிறகும், ஒபாமாவின் வெற்றியை ஹிலாரியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ""அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்ற வேளையில், ஹிலாரி "தகுதி', "திறமை' என்ற பழைய பஞ்சாயத்தைப் பாடிக் கொண்டிருந்தது அமெரிக்க மக்களிடம் எடுபடவில்லை; ஒபாமா, கருப்பின மக்களை மட்டுமின்றி, முதன்முதலாக ஓட்டுப் போடப் போகும் இளைஞர்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்து விட்டõர்'' என ஒபாமாவின் வெற்றிக்குக் காரணங்கள் கூறப்படுகின்றன.... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, July 5, 2008

அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

டேஜியான் சிறைச்சாலையின் முன்னாள் சிறைக் காவலரான லீ ஜூன்யங், ""கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார்கள் என்ற ஒரே குற்றத்துக்காக அப்பாவி மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்'' என்றும், ""பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பல்லாயிரக்கணக்கில் தென்கொரிய பாசிச இராணுவத்தால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர்'' என்றும் இந்த ஆணையத்தில் சாட்சியமளித்துள்ளார். கிம்மான்சிக் என்ற முன்னாள் தென்கொரிய இராணுவ அதிகாரி, அரசியல் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கைகளை பின்புறமாக மடித்து இரும்புக் கம்பியால் அனைவரையும் பிணைத்து சுட்டுக் கொன்ற கொடூரத்தை, தற்போது மனசாட்சிக்குப் பயந்து சாட்சியம் கூறியிருக்கிறார்... .. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, July 4, 2008

தமிழ் எம்.ஏ:படம் குறித்த விமர்சனம்

பிரபாகரின் தற்கொலைக்குத் தூண்டுதல் எது? போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியோடு அமர வைத்த பின்னரும் எப்படி உயிரோடு இருப்பது என்கிற சிந்தனை. சற்று நேரத்திற்கு முன்பாகத்தான். மாணவர்களுக்கு ‘மானம்; நீப்பின்’ எனும் குறளை விளக்கியிருந்தான்.

சேச்சியின் மீதான போலீஸ்காரனின் காமம் தான் பிரபாகர் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கான அடிப்படை. ஆனால் இது பிரபாகருக்குக் கடைசிவரை தெரியாது. பொது இடத்தில் சிகரெட் பிடித்தல் என்கிற செயலைத் தவறாக தன்மீது சுமத்தி போலீஸ் தன்னை அவமானப் படுத்தியது என்றுதான் பிரபாகர் நினைத்துக் கொண்டிருக்கிறான். படத்தின் இறுதியில் தான் இப்படியானதற்கு; காரணம் இவன் தான் என்று போலீசைப் போட்டுத் தள்ளும் பிரபாகருக்கு போலீஸ் ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

பிரபாகருக்கு போலீஸ் சந்திர சேகரின் காமக் கொழுப்புதான் அடிப்படை. ஆனால் அதுவும் இல்லாமலும் போலீசால் அவமானப் படுத்தப்படுபவர்கள் அவமானப் படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், திமிர்தான். அந்தத் திமிருக்கும் காரணம் உண்டு அது, சட்ட பூர்வமான ரௌடிக் கும்பல் என்பது தான். இந்தத் திமிர் அந்தத் துறைக்கு ஊட்டி வளர்க்கப் படுகிறது. ஆக அடிப்படை போலீஸ்திமிர்.
... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும் ...கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, July 3, 2008

நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் தோழர் பாபுராம் பட்டாரய் அளித்த பேட்டி

நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (ஙிOகீகூஊM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்

நேபாளம்: வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்

நேபாளப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்திய மாவோயிஸ்டுகள், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வெற்றியோடு சுயதிருப்தி அடைந்து முடங்கி விடவில்லை. இடைக்கால அரசில் பங்கேற்று முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி விட முடியும் என்று அவர்கள் கனவு காணவுமில்லை. ஒருபுறம், இடைக்கால அரசில் பங்கேற்று ஜனநாயகக் குடியரசை நிறுவ மேலிருந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள், மறுபுறம் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து கீழிருந்தும் நிர்பந்தம் கொடுத்து புரட்சியைத் தொடர்கிறார்கள்.

நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் குடும்பம் அரண்மனையிலிருந்து வெளியேறி சாதாரணக் குடிமகனாக வாழவேண்டும் என்று மேலிருந்து சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவர் தானாக வெளியேறிவிடவில்லை. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் தொடர்ந்த பின்னரே, மன்னர் குடும்பம் மூட்டை முடிச்சுகளோடு அரண்மனையை விட்டு வெளியேறியது. மேலிருந்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களும் நிர்பந்தங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இது எடுப்பாக உணர்த்துகிறது.

தற்போது, இடைக்கால அரசை நிறுவுவதிலும் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன; மாவோயிஸ்டுகளுக்கு இதர அரசியல் கட்சிகள் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு முடக்கத் துடிக்கின்றன; முந்தைய அரசின் பிரதமரான கொய்ராலா, பதவி விலக மறுக்கிறார். இவற்றையும், புதிய முற்போக்கான சட்டங்கள் இயற்றுவதையும் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் நிர்பந்தங்கள் மூலமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி ஜனநாயகக் குடியரசை நிறுவ முடியும் என்பதையே நேபாள நிலைமைகள் படிப்பினையாக உணர்த்துகின்றன.

புரட்சியின் வளர்ச்சிப் போக்கில், இடைக்கால அரசில் பங்கேற்று மேலிருந்து போராடுவது என்ற மார்க்சியலெனினிய போர்த்தந்திர உத்தியை நேபாளத்தின் பருண்மையான நிலைமைக்கேற்ப செயல்படுத்தி வெற்றியைச் சாதித்துள்ள மாவோயிஸ்டுகள், அப்போர்த்தந்திர உத்தியின் வழியில் கீழிருந்தும் மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (ஙிOகீகூஊM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனித இன வரலாற்று ஆய்வாளர்களான ஸ்டீபன் மைக்செல், மேரி டெஸ் செனே ஆகியோருக்கு அவர் அளித்த பேட்டி, இவ்வானொலியில் மே 4ஆம் தேதியன்று ஒலிபரப்பானது. இப்பேட்டி ""எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில வார இதழிலும் (மே 1016, 2008) வெளிவந்துள்ளது. மிக விரிவான இந்தப் பேட்டியைச் சுருக்கி சாரத்தை மட்டும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
— ஆசிரியர் குழு

* இம் மே நாளில் தொழிலாளர்களுக்கு உங்கள் கட்சி விடுத்துள்ள செய்தி என்ன? நேபாளத்தில் நாங்கள் முற்றிலும் சொந்தக் காலில் நின்று போராடி புரட்சியின் வெற்றியைச் சாதித்துள்ளோம். அதேசமயம், நாங்கள் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஏராளம். நேபாள பிற்போக்குவாதிகள் வரலாற்று அரங்கிலிருந்து வெகு எளிதில் விலகவிட மாட்டார்கள். அவர்கள் கடும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்கவே செய்வர். எனவே இந்தச் சவாலை நாங்கள் பாரதூரமானதாகக் கருதிச் செயல்பட வேண்டியுள்ளது. தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.

அடுத்து, நாங்கள் ஒரு புதிய நேபாளத்தை உருவாக்க வேண்டும். சமாதானம், ஐக்கியம், முன்னேற்றத்தைக் கொண்ட ஒரு புதிய தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை வீழ்த்தி,... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 2, 2008

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும் ஒன்று எப்போதும் முன்னிலை பெற்ற போதும், மக்கள் இயக்கம் என்பது அந்த ஒன்றுக்குள் மட்டும் குறுகிவிடுவதில்லை.

ஒரு முரண்பாடு சார்ந்து ஒரு குறுகிய எல்லையில் போராட்டம் குறுகும் போது, அது இயல்பாகவே வறட்டுத்தனமாக மாறிவிடுகின்றது. இதனால் மக்களிடையே நிலவும் அனைத்தும் தழுவிய பன்முக முரண்பாடுகளை எதிராக பார்க்கின்ற அதேநேரம், அதை ஒடுக்குகின்ற போக்கும் வளர்ச்சியுறுகின்றது. உண்மையில் இந்த குறுகிய வரட்டுத்தனமான தன்மை என்பது, பிரதான முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய வகையில் பார்ப்பதை படிப்படியாக மறுத்துவிடுகின்றது.

பிரதான முரண்பாட்டை சுரண்டுகின்ற வர்க்கம் தலைமை தாங்குகின்ற நிலை உருவாகும் போது, அதுவே முற்றாகவே மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் பிரதான முரண்பாடு சுயநலம் சார்ந்து, அது சுரண்டும் வர்க்கத்தின் அற்ப தேவைகளை ப+ர்த்திசெய்யும் ஒரு முரண்பாடாக சீரழிகின்றது.

இந்த மக்கள் விரோத அரசியலை விமர்சிக்க மறுப்பவர்கள், இதற்குள் வம்பளப்பதன் மூலம் அரசியல் இழிதனத்தை கொண்டு பிழைக்கின்ற சுரண்டும் வர்க்கத்தினராகி விடுகின்றனர்.

பாராளுமன்ற அரசியல் கட்சிகள் முதல் பாராளுமன்றம் செல்லாத இயக்கங்கள் வரை, சுரண்டும் வர்க்க நலனை பேணுவதில் உள்ள வர்க்க ஒற்றுமையை நாம் காணமுடியும். அவர்கள் மக்களின் வாழ்வியல் அவலத்தை உருவாக்கி, அதன் மூலம் தாம் மட்டும் பிழைத்துக் கொள்கின்றனர்.

இந்த வகையில் ஒரு இலட்சம் மக்களை பலியிட்ட தமிழீழப் போராட்டத்தை எடுப்போம். இப் போராட்டம் 25000 பேரை விடுதலையின் பெயரிலும், 10000 பேரை துரோகியின் பெயரிலும் கொன்று குவித்துள்ளது. பல பத்தாயிரம் விதைவைகளை உற்பத்தி செய்துள்ளது. சில... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கையேந்தி வல்லரசுக்கு கையேந்திபவன் இழுக்காம்!

டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல, ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் அழகுபடுத்தப்படும் உலகப் பெருநகரம். உலகமய விளம்பரதாரர்கள் ""உலகமயம் என்பது உலக யதார்த்தம், அது வந்தே தீரும். நமது சொந்த விருப்பத்தினால் வருவதும் போவதும் அல்ல'', என்று சொல்கிறார்கள். அதாவது அந்த எடுபிடிகளின் டெல்லி மாநகரத்தில், ஒரு பொது விடுதியில் லெபனான் சமையல் மணக்கிறது; ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நவீன இசை கதறுகிறது; உள்ளே ஐரீஷ் நாட்டுப் பீப்பாய்களிலிருந்து சாராய மழை பொழிகிறது; மேட்டுக்குடி பள்ளிக்கூடத் திடலில் ஏதோ ஒரு ஆங்கில இசை நாட்டிய நாடகத்துக்கான அறிவிப்பு விளம்பரத் தட்டியாகக் கண்ணைப் பறிக்கிறது. சுருக்கமாக, அரசியல் வியாபாரம் உடல்நலம் கேளிக்கை பொழுது போக்கு என்று அனைத்துத் துறைகளும் உலகமய முத்திரையோடு உருமாறி டெல்லியில் உலாவுகின்றன. நமது டெல்லி நகரத்தை அவர்களின் ஆட்சி மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கிறது.

மேட்டுக்குடிகளின் சொர்க்கபுரியாக மாற்றப்படும் டெல்லி நகரத்தில் அந்த மாற்றத்துக்காக உழைத்து உருக்குலையும் சாதாரண மக்களுக்கு இடமில்லை. அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.

· சுற்றுச்சூழலுக்கு நல்லது என்ற பெயரில் ஆட்டோ, டாக்சி, பேருந்து எல்லாமே எரிவாயு மூலம் ஓட்டவேண்டும். மற்ற வாகனங்கள் தடை செய்யப்படும்.

· மூன்று சக்கர வண்டிகள், மீன்பாடி வண்டிகள், பார வண்டிகள், மாடுகுதிரை வண்டிகள் நகர்ச்சாலைகளில் ஓடக்கூடாது.

· குடியிருப்புப் பகுதிகளில் கடைகளே இருக்கக்கூடாது. நடுத்தர வியாபாரிகளின் கடைகளுக்குப் பூட்டு போட்டுச் சீல் வைத்தார்கள்.

· குடிசைப் பகுதிகள் ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டருக்கு வெளியே அள்ளி வீசப்பட்டன.

— இவை அத்தனையும் உச்சநீதிமன்ற ஆணைகளாக வெளிவந்து மக்கள் மீது திணிக்கப்பட்டவை.

இந்த அடக்குமுறை ஆணைகளில் கடைசியாக வந்திருப்பது, தெருவோர சாப்பாட்டுக்... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 1, 2008

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,


தனது வானொலிப் பேட்டி ஒன்றில் 'தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் - தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?" என்று புலம்பியுள்ளார். புலிகள் சந்திக்கும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீளும் நப்பாசை, இதில் பிரதிபலிக்கின்றது. இதனால் அனைத்து புலி ஊடகங்களும், இதனை முதன்மை கொடுத்து பிரசுரித்துள்ளனர்.

ஆனால் நிலைமை என்ன? மக்களுக்கு எதிரானவர்களை, மக்களே தோற்கடிக்கின்றனர். இதுதான் நடக்கின்றது. இதனைக் கூட புலிகளால் உணர முடியாதளவுக்கு, புலியிசம் பிரபானிசமாகி எங்கும் எதிலும் புளுக்கின்றது.

இப்படி புலியிசம் தனக்குள்ளாகவே, அழுகி நாறுகின்றது. மறுபக்கத்தில் மக்களே தமது சொந்த வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கின்றார்கள். இந்த வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிணநாற்றத்துடன் கூடிய சொந்த மரணத்தை கண்டு, புலிகள் உளறத் தொடங்குகின்றனர். தனது புலியிசத்தை தாமே வலிந்து நடுச் சந்தியில் நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க அலம்புகின்றனர்.

புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய இந்த புலியிச நெருக்கடிகளை களைவதற்கு, புலியிசம் முனையவில்லை. மாறாக அதை பாதுகாக்க, புறநிலை மாற்றத்தைப் பற்றி கனவு காண்கின்றனர். தமது எதிர்கால மரணத்தை, புறநிலை மாற்றம் தடுக்கும் என்ற சுயநம்பிககையை கனவாக காண்கின்றனர். அதை நிகழ்காலத்தில் சொல்லி, ஒப்பாரியாகவே புலம்புகின்றனர்.

புலிகள் தொடர்ச்சியாக சந்திக்கின்ற அரசியல் இராணுவ நெருக்கடிகள், அகநிலை சார்ந்ததே ஒழிய புறநிலை சார்ந்ததல்ல. அகநிலையில் மாற்றமின்றி, புற நிலையில் எந்த மாற்றமும் நிகழாது. இந்த அரசியல் உண்மையை மறுக்கும் புலி யோகி, புறநிலை மீது அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஒடக் கோருகின்றார். அக நிலையை பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை தான், இதில் உள்ள வேடிக்கை. இப்படி வித்தை காட்டி, முக்கி முனங்கியாவது ஈன வேண்டும் என்கின்றார். தாய் மரணித்தாலும், முண்டத்தை ஈனுவது முக்கியம் என்கின்றார்.

போராட்டத்தின் பெயரில் ஆயிரம் ஆயிரம் மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு, புலியிசத்தை அனைத்தையும் தூக்கிவைத்து வேடிக்கை காட்டமுனைகின்றனர். பாவம் யோகி, தானே தனக்கு ஊதி, தானே ஆடும் நம்பிக்கை. அதை அவர் கூறும் விதம் தான் நகைச்சுவையானது. 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்கின்றார். அனைத்தையும் தலைவரின் மீது பொறுப்பாய்ப் போட்டுவிட்டு, மறுபடியும் தப்பி ஒடிவிடுகின்றார். ஒரு அரசியல் வழி,... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அரசின் முற்றுகை தூள்! தூள்!!

கனிம வளம் பொருந்திய, கடற்கரையோரம் உள்ள அந்த இடத்தில், தனது திட்டத்தை செயல்படுத்தினால், சுமார் 6 கோடி டன் இரும்புத் தாதை, தங்களது துறைமுகம் வழியாகவே மிக எளிதில் கொண்டு சென்று விடலாம்; உலகச் சந்தையில் ஒரு டன் இரும்புத் தாதின் விலை 7000 ரூபாய்க்கும் அதிகமென்றாலும், அதனை எடுப்பதற்கான செலவு வெறும் 400600 ரூபாய் மட்டுமே; இதற்கான உரிமைத் தொகையாக இந்திய அரசுக்கு டன்னுக்கு வெறும் 25 ரூபாய் தந்தால் போதும். மொத்தத்தில், வெறும் 48,000 கோடி ரூபாய் மூலதனத்தைப் போட்டுவிட்டு, 4.5 லட்சம் கோடி ரூபாய் பெறுமான இரும்புத் தாதை அள்ளிக் கொண்டு சென்றுவிடலாம் என்று போஸ்கோ நிறுவனத்தினர் கணக்குப் போட்டுக் காத்திருக்கின்றனர்.

படிப்பறிவில்லாத மலைவாழ் மக்களை அங்கிருந்து எளிதில் துரத்திவிடலாம் என்று ஆரம்பத்தில் அரசும், போஸ்கோவும் நினைத்தன. ஆனால், மக்கள் தங்களது நிலங்களையும், காடுகளையும் அந்நியரிடமிருந்து காக்கத் தங்களது உயிரைக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு கலிங்கா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 ஆதிவாசிகள் கொல்லப்பட்ட பிறகும், தொய்வின்றி நடந்து வரும் போர்க்குணம் மிக்க போராட்டங்கள், பட்னா கிராம மக்களை, அவர்களது பூமியில் இருந்து அப்புறப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தியது.

அரசின் அடக்குமுறை ஒருபுறமி ருக்க, போஸ்கோவின் ஆலை வந்தால், உள்ளூரைச் சேர்ந்த 13,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அரசும், போஸ்கோவும் ஆசை வார்த்தை காட்டியதையெல்லாம் கேட்டு பட்னா கிராம மக்கள் மயங்கிப் போய்விடவில்லை. இதனால், போலீசின் அடக்குமுறை யைத் தீவிரப்படுத்தி, பட்னா கிராம மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போஸ்கோ நிர்வாகம், மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்தது.
இதனையடுத்து, எதிரி நாட்டை ஆக்கிரமிப்பது போல, ஒரிசா மாநில போலீசார் பட்னா கிராமத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். பட்னா .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, June 30, 2008

கருத்துரிமைக்குக் கல்லறை

கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் (மே 14, 2007) குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் அனைத்திந்திய துணைத் தலைவரும், (சட்டீஸ்கர்) மாநிலச் செயலாளருமான பினாயக் சென், இதே சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம் (பு.ஜ. ஜூலை 2007 - சத்தீஸ்கர்: 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!" அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை ). சர்வதேசப் புகழ் பெற்ற குழந்தை மருத்துவ நிபுணரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னுக்குப் பிணையும் மறுக்கப்பட்டு, அவர் கடந்த ஓராண்டாகவே சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்திய அரசு, பினாயக் சென்னைப் பயங்கரவாதக் குற்றவாளியாகச் சித்தரித்தாலும் அமெரிக்காவைச் சேர்ந்த உலக நலவாழ்வுக் கழகம், சென்னின் மருத்துவச் சேவையைப் பாராட்டி இந்த ஆண்டிற்கான ""ஜொனதான்மான்'' விருதை, அவருக்கு வழங்கியிருக்கிறது. இதனையொட்டி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மருத்துவர்களும் மட்டுமின்றி நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரும் பினாயக் சென்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளுக்கு சட்டீஸ்கர் மாநில அரசு அளித்த அநாகரிகமான பதில், அஜயின் கைது.

சமூக சேவகரான அஜய் கைது செய்யப்பட்ட விதம் மட்டுமன்று, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் இந்திய அரசின் பாசிச வக்கிர புத்தியைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

2004இல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது, அத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு இ.பொ.க. (மாவோயிஸ்டு) அறைகூவல் விடுத்தது. சட்டீஸ்கர் மாநில அரசோ, எப்படியாவது பழங்குடி இன மக்களை ஓட்டுப் போட வைத்து, மாவோயிஸ்டுகளின் அறைகூவலை முறியடித்து விட வேண்டும் என்ற நோக்கில், மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கிராமங்கள்தோறும் நிறுத்தியது.

இந்த நிலையில், அஜய், பினாயக் சென் உள்ளிட்ட சிலர், மக்களின் மனநிலையை அறிய, தேர்தல் நடந்த நாளன்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அன்று மாலை 4 மணியளவில், ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள், அக்கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்ததைக் கண்டனர். வாக்குச்சாவடியும் ""அநாதையாக''க் கிடப்பதைக் கண்ட அஜய், தனது புகைப்படக் கருவியால் அதனைப் படமெடுக்க முயன்றார்.

அந்த சமயத்தில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் இளைஞர்கள் சிலர், அஜயையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்துக் கொண்டனர். இவர்கள் போலீசின் ஏஜெண்டுகளாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட அந்த இளைஞர்கள், அஜயையும், அவரது நண்பர்களையும் சிறை பிடித்தனர். இரவு வெகு நேரம் கழித்தே அவர்களைக் கிராமத்தில் இருந்து திரும்பிப் போக அனுமதித்தனர். எனினும், அந்த இளைஞர்கள் அஜயிடமிருந்து பறித்துக் கொண்ட புகைப்படக் கருவியைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

இவ்விரும்பத்தகாத சம்பவத்தைக் கேள்விப்பட்ட... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, June 29, 2008

காசுமீர் : புதைக்கப்பட்ட உண்மைகள்

""துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிணங்களே இங்கு வருகின்றன. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போயிருக்கும் அவற்றைப் போலீசு அதிகாரிகளின் ஆணைக்கேற்ப நாங்கள் புதைத்து விடுவோம்'' என்கிறார் இக்கல்லறையை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான முகமது அக்பர் ஷேக். இக்குழு புதைக்கப்படும் பிணங்களைப் புகைப்படமெடுத்து ஆவணமாக்குவதற்கு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி இராணுவத்தால் தடை செய்யப்பட்டது. இறந்து போனவர்களைப் பற்றிய விவரங்கள் குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. ""யாரேனும் காணாமல் போன தனது உறவினரை தேடிக் கொண்டு குப்வாரா காவல் நிலையத்திற்குச் சென்றால், அவர்கள் புகைப்படங்களைக் காட்டுவார்கள். அடையாளம் கண்டு கொண்டால் அவர்களிடம் கல்லறையின் அடையாள எண் தரப்படும். ஆனால் அங்கு புதைக்கப்பட்டிருப்பதோ, பெரும்பாலும் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்தான்'' என்கிறார் ஒரு போலீசு அதிகாரி.

ஆனால், காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களோ, யூரி மாவட்டத்தைச் சேர்ந்த "மறைக்கப்பட்ட உண்மைகள்' எனும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ""இது வடிகட்டிய பொய். அங்கு புதைக்கப்பட்டிருப்பது பயங்கரவாதிகளல்ல. காஷ்மீரில் காணாமல் போனவர்கள்தான்'' என்கிறார்கள். யூரியில் மட்டும் இதைப் போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. இந்தத் தகவல் வெளியான பிறகு சிறீநகரில், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போலீசு கலைத்தது.

சிறீநகரை ஒட்டியுள்ள கந்தர்பால் மாவட்டத்தில் ""வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்'' எனப் புதைக்கப்பட்ட 5 பேரினுடைய பிணங்களைத் தோண்டி எடுத்து விசாரணை செய்தபோது,..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்